ஆதியாகமம் 36 : 1 (RCTA)
ஏதோம் எனப்பட்ட எசாயூவின் தலைமுறை அட்டவணையாவது:
ஆதியாகமம் 36 : 2 (RCTA)
எசாயூ கானான் நாட்டுப் பெண்களில் ஏலோனின் புதல்வியான ஆதாளையும், ஏவையனான செபெயோனின் புதல்வி அனாள் பெற்ற மகளாகிய ஒலிமாளையும் மணந்தான்.
ஆதியாகமம் 36 : 3 (RCTA)
மீண்டும் இஸ்மாயிலின் புதல்வியும் நபயோத்தின் சகோதரியுமான பசெமாத்தை மனைவியாகக் கொண்டான்.
ஆதியாகமம் 36 : 4 (RCTA)
ஆதாள் எலிபாசைப் பெற்றாள். பசெமாத் இராகுயேலைப் பெற்றாள்.
ஆதியாகமம் 36 : 5 (RCTA)
ஒலிபமாள் ஜெகூஸ், இயேலோன், கொறே முதலியோரைப் பெற்றாள். இவர்கள் எசாயூவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.
ஆதியாகமம் 36 : 6 (RCTA)
பின் எசாயூ தன் மனைவிகளையும், புதல்வர் புதல்விகளையும், தன் வீட்டைச் சேர்ந்த எல்லா மனிதரையும், பொருட்களையும், மந்தைகளையும், கானான் நாட்டில் சம்பாதித்திருந்த யாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனான்.
ஆதியாகமம் 36 : 7 (RCTA)
ஏனென்றால், அவர்கள் இருவரும் மிகுந்த செல்வம் படைத்தவர்களாய் இருந்ததனால், அவர்கள் ஒன்றாய்க் குடியிருக்கக் கூடாமற் போயிற்று. அவர்களுடைய மந்தை, கணக்கில் அடங்காமல் இருந்ததனால், அவர்கள் குடியிருந்த நாடு இனி அவர்களுக்குப் போதாதிருந்தது.
ஆதியாகமம் 36 : 8 (RCTA)
ஆகையால், எசாயூ செயீர் என்னும் மலையில் குடியேறினான். அவனுக்கு ஏதோம் என்றும் பெயர்.
ஆதியாகமம் 36 : 9 (RCTA)
செயீர் மலையிலிருக்கும் ஏதோமியரின் (குலத்) தந்தையாகிய எசாயூவின் சந்ததிகளும், அவன் புதல்வர்களின் பெயர்களுமாவன:
ஆதியாகமம் 36 : 10 (RCTA)
எசாயூவின் (முதல்) மனைவியான ஆதாளின் மகன் எலிபாசும், அவன் (இரண்டாம்) மனைவியாகிய பசெமாத்தின் மகன் இராகுயேலுமாவர்.
ஆதியாகமம் 36 : 11 (RCTA)
எலிபாசுக்குப் பிறந்த புதல்வர்: தேமான், ஓமார், செப்போ, காட்டம், கேனசு.
ஆதியாகமம் 36 : 12 (RCTA)
எசாயூவின் புதல்வனான எலிபாசுக்குத் தாமினாள் என்னும் மறுமனைவியும் இருந்தாள். இவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்களே எசாயூவின் மனைவியான ஆதாளின் புதல்வர்கள்.
ஆதியாகமம் 36 : 13 (RCTA)
இராகுயேலின் புதல்வர்: நகாட், ஜாரா, சம்மா, மேசா. இவர்களே எசாயூவின் மனைவியான பசெமாத்தின் புதல்வர்கள்.
ஆதியாகமம் 36 : 14 (RCTA)
செபெயோன் புதல்வி அனாளின் மகளும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுக்கோ, ஜெகூஸ், இயேலோன், கொறே என்பவர்கள் பிறந்தனர்.
ஆதியாகமம் 36 : 15 (RCTA)
எசாயூவின் புதல்வருள்ளே தலைவர்களாய் இருந்தவர்கள் யாவரென்றால்: எசாயூவின் மூத்த மகனான எலிபாசின் புதல்வர்களாகிய தெமான், ஓமார், செப்போ, கெனேஸ்.
ஆதியாகமம் 36 : 16 (RCTA)
கொறே, காட்டம், அமலேக் ஆகிய இவர்கள் அனைவரும் எலிபாசுக்குப் பிறந்த எதோமியத் தலைவர்கள். இவர்களே ஆதாளின் மக்கள்.
ஆதியாகமம் 36 : 17 (RCTA)
எசாயூவின் புதல்வனான இராகுவேலின் மக்களில், நகாட், ஜாரா, சம்மா, மெசா ஆகியோர் இராகுவேலின் புதல்வரும் எசாயூவின் மனைவியான பசெமாத்தின் மக்களுமான ஏதோமியத் தலைவர்கள்.
ஆதியாகமம் 36 : 18 (RCTA)
எசாயூவின் மனைவி ஒலிபமாளின் புதல்வர்களோ: ஜெகூஸ், இயேலோன், கொறே. இவர்கள் அனாளின் புதல்வியும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுடைய சந்ததியின் தலைவர்களாம்.
ஆதியாகமம் 36 : 19 (RCTA)
இவர்களே ஏதோம் எனப்பட்ட எசாயூவின் சந்ததி. இவர்களே அவர்களுள் இருந்த தலைவர்கள்.
ஆதியாகமம் 36 : 20 (RCTA)
அந்த நாட்டின் குடிகளாய் இருந்த ஓறையனான செயீரின் புதல்வர் யாரெனில்: லொத்தானும், சொபாலும், செபெயோனும்,
ஆதியாகமம் 36 : 21 (RCTA)
அனாவும், டிசோனும், எசேரும், டிசானும் ஆவர். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த செயீரின் புதல்வராகிய ஒறையாத் தலைவர்களாவர்.
ஆதியாகமம் 36 : 22 (RCTA)
லொத்தானுக்குப் பிறந்த புதல்வர்கள்: ஓரியும் எமானுமாவர். தமினாள் லொத்தானின் சகோதரியாவாள்.
ஆதியாகமம் 36 : 23 (RCTA)
சொபாலின் புதல்வர்கள்: அல்வானும், மனகாட்டும், ஏபாலும், செப்போவும், ஒனாமுமாவர்.
ஆதியாகமம் 36 : 24 (RCTA)
செபெயோனின் புதல்வர்களோ: அயாவும், அனாவும் ஆவர். இந்த அனாவே தன் தந்தை செபெயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது பாலைவனத்தில் வெப்ப நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தான்.
ஆதியாகமம் 36 : 25 (RCTA)
இவனுக்கு டிசோன் என்னும் ஒரு புதல்வனும், 'ஒலிபமாள் என்னும் ஒரு புதல்வியும் பிறந்தனர்.
ஆதியாகமம் 36 : 26 (RCTA)
டிசோனின் புதல்வர்கள்: ஆதாமும், எசெபானும், ஜெத்திராமும், காரானும் ஆவர்.
ஆதியாகமம் 36 : 27 (RCTA)
எசேரின் புதல்வர்: பாலனும், ஜவானும், அக்கானும்.
ஆதியாகமம் 36 : 28 (RCTA)
டிசானோ: ஊஸ், ஆராம் என்ற (இரு) புதல்வரைப் பெற்றான்.
ஆதியாகமம் 36 : 29 (RCTA)
ஓறையரின் தலைவர்கள் யாவரெனில்: லொத்தான், சொபால், செபெயோன், அனா, டிசோன், எசேர், டிசான் ஆவர்.
ஆதியாகமம் 36 : 30 (RCTA)
இவர்களே செயீர் நாட்டில் ஆட்சி புரிந்த ஓறையரின் தலைவர்களாம்.
ஆதியாகமம் 36 : 31 (RCTA)
இஸ்ராயேல் புதல்வர்மேல் எந்த அரசனும் அரசாள்வதற்கு முன், எதோம் நாட்டில் ஆண்டு வந்த அரசர்கள் யாவரென்றால்:
ஆதியாகமம் 36 : 32 (RCTA)
(முதலில்) பேயோரின் புதல்வனாகிய பேலா.
ஆதியாகமம் 36 : 33 (RCTA)
இவன் தலைநகரின் பெயர் தெனபா. பேலா இறந்த பின், பொஸ்றா நகரத்தானும் ஜாராவின் புதல்வனுமான ஜோபாத் ஆண்டு வந்தான்.
ஆதியாகமம் 36 : 34 (RCTA)
ஜோபாதும் இறந்த பின்னர், தேமானரின் நாட்டானாகிய ஊசாம் அரசாண்டான்.
ஆதியாகமம் 36 : 35 (RCTA)
இவனும் இறந்தபின், பதாதின் புதல்வனாகிய ஆதாத் அரசாண்டான். இவனே மேவாப் நாட்டில் மதியானியரைத் தோற்கடித்தான்.
ஆதியாகமம் 36 : 36 (RCTA)
இவனது தலைநகரின் பெயர் ஆவிட். ஆதாத் இறந்தபின், மஸ்றேக்கா ஊரானாகிய செமிலா பட்டம் பெற்றான்.
ஆதியாகமம் 36 : 37 (RCTA)
இவன் இறந்த பின், ரொகொபொட் நதியருகில் வாழ்ந்தவனான சாவூல் ஆண்டு வந்தான்.
ஆதியாகமம் 36 : 38 (RCTA)
இவன் இறந்த பின், அக்கொபோரின் புதல்வனான பலனான் ஆட்சியைக் கைக்கொண்டான்.
ஆதியாகமம் 36 : 39 (RCTA)
இவனுக்குப்பின், ஆதார் ஆண்டு வந்தான். இவனது தலை நகரின் பெயர் பௌ. இவன் மனைவி பெயரோ, மேத்தபேல். இவள் மெசாபுக்கு மகளான மத்திரேத்தின் புதல்வி.
ஆதியாகமம் 36 : 40 (RCTA)
தங்கள் வம்சங்களின் படியும், உறைவிடங்களின்படியும், பெயர்களின்படியும் எசாயூவின் சந்ததியில் உதித்த தலைவர்களின் பெயர்களாவன: தம்னா, ஆஸ்வா, ஜேட்டேட்,
ஆதியாகமம் 36 : 41 (RCTA)
ஒலிபமா, ஏலா, பினோன்,
ஆதியாகமம் 36 : 42 (RCTA)
கெனேஸ், தெமான், மப்சார்.
ஆதியாகமம் 36 : 43 (RCTA)
மக்தியேல், கீறாம். இவர்கள் ஏதோமின் தலைவர்களாய்த் தங்கள் சொந்த நாட்டிலே அரசாண்டு வந்தனர். இந்த ஏதோமியர்களுக்குக் (குலத்) தந்தை எசாயூ.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43

BG:

Opacity:

Color:


Size:


Font: