ஆதியாகமம் 32 : 1 (RCTA)
பின்னர் யாக்கோபு தான் தொடங்கின பிரயாணத்தைத் தொடர்ந்தான். கடவுளின் தூதர்கள் வழியில் அவனை எதிர்கொண்டு வந்தார்கள்.
ஆதியாகமம் 32 : 2 (RCTA)
அவன் அவர்களைக் கண்டபோது: இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனாயீம் - அதாவது, பாளையம் - என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 32 : 3 (RCTA)
பின் அவன் ஏதோம் நாட்டிலுள்ள செயீர் பகுதியில் வாழ்ந்து வந்த தன் தமையன் எசாயூவிடம் ஆட்களை அனுப்பி:
ஆதியாகமம் 32 : 4 (RCTA)
நீங்கள் என் தலைவன் எசாயூவிடம் போய், உம் தம்பி யாக்கோபு அனுப்பும் செய்தியாவது: நான் லாபானிடம் அகதியாகச் சஞ்சரித்து இந்நாள் வரையிலும் அவனிடம் தங்கியிருந்தேன்.
ஆதியாகமம் 32 : 5 (RCTA)
மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உண்டு. இப்போது உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத் தக்கதாய், என் தலைவனான உமக்குத் தூது அனுப்பலானேன் எனச் சொல்லுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
ஆதியாகமம் 32 : 6 (RCTA)
அவர்கள் (போய்) யாக்கோபிடம் திரும்பி வந்து: நாங்கள் உம் தமையனார் எசாயூவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் விரைந்து உம்மைச் சந்திக்க வருகிறார் என்றனர்.
ஆதியாகமம் 32 : 7 (RCTA)
யாக்கோபு மிகவும் அஞ்சித் திடுக்கிட்டு, தன்னுடன் இருந்த ஆட்களையும், ஆடு மாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரண்டாகப் பிரித்து:
ஆதியாகமம் 32 : 8 (RCTA)
எசாயூ ஒரு பிரிவைத் தாக்கி அதை முறியடித்தாலும், மற்ற பிரிவாவது தப்புமே என்றான்.
ஆதியாகமம் 32 : 9 (RCTA)
மேலும் யாக்கோபு: என் தந்தை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமாயிருக்கிற ஆண்டவரே, நீர் என்னை நோக்கி: உன் சொந்த நாட்டிற்கும் உன் பிறந்த பூமிக்கும் திரும்பிப் போ; நாம் உன்னை ஆசீர்வதிப்போம் எனத் திருவாக்கருளினீரன்றோ?
ஆதியாகமம் 32 : 10 (RCTA)
அடியேனுக்கு நீர் செய்து வந்துள்ள எல்லாத் தயவுக்கும், நிறைவேற்றின சத்தியத்திற்கும் நான் தகுதியுள்ளவனல்லன். நான் கோலும் கையுமாய் (இந்த) யோர்தான் (நதியைக்) கடந்தேனே; இப்போதோ, இரண்டு பரிவாரங்களோடு திரும்பி வரலானேன்.
ஆதியாகமம் 32 : 11 (RCTA)
என் தமையனாகிய எசாயூவின் கையினின்று என்னைக் காத்தருளும். அவனுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒரு வேளை அவள் வந்து, பிள்ளைகளையும் தாயையும் அழிக்கக் கூடும்.
ஆதியாகமம் 32 : 12 (RCTA)
நீர் அடியேனுக்கு நன்மை புரிவதாகவும், என் சந்ததியை எண்ணப்படாத கடலின் மணலைப் போலப் பெருகச் செய்வதாகவும் திருவாக்களித்தீரன்றோ (என்று மன்றாடினான்).
ஆதியாகமம் 32 : 13 (RCTA)
அன்றிரவும் அவன் அங்கேயே தூங்கி, தனக்குச் சொந்தமானவற்றிலே தமையனாகிய எசாயூவுக்குக் காணிக்கையாக
ஆதியாகமம் 32 : 14 (RCTA)
இருபது வெள்ளாட்டுக் கிடாய்களோடு இருநூறு வெள்ளாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களோடு இருநூறு செம்மறியாடுகளையும்,
ஆதியாகமம் 32 : 15 (RCTA)
பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும் இருபது காளைகளையும், இருபது கோவேறு கழுதைகளையும், பத்துக் கழுதைக் குட்டிகளையும் பிரித்தெடுத்து, ஊழியக்காரர் கையில்
ஆதியாகமம் 32 : 16 (RCTA)
ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாய் ஒப்புவித்து: நீங்கள் மந்தைக்கு முன்னும் பின்னுமாய் இடம் விட்டு எனக்கு முன் ஓட்டிக் கொண்டு போங்கள் என்று சொன்னான்.
ஆதியாகமம் 32 : 17 (RCTA)
பின் (யாக்கோபு) முந்திப் போகிறவனை நோக்கி: என் தமையனாகிய எசாயூ உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடைய ஆள்? அல்லது, நீ எங்கே போகிறாய்? அல்லது, நீ ஓட்டிப் போகிற மந்தை யாருடையது என்று அவன் உன்னைக் கேட்டால், நீ:
ஆதியாகமம் 32 : 18 (RCTA)
இவை உம் அடியானாகிய யாக்கோபினுடையவை. அவர், தம் தலைவனாகிய எசாயூக்கு இவற்றைக் காணிக்கையாக அனுப்பினார். அவரும் எங்கள் பின்னால் வருகிறார் என்று பதில் சொல்வாய் என்றான்.
ஆதியாகமம் 32 : 19 (RCTA)
அதேவிதமாய் யாக்கோபு இரண்டு மூன்று வேலைக்காரர்களையும், மந்தைகளை ஓட்டிப் போகிற மற்று முள்ளோர்களையும் நோக்கி: நீங்களும் எசாயூவைக் காணும் போது அவ்விதமாகவே அவரிடம் சொல்லுங்கள்.
ஆதியாகமம் 32 : 20 (RCTA)
மேலும்: இதோ உம் அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார். ஏனென்றால், அவர்: முன்னே வெகுமதிகளை அனுப்பித் தமையனாரைச் சமாதானப் படுத்திக் கொண்ட பின்பே அவருடைய முகத்தில் விழிப்பேன் என்றும், அப்பொழுது அவர் ஒருவேளை என்மேல் இரக்கமாய் இருப்பார் என்றும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினான்.
ஆதியாகமம் 32 : 21 (RCTA)
அவ்விதமே காணிக்கைகள் யாக்கோபுக்குமுன் கொண்டு போகப் பட்டன. அவனோ, அன்றிரவு பாளையத்தில் தங்கினான்.
ஆதியாகமம் 32 : 22 (RCTA)
பின் அவன் அதிகாலையிலே துயில் விட்டெழுந்து, தன் புதல்வர் பதினொருவரையும், இரு மனைவியரையும் இரண்டு வேலைக்காரிகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு, ஜாபோக் ஆற்றின் துறையைக் கடந்தான்.
ஆதியாகமம் 32 : 23 (RCTA)
பின்னர் தனக்கு உண்டான யாவையும் ஆற்றைக் கடக்கப் பண்ணி, தான் (மட்டும்) பிந்தித் தனித்திருந்தான்.
ஆதியாகமம் 32 : 24 (RCTA)
அப்பொழுது ஓர் ஆடவன் பொழுது விடியுமட்டும் அவனோடு போராடிக் கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 32 : 25 (RCTA)
யாக்கோபை வெல்லத் தன்னாலே கூடாதென்று கண்ட அந்த ஆடவன் அவன் தொடை நரம்பைத் தொட்டான். தொடவே, அது மரத்துப் போயிற்று.
ஆதியாகமம் 32 : 26 (RCTA)
அப்பொழுது ஆடவன்: என்னைப் போகவிடு; பொழுது புலரப் போகிறது என, யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்று மறுமொழி சொன்னான்.
ஆதியாகமம் 32 : 27 (RCTA)
ஆடவன்: உன் பெயர் என்ன என, அவன்: நான் யாக்கோபு என்றான்.
ஆதியாகமம் 32 : 28 (RCTA)
அப்பொழுது அவர்: உன் பெயர் இனி யாக்கோபு இல்லை; இஸ்ராயேல் எனப்படும். ஏனென்றால், நீ கடவுளோடு போராடி மேற்கொண்டாயென்றால், மனிதர்களை மேற்கொள்வாயென்று சொல்லவும் வேண்டுமா என்றார்.
ஆதியாகமம் 32 : 29 (RCTA)
யாக்கோபு அவரை நோக்கி: உம் பெயர் என்ன? அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று வினவ, அவர்; என் பெயரை நீ கேட்பதென்ன என்று பதில் சொல்லி, அந்த இடத்திலேயே அவனை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 32 : 30 (RCTA)
அப்பொழுது யாக்கோபு: நான் கடவுளை நேரிலே கண்டிருந்தும் உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பானுவேல் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 32 : 31 (RCTA)
அவன் பானுவேலுக்கு அப்பால் சென்றவுடனே சூரியன் உதித்தது. அவனோ, கால் நொண்டி நொண்டி நடந்தான்.
ஆதியாகமம் 32 : 32 (RCTA)
அதன் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் இந்நாள் வரை தொடைச் சந்து நரம்பை உண்பதில்லை. ஏனென்றால், (முன் சொல்லப்பட்ட ஆடவனால்) யாக்கோபின் நரம்பு தொடப்படவே, அது சூம்பிப் போயிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: