ஆதியாகமம் 3 : 1 (RCTA)
ஆண்டவராகிய கடவுளால் படைக்கப்பட்ட எல்லாப் பிராணிகளிலும் பாம்பு அதிகத் தந்திரமுள்ளதாய் இருந்தது. அது பெண்ணை நோக்கி: இன்ப வனத்திலுள்ள எல்லா மரங்களின் கனிகளையும் உண்ண வேண்டாமென்று உங்களைக் கடவுள் ஏன் தடுத்தார் என்று கேட்டது.
ஆதியாகமம் 3 : 2 (RCTA)
பெண்: இன்ப வனத்திலுள்ள மரங்களின் கனிகளை நாங்கள் உண்டே வருகிறோம்;
ஆதியாகமம் 3 : 3 (RCTA)
ஆனால், இன்ப வனத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைத் தின்ன வேண்டாம் தொடவும் வேண்டாம் என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்; தின்றால் சாவோம் என்றாள்.
ஆதியாகமம் 3 : 4 (RCTA)
பாம்பு பெண்ணை நோக்கி: நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்;
ஆதியாகமம் 3 : 5 (RCTA)
நீங்கள் எப்போது அக்கனியைத் தின்பீர்களோ அந்நேரமே உங்கள் கண்கள் திறக்கப்படும். அதனால் நீங்கள் தெய்வங்கள் போல் ஆகி நன்மையும் தீமையும் அறிவீர்கள்; இது கடவுளுக்குத் தெரியும் என்று சொல்லிற்று.
ஆதியாகமம் 3 : 6 (RCTA)
அப்பொழுது பெண் அந்த மரத்தின் கனி தின்பதற்கு நல்லது, பார்வைக்கு இனியது, அறிவைப் பெறுவதற்கு விரும்பத் தக்கது எனக் கண்டு, அதைப் பறித்துத் தானும் உண்டாள்; தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் அதைத் தின்றான்.
ஆதியாகமம் 3 : 7 (RCTA)
உடனே அவ்விருவருடைய கண்களும் திறக்கப்பட்டன. தாங்கள் நிருவாணமாய் இருந்ததை அவர்கள் கண்டு, அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் உடுத்திக் கொண்டார்கள்.
ஆதியாகமம் 3 : 8 (RCTA)
மேலும், மாலையில் தென்றல் வீசும் வேளையிலே இன்ப வனத்தில் உலாவிக் கொண்டிருந்த ஆண்டவராகிய கடவுளின் குரலொலியைக் கேட்டார்கள். கேட்டதும், ஆதாமும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் முன்னிலையில் நில்லாதவாறு இன்ப வனத்து மரங்களிடையே ஒளிந்து கொண்டார்கள்.
ஆதியாகமம் 3 : 9 (RCTA)
அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமைக் கூப்பிட்டு: எங்கே இருக்கிறாய் என்றார்.
ஆதியாகமம் 3 : 10 (RCTA)
அதற்கு அவன்: நான் இன்பவனத்தில் உமது குரலொலியைக் கேட்டேன். நிருவாணியாய் இருந்ததால் பயந்து ஒளிந்து கொண்டேன் என்றான்.
ஆதியாகமம் 3 : 11 (RCTA)
கடவுள்: நீ நிருவாணியாய் இருப்பதாக உனக்குச் சொன்னவன் யார்? உண்ண வேண்டாமென்று நாம் உனக்கு விலக்கியிருந்த கனியைத் தின்றாயோ? என்று வினவினார்.
ஆதியாகமம் 3 : 12 (RCTA)
ஆதாம்: எனக்குத் துணைவியாய் இருக்கும்படி நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் தின்றேன் என்றான்.
ஆதியாகமம் 3 : 13 (RCTA)
அப்போது ஆண்டவராகிய கடவுள் பெண்ணை நோக்கி: நீ ஏன் அவ்வாறு செய்தாய்? என்று கேட்டார். அவள்: பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன் என்று பதில் சொன்னாள்.
ஆதியாகமம் 3 : 14 (RCTA)
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து: நீ அவ்வாறு செய்ததால் பூமியிலுள்ள எல்லாப் பிராணிகளிலும் சபிக்கப்பட்டதாய், உன் வயிற்றினால் ஊர்ந்து, உயிரோடிருக்கும் வரை மண்ணைத் தின்பாய்;
ஆதியாகமம் 3 : 15 (RCTA)
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.
ஆதியாகமம் 3 : 16 (RCTA)
அவர் பெண்ணை நோக்கி: துன்பங்களையும் கருப்ப வேதனைகளையும் உனக்கு அதிகப்படுத்துவோம்; வேதனையோடு நீ பிள்ளைகளைப் பெறுவாய்; கணவனின் அதிகாரத்துக்கு நீ அடங்கி இருப்பாய்; அவன் உன்னை ஆண்டு கொள்வான் என்றார்.
ஆதியாகமம் 3 : 17 (RCTA)
பின் கடவுள் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் சொல்லுக்குச் செவிசாய்த்து, உண்ண வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் கனியைத் தின்றதினாலே உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்; நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன் பலனை உண்பாய்.
ஆதியாகமம் 3 : 18 (RCTA)
அது உனக்கு முட்களையும் முட்செடிகளையும் விளைவிக்கும்; பூமியின் புல் பூண்டுகளை நீ உண்பாய்;
ஆதியாகமம் 3 : 19 (RCTA)
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்பாய். இறுதியில், நீ எந்தப் பூமியினின்று எடுக்கப் பட்டாயோ அந்தப் பூமிக்கே திரும்பிப் போவாய்; ஏனென்றால், நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய் என்றார்.நி98
ஆதியாகமம் 3 : 20 (RCTA)
பின் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவளே உயிர் வாழ்வோர்க்கெல்லாம் தாயானவள்.
ஆதியாகமம் 3 : 21 (RCTA)
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் தோல் சட்டைகளைச் செய்து ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் அணிவித்தார்.
ஆதியாகமம் 3 : 22 (RCTA)
பின்: இதோ ஆதாம் நன்மை தீமை அறிந்தவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆகிவிட்டானே! இனி அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் கனியைப் பறித்துத் தின்று, என்றென்றும் உயிர் வாழ்வானோ என்று சொல்லி,
ஆதியாகமம் 3 : 23 (RCTA)
அவன் எந்த மண்ணினின்று எடுக்கப்பட்டானோ அந்த மண்ணையே பண்படுத்தும்படி ஆண்டவராகிய கடவுள் அவனை இன்ப வனத்திலிருந்து அனுப்பி விட்டார்.
ஆதியாகமம் 3 : 24 (RCTA)
அப்படி ஆதாமை வெளியே துரத்திவிட்ட பின் கடவுள் இன்ப வனத்தின் வாயிலில், சுடர் விட்டெரியும் வாளை ஏந்தி எப்பக்கமும் சுழற்றுகின்ற கெரூபிமை வைத்து, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல் செய்யச் சொன்னார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24