ஆதியாகமம் 11 : 1 (RCTA)
உலகத்தில் ஒரே மொழியும் ஒரே விதமான பேச்சும் வழங்கி வந்தன.
ஆதியாகமம் 11 : 2 (RCTA)
மக்கள் கீழ்த்திசையிலிருந்து புறப்பட்ட போது, சென்னார் நாட்டில் சமவெளியைக் கண்டு அங்கே குடியேறினர்.
ஆதியாகமம் 11 : 3 (RCTA)
அப்பொழுது அவர்கள் ஒருவரோடொருவர்: வாருங்கள், செங்கல் அறுத்துச் சூளையிலிட்டுச் சுடுவோம் என்று பேசிக்கொண்டு, கருங்கல்லுக்குப் பதிலாகச் செங்கற்களையும், சாந்துக்குப் பதிலாகத் தாரையும் பயன் படுத்தினர்.
ஆதியாகமம் 11 : 4 (RCTA)
மேலும் அவர்கள்: வாருங்கள், நாம் நாடுகள் தோறும் சிதறிப் போகு முன்னே ஒரு நகரையும், விண்ணை முட்டும் ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் புகழ் உண்டாகச் செய்வோமாக என்று சொன்னார்கள்.
ஆதியாகமம் 11 : 5 (RCTA)
ஆனால், ஆதாமின் புதல்வர் கட்டி வந்த நகரையும் கோபுரத்தையும் பார்க்க ஆண்டவர் இறங்கி வந்தார்.
ஆதியாகமம் 11 : 6 (RCTA)
அப்பொழுது அவர்: இதோ, மக்கள் ஒரே இனமாயிருந்து ஒரே மொழி பேசி வருகிறதனாலன்றோ இதைச் செய்யத் தொடங்கினார்கள்! தாங்கள் செய்ய நினைத்ததை அவர்கள் விடாமல் எப்படியும் செய்து முடிப்பார்கள்.
ஆதியாகமம் 11 : 7 (RCTA)
சரி நாம் இறங்கிப் போய், அவர்களுள் ஒருவர் பேசுவதை மற்றவர் அறியா வண்ணம் அவர்களது மொழியைக் குழப்பி விடுவோம் என்றார்.
ஆதியாகமம் 11 : 8 (RCTA)
அவ்வாறு ஆண்டவர் அவர்களை அவ்விடத்திலிருந்து உலகமெங்கும் சிதறிப் போகச் செய்தமையால், அவர்கள் அந்நகரைக் கட்டுவதை விட்டு விட்டனர்.
ஆதியாகமம் 11 : 9 (RCTA)
பூமியெங்கும் வழங்கும் மொழிக் குழப்பம் அவ்விடத்தில் பிறந்தமையால் அதன் பெயர் பாபேல் எனப்பட்டது. ஆண்டவர் அவர்களை அவ்விடத்திலிருந்து நாடுகள் தோறும் சிதறிப் போகச் செய்தார்.
ஆதியாகமம் 11 : 10 (RCTA)
சேமின் தலைமுறை அட்டவணையாவது: சேம் தனக்கு நூறு வயதான போது, வெள்ளப் பெருக்கிற்குப் பின் இரண்டாம் ஆண்டில், அற்பக்சாத்தைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 11 (RCTA)
அற்பக்சாத்தைப் பெற்றபின், சேம் ஐநூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 12 (RCTA)
அற்பக்சாத் முப்பத்தைந்து வயதான போது சாலேயைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 13 (RCTA)
சாலேயைப் பெற்ற பின்னும் அற்பக்சாத் முந்நூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 14 (RCTA)
சாலே முப்பது வயதான பின் ஏபேரைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 15 (RCTA)
ஏபேரைப் பெற்ற பின்னும் சாலே நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 16 (RCTA)
ஏபேர் முப்பத்து நான்கு வயதான போது பாலேக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 17 (RCTA)
பாலேக்கைப் பெற்ற பின்னும் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 18 (RCTA)
பாலேக் முப்பது வயதான போது ரேயூவைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 19 (RCTA)
ரேயூவைப் பெற்ற பின்னும் பாலேக் இருநூற்றொன்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 20 (RCTA)
ரேயூ முப்பத்திரண்டு வயதான போது சாரூக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 21 (RCTA)
சாரூக்கைப் பெற்ற பின் ரேயூ இருநூற்றேழு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 22 (RCTA)
சாரூக் முப்பது வயதான போது நாக்கோரைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 23 (RCTA)
நாக்கோரைப் பெற்ற பின்னும் சாரூக் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 24 (RCTA)
நாக்கோர் இருபத்தொன்பது வயதான போது தாரேயைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 25 (RCTA)
தாரேயைப் பெற்ற பின் நாக்கோர் நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 26 (RCTA)
தாரே எழுபது வயதான பின் ஆபிராம், நாக்கோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 27 (RCTA)
தாரேயின் தலைமுறை அட்டவணையாவது: தாரே ஆபிராமையும் நாக்கோரையும் ஆரானையும் பெற்றான். ஆரான் லோத்தைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 28 (RCTA)
ஆரான் தன் பிறப்பிடமாகிய ஊர் என்னும் கால்தேயர் நாட்டு நகரில் தன் தந்தையாகிய தாரே இறக்கு முன்பே இறந்தான்.
ஆதியாகமம் 11 : 29 (RCTA)
பின்னர் ஆபிராமும் நாக்கோரும் மணம் செய்து கொண்டார்கள். ஆபிராமின் மனைவியின் பெயர் சாறாயி. நாக்கோரின் மனைவிக்கு மெல்காள் என்பது பெயர். இவள் ஆரானின் மகள். இந்த ஆரான் மெல்காளுக்கும் எஸ்காளுக்கும் தந்தை.
ஆதியாகமம் 11 : 30 (RCTA)
சாறாயி மலடியாக இருந்தாள். அவளுக்குப் பிள்ளை இல்லை.
ஆதியாகமம் 11 : 31 (RCTA)
(அக்காலத்தில்) தாரே தன் மகனான ஆபிராமையும், ஆரானுக்கு மகனான லோத் என்னும் தன்பேரனையும், தன் மருமகளும் தன் மகன் ஆபிராமின் மனைவியுமான சாறையியையும் அழைத்துக் கொண்டு, அவர்களோடு கால்தேயருடைய (நகராகிய) ஊரிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆரான் வரை வந்து அங்கே குடியேறினர்.
ஆதியாகமம் 11 : 32 (RCTA)
தாரேயின் வாழ்நாள் இருநூற்றைந்து ஆண்டுகள். அவன் ஆரானில் இறந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32