ஆதியாகமம் 10 : 1 (RCTA)
நோவாவின் புதல்வர்களாகிய சேம், காம், யாப்பேத் ஆகியவர்களின் தலைமுறை அட்டவணையாவது: வெள்ளப் பெருக்கிற்குப் பின் அவர்களுக்குப் புதல்வர்கள் பிறந்தனர்.
ஆதியாகமம் 10 : 2 (RCTA)
யாப்பேத்தின் மக்கள்: கோமேர், மகோக், மதாயி, யாவான், துபால், மோசோக், திராஸ் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 3 (RCTA)
ஆசெனேஸ், ரிப்பாத், தொகொர்மா ஆகியோர் கோமேருடைய மக்கள். யாவானுடைய புதல்வர்கள்:
ஆதியாகமம் 10 : 4 (RCTA)
எலிசா, தற்சிஸ், சேத்தீம், தொதானீம் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 5 (RCTA)
இவர்களால் தான் உலக மக்களுடைய நாடுகளும் தீவுகளும் அவரவர்க்குரிய மொழிக்கும் இனத்திற்கும் தக்கபடி பகுக்கப்பட்டன.
ஆதியாகமம் 10 : 6 (RCTA)
காமின் மக்கள்: கூஸ், மெஸ்றாயீம், புத், கானான் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 7 (RCTA)
சாபா, ஏவிலா, சபத்தா, இரேக்மா, சபத்தக்கா ஆகியோர் கூஸின் புதல்வர். சபாவும், ததானும் இரேக்மாவின் மக்கள்.
ஆதியாகமம் 10 : 8 (RCTA)
பின் கூஸ் நெமிரோதைப் பெற்றான். இவன் பூமியிலே வலிமை மிக்கவனாய் இருந்தான்.
ஆதியாகமம் 10 : 9 (RCTA)
ஆண்டவருக்கு முன் அவன் வலிமை மிக்க வேட்டைக்காரனாய் இருந்தான். ஆதலால் தான் 'ஆண்டவருக்கு முன்பாக நெமிரோதைப் போல் வலிமை மிக்க வேட்டைக்காரன்' என்னும் பழமொழி வழங்கலாயிற்று.
ஆதியாகமம் 10 : 10 (RCTA)
சென்னார் நாட்டிலுள்ள பாபிலோன், ஆராக், ஆக்காத், காலன்னே (என்னும் நகரங்கள்) அவன் அரசாட்சியின் முதல் இடங்களாய் அமைந்தன.
ஆதியாகமம் 10 : 11 (RCTA)
அந்நாட்டிலிருந்து ஆசூர் தோன்றி நினிவே நகரையும், அந்நகரின் விதிகளையும், பின் காலேயையும் அமைத்தான்.
ஆதியாகமம் 10 : 12 (RCTA)
நினிவேய்க்கும் காலேய்க்கும் நடுவே இறேசெனையும் எழுப்பினான். இது பெரிய நகர்.
ஆதியாகமம் 10 : 13 (RCTA)
மெஸ்றாயீம் முதலில் லுதீம் என்பவனையும், பிறகு அனமீம், லாபீம், நெப்துயீம், பெத்திருசீம், கஸ்லுயீம் என்பவர்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 10 : 14 (RCTA)
இவர்களிடமிருந்து பிலிஸ்தியரும் கப்தோரீமரும் தோன்றினார்கள்.
ஆதியாகமம் 10 : 15 (RCTA)
கானான் தன் தலைச்சனாகிய சிதோனைப் பெற்றான்;
ஆதியாகமம் 10 : 16 (RCTA)
பிறகு ஏத்தை, யெபூசை, அமோறை, யெற்கேசை, ஏவை, அரக்கை,
ஆதியாகமம் 10 : 17 (RCTA)
சீனை, அரதியை, சமறை, அமத்தைப் பெற்றான்.
ஆதியாகமம் 10 : 18 (RCTA)
இவர்களால் கானானியர்களின் வம்சங்கள் பல நாடுகளில் பரவின.
ஆதியாகமம் 10 : 19 (RCTA)
சீதோன் முதல் ஜெரரா வழியாகக் காஜா வரையிலும், சொதோம், கொமோரா, ஆதமா செபொயீம், என்னும் நகரங்கள் முதல் லெசா வரையிலுமுள்ள நாடு கானானியரின் எல்லைகளாம்.
ஆதியாகமம் 10 : 20 (RCTA)
தங்கள் உறவினர், மொழி, சந்ததி, நாடு, இனம் ஆகியவற்றின்படி இவர்களே காமுடைய வழித் தோன்றல்களாவர்.
ஆதியாகமம் 10 : 21 (RCTA)
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தனர். அவன் ஏபேரின் சந்ததியாருக்குக்கெல்லாம் தந்தையும் யாப்பேத்தின் அண்ணனும் ஆவான்.
ஆதியாகமம் 10 : 22 (RCTA)
சேமின் புதல்வர்: ஐலாம் ஆசூர், அற்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
ஆதியாகமம் 10 : 23 (RCTA)
ஊஸ், ஊள், ஜெத்தோமேஸ், என்பவர்கள் ஆராமின் புதல்வர்.
ஆதியாகமம் 10 : 24 (RCTA)
அற்பக்சாத் சாலே என்பவனைப் பெற்றான்.
ஆதியாகமம் 10 : 25 (RCTA)
இவனுக்கு ஏபேர் பிறந்தான். ஏபேருக்கு இரண்டு புதல்வர் பிறந்தனர். ஒருவன் பெயர் பாலேக்; ஏனென்றால் இவன் காலத்தில் பூமி பிரிக்கப்பட்டது. இவன் தம்பி பெயர் ஜெக்தான்.
ஆதியாகமம் 10 : 26 (RCTA)
இந்த ஜெக்தான் எல்மோதாதைப் பெற்று, பிறகு சாலேப்,
ஆதியாகமம் 10 : 27 (RCTA)
ஆசர்மோத், ஜாரே, அதுராம், உசால்,
ஆதியாகமம் 10 : 28 (RCTA)
தெக்கிலா, எபால், அபிமயேல், சபா,
ஆதியாகமம் 10 : 29 (RCTA)
ஒப்பீர், ஏவிலா, ஜொபாப் என்பவர்களையும் ( பெற்றான் ). இவர்கள் யாவரும் ஜெக்தானின் புதல்வர்கள்.
ஆதியாகமம் 10 : 30 (RCTA)
மெசா முதல் கீழ்த்திசையிலுள்ள செப்பார் மலை வரை இவர்களுடைய உறைவிடம்.
ஆதியாகமம் 10 : 31 (RCTA)
தங்கள் உறவினர், மொழி, நாடு ,இனம் ஆகியவற்றின்படி இவர்களே சேமுடைய வழித்தோன்றல்கள்.
ஆதியாகமம் 10 : 32 (RCTA)
தத்தம் இனம், நாடு முதலியவற்றின்படி இவர்களே நோவாவின் குடும்பத்தார். வெள்ளப் பெருக்கிற்குப் பின் இவர்களாலேயே பூமியில் மக்கள் உண்டாயினர்.
❮
❯