கலாத்தியர் 4 : 1 (RCTA)
இன்னும் ஓர் எடுத்துக்காட்டுச் சொல்லுகிறேன்: தந்தையின் சொத்தனைத்திற்கும் என் மகன் தலைவனாய் இருந்தாலும், சிறுவனாய் இருக்கும் வரையில், அவனுக்கும் அடிமைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;
கலாத்தியர் 4 : 2 (RCTA)
தந்தை குறித்த நாள்வரை, பாதுகாப்பாளர்கள், கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் அவன் இருக்கிறான்.
கலாத்தியர் 4 : 3 (RCTA)
அவ்வாறே நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகப் பூதங்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் இருந்தோம்.
கலாத்தியர் 4 : 4 (RCTA)
ஆனால், காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக்கொள்வதற்காக,
கலாத்தியர் 4 : 5 (RCTA)
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார்.
கலாத்தியர் 4 : 6 (RCTA)
அந்த ஆவியானவர் ' அப்பா, தந்தாய் ' எனக் கூப்பிடுகிறார். ஆகவே, இனி நீ அடிமை அல்ல, மகன்தான்;
கலாத்தியர் 4 : 7 (RCTA)
மகனாயின் உரிமையாளனுமாம். இவையாவும் கடவுளின் செயலே.
கலாத்தியர் 4 : 8 (RCTA)
ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தபோது, இயல்பாகவே, கடவுளல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்;
கலாத்தியர் 4 : 9 (RCTA)
ஆனால், இப்பொழுது கடவுளை அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்; சரியாய்ச் சொல்லவேண்டுமாயின், இப்பொழுது கடவுளே உங்களை அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அப்படியிருக்க வலுவற்ற வறுமை மிக்க உலகப் பூதங்களிடம் திரும்பிப் போய், அவற்றிற்கு மறுபடியும் அடிமைகளாவதற்கு நீங்கள் விரும்புவதெப்படி?
கலாத்தியர் 4 : 10 (RCTA)
நாள், திங்கள், காலம், ஆண்டு இவற்றைப் பார்க்கிறீர்களே.
கலாத்தியர் 4 : 11 (RCTA)
உங்களுக்காக நான் உழைத்தது வீண்தானா என அஞ்ச வேண்டியிருக்கிறது.
கலாத்தியர் 4 : 12 (RCTA)
சகோதரர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள்; ஏனெனில், நான் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு அநீதி யொன்றும் இழைக்கவில்லை.
கலாத்தியர் 4 : 13 (RCTA)
என் உடற் பிணிதான் உங்களுக்கு முதன்முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது. இது உங்களுக்கு நினைவிருக்கும்.
கலாத்தியர் 4 : 14 (RCTA)
என் உடல் நிலை உங்களுக்கு இடைஞ்சலாய் இருந்தும், நீங்கள் என்னைப் புறக்கணிக்கவில்லை, வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வது போல் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; ஏன், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவே என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
கலாத்தியர் 4 : 15 (RCTA)
அதைப் பெரும் பேறாகவும் கருதினீர்கள்; அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால், உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுக்கத் தயங்கியிருக்க மாட்டீர்கள். உங்களைப்பற்றி இதைத் திண்ணமாகச் சொல்ல முடியும்.
கலாத்தியர் 4 : 16 (RCTA)
இவ்வாறு உங்களுக்கு உண்மையைச் சொன்னதனால் உங்கள் பகைவன் ஆனேனோ?
கலாத்தியர் 4 : 17 (RCTA)
முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதன்று. தங்கள் மேல் நீங்களும் அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள்.
கலாத்தியர் 4 : 18 (RCTA)
உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே; ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.
கலாத்தியர் 4 : 19 (RCTA)
என் குழந்தைகளே, குழந்தை பெற்றெடுக்கும் தாய்ப்போல, உங்களில் கிறிஸ்து உருவாகும் வரை, மறுபடியும் உங்களுக்காக நான் வேதனையுறுகிறேன்.
கலாத்தியர் 4 : 20 (RCTA)
உங்களைப் பொறுத்த மட்டில் என்ன செய்வது என்றே எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதே நேரில் வந்து, உங்களோடு இருந்து, வேறு வகையாய்ப் பேசிப் பார்த்தால் நலமாயிருக்கும்.
கலாத்தியர் 4 : 21 (RCTA)
சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறீர்களே, நான் ஒன்று கேட்கிறேன்; அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?
கலாத்தியர் 4 : 22 (RCTA)
ஆபிரகாமுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். 'ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன். மற்றவன் அடிமையல்லாத மனைவியிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.
கலாத்தியர் 4 : 23 (RCTA)
ஆனால், அடிமைப் பெண்ணின் மகன் இயல்பு முறைப்படி பிறந்தவன். அடிமையில்லாத மனைவியின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.
கலாத்தியர் 4 : 24 (RCTA)
இது ஓர் உருவகம்: இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர்; ஒன்று, சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அதனால் அடிமைத்தனத்துக்கெனப் பிள்ளைகள் பிறக்கின்றனர்;
கலாத்தியர் 4 : 25 (RCTA)
ஆகாரால் குறிக்கப்படுவது அரேபியாவிலுள்ள சீனாய் மலை. இது இப்பொழுதிருக்கும் யெருசலேமுக்கு அடையாளம். ஏனெனில், இது தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.
கலாத்தியர் 4 : 26 (RCTA)
விண்ணக யெருசலேமோ அடிமையன்று; அந்த யெருசலேம் நமக்கு அன்னை.
கலாத்தியர் 4 : 27 (RCTA)
ஏனெனில், 'பிள்ளை பெறாத மலடியே மகிழ்வாயாக! பேறுகால வேதனையுறாதவளே, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிப்பாயாக! வாழ்க்கைப்பட்டவளின் மக்களைவிட கைவிடப்பட்டவளின் மக்களே மிகப் பலர்' என்று எழுதியுள்ளது.
கலாத்தியர் 4 : 28 (RCTA)
ஆனவே சகோதரர்களே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியின் புதல்வர்கள்.
கலாத்தியர் 4 : 29 (RCTA)
ஆனால், இயல்பு முறைப்படி பிறந்தவன் தேவ ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை எவ்வாறு அப்பொழுது துன்புறுத்தினானோ, அவ்வாறே இப்பொழுதும் நடக்கிறது.
கலாத்தியர் 4 : 30 (RCTA)
எனினும் மறைநூல் கூறுவதென்ன? அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் விரட்டி விடு; அடிமை அல்லாத மனைவியின் மகனோடு அடிமைப் பெண்ணின் மகன் உரிமை கொண்டாட முடியாது'
கலாத்தியர் 4 : 31 (RCTA)
ஆகவே, சகோதரர்களே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; அடிமை அல்லாத மனைவியின் மக்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31