எஸ்றா 8 : 1 (RCTA)
அரசன் அர்தக்சேர்செசின் ஆட்சியின் போது என்னோடு பபிலோனிலிருந்து வந்த குலத்தலைவர்களும் அவர்களது தலைமுறை அட்டவணையுமாவது:
எஸ்றா 8 : 2 (RCTA)
பினேஸ் மக்களில் கெர்சோம்; ஈத்தமார் மக்களில் தானியேல்;
எஸ்றா 8 : 3 (RCTA)
தாவீதின் மக்களில் ஆத்தூஸ்; பாரோசின் சந்ததியைச் சேர்ந்த செக்கெனியாசின் மகன் சக்காரியாசும், மற்றும் நூற்றைம்பது ஆடவரும்;
எஸ்றா 8 : 4 (RCTA)
பாஹாத்மோவாப் மக்களில் ஜரெகேயின் மகன் ஏலியோனாயியும், அவரோடு இருநூறு ஆடவரும்;
எஸ்றா 8 : 5 (RCTA)
செக்கெனியாசின் மக்களில் எசெக்சியேலின் மகனும், அவரோடு முந்நூறு ஆடவரும்;
எஸ்றா 8 : 6 (RCTA)
ஆதான் மக்களில் யோனாத்தாசின் மகன் ஆபேத்தும், அவரோடு ஐம்பது ஆடவரும்;
எஸ்றா 8 : 7 (RCTA)
அலாமின் மக்களில் அத்தாலியாசின் மகன் இசயாசும், அவரோடு எழுபது ஆடவரும்;
எஸ்றா 8 : 8 (RCTA)
சபாத்தியாவின் மக்களில் மிக்காயேலின் மகன் ஜெபெதியாவும், மற்றும் எண்பது ஆடவரும்;
எஸ்றா 8 : 9 (RCTA)
யோவாபின் மக்களில் யாகியேலின் மகன் ஒபெதியாவும், மற்றும் இருநூற்றுப் பதினெட்டு ஆடவரும்;
எஸ்றா 8 : 10 (RCTA)
செலோமித்தின் மக்களில் யொஸ்பியாவின் மகனும், மற்றும் நூற்றறுபது ஆடவரும்;
எஸ்றா 8 : 11 (RCTA)
பேபாயின் மக்களில் பேபாயின் மகன் சக்காரியாசும், மற்றும் இருபத்தெட்டு ஆடவரும்;
எஸ்றா 8 : 12 (RCTA)
ஆஸ்காத்தின் மக்களில் எக்சேத்தானின் மகன் யோகனானும், அவரோடு நூற்றுப்பத்து ஆடவரும்;
எஸ்றா 8 : 13 (RCTA)
அதோனிக்காமின் மக்களில் கடைசிப் புதல்வரான ஏலிபெலேத், யெகியேல், சமாயாஸ் என்பவர்களும், இவர்களோடு அறுபது ஆடவரும்;
எஸ்றா 8 : 14 (RCTA)
பெகுயின் மக்களில் உத்தாயியும், ஜக்கூரும் மற்றும் எழுபது ஆடவருமே.
எஸ்றா 8 : 15 (RCTA)
அஹாவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள் நாங்கள் தங்கியிருந்தோம். அவர்களுள் குருக்கள், பொதுமக்களே அன்றி லேவியர் ஒருவரும் இல்லை.
எஸ்றா 8 : 16 (RCTA)
ஆகையால் எலியெசார், ஆறியேல், செமேயியா, எல்நாத்தான், யாரீபு, வேறொரு எல்நாத்தான், நாத்தான், சக்காரியாஸ், மொசொல்லாம் ஆகிய மக்கள் தலைவர்களையும் ஞானிகளாகிய யொயியாரீபு, எல்நாத்தான் ஆகியோரையும் என்னிடம் அழைத்தேன்;
எஸ்றா 8 : 17 (RCTA)
கஸ்பியா மாநிலத் தலைவன் எதோனிடம் அவர்களை அனுப்பி வைத்தேன். நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென ஆட்களை அனுப்பி வைக்குமாறு, கஸ்பியாவில் வாழ்ந்து வந்த எதோனையும் அவன் சகோதரரான ஆலய ஊழியரையும் கேட்கும்படி அவர்கள் மூலம் செய்தி அனுப்பினேன்.
எஸ்றா 8 : 18 (RCTA)
அவர்களும் சென்றனர். நம் கடவுளின் அருட்கரம் நம்மோடு இருந்ததால், இஸ்ராயேலுக்குப் பிறந்த லேவியின் மகன் மொகோலியின் மக்களிலே மிகவும் கற்றறிந்த ஒருவனையும் சராபியாவையும் அவனுடைய புதல்வரும் சகோதரருமான பதினெட்டுப் பேரையும்;
எஸ்றா 8 : 19 (RCTA)
ஹசபியாவையும், அவனோடு மெராரி மகன் இசயாசையும், இவனுடைய சகோதரரும் மக்களுமான இருபது பேரையும்,
எஸ்றா 8 : 20 (RCTA)
லேவியருக்கு உதவி செய்யும் பொருட்டுத் தாவீதும் அவர் அலுவலரும் நியமித்திருந்த ஆலய ஊழியர்களில் இரு நூற்றிருபது பேரையும் நம்மிடம் கூட்டிக் கொண்டு வந்தனர். இவர்கள் எல்லாரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
எஸ்றா 8 : 21 (RCTA)
நான் அஹாவா ஆற்றருகே இருந்தபோது, நம் கடவுளான ஆண்டவர் திருமுன் எங்களையே தாழ்த்தி, நானும் நம் மக்களும் நம் உடைமைகளோடு நல்லமுறையிலே (யெருசலேம்) போய்ச் சேரும்படியாக ஆண்டவரை வேண்டிக் கொண்டதோடு, அனைவரும் நோன்பு காக்கக் கட்டளையிட்டேன்.
எஸ்றா 8 : 22 (RCTA)
ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட் படையினரையும் குதிரைப் படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு அரசனிடம் கேட்க எனக்கு வெட்கமாய் இருந்தது. இதற்குக் காரணம்: நாங்கள் அரசரை நோக்கி, "எங்கள் கடவுளின் அருட்கரம் தம்மை நேர்மையுடன் தேடுகிற அனைவர் மீதும் இருக்கிறது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும் கோபத்துக்கும் ஆளாவார்கள்" என்றும் சொல்லியிருந்தோம்.
எஸ்றா 8 : 23 (RCTA)
எனவே நாங்கள் நோன்பு காத்து, எங்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.
எஸ்றா 8 : 24 (RCTA)
பின்னர், தலைமைக் குருக்கள் பன்னிருவரையும் சறாபியா, ஹசபியா ஆகியோரோடு அவர்கள் சகோதரர்களில் பத்துப்பேரையும் தேர்ந்தெடுத்தோம்.
எஸ்றா 8 : 25 (RCTA)
அரசரும் அவருடைய ஆலோசகரும் மக்கள் தலைவர்களும் அங்கு இருந்த இஸ்ராயேலர் அனைவரும் ஒப்புகொடுத்திருந்த வெள்ளியையும் பொன்னையும் எங்கள் கடவுளின் ஆலயத்திற்கென அர்ப்பணிக்கப் பட்டிருந்த பாத்திரங்களையும் அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தேன்.
எஸ்றா 8 : 26 (RCTA)
நான் அவர்கள் கையில் நிறுத்துக் கொடுத்தது அறுநூற்றைம்பது தாலந்து நிறையுள்ள வெள்ளி, நூறு வெள்ளிப் பாத்திரங்கள், நூறு தாலந்து நிறையுள்ள பொன்,
எஸ்றா 8 : 27 (RCTA)
ஆயிரம் பொற்கட்டி நிறையுள்ள இருபது பொற்கிண்ணங்கள், பொன் போன்ற இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய இவையே.
எஸ்றா 8 : 28 (RCTA)
பின் அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஆண்டவரின் பரிசுத்தர். இப்பாத்திரங்களும் இவ்வெள்ளியும் இப் பொன்னும் நம் முன்னோரின் கடவுளான ஆண்டவருக்கு விரும்பி ஒப்புக்கொடுக்கப்பட்டதாகையால், அவையும் பரிசுத்தமானவையே.
எஸ்றா 8 : 29 (RCTA)
நீங்கள் குருக்கள், லேவியர்களின் தலைவர்கள் முன்பாகவும், இஸ்ராயேல் குலத்தலைவர்கள் முன்பாகவும், ஆண்டவரின் ஆலயக் கருவூலத்திற்கு இவற்றைக் கொடுக்கும் வரை, பத்திரமாய்ப் பாதுகாத்து வாருங்கள்" என்று சொன்னேன்.
எஸ்றா 8 : 30 (RCTA)
ஆகையால், குருக்களும் லேவியர்களும் நிறுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் பாத்திரங்களையும் யெருசலேமிலுள்ள நம் கடவுளின் ஆலயத்திற்குக் கொண்டு போகும்படி பெற்றுக் கொண்டனர்.
எஸ்றா 8 : 31 (RCTA)
பிறகு முதன் மாதம் பன்னிரண்டாம் நாள், அஹாவா ஆற்றை விட்டு யெருசலேமுக்குப் புறப்பட்டோம். போகும் வழியில் நம் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.
எஸ்றா 8 : 32 (RCTA)
நாங்கள் யெருசலேமை அடைந்து அங்கு மூன்று நாட்கள் தங்கினோம்.
எஸ்றா 8 : 33 (RCTA)
நான்காம் நாள் நம் கடவுளின் ஆலயத்தில், குரு உறியாவின் மகன் மெறெமோத்துடைய கையால் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டன. பினேயெசின் மகன் எலியெசாரும், லேவியரான யோசுவாவின் மகன் யோசபாத்தும், பென்னோயின் மகன் நோவதியாவும் அங்கு இருந்தனர்.
எஸ்றா 8 : 34 (RCTA)
அவை ஒவ்வொன்றையும் நிறுத்து அவற்றின் எண்ணிக்கையையும் எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டனர்.
எஸ்றா 8 : 35 (RCTA)
அப்பொழுது, அடிமைத்தனத்தினின்று திரும்பியிருந்தோர் இஸ்ராயேலின் கடவுளுக்குத் தகனப்பலிகளைச் செலுத்தினர். இஸ்ராயேலின் எல்லா மக்களுக்காகவும், பன்னிரு இளங்காளைகளையும் தொண்ணுற்றாறு செம்மறியாட்டுக் கடாக்களையும் எழுபத்தேழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பாவத்திற்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கடாக்களையும் ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
எஸ்றா 8 : 36 (RCTA)
மேலும் அரசரின் ஆணையைச் சிற்றரசர்களுக்கும் நதிக்கு அக்கரையில் இருந்த ஆளுநர்களுக்கும் அறிவித்தனர். ஆணையைக் கேட்ட அவர்களோ கடவுளின் மக்களுக்கும் ஆலய வேலைக்கும் மிகவும் உறுதுணையாய் இருந்து வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36