எஸ்றா 2 : 1 (RCTA)
பபிலோனிய அரசன் நபுக்கோதனசார் பபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றவர்களுள் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்கும் யூதேயாவிலுள்ள தத்தம் ஊருக்கும் திரும்பிவந்த யூதர்களின் எண்ணிக்கையாவது:
எஸ்றா 2 : 2 (RCTA)
எரோபாபெலோடு வந்தவர்கள்: யோசுவா, நெகேமியா, சராயியா, ரகேலகியா, மர்தோக்கே, பெல்சான், மெஸ்பார், பெகெயி, ரேகும், பானா ஆகியோர்.
எஸ்றா 2 : 3 (RCTA)
இஸ்ராயேல் மக்களுள் ஆடவரின் கணக்காவது: பாரோசின் சந்ததியார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 4 (RCTA)
செப்பாத்தியாவின் சந்ததியார் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 5 (RCTA)
ஆரேயாவின் சந்ததியார் எழு நூற்று எழுபத்தைந்து பேர்;
எஸ்றா 2 : 6 (RCTA)
யோசுவா, யோவாபின் வழிவந்த பாகத்மோவாபின் சந்ததியார் இரண்டாயிரத்து எண்ணுற்றுப் பன்னிரண்டு பேர்;
எஸ்றா 2 : 7 (RCTA)
ஏலாமின் சந்ததியார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்;
எஸ்றா 2 : 8 (RCTA)
ஜெத்துவாவின் சந்ததியார் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்;
எஸ்றா 2 : 9 (RCTA)
சக்காயீயின் சந்ததியார் எழுநூற்று அறுபது பேர்;
எஸ்றா 2 : 10 (RCTA)
பானியின் சந்ததியார் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 11 (RCTA)
பேபாயின் சந்ததியார் அறுநூற்று இருபத்து மூன்று பேர்;
எஸ்றா 2 : 12 (RCTA)
அஜ;காத்தின் சந்ததியார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 13 (RCTA)
அதோனிக்காமின் சந்ததியார் அறுநூற்று அறுபத்தாறு பேர்;
எஸ்றா 2 : 14 (RCTA)
பெகாயியின் சந்ததியார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்;
எஸ்றா 2 : 15 (RCTA)
ஆதினின் சந்ததியார் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்;
எஸ்றா 2 : 16 (RCTA)
எசெக்கியாவின் மகன் ஆத்தேரின் சந்ததியார் தொண்ணுற்றெட்டு பேர்;
எஸ்றா 2 : 17 (RCTA)
பெசாயியின் சந்ததியார் முந்நூற்று இருபத்து மூன்று பேர்;
எஸ்றா 2 : 18 (RCTA)
யோராவின் சந்ததியார் நூற்றுப் பன்னிரண்டு பேர்;
எஸ்றா 2 : 19 (RCTA)
ஹசுமின் சந்ததியார் இருநூற்று இருபத்துமூன்று பேர்;
எஸ்றா 2 : 20 (RCTA)
கெப்பாரின் சந்ததியார் தொண்ணுற்றைந்து பேர்;
எஸ்றா 2 : 21 (RCTA)
பெத்லெகேமில் வாழ்ந்தவருள் நூற்று இருபத்துமூன்று பேர்;
எஸ்றா 2 : 22 (RCTA)
நெதுபாவில் வாழ்ந்தவருள் ஐம்பத்தாறு பேர்;
எஸ்றா 2 : 23 (RCTA)
அநத்தோத்தில் வாழ்ந்தவருள் நூற்றிருபத்தெட்டுப் பேர்;
எஸ்றா 2 : 24 (RCTA)
அஸ்மவேத்தில் வாழ்ந்தவருள் நாற்பத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 25 (RCTA)
கரியாத்தியாரின், செபிரா, பெரோத் நகரத்தார் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்;
எஸ்றா 2 : 26 (RCTA)
ராமா, காபாவா நகரத்தார் அறுநூற்று இருபத்தொரு பேர்;
எஸ்றா 2 : 27 (RCTA)
மக்மாசு நகரத்தார் நூற்று இருபத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 28 (RCTA)
பேத்தேல், ஹாயி நகரத்தார் இருநூற்று இருபத்து மூன்று பேர்;
எஸ்றா 2 : 29 (RCTA)
நெபோவின் மக்களிலே ஐம்பத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 30 (RCTA)
மெக்பீசின் மக்களிலே நூற்றைம்பத்தாறு பேர்;
எஸ்றா 2 : 31 (RCTA)
மற்றொரு ஏலாமின் மக்களிலே ஆயிரத்து இருநூற்றைம்பத்து நான்கு பேர்;
எஸ்றா 2 : 32 (RCTA)
ஹரீமின் மக்களிலே முந்நூற்றிருபது பேர்;
எஸ்றா 2 : 33 (RCTA)
லோத், ஹதித், ஒநோ நகரத்தார் எழுநூற்றிருபத்தைந்து பேர்;
எஸ்றா 2 : 34 (RCTA)
எரிக்கோ நகரத்தார் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்;
எஸ்றா 2 : 35 (RCTA)
செனாவா நகரத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்;
எஸ்றா 2 : 36 (RCTA)
குருக்களிலே: யோசுவா குலத்துச் சதாயியாவின் மக்களில் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்;
எஸ்றா 2 : 37 (RCTA)
எம்மோரின் மக்களிலே ஆயிரத்தைம்பத்திரண்டு பேர்;
எஸ்றா 2 : 38 (RCTA)
பெசூரின் மக்களிலே ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்;
எஸ்றா 2 : 39 (RCTA)
ஹரீமின் மக்களிலே ஆயிரத்துப் பதினேழு பேர்.
எஸ்றா 2 : 40 (RCTA)
லேவியர்களிலே: ஒதோவியாவின் புதல்வரான யோசுவா, கெத்மிகேல் என்பவர்களின் மக்களிலே எழுபத்து நான்கு பேர்;
எஸ்றா 2 : 41 (RCTA)
பாடகர்களுள் அசாப் மக்களிலே நூற்றிருபத்தெட்டுப் பேர்;
எஸ்றா 2 : 42 (RCTA)
வாயிற்காவலரின் மக்களான செல்லும், ஆதேர், தேல்மோன், ஆக்கூப், ஹத்திதா, சோபாயி முதலியோரின் மக்களிலே மொத்தம் நூற்று முப்பத்துதொன்பது பேர்.
எஸ்றா 2 : 43 (RCTA)
ஆலய ஊழியர்களிலே: சீகாவின் மக்கள், கசுவாவின் மக்கள், தாப்பவோத்தின் மக்கள்,
எஸ்றா 2 : 44 (RCTA)
செரோசின் மக்கள், சியாவின் மக்கள்,
எஸ்றா 2 : 45 (RCTA)
பதோனின் மக்கள், லெபெனாவின் மக்கள்,
எஸ்றா 2 : 46 (RCTA)
ஹகபாவின் மக்கள், ஆக்கூப் மக்கள், ஹக்காப்பின் மக்கள், செம்லாயின் மக்கள், ஹானானின் மக்கள்,
எஸ்றா 2 : 47 (RCTA)
காத்தேலின் மக்கள், காஹேரின் மக்கள்,
எஸ்றா 2 : 48 (RCTA)
ராவயியாவின் மக்கள், ராசீனின் மக்கள், நெகொதாவின் மக்கள், கசாமின் மக்கள்,
எஸ்றா 2 : 49 (RCTA)
ஆசாவின் மக்கள், பசேயியாவின் மக்கள், பெசெயேயின் மக்கள்,
எஸ்றா 2 : 50 (RCTA)
ஆசேனாவின் மக்கள், முனீமின் மக்கள், நெபுசீமின் மக்கள்,
எஸ்றா 2 : 51 (RCTA)
பக்பூகின் மக்கள், ககூபாவின் மக்கள், ஹாரூரின் மக்கள்,
எஸ்றா 2 : 52 (RCTA)
பெசுலூத்தின் மக்கள், மகீதாவின் மக்கள்,
எஸ்றா 2 : 53 (RCTA)
ஹர்சாவின் மக்கள், தேமாவின் மக்கள்,
எஸ்றா 2 : 54 (RCTA)
நாசியாவின் மக்கள், ஹாதிபாவின் மக்கள்.
எஸ்றா 2 : 55 (RCTA)
சாலமோனின் ஊழியர்களுடைய மக்களிலே: சொத்தாயீன் மக்கள், சொபெரேத்தின் மக்கள்,
எஸ்றா 2 : 56 (RCTA)
பருதாபின் மக்கள், யாலாவின் மக்கள், தெர்கோனின் மக்கள், கெத்தேலின் மக்கள்,
எஸ்றா 2 : 57 (RCTA)
சப்பாத்தியாவின் மக்கள், ஹாதீலின் மக்கள், அசேபெயீம் வழிவந்த பொகெரேத்தின் மக்கள், அமீயின் மக்கள் ஆகியோர்.
எஸ்றா 2 : 58 (RCTA)
இவ்வாறு எல்லா ஆலய ஊழியர்களும் சாலமோனின் ஊழியர்களுடைய மக்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொன்ணுற்றிரண்டு பேர்.
எஸ்றா 2 : 59 (RCTA)
மேலும் தெல்மலா, தேலார்சா, கெரூப், அதோன், எமேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களில் தாங்கள் இஸ்ராயேலின் வழிவந்தவர் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தவர்களுள்:
எஸ்றா 2 : 60 (RCTA)
தலாயியாவின் மக்களும், தொபியாசின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
எஸ்றா 2 : 61 (RCTA)
இதுவுமன்றி, குருக்களின் மக்களான ஹோபியாவின் மக்களும், அக்கோசின் மக்களும், கலாத் ஊரானான பேர்செலாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்கள் பெயரால் அழைக்கப்பட்ட பேர் செலாயின் மக்களும்,
எஸ்றா 2 : 62 (RCTA)
ஆகிய இவர்கள் தங்கள் தலைமுறை அட்டவணையைத் தேடியும் அடையாததால் அவர்கள் குருத்துவப் பணியினின்று நீக்கப்பட்டனர்.
எஸ்றா 2 : 63 (RCTA)
அதேர்சதா அவர்களைப் பார்த்து, "அறிஞனும் உத்தமனுமான ஒரு குரு தோன்றும்வரை, நீங்கள் உள்தூயகப் பொருட்களில் எதையும் உண்ணக்கூடாது" என்று சொன்னான்.
எஸ்றா 2 : 64 (RCTA)
முன் சொல்லப்பட்டோர் அனைவரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபது பேர்.
எஸ்றா 2 : 65 (RCTA)
அவர்களைத் தவிர, அவர்களின் ஊழியர்களில் ஆணும் பெண்ணுமாய் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தெழு பேர் இருந்தனர். இவர்களிடையே பாடகரும் பாடகிகளும் இருநூறு பேர்.
எஸ்றா 2 : 66 (RCTA)
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து;
எஸ்றா 2 : 67 (RCTA)
ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது.
எஸ்றா 2 : 68 (RCTA)
குலத்தலைவர்களுள் சிலர் யெருசலேமில் உள்ள ஆண்டவரின் ஆலயத்தை அடைந்த போது, ஆலயத்தை அதன் பழைய இடத்திலேயே கட்டி எழுப்பும்படி மனமுவந்து காணிக்கைகளைக் கொடுத்தனர்.
எஸ்றா 2 : 69 (RCTA)
அவர்கள் தத்தம் வசதிக்கேற்ப வேலைச் செலவுக்கு அறுபத்தோராயிரம் பொற்கட்டிகளையும், ஐயாயிரம் ராத்தல் வெள்ளியையும், குருக்களுக்கு நூறு உடைகளையும் கொடுத்தனர்.
எஸ்றா 2 : 70 (RCTA)
குருக்களும் லேவியர்களும், மக்களில் பலரும் பாடகரும் வாயிற்காவலரும் ஆலய ஊழியரும் தத்தம் நகர்களிலும், இஸ்ராயேலர்கள் யாவரும் தத்தம் நகர்களிலும் குடியேறினார்கள்.
❮
❯