எஸ்றா 10 : 1 (RCTA)
எஸ்ரா இவ்வாறு கடவுளின் ஆலயத்தின் முன் விழுந்து அழுது இறைவனை இறைஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த இஸ்ராயேலின் ஆண், பெண், சிறுவர் யாவரும் பெருந்திரளாய் அங்குக் கூடி வருந்தி அழுதனர்.
எஸ்றா 10 : 2 (RCTA)
அப்பொழுது ஏலாமின் புதல்வரில் ஒருவனான யேகியேலின் மகன் செக்கேனியாஸ் எஸ்ராவை நோக்கி, "நாங்கள் புறவினத்தாரிடமிருந்து பெண் கொண்டதால், நம் கடவுளுக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். ஆயினும், இக்காரியத்தின் மட்டில் இஸ்ராயேலருக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.
எஸ்றா 10 : 3 (RCTA)
ஆகவே ஆண்டவரின் திருவுளத்திற்கும், அவர் கட்டளைகளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு அப்பெண்கள் அனைவரையும், அவர்கள் வயிற்றில் பிறந்த மக்களையும் அகற்றிப் போடுவோம் என்று நம் கடவுளாகிய ஆண்டவரோடு உடன்படிக்கை செய்வோம்; திருச்சட்டத்திற்கு ஏற்ற முறையில் நடப்போம்.
எஸ்றா 10 : 4 (RCTA)
எழுந்திரும்; இதுபற்றித் தீர்மானிப்பது உம் கடமையே; நாங்கள் உமக்கு ஆதரவளிப்போம். நீர் தைரியத்துடன் இதைச் செய்யும்" என்று சொன்னான்.
எஸ்றா 10 : 5 (RCTA)
அதைக் கேட்டு எஸ்ரா எழுந்து, குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் தலைவராய் இருந்தோர் அவ்வாறே செய்யுமாறு ஆணையிடச் செய்தார். அவர்களும் அவ்வாறே ஆணையிட்டனர்.
எஸ்றா 10 : 6 (RCTA)
பின் எஸ்ரா கோவில் முகப்பினின்று எழுந்து எலியாசிபின் மகன் யோகனானின் அறைக்குள் புகுந்தார். அங்கு அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோருடைய பாவத்தின் பொருட்டு அழுது புலம்பி, உண்ணாமலும் குடியாமலும் இருந்தார்.
எஸ்றா 10 : 7 (RCTA)
அப்போது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் யெருசலேமில் ஒன்றுகூட வேண்டும் என்றும்,
எஸ்றா 10 : 8 (RCTA)
அவர்களில் எவனாவது மூன்று நாட்களுக்குள் வராமலிருந்தால், மக்கள் தலைவர்கள், மூப்பர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி அவனுடைய உடைமை எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்தவர்களின் கூட்டத்தினின்று விலக்கி வைக்கப்படுவான் என்றும் யூதாவிலும் யெருசலேமிலும் அறிக்கை விடுத்தனர்.
எஸ்றா 10 : 9 (RCTA)
ஆகவே யூதா, பென்யமீன் குலத்தார் அனைவரும் மூன்று நாளுக்குள் யெருசலேமில் கூடினார்கள். ஒன்பதாம் மாதம் இருபதாம் நாள் மக்கள் எல்லாரும் கடவுளுடைய ஆலய வளாகத்தில் தங்கள் பாவத்தின் காரணமாகவும் அஞ்சி நடுங்கிக் கொண்டு நின்றனர்.
எஸ்றா 10 : 10 (RCTA)
குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்து, "புறவினப் பெண்களை மணந்து கடவுளின் கட்டளையை மீறியதால், நீங்கள் இஸ்ராயேலின் பாவங்களை அதிகரித்துள்ளீர்கள்.
எஸ்றா 10 : 11 (RCTA)
இப்போதோ நீங்கள் உங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவர் திருவுளப்படி நடங்கள். மேலும் புறவினத்தாரையும் அவர்கள் நடுவினின்று நீங்கள் கொண்ட மனைவியரையும் விட்டு விலகியிருங்கள்" என்றார்.
எஸ்றா 10 : 12 (RCTA)
அப்பொழுது கூடியிருந்த அனைவரும் உரத்த குரலில், "நீர் சொன்னவாறே நடக்கட்டும்.
எஸ்றா 10 : 13 (RCTA)
ஆயினும், மக்களின் எண்ணிக்கை மிகுதியானதாலும், இது மாரிக்காலமானதால் வெளியே நிற்க எங்களால் கூடாததினாலும், நாங்கள் கட்டிக்கொண்ட பாவம் பெரும்பாவமாய் இருப்பதாலும், இது ஓரிரு நாளில் முடியக் கூடிய வேலை அன்று.
எஸ்றா 10 : 14 (RCTA)
எனவே மக்கள் அனைவருள்ளும் சிலரைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும். புறவினப் பெண்களைக் கொண்டவர் அனைவரும் தத்தம் நகரப் பெரியோர் முன்னும் நீதிபதிகள் முன்னும் குறித்த நேரத்தில் நீதி விசாரணைக்கு வர வேண்டும். இப்பாவத்தின் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக் கனல் நம்மை விட்டு விலகும் வரை விசாரணை நடக்க வேண்டும்" என்றனர்.
எஸ்றா 10 : 15 (RCTA)
அவர்களது விண்ணப்பத்திற்கு ஏற்றபடி அசாயேலின் மகன் யோனத்தானும், தேக்குவேயின் மகன் யாவாசியாவும் இதற்காக நியமிக்கப்பட்டனர். லேவியரான மெசொல்லாமும் செபெதாயியும் அவர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்டனர்.
எஸ்றா 10 : 16 (RCTA)
அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தோர் இவ்வாறே செய்து வந்தனர். குரு எஸ்ராவும் குலத் தலைவர்களும் தங்கள் முன்னோரின் குடும்ப வரிசைப்படியும் பெயர் வரிசைப்படியும் பத்தாம் மாதம் முதல் நாள் விசாரணைக்காக அமர்ந்தனர்.
எஸ்றா 10 : 17 (RCTA)
புறவினப் பெண்களைக் கொண்டவர்களுடைய பெயர்களை எழுத வேண்டிய வேலை முதன் மாதம் முதல் நாளிலேயே முடிந்து விட்டது.
எஸ்றா 10 : 18 (RCTA)
குருக்கள் புதல்வரிலே புறவினப் பெண்களைக் கொண்டவர்கள் பெயர் வருமாறு: யோசுவா மக்களில் யோசெதேக் புதல்வரும் சகோதரருமான மாவாசியா, எலியெசேர், யாரீப், கொதொலியா ஆகியோர்.
எஸ்றா 10 : 19 (RCTA)
இவர்கள் தங்கள் மனைவியரைத் தள்ளிவிடவும் தங்கள் பாவத்துக்காக ஒரு செம்மறி ஆட்டுக் கடாவைப் பலியிடவும் ஒப்புக் கொண்டனர்.
எஸ்றா 10 : 20 (RCTA)
எம்மரின் மக்களிலே ஹனானியும் ஜெபெதியாவும்;
எஸ்றா 10 : 21 (RCTA)
ஹாரிமின் மக்களில் மாவாசியா, எலியா, செமெயியா, யேகியேல், ஓசியாஸ் ஆகியோர்;
எஸ்றா 10 : 22 (RCTA)
பெசூருடைய மக்களில் எலியோனாயி, மாவாசிய, இஸ்மாயேல், நத்தானியேல், யோசபாத், எலாசா ஆகியோர்;
எஸ்றா 10 : 23 (RCTA)
லேவியர் புதல்வர்களிலே யோசபாத், செமேயி, கலித்தா என்ற செலாயியா, பாத்தாயியா, யூதா, எலியெசெர் ஆகியோர்;
எஸ்றா 10 : 24 (RCTA)
பாடகர்களிலே எலியாசிப்; வாயிற்காவலரிலே செல்லும், தேலம், உரீ ஆகியோர்;
எஸ்றா 10 : 25 (RCTA)
மற்ற இஸ்ராயேலருக்குள்ளே பாரோசின் மக்களில் ரெமெயியா, யெசியா, மெல்கியா, மியாமின், எலியெசேர், மெல்கியா, பானேயா ஆகியோர்;
எஸ்றா 10 : 26 (RCTA)
ஏலாமின் மக்களில் மத்தானியா, சக்காரியாஸ், யேகியேல், ஆப்தி, யெரிமோத், எலியா ஆகியோர்;
எஸ்றா 10 : 27 (RCTA)
ஜெத்துவாவின் மக்களில் எலியோனாயி, எலியாசிப், மத்தானியா, யெரிமூத், ஜாபத், அசிசா ஆகியோர்;
எஸ்றா 10 : 28 (RCTA)
பெபாயின் மக்களில் யோகனான், ஹனானியா, ஜபாயி, அத்தலாயி ஆகியோர்;
எஸ்றா 10 : 29 (RCTA)
பானியின் மக்களில் மொசொல்லாம், மெல்லூக், அதாயியா, யாசூப், சாவால், ராமோத் ஆகியோர்;
எஸ்றா 10 : 30 (RCTA)
பாகாத்மோவாபின் மக்களில் எத்னா, கெலால், பனாயியாஸ், மவாசியாஸ், மத்தானியாஸ், பெசேலெயேல், பென்னுயி, மனாசே ஆகியோர்;
எஸ்றா 10 : 31 (RCTA)
ஹெறமின் மக்களில் எலியெசேர், யோசுவே, மெல்கியாஸ், செமேயியாஸ், சிமெயோன்,
எஸ்றா 10 : 32 (RCTA)
பென்யமீன், மலோக், சமாரியாஸ் ஆகியோர்;
எஸ்றா 10 : 33 (RCTA)
ஹாசோமின் மக்களில் மத்தானாயி, மத்தத்தா, ஜாபத், எலிப்பெலேத், யெர்மாயி, மனாசே, செமேயி ஆகியோர்;
எஸ்றா 10 : 34 (RCTA)
பானியின் மக்களில் மாவாதி, அம்ராம், வேல்,
எஸ்றா 10 : 35 (RCTA)
பானையாஸ், பதாயியாஸ், கேலியாவு, வானியா,
எஸ்றா 10 : 36 (RCTA)
மேரேமோத், எலியாசிப், மத்தானியாஸ்,
எஸ்றா 10 : 37 (RCTA)
மத்தானாயி, யாசி, பானி,
எஸ்றா 10 : 38 (RCTA)
பென்னுயி, செமேயி,
எஸ்றா 10 : 39 (RCTA)
சால்மியாஸ், நாத்தான்,
எஸ்றா 10 : 40 (RCTA)
அதாயியாஸ், மெக்னெதெபாயி, சிசாயி, சாறாயி,
எஸ்றா 10 : 41 (RCTA)
எஸ்ரேல், செலேமியா, செமேரியா,
எஸ்றா 10 : 42 (RCTA)
செல்லும், அமாரியா, யோசேப்பு ஆகியோர்;
எஸ்றா 10 : 43 (RCTA)
நெபோவின் மக்களில் யேகியேல், மத்தத்தியாஸ், ஜாபேர், ஜபீனா, யெது, யோவேல், பானாயியா ஆகியோர்.
எஸ்றா 10 : 44 (RCTA)
இவர்கள் எல்லாரும் புறவினப் பெண்களை மணந்திருந்தவர்கள். இவர்களுள் சிலருக்குப் பிள்ளைகளும் இருந்தனர்.
❮
❯