எசேக்கியேல் 8 : 1 (RCTA)
ஆறாம் ஆண்டில் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் யூதாவின் மூப்பர்களோடு உட்கார்ந்திருந்த போது ஆண்டவராகிய இறைவனின் கரம் அங்கே என் மேல் இறங்கிற்று.
எசேக்கியேல் 8 : 2 (RCTA)
நான் அப்பொழுது ஒரு காட்சி கண்டேன்; அக்கினி மயம் போன்ற சாயலையுடைய ஒருவரைக் கண்டேன்; அவர் இடுப்புத் துவக்கி கீழெல்லாம் அக்கினியாயும், இடுப்புத் துவக்கி மேலெலாம் ஒளியாய்த் துலங்கி மின்னும் வெண்கலம் போன்றும் இருந்தது.
எசேக்கியேல் 8 : 3 (RCTA)
கையைப் போலத் தேன்றிய ஒன்றை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்தார்; அப்போது ஆவி என்னைத் தூக்கி, பூமிக்கும் வானத்துக்கும் நடுவில் நிறுத்தி, பரவசத்தில் யெருசலேமுக்குக் கொண்டு போய்க் கடவுளின் முன்னிலையில் கோபம் வருவிக்கும் சிலை இருக்கின்ற வடதிசைக்கு எதிரில் உள்ள உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டார்.
எசேக்கியேல் 8 : 4 (RCTA)
இதோ, அங்கேயும் இஸ்ராயேல் ஆண்டவருடைய மகிமை, முன்னொரு நாள் நான் சமவெளியில் கண்ட காட்சியில் தோன்றியது போலவே காணப்பட்டது.
எசேக்கியேல் 8 : 5 (RCTA)
அவர் என்னிடம், "மனிதா, உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்" என்றார். நான் என் கண்களை உயர்த்தி வடக்கே நோக்க, இதோ, பலிபீடத்தின் வாயிலுக்கு வடக்கேயிருந்த முற்றத்தில் கோபமூட்டும் அந்தச் சிலை தென்பட்டது.
எசேக்கியேல் 8 : 6 (RCTA)
அப்போது அவர் என்னிடம், "மனிதா, அவர்கள் செய்வதைப் பார்க்கிறாயா? நமது திருத்தலத்தினின்று நம்மைத் துரத்துவதற்காக இஸ்ராயேல் வீட்டார் செய்கிற மாபெரும் அக்கிரமத்தைக் காண்கிறாயா? இதிலும் பெரிய அக்கிரமத்தைப் பார்க்கப்போகிறாய்" என்றார்.
எசேக்கியேல் 8 : 7 (RCTA)
பின்பு அவர் கோயில் மண்டப வாயிலுக்குக் கொண்டு போனார்; அங்கே சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
எசேக்கியேல் 8 : 8 (RCTA)
அவர் "மனிதா, நீ சுவரிலே ஒரு துவாரமிடு" என்று எனக்குச் சொன்னார். நான் சுவரிலே துவாரமிடும் போது அங்கே ஒரு வாயிற் படியைக் கண்டேன்.
எசேக்கியேல் 8 : 9 (RCTA)
நீ உள்ளே நுழைந்து அங்கே அவர்கள் செய்கிற கொடிய அக்கிரமங்களைப் பார்" என்றார்.
எசேக்கியேல் 8 : 10 (RCTA)
நான் உள்ளே நுழைந்து பார்க்கும் போது எல்லா விதமான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள், வெறுப்புக்குரிய மிருகங்கள் ஆகியவற்றின் சாயலான படிமங்களையும், இஸ்ராயேல் மக்கள் செய்து வைத்த எல்லாச் சிலைகளையும் கண்டேன்; அவை சுவரைச் சுற்றிலும் வரையப்பட்டிருந்தன.
எசேக்கியேல் 8 : 11 (RCTA)
அவற்றின் முன் இஸ்ராயேல் மக்களின் மூப்பர் எழுபது பேரும் நின்று கொண்டிருந்தனர்; அவர்களின் நடுவில் சாப்பானின் மகனாகிய யேசோனியாசும் நின்று கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் தூபக்கலசத்தைப் பிடித்திருந்தார்கள்; அதினின்று நறுமணப் புகை மிகுதியாய் எழும்பிற்று.
எசேக்கியேல் 8 : 12 (RCTA)
அப்போது ஆண்டவர், "மனிதா, இஸ்ராயேலின் மூப்பர்கள் இருளிலே தத்தம் அறைகளில் மறைவாகச் செய்கிறதை நீ கண்கூடாய்க் கண்டாயன்றோ? அவர்கள், 'ஆண்டவர் எங்களைப் பார்க்கிறார் அல்லர், ஆண்டவர் நாட்டினைக் கைவிட்டு விட்டார்' என்கிறார்கள் அல்லவா?" என்றார்.
எசேக்கியேல் 8 : 13 (RCTA)
அவரே தொடர்ந்து: "நீ கொஞ்சம் திரும்பி பார்; இதை விடப் பெரிய அக்கிரமம் இவர்கள் செய்வதைக் காண்பாய்" என்றார்.
எசேக்கியேல் 8 : 14 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் கோயிலின் வடக்கு வாயிலின் வழியாய் என்னைக் கூட்டிக் கொண்டு போனார்; ஆங்கே அதோனீஸ் சிலையின் முன்பாக அழுது கொண்டிருந்த பெண்களைக் கண்டேன்.
எசேக்கியேல் 8 : 15 (RCTA)
அப்போது அவர், "மனிதா, பார்த்தாயா? இன்னும் இதனை விடப் பெரிய அக்கிரமத்தைக் காண்பாய்" என்றார்.
எசேக்கியேல் 8 : 16 (RCTA)
அவர் என்னைக் கோயிலின் மூலதானத்தினுள் கூட்டிச் சென்றார்; கோயிலின் வாயிற்படியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ இருபத்தைந்து பேர் இருந்தனர்; அவர்கள் முதுகைக் கோயிலுக்கும், முகத்தைக் கீழ்த்திசைக்கும் திருப்பி வைத்துக் கொண்டு கிழக்கில் தோன்றிய கதிரவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
எசேக்கியேல் 8 : 17 (RCTA)
அவர் என்னை நோக்கி: "மனிதா, இவர்கள் செய்கிறதைப் பார்த்தாயா? யூதாவின் குலத்தினர் இங்கே செய்யும் அக்கிரமங்கள் அற்பமானவையோ? தங்கள் அக்கிரமத்தால் நாடு முழுவதையும் நிரப்பி நமது கோபத்தை மூட்டுகிறார்களே! இதோ, திராட்சைக் கொடியை எடுத்து முத்தி செய்கிறார்கள், பார்.
எசேக்கியேல் 8 : 18 (RCTA)
ஆகையால் நாமும் அவர்களைக் கோபத்தோடேயே நடத்துவோம்; நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டாது. நாம் அவர்கள் மீது தயை கூர மாட்டோம்; அவர்கள் எவ்வளவு தான் உரத்த குரலில் கூவி அழைத்தாலும் நாம் செவிசாய்க்க மாட்டோம்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18