எசேக்கியேல் 48 : 1 (RCTA)
"கோத்திரங்களின் பெயர்கள் இவையே: வடக்கு எல்லை துவக்கி ஆமாத்துக்குப் போகும் வழிப்போக்கில் எத்தாலோன் வழி ஓரத்துக்கும், ஏனால் எல்லையிலிருந்து ஏமாத்துக்குப் போகும் திசையில் வடக்கிலிருக்கும் தமஸ்குவின் எல்லைக்கும் இடைப்பட்ட நாடு, கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் தாண் கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 2 (RCTA)
தாணின் எல்லையருகே கிழக்கு முதல் கடல் வரையில் உள்ள நாடு ஆசேருக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 3 (RCTA)
ஆசேருடைய எல்லையருகே கிழக்கு முனை தொடங்கிக் கடல் முனை மட்டும் உள்ள நாடு நெப்தலி கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 4 (RCTA)
நெப்தலி எல்லையருகே கிழக்கு முனை முதல் கடல் முனை வரை உள்ள நாடு மனாசே கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 5 (RCTA)
மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை முனை தொடங்கிக் கடல் வரை உள்ள நாடு எப்பிராயீமுக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 6 (RCTA)
எப்பிராயீமின் எல்லைக்கடுத்தாற் போலக் கீழ்த்திசை முதல் கடல் நாடு வரை உள்ள நாடு ரூபனுக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 7 (RCTA)
ரூபனுடைய எல்லையருகே கிழக்கு முனை முதல் கடலோரம் வரை உள்ள நாடு யூதாவுக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
எசேக்கியேல் 48 : 8 (RCTA)
யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கிக் கடலோரம் வரைக்கும் உள்ள நாடு நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டிய பகுதி; அது மற்ற ஒவ்வொரு பங்கு போலக் கடலோரம் வரை நீளத்திலும் அகலத்திலும் இருபத்தையாயிரம் கோலாக இருக்கும்; பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
எசேக்கியேல் 48 : 9 (RCTA)
ஆண்டவருக்கு நீங்கள் ஒதுக்கிக் கொடுக்கவேண்டிய பாகம் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமும் உள்ளதாயிருக்கும்.
எசேக்கியேல் 48 : 10 (RCTA)
இந்தப் பரிசுத்த பங்கு- அதாவது வடக்கே இருபத்தையாயிரம் கோல் நீளம், மேற்கே பதினாயிரம் கோல் அகலம், கிழக்கே பதினாயிரம் கோல் அகலம், தெற்கே இருபத்தையாயிரம் கோல் நீளம் கொண்ட அந்த நிலம் பரிசுத்த இடத்தின் அர்ச்சகர்களுக்கு உரியது; ஆண்டவருடைய பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
எசேக்கியேல் 48 : 11 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் வழிதவறி நடந்தபோதும், லேவியர் கூட நெறி தவறி நடந்த போதும், வழி தவறாமல் நம்முடைய நீதி முறைமைகளைக் கடைப்பிடித்திருந்த அர்ச்சிக்கப்பட்ட குருக்களாகிய சாதோக்கின் மக்களுக்கு இந்தப் பகுதி உரியதாகும்,
எசேக்கியேல் 48 : 12 (RCTA)
நாட்டின் பகுதிகளிலெல்லாம் சிறந்த பகுதியான இந்தப் பரிசுத்த இடமே அவர்கள் பங்காகும்; இது லேவியர்களின் எல்லையருகே இருக்கும்.
எசேக்கியேல் 48 : 13 (RCTA)
அர்ச்சகர்களுடைய எல்லைக்கு அடுத்தாற்போல லேவியர்களுக்கு இருக்க வேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பதினாயிரங் கோல் அகலமும் இருக்கும்; முழு நீளம் இருபத்தையாயிரம் கோலும், முழு அகலம் பதினாயிரம் கோலும் இருக்க வேண்டும்.
எசேக்கியேல் 48 : 14 (RCTA)
அவர்கள் அந்நிலத்திலே ஒன்றையும் விற்கலாகாது; ஒன்றையும் மாற்றலாகாது; ஒன்றையும் மற்றவர்களுக்குக் கொடுக்கலாகாது; ஏனெனில் அவை அனைத்தும் ஆண்டவருக்குப் பரிசுத்தமானவை என அர்ப்பணிக்கப்பட்டவை.
எசேக்கியேல் 48 : 15 (RCTA)
இருபத்தையாயிரம் கோல் நீளமும், ஐயாயிரம் கோல் அகலமும் உள்ள மீதி இடம் பொதுவானது; நகரத்தின் குடியிருப்புக்கும், இதன் வெளி நிலம் தோட்டங்களுக்கும் விடப்படும்; நகரம் அதன் நடுவில் கட்டப்படும்.
எசேக்கியேல் 48 : 16 (RCTA)
அதன் அளவுகள்: வடக்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், தெற்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், கிழக்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், மேற்கே நாலாயிரத்து ஐந்நூறு கோலாக இருக்கும்.
எசேக்கியேல் 48 : 17 (RCTA)
நகரத்தின் வெளி நிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாய் இருக்க வேண்டும்.
எசேக்கியேல் 48 : 18 (RCTA)
பரிசுத்த நிலத்துக்கு எதிரே மீதியாயிருக்கும் நீளத்தில் கிழக்கே பதினாயிரம் கோலும், மேற்கே பதினாயிரம் கோலுமான பகுதி பரிசுத்த நிலத்தோடு ஒட்டியிருக்கும்; அதன் வருமானம் நகரத்தில் ஊழியம் செய்வோரின் உணவுக்காகும்.
எசேக்கியேல் 48 : 19 (RCTA)
நகரத்தில் ஊழியம் செய்ய வேண்டியவர்கள் எல்லா கோத்திரங்களிலிருந்தும் நியமிக்கப்படுவார்கள்.
எசேக்கியேல் 48 : 20 (RCTA)
மானிய நிலமனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும் இருபத்தையாயிரம் கோல் அகலமுமாய் இருக்க வேண்டும்; அதிலே பரிசுத்த இடத்தின் பங்கும், நகரத்துக்குரிய பங்கும், இவ்விரு பங்குகளாகப் பிரிக்கப்படும்.
எசேக்கியேல் 48 : 21 (RCTA)
பரிசுத்த இடத்திற்கும் நகரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கின் நான்கு புறத்திலும்- கீழ்த்திசை முனை வரையில் இருபத்தையாயிரம் கோலும், கடல் திசையில் கடல் முனை வரையில் உள்ள இருபத்தையாயிரம் கோலும் போக, மீதியான இடமெல்லாம் தலைவன் பங்காகும்; பரிசுத்த இடத்தின் பங்கும், கோயிலின் தூயகமும் அதன் நடுவிலிருக்கும்.
எசேக்கியேல் 48 : 22 (RCTA)
தலைவன் பங்கின் நடுவிலிருக்கும் லேவியர்களின் பகுதியும், நகரத்துக்குக் குறிக்கப்பட்ட பகுதியும் போக, யூதா, பென்யமீன் இவர்களுடைய எல்லைகளுக்குட்பட்ட நிலங்கள் தலைவனுக்குச் சேர வேண்டும்.
எசேக்கியேல் 48 : 23 (RCTA)
மற்ற கோத்திரங்களின் பங்குகளாவன: கீழ்த்திசை துவக்கி மேற்றிசை வரை பென்யமீனுக்கு ஒரு பங்கு;
எசேக்கியேல் 48 : 24 (RCTA)
பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை வரையில் சிமியோனுக்கு ஒரு பங்கு;
எசேக்கியேல் 48 : 25 (RCTA)
சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை முதல் மேற்றிசை மட்டும் இசக்காருக்கு ஒரு பங்கு;
எசேக்கியேல் 48 : 26 (RCTA)
இசக்காரின் எல்லையருகே கிழக்கு முதல் மேற்குவரை சாபுலோனுக்கு ஒரு பங்கு;
எசேக்கியேல் 48 : 27 (RCTA)
சாபுலோன் எல்லையருகே கிழக்கு முதல் கடலோரம் ஈறாக காத் என்பவனுக்கு ஒரு பங்கு;
எசேக்கியேல் 48 : 28 (RCTA)
காத் என்பவனுடைய பங்கின் தெற்கு எல்லை தாமாரிலிருந்து காதேசில் உள்ள மெரிபா தண்ணீர் வரையிலும், பெருங்கடல் வரையிலும் போகும்.
எசேக்கியேல் 48 : 29 (RCTA)
இவ்வாறு தான் இந்த நாட்டில் உங்களுக்குரிய பங்குகளை இஸ்ராயேல் கோத்திரங்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 48 : 30 (RCTA)
"நகரத்தினின்று வெளியேறும் வழிகள்: நாலாயிரத்து ஐநூறு கோல் உள்ள வடபுறத்தில்,
எசேக்கியேல் 48 : 31 (RCTA)
நகரத்தின் வாயில்கள் மூன்று உள்ளன. இவை இஸ்ராயேல் கோத்திரங்களின் பெயர்களையே பெறும்: ரூபனின் வாயில் ஒன்று, யூதாவின் வாயில் ஒன்று, லேவியின் வாயில் ஒன்று.
எசேக்கியேல் 48 : 32 (RCTA)
நாலாயிரத்து ஐநூறு கோல் உள்ள கீழ்த்திசையில் மூன்று வாயில்கள்: யோசேப்பின் வாயில் ஒன்று, பென்யமீன் வாயில் ஒன்று, தாண் வாயில் ஒன்று.
எசேக்கியேல் 48 : 33 (RCTA)
நாலாயிரத்து ஐநூறு கோல் அளவுள்ள தென்திசையில் மூன்று வாயில்கள்: சிமியோனின் வாயில் ஒன்று, இசக்காரின் வாயில் ஒன்று, சாபுலோன் வாயில் ஒன்று.
எசேக்கியேல் 48 : 34 (RCTA)
நாலாயிரத்து ஐநூறு கோல் அளவுள்ள மேற்றிசையில் மூன்று வாயில்கள்: காத் வாயில் ஒன்று, ஆசேர் வாயில் ஒன்று, நெப்தலி வாயில் ஒன்று.
எசேக்கியேல் 48 : 35 (RCTA)
அந்நகரின் சுற்றளவு பதினெண்ணாயிரம் கோல். அந்நாள் முதல் நகரம் 'ஆண்டவர் அங்கே இருக்கிறார்' என்றே பெயர் பெறும்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35