எசேக்கியேல் 45 : 1 (RCTA)
"நீங்கள் சீட்டுப்போட்டு நாட்டைப் பங்கிடும் போது, நாட்டில் ஒரு பங்கை முதற் கண் பிரித்து வையுங்கள்; இருபத்தையாயிரம் கோல் நீளமும் பதினாயிரம் கோல் அகலமும் இருக்கட்டும்; அது பரிசுத்தமான பங்கு; அதை ஆண்டவருக்கெனக் கொடுத்து விடுங்கள்; அந்தப் பரப்புள்ள இடம் முழுவதும் பரிசத்தமானதாய் இருக்கும்;
எசேக்கியேல் 45 : 2 (RCTA)
அதிலே பரிசுத்த இடத்துக்கென ஐந்நூறு கோல் சதுரமான நிலப்பரப்பு அளக்கப்படும்; அதைச் சுற்றிலும் ஐம்பது கோல் அளவுள்ள வெளியிடம் விடப்படும்.
எசேக்கியேல் 45 : 3 (RCTA)
இந்தக் கோலால் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமுமுள்ள நிலப்பரப்பில் பரிசுத்த இடமும், திருத்தூயகமும் இருக்கும்.
எசேக்கியேல் 45 : 4 (RCTA)
நாட்டின் பரிசுத்த பங்காகிய அது, ஆண்டவரின் திருமுன் வந்து இறைவழிபாடு செய்யும் கோயில் அர்ச்சகர்களின் பங்காய் இருக்கும்; அதிலே அவர்களின் வீடுகளுக்குரிய இடமும், பரிசுத்த இடத்துக்கான நிலப்பகுதியும் இருக்கும்.
எசேக்கியேல் 45 : 5 (RCTA)
பின்னும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங் கோல் அகலமுமான இடம் கோயிலில் பணிவிடை செய்யும் லேவியருக்குக் கொடுக்கப்படும்; அங்கே அவர்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வார்கள்.
எசேக்கியேல் 45 : 6 (RCTA)
பரிசுத்த இடத்துக்கென்று ஒதுக்கப்பட்ட வெளியிடத்திற்கு எதிராக ஐயாயிரங் கோல் அகலமும், இருபத்தையாயிரம் கோல் நீளமும் அளந்து நகரத்துக்கென விடுவீர்கள்; இது இஸ்ராயேல் வீட்டாரனைவர்க்குமே சொந்தமாயிருக்கும்.
எசேக்கியேல் 45 : 7 (RCTA)
"பரிசுத்த இடத்துக்கும் நகரத்துக்கும் என ஒதுக்கப்பட்ட இடத்துக்கு இருபுறத்திலும் தலைவனின் பங்கு குறிக்கப்படவேண்டும்; அது கோயிலின் நிலத்துக்கும் நகரத்தின் நிலத்துக்கும் முன்னால் இருக்கும்; அது அவற்றிற்குக் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கும் நாட்டின் கிழக்கு எல்லை முதல் மேற்கு எல்லை வரை பரவியிருக்கும்; அவனது நிலம் ஒவ்வொரு கோத்திரப் பங்குகளின் நிலத்திற்கும் சமமாயிருக்க வேண்டும்.
எசேக்கியேல் 45 : 8 (RCTA)
இஸ்ராயேலில் காணிபூமி இருப்பதால், தலைவர்கள் இனி நம் மக்களை ஒடுக்கலாகாது; இஸ்ராயேல் மக்களுக்கு அவரவர் கோத்திரத்துக்குத் தக்கவாறு நாட்டிலே பங்கு விடவேண்டும்.
எசேக்கியேல் 45 : 9 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேலின் தலைவர்களே, நீங்கள் செய்த அநீதிகள் போதும்; இனி நீங்கள் கொடுமையையும் கொள்ளையையும் ஒழித்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; நம் மக்களுக்குச் சொந்தமான பூமியினின்று அவர்களைத் துரத்தாதேயுங்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 45 : 10 (RCTA)
உண்மையான எடை காட்டும் தராசும், சரியான அளவுள்ள மரக்காலும் பாத்திரமும் உங்களுக்கு இருக்க வேண்டும்;
எசேக்கியேல் 45 : 11 (RCTA)
மரக்காலும் பாத்திரமும் ஒரே அளவுள்ளதாயிருக்க வேண்டும்; மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவு பாத்திரம் கலத்தில் பத்தில் ஒரு பங்கும் கொண்டவை; கலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே இவற்றின் அளவும் வரையறுக்கப்படும்.
எசேக்கியேல் 45 : 12 (RCTA)
ஷூக்கெல் என்பது இருபது கேரா; ஒரு மீனாவில் பதினைந்து அல்லது இருபது அல்லது இருபத்தைந்து ஷூக்கெல் இருக்கிறது.
எசேக்கியேல் 45 : 13 (RCTA)
"நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இதுவே: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் எடுத்துப் படைக்க வேண்டும்.
எசேக்கியேல் 45 : 14 (RCTA)
எண்ணெயின் அளவு ஓர் அளவு பாத்திரமாகும்; அளவு பாத்திரத்தின் கொள்ளளவு ஒரு கலம் பிடிக்கும் குடத்தில் பத்தில் ஒரு பங்கு.
எசேக்கியேல் 45 : 15 (RCTA)
இஸ்ராயேலர் தங்கள் பரிகாரத்துக்காகத் தகனப்பலியோ சாதாரண பலியோ சமாதானப் பலியோ செலுத்த வேண்டுமானால், இருநூறு ஆடுகள் கொண்ட மந்தையில் ஓர் ஆட்டுக் கடாவை ஒப்புக்கொடுப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 45 : 16 (RCTA)
நாட்டு மக்கள் யாவரும் இஸ்ராயேலின் தலைவனுக்கு இந்தச் சந்திப்புத் தரக்கடவார்கள்.
எசேக்கியேல் 45 : 17 (RCTA)
ஆனால் இஸ்ராயேல் வீட்டாரின் கடன் திருநாட்களிலும், மாதப் பிறப்பு ஆகிய பண்டிகைகளிலும், ஓய்வு நாட்களிலும், மற்றுமுள்ள இஸ்ராயேலின் திருவிழாக்களிலும் தலைவனே அவர்கள் செலுத்த வேண்டிய சாதாரண பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளான்; அவன் இஸ்ராயேல் இனத்தார்க்காகப் பாவப் பரிகாரப் பலியும் தகனப் பலியும் சமாதானப் பலியும் பரிகாரத்துக்கென ஒப்புக் கொடுக்க வேண்டும்.
எசேக்கியேல் 45 : 18 (RCTA)
"ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: முதல் மாதத்தில் முதல் நாள், நீ பழுதற்ற ஒரு காளையை தெரிந்தெடுத்துக் கொண்டு வந்து, பரிசுத்த இடத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்;
எசேக்கியேல் 45 : 19 (RCTA)
பாவப் பரிகாரப் பலியான மிருகத்தின் இரத்தத்தில் அர்ச்சகர் கொஞ்சம் எடுத்துக் கோயிலின் கதவு நிலைகளிலும், பலி பீடத்து நீள் விளிம்பின் நான்கு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் கதவு நிலைகளிலும் பூசக்கடவார்.
எசேக்கியேல் 45 : 20 (RCTA)
அறியாமையால் தவறு செய்தவர்களுக்காகவும், தப்பறையில் விழுந்து குற்றம் புரிந்தவர்களுக்காகவும் பரிகாரமாக மேற்சொன்னவாறு மாதத்தின் ஏழாம் நாளிலும் செய்து, கோயிலைத் தூய்மைப் படுத்துவாய்.
எசேக்கியேல் 45 : 21 (RCTA)
முதல் மாதத்தின் பதினான்காம் நாள் பாஸ்கா என்னும் திருவிழா கொண்டாடப்படும்; ஏழு நாட்கள் புளிக்காத அப்பங்களைப் புசிக்க வேண்டும்.
எசேக்கியேல் 45 : 22 (RCTA)
அந்நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டு மக்கள் எல்லாருக்காகவும், ஒரு காளையைப் பரிகாரப் பலியாகப் படைப்பான்.
எசேக்கியேல் 45 : 23 (RCTA)
விழா ஏழு நாட்கள் நீடிக்கும்; அந்த ஏழு நாளும் அவன் நாடோறும் ஆண்டவருக்குத் தகனப் பலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும், மாசில்லாத ஏழு ஆட்டுக்கடாக்களையும் படைக்கக்கடவான்; மேலும் நாடோறும் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தருவான்.
எசேக்கியேல் 45 : 24 (RCTA)
அன்றியும் உணவுப் பலியாக, ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணையும் ஒப்புக் கொடுக்கக் கடவான்.
எசேக்கியேல் 45 : 25 (RCTA)
"ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் தொடங்கும் பண்டிகையிலும் அவ்வாறே அவன் ஏழு நாட்களும் பாவப் பரிகாரப்பலியும் தகனப்பலியும் உணவுப்பலியும் தரவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25