எசேக்கியேல் 44 : 1 (RCTA)
பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 44 : 2 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்;
எசேக்கியேல் 44 : 3 (RCTA)
தலைவன் மட்டும் ஆண்டவரின் திருமுன்னிலையில் அப்பம் உண்பதற்காக அங்கே வந்து உட்காரலாம்; அவன் கூட மண்டபத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, அவ்வழியாகவே வெளியேற வேண்டும்" என்று சொன்னார்.
எசேக்கியேல் 44 : 4 (RCTA)
பின்பு அவர் வடக்கு வாயில் வழியாய் என்னைத் திருக்கோயிலின் முன்னிடத்திற்குக் கூட்டிவந்தார்; கண் திறந்து பார்த்தேன்; ஆண்டவருடைய மகிமை ஆண்டவரின் திருக்கோயிலை நிரப்பிற்று; அதைக் கண்டு நான் தரையில் குப்புற விழுந்தேன்.
எசேக்கியேல் 44 : 5 (RCTA)
அப்போது ஆண்டவர் எனக்குக் கூறினார்: "மனிதா, ஆண்டவரின் திருக்கோயிலைப்பற்றிய எல்லா ஒழுங்குமுறைமைகளையும் சட்டங்களையும் உனக்குச் சொல்லப் போகிறோம், கூர்ந்து கவனி; கண்ணால் நன்றாகப் பார்; காதால் கவனமாய்க் கேள். கோயிலுக்குள் நுழையக் கூடியவர்களையும், தூயகத்தில் நுழையத் தகாதவர்களையும் நன்றாய்க் கவனி.
எசேக்கியேல் 44 : 6 (RCTA)
பிறகு கலகக்காரராகிய இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, போதும்; நீங்கள் செய்து வந்த அருவருப்பான செயல்களை எல்லாம் விடுங்கள்;
எசேக்கியேல் 44 : 7 (RCTA)
நீங்கள் நமக்குக் காணிக்கை அப்பங்களும் கொழுப்பும் இரத்தமும் ஒப்புக் கொடுக்கும் போது, உள்ளத்திலும் உடலிலும் விருத்தசேதனம் செய்யப்படாத அந்நியர்களை, நமது தூயகத்திற்கு வந்து அதை அவசங்கைப்படுத்த அழைப்பித்தீர்கள்; உங்கள் பாதகங்களால் நம் உடன்படிக்கையை முறித்தீர்கள்.
எசேக்கியேல் 44 : 8 (RCTA)
மேலும் நம் பரிசுத்த பொருட்களை நீங்கள் காத்துக் கண்காணிக்காமல், அந்தப் பொறுப்பை அந்நியர்களுக்குக் கொடுத்து, நமது தூயகத்தில் காவல் செய்யக் சொன்னீர்கள்.
எசேக்கியேல் 44 : 9 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்கின்ற அந்நியர்களிலோ, வேறெந்த அந்நியர்களிலோ உள்ளத்திலும் உடலிலும் விருத்தசேதனம் செய்து கொள்ளாத எவனும் நமது தூயகத்துள் நுழையக் கூடாது.
எசேக்கியேல் 44 : 10 (RCTA)
"ஆனால், இஸ்ராயேல் வழி தவறிய போது, நம்மை விட்டு அகன்று, வழி தவறித் தங்கள் சிலைகளைப் பின்பற்றிய லேவியர்களும் தண்டனை பெறுவார்கள்.
எசேக்கியேல் 44 : 11 (RCTA)
ஆயினும், அவர்கள் திருக்கோயில் வாயில்களைக் காப்பதும், வாயிற்படியில் நிற்பதும், தகனப் பலிகளுக்குரிய மிருகங்களையும், மக்களுக்காகத் தரப்படும் பலி மிருகங்களையும் வெட்டுவதும், மக்களுக்கு முன்பாக நின்று அவர்களுக்குப் பணிசெய்வதுமாகிய அலுவல்களைச் செய்யும் ஊழியர்களாய் நமது தூயகத்தில் இருப்பார்கள்.
எசேக்கியேல் 44 : 12 (RCTA)
அவர்கள் சிலைகளுக்கு முன்பாக நின்று, மக்களுக்கு வேலைக்காரர்களாய் இருந்து, இஸ்ராயேல் வீட்டார் அக்கிரமத்தில் விழக் காரணமாய் இருந்ததால், அவர்கள் தண்டனை பெறுவார்கள் என்று அவர்களுக்கு எதிராய் ஆணையிட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 44 : 13 (RCTA)
அப்படிப்பட்டவர்கள் நமது திருமுன்னிலையில் அர்ச்சகரின் பணியைச் செய்யவும், நமக்கருகில் வரவும், மிகவும் பரிசுத்தமான இடத்திற்கு அருகிலுள்ள இடங்களில் நுழையவும் கூடாது; அவர்கள் தங்கள் வெட்கத்தையும், தாங்கள் செய்த அக்கிரமத்தின் சுமையையும் தாங்குவார்கள்.
எசேக்கியேல் 44 : 14 (RCTA)
ஆயினும் கோயிலில் செய்யவேண்டிய வேலைகளையும் அலுவல்களையும், வாயிற்படி காவலையும் செய்யுமாறு அவர்களை ஏற்படுத்துவோம்.
எசேக்கியேல் 44 : 15 (RCTA)
"ஆனால், இஸ்ராயேல் வீட்டார் நம்மை விட்டு வழி தவறிப் போன போது நமது தூயகத்துக்கடுத்த சடங்குகளைச் சரியாய்க் கடைப்பிடித்த சாதோக்கின் மக்களாகிய அர்ச்சகர்களும், லேவியருமே நமது திருமுன் வந்து தங்கள் அலுவலைச் செய்வார்கள்; அவர்களே நமது திருமுன் நின்று பலி மிருகங்களின் கொழுப்பையும் இரத்தத்தையும் நமக்கு ஒப்புக்கொடுப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 44 : 16 (RCTA)
அவர்கள் தான் நமது பரிசுத்த இடத்தில் நுழைவார்கள்; அவர்கள் தான் நமக்கு ஊழியம் செய்ய நம் பீடத்தின் அருகே வந்து செய்ய வேண்டிய சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.
எசேக்கியேல் 44 : 17 (RCTA)
அவர்கள் உட்பிராகாரத்தின் வாயிலுக்குள் நுழையும் போது, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடைகளை உடுத்திக் கொள்வார்கள்; அவர்கள் உட்பிராகாரத்தின் வாயில்களிலும், உட்புறத்திலும் ஊழியம் செய்கையில் ஆட்டு மயிரால் செய்யப்பட்ட ஆடையொன்றும் அணியக் கூடாது;
எசேக்கியேல் 44 : 18 (RCTA)
அவர்கள் தலையில் சணல் நூல் தலைப்பாகைகளும், இடுப்பில் சணல் நூல் ஆடையும் அணிவார்கள்; வேர்வை உண்டாக்கக் கூடியது எதையும் இடையில் உடுத்தக் கூடாது.
எசேக்கியேல் 44 : 19 (RCTA)
மக்களிருக்கும் வெளிப்பிராகாரத்துக்கு வருமுன், அவர்கள் வழிபாட்டுக்கு உடுத்தியிருந்த ஆடைகளைக் கழற்றிக் கோயிலின் அறையில் வைத்து விட்டு, வேறு ஆடைகளை அனிந்து கொள்ள வேண்டும்; தங்கள் உடை வழியே பரிசுத்தத்தைப் பொது மக்களிடையே கொண்டு வரலாகாது.
எசேக்கியேல் 44 : 20 (RCTA)
அவர்கள் தங்கள் தலையை மழிக்கவோ தலை மயிரை நீளமாய் வளர்க்கவோ வேண்டாம்; அடிக்கடி தலை மயிரைக் கத்தரிக்கட்டும்.
எசேக்கியேல் 44 : 21 (RCTA)
உட்பிராகாரத்தில் நுழையும் நாட்களில் அர்ச்சகன் மது அருந்தக் கூடாது;
எசேக்கியேல் 44 : 22 (RCTA)
அர்ச்சகர்கள் கைம்பெண்ணையோ தள்ளப்பட்டவளையோ மணக்கக் கூடாது; இஸ்ராயேல் இனத்தவளான கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்; ஆனாலும் முன்பு அர்ச்சகனின் மனைவியாய் இருந்த கைம்பெண்ணை மணப்பதற்குத் தடையில்லை.
எசேக்கியேல் 44 : 23 (RCTA)
அவர்கள் பரிசுத்தமானவற்றையும் பரிசுத்தமல்லாதவற்றையும், தீட்டுள்ளவற்றையும் தீட்டில்லாதவற்றையும் நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து, வேறுபாட்டைக் காட்ட வேண்டும்.
எசேக்கியேல் 44 : 24 (RCTA)
வழக்குகள் வந்தால், நம் சட்டங்களுக்கேற்ப நீதி செலுத்தவும் தீர்ப்புச் சொல்லவும் ஆயத்தமாய் இருப்பார்கள்; நம் திருநாட்களில் எல்லாம் நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடிப்பார்கள்; நமது ஒய்வு நாளைப் பரிசுத்தமாய் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
எசேக்கியேல் 44 : 25 (RCTA)
செத்தவரை அணுகிப் போய்த் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது; ஆயினும், தந்தையோ தாயோ மகனோ மகளோ சகோதரனோ, மணமாகாத சகோதரியோ இறந்து போனால் அவர்களின் உடலருகில் போகலாம்.
எசேக்கியேல் 44 : 26 (RCTA)
அவர்களுள் யாராவது தீட்டுப்பட்டால், ஏழு நாட்களுக்குப் பிறகு சுத்தமாவான்; ஏழு நாட்களுக்குப்பின்,
எசேக்கியேல் 44 : 27 (RCTA)
அவன் கோயிலில் வழிபாடு செய்யும்படி உட்பிராகாரத்துக்குள் நுழைகிற அன்றைக்குத் தனக்காகப் பாவப் பரிகாரப் பலி செலுத்த வேண்டும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 44 : 28 (RCTA)
அவர்களுக்குச் சொத்துரிமை ஏதும் இல்லை; நாமே அவர்களின் சொத்துரிமை; அவர்களுக்கு இஸ்ராயேலில் யாதொரு உடைமையும் தராதீர்கள்; நாமே அவர்களின் உடைமை.
எசேக்கியேல் 44 : 29 (RCTA)
பாவப் பரிகாரப்பலி, குற்றப் பரிகாரப்பலி இறைச்சியை அவர்களே புசிப்பார்கள்; அன்றியும் இஸ்ராயேலில் நேர்ச்சையாய் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளெல்லாம் அவர்களுக்கே உரியவை.
எசேக்கியேல் 44 : 30 (RCTA)
நீங்கள் ஒப்புக்கொடுக்கும் எல்லா மிருகங்களின் முதற் பேறும், காணிக்கையாக ஒப்புக் கொடுப்பவற்றுள் முதற் பாகம் எல்லாம் அர்ச்சகர்களுக்கே சொந்தமாகும்; வீட்டில் நீங்கள் புசிப்பவற்றில் முதல் பாகத்தை அவர்களுக்குக் கொடுங்கள்; அப்போது ஆசீர்வாதம் உங்கள் வீட்டின் மேல் இருக்கும்.
எசேக்கியேல் 44 : 31 (RCTA)
பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததையோ, மிருகங்கள் பீறியதால் செத்ததையோ அர்ச்சகர் உண்ணலாகாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31