எசேக்கியேல் 41 : 1 (RCTA)
பின்னர் அவர் என்னைத் திருக்கோயிலுக்குள் கூட்டிச்சென்று கோயில் கூடத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவை பக்கத்திற்கு ஆறு முழம் இருந்தன; அதுவே கூடாரத்தின் அளவாகும்.
எசேக்கியேல் 41 : 2 (RCTA)
வாயில் நடையின் அகலம் பத்து முழம்; அதன் பக்கங்கள் இந்தப் புறத்தில் ஐந்து முழமும், அந்தப் புறத்தில் ஐந்து முழமும் இருந்தன; அதன் நீளத்தை அளந்தார்; நாற்பது முழம் இருந்தது; அதன் அகலத்தை அளந்தார்; இருபது முழம் இருந்தது.
எசேக்கியேல் 41 : 3 (RCTA)
அவர் இன்னும் உள்ளே போய் வாயிலின் கட்டையை அளந்தார்; அது இரண்டு முழமும், நடை ஆறு முழமும், இதன் அகலம் ஏழு முழமும் இருந்தன.
எசேக்கியேல் 41 : 4 (RCTA)
பிறகு அவர் கோயிலின் உள்ளறையை அளந்தார்; அதன் நீளம் இருபது முழம், அகலம் இருபது முழம்; அதை எனக்குக் காண்பித்து; "இது திருத்தூயகம்" என்று சொன்னார்.
எசேக்கியேல் 41 : 5 (RCTA)
அடுத்து அவர் கோயிலின் சுவரை அளந்தார்; அதன் கனம் ஆறு முழம்; கோயிலைச் சுற்றிலுமிருந்த சுற்றுக் கட்டினுடைய அகலம் நான்கு முழம் இருந்தது.
எசேக்கியேல் 41 : 6 (RCTA)
இந்தச் சுற்றுக் கட்டுகள் மூன்றடுக்கு மெத்தையாக முப்பது அறைகளைக் கொண்டிருந்தன; இந்த அறைகள் கோயில் சுவரின் மேல் ஊன்றியிராமல், இரு புறத்திலுமுள்ள சுற்றுக்கட்டுகளில் அமைந்திருந்த வரம்புகளின் மேல் ஊன்றியிருந்தன;
எசேக்கியேல் 41 : 7 (RCTA)
ஒரு மெத்தையிலிருந்து இன்னொரு மெத்தைக்குச் செல்ல அகலமான ஒரு சுற்று வழியுமிருந்தது; அதில் படிக்கட்டொன்று சுற்றிப் போய் மிக உச்சியிலுள்ள அறைக்குச் செல்லும்; ஆகவே மேலே போகப் போக கோயில் குறுகியில்லாமல் அகன்றிருக்கும்; அவ்வாறே கீழ்நிலையிலிருந்து மேல்நிலையின் மைய இடத்திற்கு ஏறிப்போகக் கூடுமாயிருக்கும்.
எசேக்கியேல் 41 : 8 (RCTA)
கோயிலைச் சுற்றிலும் உயரமான வரம்பைக் கண்டேன்; சுற்றுக்கட்டுகளின் அடிப்படைகளை அளவு கோலால் அளந்த போது, ஆறு முழங்கள் இடையில் இருந்தன.
எசேக்கியேல் 41 : 9 (RCTA)
புறம்பே சுற்றுக்கட்டிற்கு இருந்த சுவரின் அகலமோ ஐந்து முழம்; உள்கோயில் சுற்றிலும் வேறே கட்டுக் கோப்புகளால் சூழப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 41 : 10 (RCTA)
அறைக்கும் அறைக்கும் நடுவில் கோயிலின் நான்கு பக்கத்திலும் இருபது முழ அகலமான வெற்றிடம் விட்டிருக்கிறது;
எசேக்கியேல் 41 : 11 (RCTA)
ஒவ்வொரு அறையின் கதவும் செபக்கூடத்தை நோக்கியிருந்தது; ஒன்று வடக்கேயும், மற்றொன்று தெற்கேயும் இருந்தன; செபக் கூடத்தின் அகலம் ஐந்து முழம்.
எசேக்கியேல் 41 : 12 (RCTA)
மேற்குப் பக்கத்தை நோக்கியிருந்த தனிக் கட்டடத்தின் நீளம் எழுபது முழம்; அதன் சுற்றுச்சுவரின் அகலம் ஐந்து முழம்; இதன் நீளம் தொண்ணுறு முழம்.
எசேக்கியேல் 41 : 13 (RCTA)
அவர் கோயிலை நூறு முழ நீளமாகவும், தனியாக ஒதுக்கப்பட்ட கட்டடத்தை நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
எசேக்கியேல் 41 : 14 (RCTA)
கோயிலின் முகப்புக்கும், கிழக்கே கட்டப்பட்ட தனிக் கட்டடத்திற்கும் இடையிலிருந்த முற்றம் நூறு முழ அகலம் கொண்டது;
எசேக்கியேல் 41 : 15 (RCTA)
பின்னும் அவர் பின்புறத்தில் தனியாய் இருந்த கட்டடத்திற்கு எதிரேயுள்ள வீட்டின் நீளத்தையும் அளந்தார்; அது இரு பக்கத்திலுமிருந்த தாழ்வாரங்கள், உள்கோயில், பிராகாரத்தின் மண்டபம் எல்லாம் உட்பட நூறு முழமிருந்தது.
எசேக்கியேல் 41 : 16 (RCTA)
மீண்டும் அவர் வாயிற்படிகளையும், வளைந்த பலகணிகளையும், மூன்று பக்கத்திலுமிருந்த நடைப் பந்தல்களையும் அளந்தார்; ஒவ்வொன்றின் வாயிற்படிக்கு எதிரே நடைப்பந்தலைச் சுற்றிலும் மரப்பலகைகள் பொருத்தியிருந்தன; இவை தரையிலிருந்து பலகணிகள் வரை எட்டும்; பலகணிகளோ மூடியிருந்தன.
எசேக்கியேல் 41 : 17 (RCTA)
உள் மாளிகை உட்பட நடைப்பந்தலான வெளிச்சுவரில் உள்ளும் புறமுமாய் இருந்த பலகணியாவற்றுக்கும் அவ்வாறே இருந்தது; யாவும் தன்தன் அளவின்படி இருந்தது.
எசேக்கியேல் 41 : 18 (RCTA)
அவற்றின் முகப்பில் கெருபீம்களும், பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; ஒரு கெருபீமுக்கும் மற்றொரு கெருபீமுக்கும் நடுவில் ஒரு பேரீச்ச மரம் இருந்தது; ஒவ்வொரு கெருபீமுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.
எசேக்கியேல் 41 : 19 (RCTA)
இப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் மனித முகமாயும், அப்பக்கத்துப் பேரீச்ச மரத்தை நோக்கும் முகம் சிங்க முகமாயும் இருந்தன; கோயிலைச் சுற்றிலும் அவ்வாறே இருந்தது.
எசேக்கியேல் 41 : 20 (RCTA)
தரையிலிருந்து வாயிற் கதவின் மேற்புறம் வரை அவ்வகைக் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன.
எசேக்கியேல் 41 : 21 (RCTA)
கோயிலின் தூண்கள் சதுரமானவை. தூயகத்தின் முகப்பும் கோயிலின் முகப்பும் ஒன்றுக் கொன்று எதிரெதிரே இருந்தன.
எசேக்கியேல் 41 : 22 (RCTA)
மரத்தினால் அமைக்கப்பட்ட பலி பீடத்தின் உயரம் மூன்று முழம்; நீளம் இரண்டு முழம்; அகலம் இரண்டு முழம்; அதன் கோணங்களும் விளிம்புகளும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவர் என்னை நோக்கி: "இது ஆண்டவரின் திருமுன் இருக்கிற பீடம்" என்றார்.
எசேக்கியேல் 41 : 23 (RCTA)
கோயிலுக்கும் தூயகத்துக்கும் இரண்டு வாயில்கள் இருந்தன.
எசேக்கியேல் 41 : 24 (RCTA)
இவ்விரண்டு வாயில்களிலும் இருபுறத்துக் கதவுகளும் ஒன்றின் மேலொன்று மடங்கும் இரட்டைக் கதவுகளாய் இருந்தன; வாயிலின் இந்தப் புறத்துக்கும் அந்தப் புறத்துக்கும் இரட்டையான கதவுகள் தான் இருந்தன.
எசேக்கியேல் 41 : 25 (RCTA)
கோயிற்சுவரின் சித்திரிக்கப்பட்டிருந்தவாறே, கோயிலின் வாயிற் கதவுகளிலும் கெருபீம்களும் பேரீச்ச மரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; ஆதலால் வெளி மண்டபத்தின் கதவுமரங்கள் அதிகக் கனமானவை.
எசேக்கியேல் 41 : 26 (RCTA)
அவற்றின்மேல் வளைந்த பலகணிகள் காணப்பட்டன; மண்டபத்தின் பக்கங்களில் இரு பக்கமும் மாளிகையின் நெடுஞ்சுவர்களின் அகலத்தில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26