எசேக்கியேல் 33 : 1 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 33 : 2 (RCTA)
மனிதா, உன் இனத்தார்க்குக் கூறு: நாம் ஒரு நாட்டின் மீது வாளை வரச் செய்கையில், அந்நாட்டு மக்கள் தங்களுக்குள் ஒருவனை அழைத்து அவனைத் தங்களுக்காகக் காவல் காரனாய் ஏற்படுத்தியிருக்க,
எசேக்கியேல் 33 : 3 (RCTA)
இவன் அந்நாட்டின் மேல் வாள் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கைப்படுத்தும் போது,
எசேக்கியேல் 33 : 4 (RCTA)
மக்களுள் எக்காளத்தின் ஒலியைக் கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் ஒருவன் இருப்பானாயின், வாள் அவன் மேல் வந்து அவனை வீழ்த்தும்;
எசேக்கியேல் 33 : 5 (RCTA)
அவன் இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும். ஏனெனில், அவன் எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும், அவன் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை; அவனது இரத்தப்பழி அவன் மேலே இருக்கும்; ஆனால் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்திருந்தால், தன்னையே காத்துக்கொண்டிருப்பான்.
எசேக்கியேல் 33 : 6 (RCTA)
அதற்கு மாறாக, காவல்காரன் வாள் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி மக்களுக்கு எச்சரிக்கை தராமல் இருந்து, அதனால் எச்சரிக்கையாய் இல்லாத ஒருவன் வாளால் வெட்டுண்டு இறந்தால், அம் மனிதன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆயினும் அவனது இரத்தப்பழியைக் காவல்காரனின் மேல் சாற்றுவோம்.
எசேக்கியேல் 33 : 7 (RCTA)
அவ்வாறே, மனிதா, உன்னை நாம் இஸ்ராயேல் வீட்டாருக்குச் சாமக் காவலனாக வைத்திருக்கிறோம்; ஆதலால் நீ நம் வாயினின்று புறப்படும் வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் அதைச் சொல்லி, அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
எசேக்கியேல் 33 : 8 (RCTA)
தீயவன் ஒருவனிடம், 'நீ கண்டிப்பாய்ச் சாவாய்' என்று நாம் சொல்ல, அவன் தன் தீய வழியினின்று திரும்பும்படி அவனுக்கு நீ எச்சரிக்கை செய்யாமல் விடுவாயாகில், அந்தத் தீயவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் அவனது இரத்தப் பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
எசேக்கியேல் 33 : 9 (RCTA)
அதற்கு மாறாக, தீயவன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்ப வேண்டுமென்று நீ அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தும், அவன் தன் தீய வழியிலிருந்து திரும்பாமல் இருப்பானாயின், அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் உன்னையே நீ காத்துக் கொள்வாய்.
எசேக்கியேல் 33 : 10 (RCTA)
"நீயோ, மனிதா, இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: நீங்கள், 'எங்கள் அக்கிரமங்களும் பாவங்களும் எங்கள் மேல் இருக்கின்றன, அவற்றினால் நாங்கள் சோர்ந்து போகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படி? 'என்று சொல்லுகிறீர்கள்.
எசேக்கியேல் 33 : 11 (RCTA)
நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! தீயவன் சாக வேண்டும் என்பது நம் விருப்பமன்று; ஆனால் அவன் தன் தீய வழியை விட்டுத் திரும்பி வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம். 'இஸ்ராயேல் வீட்டாரே, மனந்திரும்புங்கள்; உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்?' (என்று சொல்.)
எசேக்கியேல் 33 : 12 (RCTA)
நீயோ, மனிதா, உன் இனத்தார்க்குக் கூறு: நீதிமான் பாவஞ் செய்தால், அவனுடைய நீதி அவனை மீட்காது; தீயவன் தன் அக்கிரமத்தை விட்டு மனந்திரும்பினால் அவ்வக்கிரமத்தினால் அவனுக்குப் பொல்லாப்பு ஒன்றும் வராது; நீதிமான் பாவஞ் செய்யும் போது, தன் நீதியால் வாழ்வதில்லை.
எசேக்கியேல் 33 : 13 (RCTA)
கண்டிப்பாய்ப் பிழைப்பான் என்று நாம் நீதிமானுக்குச் சொல்லியிருந்தாலும், அவன் தன் நீதியை நம்பிப் பாவத்தில் விழுந்தானாயின் அவனுடைய முன்னைய புண்ணியங்களையெல்லாம் நினைக்கமாட்டோம்; அவன் தான் செய்த அக்கிரமத்திலேயே சாவான்.
எசேக்கியேல் 33 : 14 (RCTA)
ஆனால் கண்டிப்பாய்ச் சாவான் என்று தீயவனுக்கு நாம் சொல்லியிருந்தாலும், அவன் தான் செய்த அக்கிரமத்திற்காக மனம் வருந்திச் சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்தால்,
எசேக்கியேல் 33 : 15 (RCTA)
தான் வாங்கின அடைமானத்தையும், கொள்ளையடித்த பொருளையும் திருப்பிக் கொடுத்து விட்டு, இனி அநியாயம் ஏதும் செய்யாமல், வாழ்வளிக்கும் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், அவன் கண்டிப்பாய்ப் பிழைப்பான்.
எசேக்கியேல் 33 : 16 (RCTA)
அவன் முன்பு செய்த பாவமொன்றும் இனி அவனுக்கு எதிராய் நினைக்கப்படாது; சட்டம் சொல்வதையும் சரியானதையும் அவன் செய்ததால், அவன் கண்டிப்பாய் வாழ்வான்.
எசேக்கியேல் 33 : 17 (RCTA)
ஆனால் உன் இனத்தார், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்லுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய வழி தான் நீதியானதில்லை.
எசேக்கியேல் 33 : 18 (RCTA)
நீதிமான் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமம் செய்தானாயின், அவன் அதனால் சாவான்.
எசேக்கியேல் 33 : 19 (RCTA)
தீயவன் தன் அக்கிரமத்தை விட்டுச் சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின், அவன் அதனால் பிழைப்பான்.
எசேக்கியேல் 33 : 20 (RCTA)
இருப்பினும், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுள் ஒவ்வொருவனையும் அவனவன் நடத்தைக்குத் தக்கபடியே நாம் தீர்ப்பிடுவோம்."
எசேக்கியேல் 33 : 21 (RCTA)
சிறைவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதம் ஐந்தாம் நாள் யெருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னை அணுகி, 'நகரம் பிடிபட்டது' என்றான்.
எசேக்கியேல் 33 : 22 (RCTA)
தப்பினவன் வருவதற்கு முந்தின நாள் மாலையிலேயே ஆண்டவரின் கரம் என் மேல் இருந்ததால், அந்த மனிதன் என்னைக் காலையில் வந்து காணுமுன்பே ஆண்டவர் என் வாயைத் திறந்துவிட்டிருந்தார்; என் வாய் திறக்கப்பட்டது; ஆகவே நான் இனி ஊமையில்லை.
எசேக்கியேல் 33 : 23 (RCTA)
அப்போது ஆண்டவர் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 33 : 24 (RCTA)
மனிதா, இஸ்ராயேல் நாட்டின் பாழான இடங்களில் வாழ்பவர்கள், 'ஆபிரகாம் ஒருவனாயிருந்தும், நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டான்; ஆனால் நாங்கள் பலராயிருக்கிறோம்; எங்களுக்கு இந்த நாடு சொந்தமாய்க் கொடுக்கப்பட்டது தானே' என்கிறார்கள்.
எசேக்கியேல் 33 : 25 (RCTA)
ஆகையால் நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இறைச்சியை இரத்தத்தோடு தின்கிறீர்கள், உங்கள் அருவருப்பான சிலைகளை ஏறெடுத்துப் பார்க்கிறீர்கள், இரத்தத்தைச் சிந்துகிறீர்கள், நீங்களா நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளப்போகிறீர்கள்?
எசேக்கியேல் 33 : 26 (RCTA)
நீங்கள் உங்கள் வாளின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள்; அருவருப்பானவற்றைச் செய்கிறீர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நீங்கள் நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்களோ?
எசேக்கியேல் 33 : 27 (RCTA)
அவர்களுக்கு நீ இதைச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளுக்கு இரையாகிச் சாவார்கள்; வயல் வெளிகளில் இருப்பவர்களைக் கொடிய மிருகங்களுக்கு இரையாகக் கொடுப்போம்; கோட்டைகளிலும் குகைகளிலும் வாழ்பவர்கள் கொள்ளை நோயால் செத்துப் போவார்கள்.
எசேக்கியேல் 33 : 28 (RCTA)
அதன் பின்னர், நாம் நாட்டைப் பாழாக்குவோம்; அதனுடைய வல்லமையின் பெருமை ஒழிந்துபோம்; இஸ்ராயேல் மலைகளும் பாழாய்ப்போகும்; அவ்வழியில் மனித நடமாட்டமே இருக்காது;
எசேக்கியேல் 33 : 29 (RCTA)
அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் காரணமாய் நாம் நாட்டைப் பாழும் பாலை நிலமாக்கி விடுவோம்; அப்போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
எசேக்கியேல் 33 : 30 (RCTA)
"மனிதா, சுவர்களின் ஓரத்திலும், வீட்டு வாசற்படிகளிலும் உன்னைக் குறித்து உன் இனத்தார் தங்களுக்குள், 'ஆண்டவரிடமிருந்து புறப்பட்ட வாக்கியம் என்ன என்று போய்க் கேட்போம்' என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு,
எசேக்கியேல் 33 : 31 (RCTA)
மக்கள் கூட்டமாய்க் கூடி உன்னிடத்தில் வந்து உன் முன்னால் நம் மக்கள் போல் உட்கார்ந்து நீ சொல்வதைக் கேட்கிறார்கள்; கேட்டும் அதன்படி நடக்கமாட்டார்கள்; தங்கள் வாயினால் அதிக அன்பு காட்டுகிறார்கள்; அவர்கள் இதயமோ பொருளாசையில் ஆழ்ந்திருக்கிறது.
எசேக்கியேல் 33 : 32 (RCTA)
இனிய குரலெடுத்துக் காதற் பாட்டுகள் பாடுகிறவன் போலவும், இசைக் கருவியை வாசிப்பவன் போலவும் நீ இருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொல்லுகிறபடி அவர்கள் நடப்பதில்லை.
எசேக்கியேல் 33 : 33 (RCTA)
இதோ, இறைவாக்கு நிறைவேறும்; கண்டிப்பாய் நிறைவேறும், அப்போது தான் தங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினர் இருந்து வந்தார் என்பதை அறிவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: