எசேக்கியேல் 27 : 1 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 27 : 2 (RCTA)
மனிதா, இப்போது நீ தீர் நகரின் மேல் புலம்பு;
எசேக்கியேல் 27 : 3 (RCTA)
கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு, பல்வேறு கடற்கரை நாட்டு மக்களுடன் வாணிகம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "தீர் நகரே, 'நான் பேரழகி' என்று உன்னைப் பற்றிப் போற்றிக் கொள்ளுகிறாய்.
எசேக்கியேல் 27 : 4 (RCTA)
கடலின் நடுவில் உன்னைக் கட்டியவர்கள், உன்னை அழகுபடுத்த எவ்வளவோ முயன்றார்கள்!
எசேக்கியேல் 27 : 5 (RCTA)
சானிரிலிருந்து வந்த சப்பினி மரங்களால் உன் கப்பலையும் அதன் மேல்தட்டுகளையும் கட்டினார்கள்; லீபானின் கேதுரு மரத்தைக் கொண்டு உன் பாய்மரத்தைச் செய்தார்கள்.
எசேக்கியேல் 27 : 6 (RCTA)
பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால் கப்பல் துடுப்புகளைச் செய்தார்கள்; சிப்ருஸ் தீவுகளின் சவுக்குகளில் யானைத் தந்தங்களைப் பொருத்திக் கப்பலின் மேல்தளத்தை அமைத்தார்கள்.
எசேக்கியேல் 27 : 7 (RCTA)
எகிப்திலிருந்து வந்த சித்திரச் சணல் நூலாடை பாய்மரத்தில் பறக்கும் கொடியாயிற்று; எலிசா தீவிலிருந்து கிடைத்த நீலத்துணியும், சிவப்புத் துணியும் விதானமாயின.
எசேக்கியேல் 27 : 8 (RCTA)
சீதோன், அர்வாத் ஊர்களின் மக்கள் உன் கப்பல்களில் தண்டு வலித்தார்கள்; தீர் நகரே, உன்னிலிருந்த ஞானிகள் மாலுமிகளாய் இருந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 9 (RCTA)
கேபால் நகரத்து மூப்பரும் ஞானிகளும் பழுதுபார்க்கும் வேலை செய்தார்கள்; கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் கடலோடிகளும் உன் வணிக விருத்தியில் சிரத்தை கொண்டார்கள்.
எசேக்கியேல் 27 : 10 (RCTA)
பேர்சியர், லீதியர், லீபியர் முதலியோர் உன் படையில் வீரராய் இருந்தார்கள்; கேடயங்களையும் தலைச்சீராக்களையும் பூண்டு உனக்கு அணிகலனாய் இருந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 11 (RCTA)
அர்வாத்திரர் உன் படைவீரர்களுடன் உன் மதில்கள் மேல் சுற்றிலும் நின்றார்கள். பிக்மேயித்தார் உன் கோபுரங்களின் மேல் தங்கள் அம்பறாத்தூணிகளைத் தொங்க விட்டு உன் அழகை நிறைவு செய்தார்கள்.
எசேக்கியேல் 27 : 12 (RCTA)
கார்த்தேஜ; நகரத்து வியாபாரிகள் உன்னோடு வாணிகம் செய்தனர்; வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம், இன்னும் பல திரண்ட செல்வங்களையும் கொண்டு வந்து உன் சந்தைகளில் விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 13 (RCTA)
கிரேசியா, தூபால், மொசோக் என்னும் இனத்தார் உன்னுடன் வணிகம் நடத்தினர்; உன் குடிகளுக்கு அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் கொடுத்துச் சென்றனர்.
எசேக்கியேல் 27 : 14 (RCTA)
தோகொர்மோ நகரத்தினின்று குதிரைகள், குதிரைக் காரர்கள், கோவேறு கழுதைகள் உன் சந்தைக்கு வந்தனர்.
எசேக்கியேல் 27 : 15 (RCTA)
தேதான் மக்கள் உன்னுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; பல் தீவுகளின் வாணிகம் உன் கையில் இருந்தது; உன் பொருட்களுக்குப் பண்டமாற்றாக யானைத்தந்தங்களும் கருங்காலி மரங்களும் உனக்குக் கிடைத்தன.
எசேக்கியேல் 27 : 16 (RCTA)
சீரியரும் உன்னிடமிருந்த திரண்ட பொருட்களை முன்னிட்டு உன்னோடு வியாபாரம் செய்தனர்; சிவப்புக்கற்கள், சிவப்புப் பட்டாடைகள், சித்திரத் தையலாடைகள், விலையுயர்ந்த சணல்நூற் புடவைகள், பட்டுப்பட்டாவளிகள் எல்லாம் உன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன.
எசேக்கியேல் 27 : 17 (RCTA)
யூதரும் இஸ்ராயேலரும் உன்னுடன் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டனர்; நல்ல கோதுமை, தைலங்கள், தேன், எண்ணைய், பிசின் முதலிய வாசனைப் பொருட்கள் ஆகியவற்றை உன் சந்தைகளுக்குக் கொண்டு வந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 18 (RCTA)
தமஸ்கு ஊரார் உன்னிடமிருந்த திரளான பொருட்களுக்குப் பதிலாகப் பலவகைச் சரக்குகளையும், கெல்போனின் திராட்சை இரசத்தையும், வெள்ளை ஆட்டு மயிரையும் உனக்குக் கொண்டு வந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 19 (RCTA)
தாண், கிரேசியா, மொசெல் ஆகியவையும் உன்னுடன் வாணிகம் நடத்தின; துலக்கப்பட்ட இரும்பு, நறுமணப் பொருட்கள் ஆகியற்றை உன் கடைகளில் குவித்தார்கள்;
எசேக்கியேல் 27 : 20 (RCTA)
தேதான் நாட்டினர் குதிரைச் சேணங்களைக் கொடுத்தார்கள்.
எசேக்கியேல் 27 : 21 (RCTA)
அரேபியா, கேதார் ஆகிய நாட்டுக் தலைவர்கள் அனைவரும் உன்னுடன் வியாபாரம் செய்து ஆட்டுக் குட்டிகளையும் கடாக்களையும் வெள்ளாடுகளையும் உனக்கு விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 22 (RCTA)
சாபா, இரேமா பட்டணங்களின் வாணிகர் மிக அருமையான வாசனைப் பொருட்களையும் சிறந்த தைலங்களையும் இரத்தினக் கற்களையும் பொன்னையும் உனக்கு விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 23 (RCTA)
ஆரான், ஷுனே, ஏதேன் பட்டணத்தாரும், சாபா, அசூர், கெல்மாத்து நாட்டாரும் உன்னுடன் வியாபாரம் செய்து பலவகைப் பொருட்களை உனக்கு விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 24 (RCTA)
நீலப்பட்டாடைகள், சித்திரத் தையலாடைகள், பலவண்ணக் கயிறுகளால் பின்னிய கம்பளங்கள் ஆகியவற்றை உனக்குக் கொண்டு வந்து விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 25 (RCTA)
தர்சீஸ் பட்டணத்துக் கப்பல்கள் உனக்காக வாணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றன. "கடல் நடுவில் மகிமையடைந்து திரண்ட செல்வத்தால் நிறைந்திருந்தாய்.
எசேக்கியேல் 27 : 26 (RCTA)
தண்டுவலிப்பவர்கள் உன்னை ஆழ்கடலில் கொண்டு விட, கீழைக்காற்று எழும்பி உன்னை ஆழ்கடலில் உடைத்தது.
எசேக்கியேல் 27 : 27 (RCTA)
நீ அழிவுறும் நாளில், உன் செல்வங்களும் கருவூலங்களும், கணக்கற்ற பல்வேறு பொருட்களும், கடலோடிகளும் மாலுமிகளும், பழுது பார்ப்போரும் வாணிகம் செய்வோரும், உன் படைவீரர்களும் குடிமக்களும், எல்லாரும் உன்னோடு நடுக்கடலில் வீழ்ந்து மடிவார்கள்.
எசேக்கியேல் 27 : 28 (RCTA)
உன் மாலுமிகள் ஓலமிட்டலறும் சத்தம் சுற்றுப்புறத்து வயல்வெளிகளை அதிரச் செய்யும்.
எசேக்கியேல் 27 : 29 (RCTA)
மரக்கலங்களிலே தண்டுவலிப்பவர்கள், கடலோடித் தலைவர்கள், மாலுமிகள், அனைவரும் கப்பலை விட்டிறங்கிக் கரையிலே நிற்பார்கள்.
எசேக்கியேல் 27 : 30 (RCTA)
நீ இழந்தவற்றைக் குறித்துச் சத்தமாய்ப் புலம்புவார்கள், கவலைப்பட்டு அழுவார்கள்; தலை மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரண்டழுவர்;
எசேக்கியேல் 27 : 31 (RCTA)
தலைகளை மொட்டையடித்து, மயிரொட்டியாணம் உடுத்து, மனங்கசந்து ஓலமிட்டு அழுவார்கள், விம்முவார்கள்.
எசேக்கியேல் 27 : 32 (RCTA)
உன்மீது துக்கம் கொண்டாடிப் புலம்புவர்; 'கடலில் புதையுண்ட தீர் நகருக்குச் சரியொத்த நகருண்டோ?' என்றழுவர்.
எசேக்கியேல் 27 : 33 (RCTA)
உன் கடல் வாணிகப் பொருட்களால் பலநாட்டு மக்களை நிறைவு செய்தாய்; உன் திரளான செல்வத்தாலும் வணிகப் பொருட்களாலும், உலகத்தின் அரசர்களைச் செல்வர்களாக்கினாய்.
எசேக்கியேல் 27 : 34 (RCTA)
இப்பொழுதோ, கடல் உன்னை நொறுக்கிவிட்டது; உன் செல்வங்களெல்லாம் ஆழ்கடலில் மூழ்கிப் போயின; உன்னுடைய மக்களும் மாலுமிகளும் மாய்ந்தனர்.
எசேக்கியேல் 27 : 35 (RCTA)
கடற்கரையில் வாழும் மக்கள் அனைவரும் உன் முடிவைக்கண்டு, திகைப்புற்றார்கள்; அரசர்கள் அஞ்சி நடுங்கினார்கள்; அவர்கள் முகம் ஒளியிழந்து கலங்குகிறது.
எசேக்கியேல் 27 : 36 (RCTA)
புறவினத்தாரின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கிறார்கள்; நீயோ கொடிய முடிவை அடைந்தாய்; இனி நீ வாழவே மாட்டாய்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36