எசேக்கியேல் 24 : 1 (RCTA)
ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 24 : 2 (RCTA)
மனிதா, இந்த நாளின் பெயரை- பபிலோன் அரசன் யெருசலேமை முற்றுகையிட்ட நாளாகிய இந்த நாளின் பெயரை எழுது.
எசேக்கியேல் 24 : 3 (RCTA)
கலக வீட்டாருக்கு ஒர் உவமையைக் கூறி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஒரு பானையை அடுப்பில் வை, வைத்து அதில் தண்ணீரை ஊற்று;
எசேக்கியேல் 24 : 4 (RCTA)
அதிலே இறைச்சித் துண்டுகளைப் போடு, தொடை, தோள்பகுதி, நல்லவற்றையெல்லாம் போடு, பொறுக்கியெடுத்த எலும்புகளையும் போடு,
எசேக்கியேல் 24 : 5 (RCTA)
மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா, விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு, இறைச்சித் துண்டுகளை வேக வை, எலும்புகளையும் அதிலே போடு, அனைத்தையும் பொங்கப் பொங்கக் காய்ச்சு.
எசேக்கியேல் 24 : 6 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய நகருக்கு ஐயோ கேடு! இது ஒரு துருப்பிடித்த பானை, பிடித்த துருவை எடுக்க முடியாத பானை. ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு, அதிலுள்ளவற்றில் வேறுபாடு பார்க்காதே.
எசேக்கியேல் 24 : 7 (RCTA)
ஏனெனில், அது சிந்தின இரத்தம் அதன் நடுவில் இருக்கிறது; சுத்தமான பாறையின் மேல் ஊற்றப்பட்டது; மண்ணால் மறைக்கும்படி தரையில் ஊற்றப்படவில்லை.
எசேக்கியேல் 24 : 8 (RCTA)
நமது கோபத்தைக் காட்டவும், பழிவாங்கவுமே மண்ணால் மறைக்கப்படாதபடி இரத்தம் சுத்தமான பாறையின் மேல் விழச்செய்தோம்.
எசேக்கியேல் 24 : 9 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய இந்த நகருக்கு ஐயோ கேடு! மிகுதியான விறகுகளை நாமும் குவித்து வைப்போம்.
எசேக்கியேல் 24 : 10 (RCTA)
விறகுக் கட்டைகளை அடுக்கு, நெருப்பு மூட்டி இறைச்சியை நன்றாக வேகவை; எல்லாம் ஒன்றாக வேகட்டும், எலும்புகளும் எரிந்து கரையட்டும்.
எசேக்கியேல் 24 : 11 (RCTA)
பிறகு பானையை நெருப்பின் மேல் வை, அது நன்றாகச் சூடேறட்டும், செப்பு நன்றாகக் காய்ந்துருகட்டும், அதன் அழுக்கு கரைந்து போகட்டும், பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
எசேக்கியேல் 24 : 12 (RCTA)
நாம் அதைத் தீயிலிட்டதும் வீண்தான்; ஏனெனில் அதில் மிகுந்த துருப்பிடித்திருந்ததால், நெருப்பினாலும் அதைப் போக்க முடியவில்லை.
எசேக்கியேல் 24 : 13 (RCTA)
உன்னுடைய அருவருப்பான வேசிச்ததனமே அந்தத் துரு. நாம் உன்னைச் சுத்தப்படுத்த விரும்பியும், நீ உன்னுடைய அசுத்தத்திலிருந்து சுத்தமாகவில்லை; ஆகையால் நமது ஆத்திரம் உன் மேல் கொட்டித் தீருமட்டும் நீ சுத்தமாகவே மாட்டாய்.
எசேக்கியேல் 24 : 14 (RCTA)
ஆண்டவராகிய நாமே சொன்னோம்: பழிவாங்கும் நாள் வரத்தான் போகிறது; நாம் அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கு நாம் பின்வாங்கவோ, உன்னைத் தப்பவிடவோ, உன்மேல் மனமிரங்கவோ மாட்டோம்; உன் நடத்தைக்கும் அக்கிரமங்களுக்கும் தக்கபடி உனக்குத் தீர்ப்பளிப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
எசேக்கியேல் 24 : 15 (RCTA)
ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 24 : 16 (RCTA)
மனிதா, இதோ உன் கண்களுக்கு இன்பந் தருவதை ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறோம்; ஆனால் நீ புலம்பவோ அழவோ கண்ணீர் விடவோ கூடாது; மறைவாய்ப் பெருமூச்சு விடு;
எசேக்கியேல் 24 : 17 (RCTA)
ஆனால் சத்தமாய் இழவு கொண்டாடாதே; உன் தலைப்பாகை தலையில் இருக்கட்டும்; செருப்புகளைக் காலில் அணிந்திரு; உன் முகத்தை மூடிக்கொள்ளாதே; இழவு கொண்டாடுகிறவர் உண்ணும் உணவைப் புசிக்காதே."
எசேக்கியேல் 24 : 18 (RCTA)
நான் ஊராருடன் பேசினேன்; அன்று மாலை என் மனைவி இறந்து போனாள்; மறுநாட் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்தேன்.
எசேக்கியேல் 24 : 19 (RCTA)
அப்போது மக்கள் திரள், "நீர் செய்வதற்கு என்ன பொருள் என எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ" என்று என்னைக் கேட்டார்கள்.
எசேக்கியேல் 24 : 20 (RCTA)
அதற்கு நான் சொன்ன விடை இதுவே: "ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 24 : 21 (RCTA)
இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் நாட்டில் பெருமை மிக்கதும், உங்கள் கண்களுக்கு இன்பந் தருவதும், அழியக்கூடாது என்று உங்கள் இதயம் விரும்பி ஏங்குவதுமான நமது பரிசுத்த இடத்தை நாம் பங்கப்படுத்தப் போகிறோம்; நீங்கள் யெருசலேமில் விட்டு வந்த உங்கள் புதல்வர் புதல்வியர் வாளுக்கு இரையாவார்கள்.
எசேக்கியேல் 24 : 22 (RCTA)
அப்பொழுது நீங்களும் நான் செய்தது போலச் செய்வீர்கள்: உங்கள் முகத்தை மூட மாட்டீர்கள்; இழவு நாளில் உண்ணும் உணவைப் புசிக்க மாட்டீர்கள்.
எசேக்கியேல் 24 : 23 (RCTA)
உங்கள் தலைப்பாகை தலையிலிருக்கும்; காலில் செருப்பு அணிந்திருப்பீர்கள்; நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள்; ஆனால் உங்கள் அக்கிரமங்களை நினைத்துச் சோர்வுற்று, ஒருவரையொருவர் பார்த்து விம்மித் தவிப்பீர்கள்.
எசேக்கியேல் 24 : 24 (RCTA)
இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பான்; அவன் செய்தது போல, காலம் வரும் போது நீங்களும் செய்வீர்கள்; அப்போது ஆண்டவராகிய இறைவன் நாமே என்பதை அறிவீர்கள்.'
எசேக்கியேல் 24 : 25 (RCTA)
மனிதா, நாம் என்றைக்கு அவர்களின் வன்மையான கோட்டை, அவர்களுடைய மகிழ்ச்சி, மகிமை, கண்களுக்கினிய காட்சி, உள்ளத்தின் ஆவல், அவர்களுடைய புதல்வர் புதல்வியர் முதலியவரை அவர்களிடமிருந்து எடுத்து விடுவோமா,
எசேக்கியேல் 24 : 26 (RCTA)
அன்றைக்கு அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் உன்னிடம் ஒடிவந்து செய்தி சொல்லுவான்;
எசேக்கியேல் 24 : 27 (RCTA)
அன்றே உன் வாய் திறக்கப்படும்; தப்பி ஒடி வந்தவனிடம் நீ வாய்திறந்து பேசுவாய்; ஊமையாய் இருக்க மாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பாய்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
❮
❯