எசேக்கியேல் 23 : 1 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 23 : 2 (RCTA)
மனிதா, ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
எசேக்கியேல் 23 : 3 (RCTA)
இவர்கள் தங்கள் வாலிய வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
எசேக்கியேல் 23 : 4 (RCTA)
அவர்களுள் தமக்கையின் பெயர் ஒல்லா, தங்கையின் பெயர் ஒலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஒல்லா சமாரியாவையும், ஒலியா யெருசலேமையும் குறிக்கின்றன.
எசேக்கியேல் 23 : 5 (RCTA)
ஒல்லா என்னுடையவளாய் இருந்தும், விபசாரியானாள்; அசீரியர்கள் மீது காமம் கொண்டாள்;
எசேக்கியேல் 23 : 6 (RCTA)
நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள்.
எசேக்கியேல் 23 : 7 (RCTA)
அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமங்கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள்.
எசேக்கியேல் 23 : 8 (RCTA)
தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டு விடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.
எசேக்கியேல் 23 : 9 (RCTA)
ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே- அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்.
எசேக்கியேல் 23 : 10 (RCTA)
அவர்கள் அவள் ஆடைகளை உரிந்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரை பிடித்துக் கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழமொழிக்காளானாள்.
எசேக்கியேல் 23 : 11 (RCTA)
அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும்; தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவள் ஆனாள்.
எசேக்கியேல் 23 : 12 (RCTA)
பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசைமூட்டும் அழகு வாலிபர்களுமாய்க் குதிரை மீது ஏறி வந்த வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள்.
எசேக்கியேல் 23 : 13 (RCTA)
இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம்.
எசேக்கியேல் 23 : 14 (RCTA)
ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயாரின் ஒவியங்களையும் கண்டாள்;
எசேக்கியேல் 23 : 15 (RCTA)
அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பபிலோன் நகரத்தாரைப் போல் இடையில் கச்சை கட்டிக் கொண்டும், தலையில் தலைப்பாகை அணிந்தும், படைத்தலைவர்கள் போல் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.
எசேக்கியேல் 23 : 16 (RCTA)
கண்டதும் அவர்கள் மேல் காமங்கொண்டு, அவர்களிடம் ஜகல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.
எசேக்கியேல் 23 : 17 (RCTA)
பபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப்படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கெண்டாள்.
எசேக்கியேல் 23 : 18 (RCTA)
இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது.
எசேக்கியேல் 23 : 19 (RCTA)
இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
எசேக்கியேல் 23 : 20 (RCTA)
காமவெறியர் மேல் அவள் மோகங்கொண்டாள்; அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன.
எசேக்கியேல் 23 : 21 (RCTA)
இவ்வாறு எகிப்தியர் உன் இளமார்புளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்."
எசேக்கியேல் 23 : 22 (RCTA)
ஆகையால், ஒலிபா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ யார்மேல் காமவெறியால் மோகங் கொண்டாயோ, யாருடன் தெவிட்டும் வரை காமச் செயல் புரிந்தாயோ, இதோ அவர்களை உனக்கு எதிராக எல்லாப் பக்கத்திலும் எழும்பச் செய்வோம்.
எசேக்கியேல் 23 : 23 (RCTA)
பபிலோனியரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, ஷோவா, கோவா என்னும் இடங்களில் உள்ளோரையும், அசீரியர்களையும், ஆசை மூட்டும் அழகுள்ள வாலிபர்களாகிய தலைவர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரையும், குதிரை வீரர்களையும் நாம் கூப்பிடுவோம்.
எசேக்கியேல் 23 : 24 (RCTA)
அவர்கள் பெரிய கூட்டமாய் வண்டிகளோடும், தேர்ப்படை, காலாட்படைகளோடும் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவார்கள்; மார்க்கவசம், கேடயம், தலைச்சீரா முதலியவற்றை அணிந்து நாற்புறமும் வந்து உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள்; அவர்களுக்கு முன்பாக நாம் உன்னைத் தீர்ப்பிடுவோம்; அவர்கள் தங்கள் சட்டப்படி உன் மேல் தீர்ப்புக் கூறுவார்கள்.
எசேக்கியேல் 23 : 25 (RCTA)
நமது ஆத்திரம் உனக்கு எதிராய் இருக்கும்; அவர்கள் உன்னைக் கொடூரமாய் நடத்தி, உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துப் போடுவார்கள்; உன்னில் மீதியாய் இருப்பவர்களை வாளால் வெட்டுவார்கள்: உன் புதல்வர் புதல்வியரைப் பிடித்துக் கொண்டு, உன்னில் எஞ்சியிருப்பவர்களை அக்கினிக்கு இரையாக்குவார்கள்.
எசேக்கியேல் 23 : 26 (RCTA)
உன் ஆடைகளை உரிந்து, உன் மகிமையின் அணிகலன்களைப் பறித்துக்கொள்வார்கள்;
எசேக்கியேல் 23 : 27 (RCTA)
இவ்வாறு, நீ எகிப்திலிருந்து கொண்டு வந்த வேசித்தனத்தையும் காமவெறியையும் ஒழியச் செய்வோம்; இனி நீ எகிப்தியரை ஏறிட்டும் பாராய்; அவர்களை நினைக்கவும் மாட்டாய்.
எசேக்கியேல் 23 : 28 (RCTA)
ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ யாரோடு இன்பம் துய்த்து வெறுப்புற்றாயோ, இதோ அவர்கள் கையிலேயே உன்னை ஒப்படைப்போம்;
எசேக்கியேல் 23 : 29 (RCTA)
அவர்கள் உன்னை வெறுப்போடு நடத்தி, உன் உடைமைகள் யாவற்றையும் பறித்துக்கொண்டு, உன்னை ஆடையின்றி நிருவாணமாய் விட்டுவிடுவார்கள்; உன் வேசித்தனத்தின் நிந்தையும் வெட்கக்கேடும் வெளிப்படும்.
எசேக்கியேல் 23 : 30 (RCTA)
நீ புறவினத்தாருடைய சிலைகளுக்கு வழிபாடு செலுத்தித் தீட்டுப்பட்டு வேசித்தனம் செய்ததால் அவர்கள் உனக்கு இவற்றைச் செய்வார்கள்,
எசேக்கியேல் 23 : 31 (RCTA)
நீ உன் சகோதரியின் வழியைப் பின்பற்றினாய்; ஆகையால் அவள் குடித்த பாத்திரத்தையே உன் கையிலும் வைப்போம்.
எசேக்கியேல் 23 : 32 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் சகோதரி குடித்த பாத்திரத்தையே நீயும் குடிப்பாய், அது அகன்றது, ஆழமானது; நீ பரிகாசத்துக்கும் நகைப்புக்கும் உள்ளாவாய், ஏனெனில் அதில் அதிகம் இருக்கிறது.
எசேக்கியேல் 23 : 33 (RCTA)
நீ போதையாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்; துயரமும் அழிவும் கொண்ட பாத்திரமே உன் சகோதரி சமாரியாவின் பாத்திரம்.
எசேக்கியேல் 23 : 34 (RCTA)
ஆம், நீ அதைக் குடிப்பாய், முற்றும் குடித்து முடிப்பாய், உன் கூந்தலைப் பிய்த்துக் கொள்வாய், உன் கொங்கைகளைப் பீறிக்கொள்வாய், ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 23 : 35 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ நம்மை மறந்து, நம்மைப் புறக்கணித்துத் தள்ளிப் போட்டதால், உன் வேசித்தனத்தையும் காமவெறியையும் நீயே சுமந்துகொள்."
எசேக்கியேல் 23 : 36 (RCTA)
ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "மனிதா, ஒல்லா, ஒலிபா இவர்களைத் தீர்ப்பிடுவாயா? அப்படியானால் அவர்கள் செய்த அருவருப்பானவற்றை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
எசேக்கியேல் 23 : 37 (RCTA)
ஏனெனில் அவர்கள் விபசாரம் செய்தனர்; அவர்கள் கைகள் இரத்தக் கறை படிந்துள்ளன; சிலைகளோடு வேசித்தனம் செய்ததுமல்லாமல், நமக்குப் பெற்ற பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்டார்கள்.
எசேக்கியேல் 23 : 38 (RCTA)
அவர்கள் இதற்கு மேலும் செய்தார்கள். அந்நாளில் நமது பரிசுத்த இடத்தைப் பங்கப்படுத்தி, ஒய்வு நாட்களையும் அவசங்கைப் படுத்தினார்கள்.
எசேக்கியேல் 23 : 39 (RCTA)
தங்கள் பிள்ளைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டு விட்டு, அப்படியே நமது பரிசுத்த இடத்தினுள் நுழைந்து, அதைப் பங்கப்படுத்தினார்கள்; ஆம் அதனுள் நுழைந்து இத் தீய செயல்களையெல்லாம் நமது வீட்டின் நடுவில் செய்தார்கள்.
எசேக்கியேல் 23 : 40 (RCTA)
தூதர்களை அனுப்பித் தொலை நாட்டிலிருந்து ஆண்களை அழைத்துவரச் சொன்னார்கள்; அவர்களும் வந்தார்கள். அவர்களுக்காக நீ குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களால் உன்னை அழகு படுத்தினாய்.
எசேக்கியேல் 23 : 41 (RCTA)
அழகான கட்டிலில் உட்கார்ந்தாய்; உன் முன் மேசை ஒன்று வைக்கப்பட்டிருந்தது; அதன் மேல் நமது நறுமணப் பொருட்களையும் எண்ணெய்யையும் வைத்தாய்.
எசேக்கியேல் 23 : 42 (RCTA)
அவளோடு சிற்றின்பப் பிரியரான மக்கட் கூட்டம் களியாட்டம் புரிந்தது; பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அந்தப் பெண்களின் கைகளில் வளைகளையும், தலையில் சிறந்து மின்னும் முடியையும் வைத்தார்கள்.
எசேக்கியேல் 23 : 43 (RCTA)
விபசாரத்தில் முதிர்ந்தவளைக் குறித்து, அவள் இன்னும் தன் வேசித்தனத்தைத் தொடர்ந்து செய்வாளோ என்று அப்பொழுது கேட்டோம்.
எசேக்கியேல் 23 : 44 (RCTA)
ஏனெனில் விலைமாதர்களிடத்தில் போவது போல் அவர்கள் அவளிடம் போனார்கள்; அவ்வாறே வேசிகளான ஒல்லா, ஒலிபா இவர்களிடமும் போனார்கள்.
எசேக்கியேல் 23 : 45 (RCTA)
ஆனால் நீதிமான்கள் அவர்களைக் குறித்து விபசாரிகள் என்றும், இரத்தம் சிந்திய பெண்கள் என்றும் தீர்ப்புக் கூறுவார்கள்; ஏனெனில் அவர்கள் விபசாரிகள்தான்; இரத்தக்கறை அவர்கள் கையிலிருக்கிறது."
எசேக்கியேல் 23 : 46 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "அவர்களுக்கு விரோதமாய்ப் பெரும் கும்பலை வரச்செய்து அவர்களை அச்சத்துக்கு உட்படுத்திக் கொள்ளையிட விட்டுவிடு.
எசேக்கியேல் 23 : 47 (RCTA)
அந்தக் கும்பல் அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டுவார்கள்; அவர்களுடைய புதல்வர் புதல்வியரைக் கொன்று, வீடுகளைச் சுட்டெரிப்பார்கள்.
எசேக்கியேல் 23 : 48 (RCTA)
இவ்வாறு, அவர்களின் வேசித்தனம் நாட்டினின்றே ஒழியச் செய்வோம்; வேசித்தனம் செய்யாமலிருக்க இவர்கள் மற்றப் பெண்களுக்கு ஒர் எச்சரிக்கையாய் இருப்பார்கள்.
எசேக்கியேல் 23 : 49 (RCTA)
ஆனால் உங்கள் முறைகேடான பாவம் உங்கள் மேல் தான் சுமத்தப்படும்; சிலைவழிபாட்டுக்குரிய தண்டனை உங்கள் மேலேயே விழும்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49