எசேக்கியேல் 11 : 1 (RCTA)
மீண்டும் ஆவி என்னைத் தூக்கி ஆண்டவருடைய கோயிலின் கிழக்கு வாயிலுக்குக் கொண்டு வந்து, கதிரவன் தோன்றும் திசையை நோக்கியிருக்கும் வாயிலில் நிறுத்திற்று; அங்கே வாயிலின் முற்றத்திலே இருபத்தைந்து பேரைப் பார்த்தேன்; அவர்களின் நடுவில் மக்களின் தலைவர்களான ஆஜுர் மகனாகிய யெசோனியாசையும், பனாயியாஸ் மகனாகிய பெல்தியாசையும் கண்டேன்.
எசேக்கியேல் 11 : 2 (RCTA)
அப்போது ஆண்டவர், "மனிதா இந்தப் பட்டணத்தில் அக்கிரமம் செய்பவர்களும், தீய ஆலோசனை தருபவர்களும் இவர்கள் தான்.
எசேக்கியேல் 11 : 3 (RCTA)
இவர்கள், 'நம்முடைய வீடுகள் கட்டி வெகுநாட்கள் ஆகவில்லையா? இந்த நகரந்தான் அண்டா, நாம் அதிலுள்ள இறைச்சி' என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
எசேக்கியேல் 11 : 4 (RCTA)
ஆகையால், மனிதா, அவர்களைக் குறித்து நீ இறைவாக்குக் கூறு" என்று என்னிடம் சொன்னார்.
எசேக்கியேல் 11 : 5 (RCTA)
அப்போது ஆண்டவருடைய ஆவி வேகத்தோடு இறங்கிற்று; அவர் எனக்குச் சொன்னார்: "நீ பேசு; ஆண்டவர் சொல்லுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, இவ்வாறு தான் நீங்கள் பேசினீர்கள். உங்கள் மனத்திலுள்ள நினைவுகள் நமக்குத் தெரியுமே!
எசேக்கியேல் 11 : 6 (RCTA)
நீங்கள் இப்பட்டணத்தில் பலரைக் கொலைசெய்தீர்கள்; அதன் தெருக்களைக் கொலையுண்டவர்களின் உடல்களால் நிரப்பினீர்கள்.
எசேக்கியேல் 11 : 7 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: உங்களால் கொல்லப்பட்டுப் பட்டணத்தின் தெருக்களில் போடப்பட்டவர்கள் தான் இறைச்சியாய் இருக்கிறார்கள்; பட்டணந் தான் அண்டா. நாம் அதன் நடுவிலிருந்து உங்களைத் துரத்துவோம்.
எசேக்கியேல் 11 : 8 (RCTA)
நீங்கள் வாளுக்கு அஞ்சினீர்கள்; நாமோ உங்கள் மீது வாளையே வரச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
எசேக்கியேல் 11 : 9 (RCTA)
நாம் உங்களைப் பட்டணத்தினின்று துரத்தியடித்து, மாற்றார் கைகளில் ஒப்புவித்து உங்கள் மீது நீதி செலுத்துவோம்.
எசேக்கியேல் 11 : 10 (RCTA)
வாளால் வெட்டுண்டு மடிவீர்கள்; இஸ்ராயேல் நாட்டின் எல்லையில் உங்களைத் தீர்ப்பிடுவோம்; அப்போது தான் நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
எசேக்கியேல் 11 : 11 (RCTA)
இந்த நகரம் உங்களுக்கு அண்டாவாகவோ, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாகவே இருக்கமாட்டீர்கள்; இஸ்ராயேல் நாட்டின் எல்லையிலேயே உங்களுக்கு நீதி வழங்கப்படும்.
எசேக்கியேல் 11 : 12 (RCTA)
அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்; ஏனெனில் நீங்கள் நம் கட்டளைகளின்படி நடக்கவில்லை; நம் நீதிச் சட்டங்களைக்கடைப் பிடிக்கவில்லை; அதற்கு மாறாக, உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தாரின் சட்டங்களின் படி நடந்தீர்கள்."
எசேக்கியேல் 11 : 13 (RCTA)
நான் இன்னும் இறைவாக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பனாயியாஸ் மகனாகிய பெல்தியாஸ் செத்து வீழ்ந்தான். அதைக் கண்ட நான் முகங்குப்புற விழுந்து உரதக்குரலில், "ஐயோ, ஆண்டவராகிய இறைவனே! இஸ்ராயேல் மக்களில் மீதியாய் இருப்பவர்களையும் நீர் முற்றிலும் அழிக்கப் போகிறீரோ?" என்று கதறினேன்.
எசேக்கியேல் 11 : 14 (RCTA)
அப்போது ஆண்டவர் எனக்குச் சொன்னார்:
எசேக்கியேல் 11 : 15 (RCTA)
மனிதா, உன் சகோதரர்கள், ஆம், நெருங்கிய உறவினர், இஸ்ராயேல் வீட்டார் அனைவருமாகிய இவர்களைக் காட்டித்தான், 'அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய் விட்டார்கள்; எங்களுக்குத் தான் இந்த நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டது' என்று யெருசலேமில் மக்களுக்குச் சொல்கிறார்கள்.
எசேக்கியேல் 11 : 16 (RCTA)
இவர்களைக் குறித்து நீ சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களைப் புறவினத்தார் நடுவில் வாழும்படி அனுப்பியிருந்தாலும், தூர நாட்டுக்குத் துரத்தி விட்டிருந்தாலும் அவர்கள் போய் வாழ்கின்ற இடத்தில் நாம் அவர்களுக்குச் சிறிது காலத்திற்காகவாவது பரிசுத்த தலம் போல் இருந்தோம்.'
எசேக்கியேல் 11 : 17 (RCTA)
ஆகையால், 'சிதறடிக்கப்பட்ட நாட்டிலிருந்து நாம் உங்களை ஒன்றுசேர்ப்போம், புறவினத்தார் நடுவிலிருந்து உங்களைக் கூட்டி வருவோம், இஸ்ராயேல் நாட்டை உங்களுக்குக் கொடுப்போம் என்கிறார் ஆண்டவர்' என்று நீ சொல்.
எசேக்கியேல் 11 : 18 (RCTA)
அவர்கள் அங்கு வந்து அருவருப்பான சிலைகளையும் இழிந்த செயல்களையும் அதிலிருந்து அகற்றுவார்கள்.
எசேக்கியேல் 11 : 19 (RCTA)
நாம் அவர்களுக்கு ஒரு மனப்பட்ட இதயத்தை அருளுவோம்; அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியை ஊட்டுவோம்; கல்லான இதயத்தைக் எடுத்து விட்டு உணர்ச்சியுள்ள இதயத்தைக் கொடுப்போம்.
எசேக்கியேல் 11 : 20 (RCTA)
அப்போது அவர்கள் நம் கட்டளைகளின்படி நடப்பார்கள்; நம் நீதிச்சட்டங்களைக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் நமக்கு மக்களாகவும், நாம் அவர்களுக்குக் கடவுளாகவும் இருப்போம்.
எசேக்கியேல் 11 : 21 (RCTA)
ஆனால் யாருடைய உள்ளம் அருவருப்பான சிலைகளையும், இழிந்த செயல்களையும் பின்பற்றுகிறதோ அவர்கள் குற்றத்தை அவர்கள் தலை மீதே சுமத்துவோம், என்கிறார் ஆண்டவர்."
எசேக்கியேல் 11 : 22 (RCTA)
அப்போது கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரித்து மேலே எழும்ப, சக்கரங்களும் அவற்றுடன் எழும்பின; இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மீது இருந்தது.
எசேக்கியேல் 11 : 23 (RCTA)
பிறகு ஆண்டவரின் மகிமை பட்டணத்தின் நடுவிலிருந்து எழும்பி வெளியேறிக் கீழ்த்திசையிலுள்ள மலை மீது வந்து நின்றது.
எசேக்கியேல் 11 : 24 (RCTA)
அப்போது ஆண்டவரின் ஆவி பரவசத்தில் இருந்த என்னைத் தூக்கி கல்தேயாவில் சிறைப்பட்டு இருந்தவர்கள் நடுவில் தேவ ஆவியினால் கொண்டு போய் விட்டது.
எசேக்கியேல் 11 : 25 (RCTA)
ஆண்டவர் எனக்கு அருளிய காட்சிகள் அனைத்தையும் சிறைப்பட்டவர்களுக்குச் சொன்னேன்.
❮
❯