எசேக்கியேல் 10 : 1 (RCTA)
பின்னர் நான் ஒரு காட்சி கண்டேன்: கெருபீம்களின் தலை மீதிருந்த மண்டலத்தில் நீலமணியாலிழைத்த அரியணையின் உருவம் போல் ஒன்று தென்பட்டது.
எசேக்கியேல் 10 : 2 (RCTA)
அப்போது ஆண்டவர் சணல் நூலாடை அணிந்திருந்தவனிடம், "கெருபீம்களுக்குக் கீழே இருக்கும் சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபீம்களின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கைநிறைய வாரிப் பட்டணத்தின் மீது வீசு" என்றார். அவ்வாறே அவன் செய்தான்; நான் கண்டேன்.
எசேக்கியேல் 10 : 3 (RCTA)
அவன் உள்ளே நுழையும் போது, கெருபீம்கள் கோயிலின் வலப்புறத்தில் நின்று கொண்டிருந்தன; அப்போது மேகம் ஒன்று உள் முற்றத்தை மூடிக்கொண்டது.
எசேக்கியேல் 10 : 4 (RCTA)
ஆண்டவரின் மகிமை கெருபீம்கள் மேலிருந்து எழும்பி கோயிலின் வாயிற்படிக்கு வந்தது; ஆலயம் முழுதும் மேகம் நிறைந்திருந்தது. கோயிலோ ஆண்டவரது மகிமையின் பேரொளியால் நிரம்பிற்று.
எசேக்கியேல் 10 : 5 (RCTA)
கெருபீம்களுடைய இறக்கைகளின் இரைச்சல் வெளி முற்றம் வரையில் கேட்டது; அது எல்லாம் வல்லவர் பேசுங் குரல் போல் இருந்தது.
எசேக்கியேல் 10 : 6 (RCTA)
சணல் நூலாடை அணிந்தவனுக்கு, "நீ கெருபீம்களின் நடுவிலுள்ள சக்கரங்களிடையிலிருக்கும் அக்கினியை எடு" என்று கட்டளையிட்டவுடனே, அவன் போய்ச் சக்கரங்களின் அருகில் நின்றான்.
எசேக்கியேல் 10 : 7 (RCTA)
அந்நேரத்தில் ஒரு கெருபீம் தன் கையை நீட்டிக் கெருபீம்களின் நடுவில் உள்ள நெருப்பை எடுத்து, சணல் நூலாடை அணிந்திருந்தவன் கையில் கொடுக்க, அவன் அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
எசேக்கியேல் 10 : 8 (RCTA)
அப்போது கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் மனிதனின் கைச் சாயல் காணப்பட்டது.
எசேக்கியேல் 10 : 9 (RCTA)
இதோ, கெருபீம்களின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன்; ஒவ்வொரு கெருபீம் அருகில் ஒரு சக்கரம் இருந்தது; ஒவ்வொன்றுக்கும் (கெருபீம்) அருகில் தனித்தனிச் சக்கரம் இருந்தது; சக்கரங்கள் பளிங்கு போல மின்னின;
எசேக்கியேல் 10 : 10 (RCTA)
அவை நான்கும் ஒரே வடிவாய் இருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றிற்று.
எசேக்கியேல் 10 : 11 (RCTA)
அவை ஒடும்போது நாற்றிசையிலும் ஒடும்; ஒடும் போது அங்குமிங்கும் திரும்ப மாட்டா; ஒரு சக்கரம் ஒடும் இடத்திற்கே மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் ஒடின.
எசேக்கியேல் 10 : 12 (RCTA)
அவை முழுவதும், கழுத்து, கை, இறக்கைகள், சக்கரங்களின் வட்டங்கள் யாவும் கண்களால் நிறைந்து இருந்தன; சக்கரத்தைச் சுற்றிலும் அவ்வாறே நிறைந்திருந்தது.
எசேக்கியேல் 10 : 13 (RCTA)
சூழல் சக்கரங்கள்" என்பது அவற்றின் பெயர் எனக் கேட்டறிந்தேன்.
எசேக்கியேல் 10 : 14 (RCTA)
ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது கெருபீம் முகமும், இரண்டாவது மனிதா முகமும், மூன்றாவது சிங்க முகமும், நான்காவது கழுகு முகமும் இருந்தன.
எசேக்கியேல் 10 : 15 (RCTA)
கெருபீம்கள் மேலே உயர்ந்தன; கேபார் நதியருகில் நான் கண்ட மிருகங்கள் இவைகளே.
எசேக்கியேல் 10 : 16 (RCTA)
கெருபீம்கள் நடக்கும் போது சக்கரங்களும் அவற்றின் அருகில் ஒடும்; பூமியில் மேலெழும்பக் கெருபீம்கள் தங்கள் இறக்கைகளை விரிக்கும் போதோ, சக்கரங்கள் அவற்றின் அருகிலேயே இருந்தன.
எசேக்கியேல் 10 : 17 (RCTA)
அவை நிற்கும் போது இவையும் நிற்கும்; அவை மேலே எழும்பும் போது இவையும் மேலே எழும்பும்; ஏனெனில் மிருகங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
எசேக்கியேல் 10 : 18 (RCTA)
ஆண்டவரின் மகிமை கோயிலின் வாயிற்படியை விட்டுக் கெருபீம்கள் மேல் வந்து நின்றது.
எசேக்கியேல் 10 : 19 (RCTA)
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கெருபீம்கள் தங்கள் இறைக்கைகளை விரித்துப் பூமியை விட்டு மேலெழும்பின; அவை புறப்படுகையில் சக்கரங்களும் அவற்றுடன் புறப்பட்டன; ஆண்டவருடைய கோயிலின் கீழ்த்திசை வாயிற்படியில் வந்து நின்றன; இஸ்ராயேலின் கடவுளுடைய மகிமை அவற்றின் மேல் இருந்தது.
எசேக்கியேல் 10 : 20 (RCTA)
கேபார் நதியருகில் இஸ்ராயேலின் கடவுளுக்குக் கீழே அன்று நான் கண்ட மிருகங்கள் இவையே; அவற்றுக்குக் கெருபீம்கள் என்பது பெயர் என அறிந்து கொண்டேன்.
எசேக்கியேல் 10 : 21 (RCTA)
அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன; இறக்கைகளின் கீழ் மனித கையின் சாயல் தென்பட்டது.
எசேக்கியேல் 10 : 22 (RCTA)
இவற்றின் முகச்சாயல், நான் கேபார் நதியருகில் கண்டதைப் போலவே இருந்தது. அவை ஒவ்வொன்றும் நேராகச் சென்றன.
❮
❯