யாத்திராகமம் 5 : 1 (RCTA)
அதற்குப் பின் மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய்: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்: பாலைவனத்திலே நமக்கு வழிபாடு செய்யும்படி நம் மக்களைப் போக விடு என்கிறார் என்றனர்.
யாத்திராகமம் 5 : 2 (RCTA)
அதற்கு அவன்: நான் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு இஸ்ராயேலரைப் போக விட வேண்டிய தென்ன? அந்த ஆண்டவர் யார்? நான் ஆண்டவரையும் அறியேன்; இஸ்ராயேலரைப் போக விடவும் மாட்டேன் என்றான்.
யாத்திராகமம் 5 : 3 (RCTA)
அதற்கு அவர்கள்: எபிரேயரின் கடவுள் எங்களை அழைத்து, பாலைவனத்தில் மூன்று நாள் பயணம் செய்து கடவுளாகிய எமது ஆண்டவருக்குப் பலி செலுத்தும்படி திருவுளமானார். நாங்கள் போகாவிடில், கொள்ளை நோயும் வாளும் எங்கள்மேல் வரக்கூடும் என்றனர்.
யாத்திராகமம் 5 : 4 (RCTA)
அதற்கு எகிப்து மன்னன்: மோயீசா, ஆரோனே, தங்கள் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் மக்களைக் குழப்பி விடுவதென்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.
யாத்திராகமம் 5 : 5 (RCTA)
மீண்டும் பாரவோன்: (உங்கள்) இனத்தார் நாட்டில் மிகுந்து போயிருக்கிறார்கள். ஒருவரும் கவனியாமையால், அவர்கள் பெரும் திரளாய்ப் பெருகிப் பலுகியிருக்கிறார்கள் என்று உங்களுக்குச் சலுகை காட்டினால், மேன்மேலும் விருத்தி அடைவார்களே என்றான்.
யாத்திராகமம் 5 : 6 (RCTA)
அதே நாளில், அவன் வேலை வாங்கும் விசாரணைக்காரர்களுக்கும் ஊர்த் தலையாரிகளுக்கும் கட்டளை இட்டதாவது:
யாத்திராகமம் 5 : 7 (RCTA)
செங்கல் வேலை செய்வதற்காக நீங்கள் அந்த இனத்தாருக்கு முன்போல வைக்கோல் கொடுக்க வேண்டாம். அவர்களே போய் வைக்கோலைச் சேர்த்து வரட்டும்.
யாத்திராகமம் 5 : 8 (RCTA)
மேலும், அவர்கள் முன்பு செய்து கொடுத்த கணக்குக்குச் சரியாகச் செங்கல் அறுத்துக் கொடுக்கக் கடவார்கள். அதிலே நீங்கள் சிறிதும் குறைக்க வேண்டாம். அவர்கள் சோம்பேறியாய் இருப்பதால் அல்லவா, நாங்கள் போய் எங்கள் கடவுளுக்குப் பலியிடுவோம் என்று கூச்சலிட்டிருக்கின்றார்கள்?
யாத்திராகமம் 5 : 9 (RCTA)
அவர்களின் பொருளற்ற எவ்விதப் பேச்சுக்களுக்கும் செவி கொடாமல், நீங்கள் அவர்களுக்குத் தாளாத வேலை இட்டு வாருங்கள். அவர்களும் அதைக் கண்டிப்பாய்ச் செய்து முடிக்கக் கடவர்.
யாத்திராகமம் 5 : 10 (RCTA)
ஆகையால், வேலைவாங்கும் மேற்பார்வையாளரும் ஊர்த் தலையாரிகளும் புறப்பட்டுச் சென்று, மக்களை நோக்கி: பாரவோன் சொல்லுவதாவது: உங்களுக்கு நாம் வைக்கோல் கொடோம்.
யாத்திராகமம் 5 : 11 (RCTA)
நீங்களே போய், எங்கேயாவது தேடிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையோ சிறிதுகூடக் குறைக்கப்படாது என்றனர்.
யாத்திராகமம் 5 : 12 (RCTA)
ஆதலால், மக்கள் வைக்கோல் சேகரிக்கும்படி எகிப்து நாட்டின் நான்கு திக்கிலும் அலைந்து திரிந்தனர்.
யாத்திராகமம் 5 : 13 (RCTA)
மீண்டும் வேலைவாங்கும் மேற்பார்வையாளர் அவர்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்பட்டு வந்த நாட்களில் நீங்கள் எந்தக் கணக்கின்படி செய்து வந்தீர்களோ, இப்போதும் அந்தக் கணக்குப்படி நாள் தோறும் வேலை செய்து முடிக்க வேண்டும் எள்று வலியுறுத்திச் சொன்னார்கள்.
யாத்திராகமம் 5 : 14 (RCTA)
பாரவோன் நியமித்திருந்த தலையாரிகள் இஸ்ராயேல் மக்கள்மேல் நியமித்திருந்த கண்காணிப்பாளரை நோக்கி: செங்கல் வேலையிலே பழைய கணக்குப்படி நீங்கள் நேற்றும் இன்றும் ஏன் செய்து முடிக்கவில்லை என்று சொல்லி, அவர்களைக் கசையால் அடித்து வந்தனர்.
யாத்திராகமம் 5 : 15 (RCTA)
அப்போது இஸ்ராயேல் மக்கள் மேல் கண்காணிப்பாளராய் இருந்தவர்கள் வந்து, பாரவோனை நோக்கிக் கூச்சலிட்டு: நீர் அடியோர்களை இப்படி விரோதித்துச் செய்வதென்ன?
யாத்திராகமம் 5 : 16 (RCTA)
வைக்கோலோ எங்களுக்குத் தரப்படுவதில்லை. செங்கல்களை முன் போல அறுத்துத்தீர வேண்டியிருக்கிறதே! இதோ, அடியோர்கள் கசைகளால் அடிபடுகிறோம். உம் மக்களுக்கு அநீதி செய்யப்பட்டு வருகிறதே! (என்றனர்).
யாத்திராகமம் 5 : 17 (RCTA)
அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாய் இருப்பதனால் அல்லவா, ஆண்டவருக்குப் பலியிடப் போவோம் என்கிறீர்கள்? நல்லது.
யாத்திராகமம் 5 : 18 (RCTA)
போய் வேலையைச் செய்யுங்கள். வைக்கோலும் உங்களுக்குத் தரப்படா; வாடிக்கையான செங்கற் கணக்கை நீங்கள் செலுத்தியாகவும் வேண்டும் என்றான்.
யாத்திராகமம் 5 : 19 (RCTA)
அப்போது, இஸ்ராயேல் மக்களின் கண்காணிப்பாளர்கள்: நீங்கள் ஒவ்வொரு நாளும் அறுத்துத் தீரவேண்டிய செங்கற் கணக்கிலே ஒன்றும் குறைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டதைப் பற்றித் தங்களுக்கு இக்கட்டு நேரிட்டிருப்பது கண்டு, பாரவோன் முன்னிலையினின்று புறப்பட்டு வந்தனர்.
யாத்திராகமம் 5 : 20 (RCTA)
அப்பொழுது, வழியிலே நின்றுகொண்டிருந்த மோயீசனையும் ஆரோனையும் சந்தித்து, அவர்களை நோக்கி:
யாத்திராகமம் 5 : 21 (RCTA)
ஆண்டவர் உங்களை விசாரித்துத் தீர்வையிடக் கடவாராக. ஏனென்றால், நீங்கள் பாரவோனுக்கும் அவன் ஊழியருக்கும் முன்பாக, எங்கள் நறுமணத்தை நாற்றமாக மாற்றி, அவர்கள் எங்களைக் கொல்லும்படியான வாளை, அவர்கள் கையிலே கொடுத்திருக்கிறீர்களே என்று முறையிட்டனர்.
யாத்திராகமம் 5 : 22 (RCTA)
அப்பொழுது மோயீசன் ஆண்டவரிடம் திரும்பிப் போய்: ஆண்டவரே, நீர் இந்த மக்களுக்குத் துன்பம் வருவித்ததென்ன?
யாத்திராகமம் 5 : 23 (RCTA)
அடியேனை ஏன் அனுப்பினீர்? இதோ, நான் உம்முடையை பெயரைச் சொல்லிப் பாரவோனிடம் சென்று பேசினது முதல், அவன் உம் மக்களைத் தொல்லைப் படுத்தி வருகிறான். நீர் அவர்களை விடுதலையாக்கவில்லையோ என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23