யாத்திராகமம் 40 : 1 (RCTA)
பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
யாத்திராகமம் 40 : 2 (RCTA)
நீ முதல் மாதத்தின் முதல் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தை நிறுவனம் செய்து,
யாத்திராகமம் 40 : 3 (RCTA)
அதில் பெட்டகத்தை வைத்து அதைத் திரையினால் மறைத்து,
யாத்திராகமம் 40 : 4 (RCTA)
மேசையையும் கொண்டு வந்து அதன் மீது கட்டளையிடப்பட்டவற்றை முறைப்படி வைத்து, குத்துவிளக்கையும் அதன் அகல்களையும் ஏற்றி,
யாத்திராகமம் 40 : 5 (RCTA)
பொன் தூபப் பீடத்தைச் சாட்சியப் பெட்டகத்திற்கு முன் நிறுத்திவைப்பாய். கூடார வாயிலிலே திரையையும் தொங்க விடுவாய்.
யாத்திராகமம் 40 : 6 (RCTA)
பின், இதற்கு முன்பாகத் தகனப் பலிப்பீடத்தை நிறுவி,
யாத்திராகமம் 40 : 7 (RCTA)
பீடத்துக்கும் கூடாரத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதில் நிறையத் தண்ணீர் வார்ப்பாய்.
யாத்திராகமம் 40 : 8 (RCTA)
மேலும், பிராகாரத்துக்கும் அதன் வாயிலுக்கும் முன் தொங்கு திரைகளைச் சுற்றிலும் அமைப்பாய்.
யாத்திராகமம் 40 : 9 (RCTA)
பின் அபிசேகத் தைலத்தை எடுத்துப் பூசிக் கூடாரத்தையும் அதன் பாத்திரங்களையும் பரிசுத்தப்படுத்துவாய்.
யாத்திராகமம் 40 : 10 (RCTA)
தகனப் பலிப் பீடத்தையும் அதன் எல்லாப் பாத்திரங்களையும்,
யாத்திராகமம் 40 : 11 (RCTA)
தொட்டியையும் அதன் பாதத்தையும், அவைகளெல்லாம் மிகவும் பரிசுத்தமான பொருட்களாகும்படி அபிசேகத் தைலத்தால் பூசுவாய்.
யாத்திராகமம் 40 : 12 (RCTA)
அதன்பின் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் உடன்படிக்கைக் கூடார வாயிலுக்கு அழைத்து அவர்களைத் தண்ணீரிலே குளிப்பாட்டி
யாத்திராகமம் 40 : 13 (RCTA)
யாத்திராகமம் 40 : 14 (RCTA)
யாத்திராகமம் 40 : 15 (RCTA)
(13) அவர்கள் நமக்கு ஊழியம் செய்யும் படிக்கும், அவர்களின் ( அபிசேகப் ) பூசுதல் நித்திய குருத்துவத்திற்குச் செல்லும்படிக்கும், அவர்களுக்குத் திருவுடைகளை அணிவிப்பாய் என்றருளினார்.
யாத்திராகமம் 40 : 16 (RCTA)
(14) ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் மோயீசன் செய்தார்.
யாத்திராகமம் 40 : 17 (RCTA)
(15) ஆகையால், இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் முதல் நாளன்று ஆசாரக் கூடாரம் நிறுவனம் செய்தாயிற்று.
யாத்திராகமம் 40 : 18 (RCTA)
(16) மோயீசனே அதை நிறுவினார். பலகைகளையும் பாதங்களையும் தண்டுகளையும் வைத்துத் தூண்களையும் நிறுத்தி,
யாத்திராகமம் 40 : 19 (RCTA)
(17) ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி கூடாரத்தின் மீது திரையையும் விரித்து, அதன் மேலே மூடியையும் பரப்பினார்.
யாத்திராகமம் 40 : 20 (RCTA)
(18) சாட்சியப் ( பலகைகளைப் ) பெட்டகத்தினுள் வைத்து, அதன் கீழே தண்டுகளையும், அதன் மேலே இரக்கத்தின் அரியணையையும் அமைத்தார்.
யாத்திராகமம் 40 : 21 (RCTA)
(19) பெட்டகத்தைக் கூடாரத்தினுள்ளே கொண்டுவந்த பின், ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றும்படி, அதன்முன் திரையைக் கட்டித் தொங்கவிட்டார்.
யாத்திராகமம் 40 : 22 (RCTA)
(20) சாட்சியக் கூடாரத்திற்கு வடப்புறத்தில் திரைக்கு வெளியே மேசையை வைத்து,
யாத்திராகமம் 40 : 23 (RCTA)
(21) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, காணிக்கை அப்பங்களையும் ( அவர் முன்னிலையில் ) ஒழுங்காய் வைத்தார்.
யாத்திராகமம் 40 : 24 (RCTA)
(22) உடன்படிக்கைக் கூடாரத்திலே தென்புறமாக மேசைக்கு எதிரே குத்துவிளக்கையும் வைத்து,
யாத்திராகமம் 40 : 25 (RCTA)
(23) ஆண்டவருடைய கட்டளைப்படி அகல்களையும் வரிசைப்படி அமைத்து ஏற்றினார்.
யாத்திராகமம் 40 : 26 (RCTA)
(24) உடன்படிக்கைக் கூடாரத்தினுள் திரைக்கு எதிராகத் தங்கப் பீடத்தையும் நிறுவி,
யாத்திராகமம் 40 : 27 (RCTA)
(25) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே அதன் மீது நறுமணத் தூபத்தையும் காட்டினார்.
யாத்திராகமம் 40 : 28 (RCTA)
(26) சாட்சியக் கூடாரத்தின் வாயிலிலே தொங்கு திரையைத் தூக்கி வைத்தார்.
யாத்திராகமம் 40 : 29 (RCTA)
(27) அன்றியும், ஆண்டவர் கட்டளையிட்டபடி, சாட்சிய மண்டபத்திலே தகனப் பலிப்பீடத்தை நிறுவி, அதன்மேல் தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினார்.
யாத்திராகமம் 40 : 30 (RCTA)
(28) பின் சாட்சியக் கூடாரத்துக்கும் ( அந்தப் பீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதிலே நிறையத் தண்ணீர் வார்த்தார்.
யாத்திராகமம் 40 : 31 (RCTA)
(29) அவ்விடத்திலே மோயீசனும், ஆரோனும் அவன் புதல்வர்களும் கைகால்களைக் கழுவுவார்கள்.
யாத்திராகமம் 40 : 32 (RCTA)
(30) அவர்கள் கூடாரத்துக்குள்ளே புகும்போதும், பலிப்பீடத்தண்டை வரும் போதும், ( அவ்வாறே, கழுவிக் கொள்ள வேண்டுமென்று ) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
யாத்திராகமம் 40 : 33 (RCTA)
(31) பின் ( மோயீசன் ) உடன்படிக்கைக் கூடாரத்தையும் பீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, அதன் வாயிலிலே தொங்கு திரையைத் தொங்க விட்டார்.
யாத்திராகமம் 40 : 34 (RCTA)
(32) இவையெல்லாம் முடிந்த போது ஒரு மேகம் சாட்சியக் கூடாரத்தை மூடினதுமன்றி, ஆண்டவருடைய மாட்சியும் அதனை நிரப்பிற்று.
யாத்திராகமம் 40 : 35 (RCTA)
(33) மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஆண்டவருடைய மாட்சி மின்னி எரிந்ததினாலே, மோயீசன், உடன்படிக்கைக் கூடாரத்திற்குள்ளே நுழைய இயலாதிருந்தார். ஏனென்றால், அம்மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்தது.
யாத்திராகமம் 40 : 36 (RCTA)
(34) திருவுறைவிடத்திலிருந்து மேகம் எழும்பும்போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள்.
யாத்திராகமம் 40 : 37 (RCTA)
(35) மேகம் எழும்பாமல் மேலே தங்கியிருக்கும் போதோ, அவர்கள் பயணம் செய்யாமல் அவ்விடத்திலேயே இருப்பார்கள்.
யாத்திராகமம் 40 : 38 (RCTA)
(36) ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தங்கள் இல்லிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, பகலிலே ஆண்டவருடைய மேகமும் இரவிலே நெருப்புச் சுடரும் உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38