யாத்திராகமம் 4 : 1 (RCTA)
அப்பொழுது மோயீசன் (ஆண்டவரை நோக்கி): அவர்கள் என்னை நம்பவும் மாட்டார்கள்; என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவும் மாட்டார்கள்: ஆண்டவர் உனக்குக் காட்சி தரவில்லை என்று சொல்வார்களே என்று பதில் கூறினான்.
யாத்திராகமம் 4 : 2 (RCTA)
அவர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். அவன்: அது ஒரு கோல் என்று பதில் சொல்ல,
யாத்திராகமம் 4 : 3 (RCTA)
ஆண்டவர்: அதைத் தரையிலே போடு என்றார். அவன் போடவே, அது பாம்பாக மாறிப் போயிற்று. அது கண்டு மோயீசன் விலகி ஓடினான்.
யாத்திராகமம் 4 : 4 (RCTA)
அப்பொழுது ஆண்டவர்: உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடி என்று சொன்னார். அவன் பிடிக்கவே, அது அவன் கையிலே கோலாயிற்று.
யாத்திராகமம் 4 : 5 (RCTA)
ஆண்டவர்: உன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாய் இருக்கிறவரே உனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர்கள் நம்பும் பொருட்டு (இதுவே அடையாளம்) என்றார்.
யாத்திராகமம் 4 : 6 (RCTA)
மீண்டும் ஆண்டவர்: உன் கையை உன் மடியிலே வை என, அவன் மடியிலே வைத்து எடுத்த போது, அது உறை பனிபோல வெண் தொழுநோய் பிடித்து இருந்தது.
யாத்திராகமம் 4 : 7 (RCTA)
அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே வை என, அவன் திரும்ப வைத்து எடுத்துப் பார்க்க, அது மற்ற சதையைப் போல் ஆயிற்று.
யாத்திராகமம் 4 : 8 (RCTA)
அப்பொழுது ஆண்டவர்: சிலவேளை அவர்கள் முந்தின அடையாளத்தைக் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், பிந்தின அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள்.
யாத்திராகமம் 4 : 9 (RCTA)
அவர்கள் இவ்விரண்டு அற்புதங்களையும் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், அப்பொழுது ஆற்று நீரை முகந்து அதைத் தரையிலே ஊற்று. ஆற்றில் முகந்த நீர் எல்லாம் இரத்தமாக மாறிப்போம் என்றார்.
யாத்திராகமம் 4 : 10 (RCTA)
மோயீசன்: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேளும்: நேற்றும் நேற்று முன்தினமும் நான் பேச்சுத் திறன் உள்ளவன் அல்லேன். சிறப்பாக, நீர் அடியேனுக்குத் திருவாக்கு அருளினது முதல், நான் திக்கு வாயனும் மந்த நாவு உள்ளவனும் ஆனேன் என்றான்.
யாத்திராகமம் 4 : 11 (RCTA)
ஆண்டவர் அவனை நோக்கி: மனிதனின் வாயை உண்டாக்கினவர் யார்? அன்றியும், ஊமையனையும் செவிடனையும், கண்பார்வை உள்ளவனையும் பார்வையற்ற குருடனையும் படைத்தவர் யார்?
யாத்திராகமம் 4 : 12 (RCTA)
நாம் அல்லவா? ஆகையால், நீ போ. நாம் உன் வாயோடு இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குச் சொல்லிக் கொடுப்போம் என்றார்.
யாத்திராகமம் 4 : 13 (RCTA)
அதற்கு அவன்: ஆண்டவரே! கெஞ்சிக் கேட்கிறேன், எவனை அனுப்ப வேண்டுமோ அவனை அனுப்பியருளும் என்று சொல்லக் கேட்டு,
யாத்திராகமம் 4 : 14 (RCTA)
ஆண்டவர் மோயீசன்மீது சினம் கொண்டவராய்: லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் சொற்றிறம் மிக்கவன் என்று அறிந்திருக்கிறோம். அதோ, அவன் உனக்கு எதிர்கொண்டு வருகிறான். உன்னைக் கண்டதும் அவன் மனமகிழ்வான்.
யாத்திராகமம் 4 : 15 (RCTA)
நீ அவனோடு பேசி, நம் வாக்குக்களை அவன் வாயிலே இடு. நாமோ, உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்துகொண்டு, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவோம்.
யாத்திராகமம் 4 : 16 (RCTA)
அவன் உனக்குப் பதிலாய் மக்களிடம் பேசி, உனக்கு வாயாக இருப்பான். நீயோ, கடவுளுக்கு அடுத்தவைகளில் அவனுக்குக் குருவாய் இருப்பாய்.
யாத்திராகமம் 4 : 17 (RCTA)
இந்தக் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. அதைக்கொண்டே அற்புதங்களைச் செய்துவருவாய் என்று அருளினார்.
யாத்திராகமம் 4 : 18 (RCTA)
மோயீசன் திரும்பிப் போய்த் தன் மாமனாகிய யெத்திரோவிடம் வந்து: எகிப்தில் இருக்கிற என் சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்த்து வரும்படி நான் போய் வருகிறேன் என்று அவருக்குச் சொல்ல, யெத்திரோ: சமாதானமாய்ப் போய் வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
யாத்திராகமம் 4 : 19 (RCTA)
ஆண்டவர் மதியானிலே மோயீசனை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போகலாம். ஏனென்றால், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லாரும் இறந்து போனார்கள் என்று உரைத்தார்.
யாத்திராகமம் 4 : 20 (RCTA)
அப்பொழுது மோயீசன் தன் மனைவியையும் புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களைக் கழுதையின்மீது ஏற்றி, கடவுள் தந்த கோலைத் தன் கையில் எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் பயணமானான்.
யாத்திராகமம் 4 : 21 (RCTA)
எகிப்திற்குத் திரும்பிச் செல்லுகையில் ஆண்டவர் அவனை நோக்கி: நாம் உன் கையில் வைத்துக் கொடுத்த எல்லா அற்புதங்களையும் பாரவோன் முன்னிலையில் செய்து காட்டக் கவனமாய் இரு. நாம் அவன் மனத்தைக் கடினமாக்கி விடுவோமாதலால், அவன் மக்களைப் போக விடான்.
யாத்திராகமம் 4 : 22 (RCTA)
அப்போது நீ அவனுக்குச் சொல்ல வேண்டியது என்ன என்றால்: ஆண்டவர் சொல்லுவதாவது: இஸ்ராயேல் நம் மூத்த புதல்வன்.
யாத்திராகமம் 4 : 23 (RCTA)
நமக்கு ஆராதனை செய்யும்படி நம் புதல்வனை அனுப்பி விடு என்று நாம் உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ அவனை அனுப்பிவிட மாட்டேன் என்றாய். ஆதலால், இதோ நாம் உன் மூத்த மகனைக் கொல்ல இருக்கின்றோம் என்பாய் என்றார்.
யாத்திராகமம் 4 : 24 (RCTA)
மேலும், மோயீசன் வழியே சென்றுகொண்டிருக்கையில், ஆண்டவர் ஒரு சாவடியில் அவனைச் சந்தித்து, அவனைக் கொல்ல எண்ணியிருந்தார்.
யாத்திராகமம் 4 : 25 (RCTA)
உடனே செப்போறாள் மிகக் கூர்மையான ஒரு கல்லை எடுத்துத் தன் புதல்வனின் நுனித்தோலை வெட்டி, பின் அவன் கால்களைத் தொட்டு: நீர் எனக்கு இரத்தப் பழியின் கணவர் என்றாள்.
யாத்திராகமம் 4 : 26 (RCTA)
விருத்த சேதனத்தைப் பற்றி: இரத்தப் பழியின் கணவர் என்று அவள் சொன்ன உடனே ஆண்டவர் அவனை விட்டு விலகினார்.
யாத்திராகமம் 4 : 27 (RCTA)
இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி: பாலைவனத்திலே மோயீசனுக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார். தெய்வ மலைப் பக்கம் அவனுக்கு எதிர்கொண்டு சென்ற, அவனை முத்தமிட்டான்.
யாத்திராகமம் 4 : 28 (RCTA)
அப்பொழுது மோயீசன் தன்னை அனுப்பிய ஆண்டவரின் எல்லா வார்த்தைகளையும், அவர் கட்டளையிட்ட அற்புதங்களையும் ஆரோனுக்கு விளக்கிச் சொன்னான்.
யாத்திராகமம் 4 : 29 (RCTA)
பின், இருவரும் சேர்ந்து போய், இஸ்ராயேல் மக்களில் பெரியோர் அனைவரையும் கூட்டினர்.
யாத்திராகமம் 4 : 30 (RCTA)
அப்போது, ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் சொல்லி, மக்களுக்கு முன்பாக அற்புதங்களையும் செய்தான்.
யாத்திராகமம் 4 : 31 (RCTA)
மக்களும் நம்பினார்கள். ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய தொல்லைகளைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும் அவர்கள் அந்நேரம் அறிந்து கொண்டு, நெடுங்கிடையாய் விழுந்து தொழுதனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31