யாத்திராகமம் 39 : 1 (RCTA)
மேலும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே பெசெலேயல், திருப்பணி செய்யும் போது ஆரோன் அணியவேண்டிய ஆடைகளை இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்தநிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் நெய்தான்.
யாத்திராகமம் 39 : 2 (RCTA)
முதலில் ஏப்போத்தைப் பொன் நூல், இளநீலம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல் முதலியவற்றால்
யாத்திராகமம் 39 : 3 (RCTA)
பல வண்ண நெசவு வேலையாய்ச் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால், பொன்னை மெல்லிய தகடாய் அடித்து அதனைச் சரிகையாக்கி; மேற்கூறின பலவண்ணச் சீலையின் நூலோடு சேர்த்து முறுக்கினான்.
யாத்திராகமம் 39 : 4 (RCTA)
இரண்டு தோள்களின் மேலும் உள்ள ஏப்போத்தின் முனைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன.
யாத்திராகமம் 39 : 5 (RCTA)
கச்சையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி பல வண்ணமுடையதாய்ச் (செய்தான்).
யாத்திராகமம் 39 : 6 (RCTA)
மேலும், மணி வெட்டும் தலைமுறைப்படி இரண்டு கோமேதகக் கற்களை வெட்டி, அவற்றைப் பொன் குவளைகளில் கெட்டியாய்ப் பதிய வைத்து, அவைகளின் மேல் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களைப் பொறித்தான்.
யாத்திராகமம் 39 : 7 (RCTA)
ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அவைகளை இஸ்ராயேல் புதல்வர்களின் நினைவுச் சின்னமாக ஏப்போத் ( என்னும் மேலாடையின் ) புறங்களிலே வைத்தான்.
யாத்திராகமம் 39 : 8 (RCTA)
மேலும், மார்ப்பதக்கத்தை ( மேலாடையாகிய ) ஏப்போத்தின் வேலைப்பாட்டிற்கு ஒப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொற்சரிகை, இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம்தோய்த்த இரத்த நிற நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் வினோதமாய்ச் செய்தான்.
யாத்திராகமம் 39 : 9 (RCTA)
அதைச் சதுரமும் இரட்டையுமாய் ஒரு சாண் அளவாய் இருக்கும்படி செய்தான்.
யாத்திராகமம் 39 : 10 (RCTA)
அதனில் இரத்தினங்களை நான்கு வரிசையில் பதித்தான். முதல் வரிசையில் பதுமராகமும், புஷ்பராகமும், மரகதமும்,
யாத்திராகமம் 39 : 11 (RCTA)
இரண்டாம் வரிசையில் மாணிக்கமும்,
யாத்திராகமம் 39 : 12 (RCTA)
நீலமணியும், வைரமும், மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், செவ்வந்திக் கல்லும்,
யாத்திராகமம் 39 : 13 (RCTA)
நான்காம் வரிசையில் சமுத்திர வண்ணக்கல்லும் கோமேதகமும், படிகப் பச்சைக் கல்லும் ஆகியவற்றைத் தம் வரிசைகளின்படி பொற்குவளைகளிலே பதித்து வைத்தான்.
யாத்திராகமம் 39 : 14 (RCTA)
அந்தப் பன்னிரண்டு கற்களிலும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களை வெட்டினான். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் எழுதியிருக்கும்.
யாத்திராகமம் 39 : 15 (RCTA)
மார்ப்பதக்கத்தில் ஒன்றோடொன்று சேரும் சிறு சங்கிலிகளையும் அவர்கள் பசும் பொன்னால் செய்தார்கள்.
யாத்திராகமம் 39 : 16 (RCTA)
அதன் பின் இரண்டு கொக்கிகளையும் இரண்டு வளையங்களையும் பொன்னால் அமைத்தார்கள். மேற்சொன்ன வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரு பக்கத்திலும் பொருத்தினார்கள்.
யாத்திராகமம் 39 : 17 (RCTA)
இவைகளினின்று இரண்டு பொற்சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சங்கிலிகளை ஏப்போத்தின் முனையிலுள்ள வளையங்களிலே மாட்டினார்கள்.
யாத்திராகமம் 39 : 18 (RCTA)
அவை சரியாகப் பொருந்தும்படி செய்தால் ஏப்போத்தும் மார்ப்பதக்கமும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
யாத்திராகமம் 39 : 19 (RCTA)
அவ்விரண்டும் ஏப்போத்திற்கு எதிராக இறுகியவைகளுமாய் தளராதபடி நீல நாடா பொருத்திய வளையங்களால் பலமாய்ச் சேர்க்கப்பட்டவைகளுமாய் இருந்தன. அதனால், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி, அவ்விரண்டும் ஒன்றை ஒன்று அகலவே கூடாது.
யாத்திராகமம் 39 : 20 (RCTA)
அன்றியும், ஏப்போத்துக்கடுத்த அங்கியை முழுவதும் இளநீல நூலால் செய்து,
யாத்திராகமம் 39 : 21 (RCTA)
அதன் மேற்பக்கத்து மையத்திலே தலையை நுழைப்பதற்கு ஏற்ற ஒரு துவாரத்தை அமைத்து, அதன் ஓரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவைத் தைத்தனர்.
யாத்திராகமம் 39 : 22 (RCTA)
அங்கியின் கீழ் ஒரத்திலே இளநீலம், கருஞ்சிவப்பு இரத்த நிறம் கொண்ட நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் செய்த மாதுளம் பழங்களைச் சித்திரப் பின்னல் வேலையாய்ச் செய்து,
யாத்திராகமம் 39 : 23 (RCTA)
பசும் பொன்னாலான மணிகளையும் மாதுளம் பழங்களையும் இடையிடையே வைத்து அங்கியின் கீழ் ஒரத்தைச் சுற்றிலும் அலங்கரித்தார்கள்.
யாத்திராகமம் 39 : 24 (RCTA)
ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம் பழமுமாக ( வைத்தார்கள் ). ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்த படியே, கடவுளுக்கு ஆராதனை செலுத்தப் போகும் போது பெரிய குரு மேற்சொன்ன அங்கியை அணிந்து கொள்ளக்கடவார்.
யாத்திராகமம் 39 : 25 (RCTA)
அவர்கள் ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நெடுஞ்சட்டைகளையும் மெல்லிய சணல் நூலால் செய்ததும் தவிர,
யாத்திராகமம் 39 : 26 (RCTA)
சிறிய முடிகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகளையும் மெல்லிய சணல் நூலாலே அமைத்து,
யாத்திராகமம் 39 : 27 (RCTA)
மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட சல்லடைகளையும் அமைத்து,
யாத்திராகமம் 39 : 28 (RCTA)
ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, திரித்த மெல்லிய சணல் நூலாலும், இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூல்களாலும் வினோதப் பின்னல் வேலையாய் இடைக் கச்சையையும் அமைத்தார்கள்.
யாத்திராகமம் 39 : 29 (RCTA)
மிகவும் பரிசுத்தமாகிய நெற்றிப் பட்டத்தைத் தூய பொன்னால் செய்து ஆண்டவருக்காக அர்ப்பணித்து ஒதுக்கப்பட்டவர் என்னும் வார்த்தைகளை அதிலே பொறித்தார்கள்.
யாத்திராகமம் 39 : 30 (RCTA)
ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே அதனை அலங்காரத் தலைப்பாகையோடு இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
யாத்திராகமம் 39 : 31 (RCTA)
இவ்வாறு உடன்படிக்கைக் கூடாரத்தின் வேலையையும் அதன் மேற்கட்டு வேலையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்து முடித்தனர்.
யாத்திராகமம் 39 : 32 (RCTA)
அவர்களே திருவுறைவிடத்தையும், அதன் மேற்கட்டையும், எல்லாப் பணிமுட்டுக்களையும் வளையங்களையும் பலகைகளையும் தண்டுகளையும் தூண்களையும் அதன் பாதங்களையும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
யாத்திராகமம் 39 : 33 (RCTA)
சிவப்புத் தோய்த்த ஆட்டுத் தோல்களை மேல் மூடியாகவும், ஊதா தோய்த்த தோல்களை அதற்கு மூடியாகவும் ஒப்புக்கொடுத்தார்கள்.
யாத்திராகமம் 39 : 34 (RCTA)
திரையையும் திருப்பெட்டகத்தையும் இரக்கத்தின் அரியணையையும்
யாத்திராகமம் 39 : 35 (RCTA)
மேசையையும், மேசைக்கடுத்த பாத்திரங்களையும், காணிக்கை அப்பங்களையும்,
யாத்திராகமம் 39 : 36 (RCTA)
குத்துவிளக்கையும், அதன் அகல்களையும், அவற்றின் கருவிகளையும் எண்ணெயையும்
யாத்திராகமம் 39 : 37 (RCTA)
பொற்பீடத்தையும், ( அபிசேகத் ) தைலத்தையும், நறுமணத் தூபவகைகளையும் கூடார வாயிலின் தொங்கு திரையையும்,
யாத்திராகமம் 39 : 38 (RCTA)
வெண்கலப் பீடத்தையும்,
யாத்திராகமம் 39 : 39 (RCTA)
அதன் சல்லடையையும் தண்டுகளையும் எல்லாத் தட்டுமுட்டுக்களையும் தொட்டியையும் அதன் பாதத்தையும், பிராகாரத்துத் தொங்கு திரையையும், தூண்களையும்,
யாத்திராகமம் 39 : 40 (RCTA)
அவற்றின் பாதங்களையும், மண்டப வாயிலின் தொங்கு திரையையும் அதன் கயிறுகளையும் முளைகளையும் கொடுத்தார்கள். ஆசாரக்கூடாரத்துப் பணிவிடைக்கும், சாட்சியக் கூடாரத்து ஆராதனை வழிபாட்டிற்கும் ஆண்டவர் கட்டளையிட்டவைகளிலெல்லாம் ( ஒன்றும் ) குறையவில்லை.
யாத்திராகமம் 39 : 41 (RCTA)
மேலும் பரிசுத்த இடத்தில் குருவாகிய ஆரோனும் அவர் புதல்வர்களும் அணிந்துகொள்ள வேண்டிய திருவுடைகளையும்,
யாத்திராகமம் 39 : 42 (RCTA)
ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள் கொண்டுவந்து ஒப்புக்கொடுத்தார்கள்.
யாத்திராகமம் 39 : 43 (RCTA)
மோயீசன் அவையெல்லாம் நிறைவேறின என்று கண்டு, அவைகளை ஆசீர்வதித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43