யாத்திராகமம் 37 : 1 (RCTA)
மீண்டும் பெசெலேயல் சேத்தீம் மரத்தால் பெட்டகத்தையும் செய்தான். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாம்.
யாத்திராகமம் 37 : 2 (RCTA)
அதனை உள்ளும் புறமும் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் அதற்குத் தங்கத்திறணையை அமைத்து,
யாத்திராகமம் 37 : 3 (RCTA)
அதன் நான்கு மூலைகளுக்கும் நான்கு பொன் வளையங்களை வார்த்து, பக்கத்திற்கு இரண்டாக அவற்றை இருபக்கங்களிலும் பொருத்தி,
யாத்திராகமம் 37 : 4 (RCTA)
சேத்தீம் மரத்தினால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,
யாத்திராகமம் 37 : 5 (RCTA)
பெட்டகத்தைத் தூக்கிக்கொண்டு செல்வதற்காக அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் அவைகளை நுழைத்தான்.
யாத்திராகமம் 37 : 6 (RCTA)
மூலத்தானம் எனப்படும் இரக்கத்தின் அரியணையையும் பசும் பொன்னால் செய்தான். அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது.
யாத்திராகமம் 37 : 7 (RCTA)
தங்கத் தகட்டினால் இரண்டு கொரூபிம்களையும் செய்து, இரக்கத்தின் அரியணைக்கு இரு புறத்திலும் வைத்தான்.
யாத்திராகமம் 37 : 8 (RCTA)
இரக்கத்தின் அரியணையினுடைய இரு பக்கத்து ஓரங்களிலும் வைக்கப்பட்ட
யாத்திராகமம் 37 : 9 (RCTA)
அக்கெரூபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையை நிழலிட்டவைகளாய், ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளாய், அதை நோக்கிக்கொண்டிருந்தன.
யாத்திராகமம் 37 : 10 (RCTA)
அவன் மேசையையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருந்தது.
யாத்திராகமம் 37 : 11 (RCTA)
அதைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பு அமைத்து,
யாத்திராகமம் 37 : 12 (RCTA)
அதைச் சுற்றிலும் நான்கு விரற்கிடையான ஒரு திரணையையும் அதன்மேல் வேறொரு திரணையையும் அமைத்தான்.
யாத்திராகமம் 37 : 13 (RCTA)
நான்கு பொன் வளையங்களையும் வார்த்து, அவற்றை மேசையின் நான்கு காலுக்கிருக்கும் நான்கு மூலைகளிலும்,
யாத்திராகமம் 37 : 14 (RCTA)
திரணைக்கருகில் பொருத்தி மேசையைத் தூக்கும்படி தண்டுகளை அவற்றில் நுழைத்தான்.
யாத்திராகமம் 37 : 15 (RCTA)
இந்தத் தண்டுகளையும் சேத்தீம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடி,
யாத்திராகமம் 37 : 16 (RCTA)
மேசையில் பற்பல விதமாய் உபயோகப்படும் பணிமுட்டுக்களையும் தட்டுக்களையும் குப்பிகளையும் தூபக் கலசங்களையும், பான பலிப் பாத்திரங்களையும் பசும்பொன்னால் செய்தான்.
யாத்திராகமம் 37 : 17 (RCTA)
அவன் பசும் பொன்னைத் தகடாக்கிக் குத்துவிளக்கையும் செய்தான். அதன் தண்டினின்று கிளைகளும், மொக்குகளும், குமிழ்களும், லீலிமலர்களும், புறப்பட்டிருந்தன.
யாத்திராகமம் 37 : 18 (RCTA)
அதாவது; பக்கத்திற்கு மூன்றாக இருபக்கமும் ஆறு கிளைகள் இருந்தன.
யாத்திராகமம் 37 : 19 (RCTA)
ஒரு கிளையில் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன. மறுகிளையிலும் வாதுமைக் கொட்டைபோன்ற மூன்று மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தமையால், குத்துவிளக்குத் தண்டினின்று புறப்பட்ட ஆறு கிளைகளிலும் ஒரேவித வேலைப்பாடு அமைந்திருந்தது.
யாத்திராகமம் 37 : 20 (RCTA)
விளக்குத் தண்டில் வாதுமைக் கொட்டைபோன்ற நான்கு மொக்குகளும் குமிழ்களும் லீலிமலர்களும் இருந்தன.
யாத்திராகமம் 37 : 21 (RCTA)
இரண்டு கிளைகளின் கீழே மூன்று இடங்களில் குமிழ்கள் இருந்தன. ஆகையால், ஒரே தண்டினின்று ஆறு கிளைகளும் புறப்பட்டன.
யாத்திராகமம் 37 : 22 (RCTA)
குமிழ்கள் கிளைகள் எல்லாம் பசும் பொன்னால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டிருந்தன.
யாத்திராகமம் 37 : 23 (RCTA)
மேலும், பசும் பொன்னால் ஏழு அகல்களையும், கரிந்ததிரியை வெட்டக் கத்திரிகளையும், எரிந்த திரியை வைக்கத் தட்டுக்களையும் செய்தான்.
யாத்திராகமம் 37 : 24 (RCTA)
குத்துவிளக்கும், அதன் எல்லாக் கருவிகளும், தட்டுமுட்டுக்களும் ஒரு தாலந்து நிறையுள்ள பொன்னால் ஆனவை.
யாத்திராகமம் 37 : 25 (RCTA)
பரிமள வகைகளின் பீடத்தையும் சேத்தீம் மரத்தால் செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஒரு முழச் சதுரமாகவும், இரண்டு முழ உயரமுள்ளதாகவும் இருந்தது. அதன் மூலைகளிலே நான்கு கொம்புகள் புறப்பட்டன. அவன் அதையும், அதன் சல்லடையையும், அதன் சுற்றுப் புறங்களையும்,
யாத்திராகமம் 37 : 26 (RCTA)
அதன் கொம்புகளையும் பசும் பொன்னால் செய்து,
யாத்திராகமம் 37 : 27 (RCTA)
அதைச் சுற்றிலும் பொன்னாலான திரணையை அமைத்து, திரணைக்குக் கீழுள்ள பக்கங்களிலே பீடத்தைத் தூக்கிச்செல்லப் பயன்படும் தண்டுகளை நுழைக்கும்படியான இரண்டு பொன் வளையங்களையும் அமைத்தான்.
யாத்திராகமம் 37 : 28 (RCTA)
அத்தண்டுகளையும் சேத்தீம் மரத்தாற் செய்து, அவைகளைப் பொன் தகட்டினாலே மூடினான்.
யாத்திராகமம் 37 : 29 (RCTA)
அபிசேகத் தைலத்துக்கு எண்ணெயையும், மிகப் பரிசுத்த நறுமணப்பொருள்களைக் கூட்டிப் பரிமளத்தையும் தைலக்காரர் செய்முறைப்படி செய்து அமைத்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29