யாத்திராகமம் 31 : 1 (RCTA)
மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
யாத்திராகமம் 31 : 2 (RCTA)
இதோ நாம் யூதா கோத்திரத்தில் ஊர் என்பவனுடைய புதல்வனான உறியின் மகன் பெசெலேயலைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறோம்.
யாத்திராகமம் 31 : 3 (RCTA)
அவனுக்கு ஞானமும் புத்தியும் அறிவும் உண்டாக இறை ஆவியினாலே அவனை நிரப்பி,
யாத்திராகமம் 31 : 4 (RCTA)
பொன், வெள்ளி, வெண்கலத்திலும்,
யாத்திராகமம் 31 : 5 (RCTA)
பளிங்குக் கல்லிலும், இரத்தினங்களிலும், பலவகை மரங்களிலும் செய்யக்கூடிய எல்லா வேலையையும் திட்டமிட்டுச் செய்வதற்கு வேண்டிய நுட்பத்தைத் தந்தருளினோம்.
யாத்திராகமம் 31 : 6 (RCTA)
தான் கோத்திரத்தில் உதித்த அக்கிசமேக்கின் புதல்வன் ஒலியாவை நாம் அவனுக்குத் துணையாகத் தெரிந்தெடுத்ததுமன்றி, நாம் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் செய்யும்படி திறமையுள்ளவர்களின் இதயத்திலும் ஞானத்தைத் தந்தருளினோம்.
யாத்திராகமம் 31 : 7 (RCTA)
உடன்படிக்கைக் கூடாரம், சாட்சியப் பெட்டகம், இதன்மேல் இருக்கும் இரக்கத்தின் அரியணை, இவை முதலிய ஆசாரக் கூடாரத்தின்
யாத்திராகமம் 31 : 8 (RCTA)
எல்லாத் தட்டுமுட்டுக்களும் மேசையும் அதன் பாத்திரங்களும், மிகப் பரிசுத்தக் குத்து விளக்கும், அதன் கருவிகளும்,
யாத்திராகமம் 31 : 9 (RCTA)
வாசனைப் பொருளின் பீடமும், தகனப் பலிப் பீடமும், இவைகளைச் சேர்ந்த எல்லாப் பணிமுட்டுக்களும் தொட்டியும் அதன் பாதமும்,
யாத்திராகமம் 31 : 10 (RCTA)
குருவாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் திருக் கோலமாய் அணிந்து தங்கள் குருத்துவத் தொழில் செய்வதற்கான உடைகளும், அபிசேகத் தைலம்,
யாத்திராகமம் 31 : 11 (RCTA)
பரிசுத்த இடத்திற்குரிய வாசனைத் திரவிய தூபம் ஆக நாம் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் அமைப்பார்கள் என்றருளினார்.
யாத்திராகமம் 31 : 12 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
யாத்திராகமம் 31 : 13 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் நம்முடைய ஓய்வுநாளை அனுசரிப்பதில் கருத்தாய் இருங்கள். ஏனென்றால், உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற ஆண்டவர் நாம் என்று நீங்கள் அறியும்படி அது உங்கள் தலைமுறை தோறும் நமக்கும் உங்களுக்குமுள்ள அடையாளமாம்.
யாத்திராகமம் 31 : 14 (RCTA)
நம்முடைய ஒய்வுநாளை அனுசரியுங்கள். ஏனென்றால், அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதை மீறி நடப்பவன் கொலை செய்யப்படுவான். அன்று வேலை செய்பவன் தன் இனத்தாரினின்று விலக்குண்டு போவான்.
யாத்திராகமம் 31 : 15 (RCTA)
ஆறு நாளும் வேலை செய்வீர்கள். ஏழாம் நாளோ ஆண்டவருக்குப் பரிசுத்தமான ஓய்வு நாளாகிய சாபத் நாள். அந்நாளிலே வேலை செய்யவன் எவனும் கொலை செய்யப்படுவான்.
யாத்திராகமம் 31 : 16 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை ஆசாரத்தோடு கொண்டாடக் கடவார்கள். அது என்றென்றைக்கும்,
யாத்திராகமம் 31 : 17 (RCTA)
நமக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உடன்படிக்கையும் அடையாளமுமாய் இருக்கும். ஏனென்றால், ஆண்டவர் விண்ணையும் மண்ணையும் ஆறுநாளில் படைத்து ஏழாம் நாளில் வேலையை நிறுத்தி ஓய்ந்திருந்தார் எனச்சொல்வாய் என்றார்.
யாத்திராகமம் 31 : 18 (RCTA)
இப்படி, சீனாய் மலையில் ஆண்டவர் மோயீசனோடு பேசி முடித்தபின், தெய்வக் கையால் எழுதப்பட்ட சாட்சியக் கற்பலகைகளாகிய இரண்டு பலகைகளையும் அவரிடம் கொடுத்தார்.
❮
❯