யாத்திராகமம் 27 : 1 (RCTA)
ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமான ஒரு சதுரப் பீடத்தைச் சேத்தீம் மரத்தினால் செய்வாய். அது மூன்று முழ உயரமாய் இருக்க வேண்டும்.
யாத்திராகமம் 27 : 2 (RCTA)
நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகள் பீடத்தினின்று புறப்படும். அவற்றை வெண்கலத் தகட்டால் மூடுவாய்.
யாத்திராகமம் 27 : 3 (RCTA)
பீடத்தில் உபயோகித்துக் கொள்ளும்படி (பின் வரும்) பாத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும். (அதாவது சாம்பலை எடுக்கத் தக்க சட்டிகளையும், நெருப்பைத் தூண்டும் குறடுகளையும் முள்ளுகளையும் தீச்சட்டிகளையும் தயார் செய்வாய். அவை வெண்கலத்தால் செய்யப்படும்.
யாத்திராகமம் 27 : 4 (RCTA)
வலைப் பின்னலைப் போன்ற ஒரு வெண்கலச் சல்லடை செய்து, அதன் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை அமைத்து,
யாத்திராகமம் 27 : 5 (RCTA)
அதைத் தீக் கரையின் கீழே வைப்பாய். அந்தச் சல்லடையோ பலிப் பீடத்தின் பாதி உயர மட்டும் எட்டும்.
யாத்திராகமம் 27 : 6 (RCTA)
பலிப் பீடத்திற்குச் சேத்தீம் மரத்தால் இரண்டு தண்டுகளையும் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடுவாய்.
யாத்திராகமம் 27 : 7 (RCTA)
பலிப்பீடத்தைத் தூக்குவதற்காக அந்தத் தண்டுகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள வளையங்களிலே மாட்டப்பட்டிருக்க வேண்டும்.
யாத்திராகமம் 27 : 8 (RCTA)
பலிப்பீடத்தைக் கனமானதாகச் செய்யாமல், உள்ளே கூடாய், மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதனைச் செய்யக்கடவாய்.
யாத்திராகமம் 27 : 9 (RCTA)
ஆசாரக் கூடாரத்திற்கு ஒரு பிராகாரத்தையும் அமைப்பாய். தென் திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட தொங்கு திரைகள் இருக்க வேண்டும். பிராகாரத்தின் ஒவ்வொரு பக்கமும் நூறுமுழ நீளமுள்ளதாகும்.
யாத்திராகமம் 27 : 10 (RCTA)
மேலும், வெண்கலத் தூண்கள் இருபது செய்வாய். அவைகளுக்கு இருபது வெண்கலப் பாதங்களும் இருக்கும். தூண்களின் போதிகைகளும், போதிகைகளின் பூண்களும் வெள்ளியினாலே செய்ய வேண்டும்.
யாத்திராகமம் 27 : 11 (RCTA)
இவ்வண்ணமே (பிராகாரத்தின்) வடப் பக்கத்திலும் நூறு முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும் இருபது பாதங்களும் வெண்கலத்தினாலேயும், இருபது போதிகைகளும் அவற்றிலுள்ள பூண்களும் வெள்ளியினாலேயும் செய்வாய்.
யாத்திராகமம் 27 : 12 (RCTA)
மேற்றிசையை நோக்கிய பிராகாரத்தின் பக்கத்திலோ ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகளின் அந்தரத்திலே பத்துத் தூண்களும் பத்துப் பாதங்களும் இருக்க வேண்டும்.
யாத்திராகமம் 27 : 13 (RCTA)
கீழ்த்திசையை நோக்கிய பிராகாரத்தின் அந்தரம் ஐம்பது முழ நீளமிருக்கும்.
யாத்திராகமம் 27 : 14 (RCTA)
இவைகளுக்குள் ஒரு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் அமைக்கப்படும்.
யாத்திராகமம் 27 : 15 (RCTA)
மறு பக்கத்திலே பதினைந்து முழமுள்ள தொங்கு திரையும், மூன்று தூண்களும், மூன்று பாதங்களும் இருக்கும்.
யாத்திராகமம் 27 : 16 (RCTA)
பிராகாரத்து வாயிலுக்கு இருபது முழமுள்ள தொங்கு திரை ஒன்று செய்யப்படும். அது இள நீல நிறம், கருஞ் சிவப்பு நிறம், இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம், திரித்த மெல்லிய சணல்--இவற்றாலாகிய நூல்களால் நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப் பட்டிருப்பதுமன்றி, அதற்கு நான்கு தூண்களும் நான்கு பாதங்களும் அமைக்கப்படும்.
யாத்திராகமம் 27 : 17 (RCTA)
பிராகாரத்தைச் சுற்றிலும் உள்ள தூண்களெல்லாம் வெள்ளித்தகட்டினால் மூடப்படும். ஆனால், அவற்றின் போதிகைகள் வெள்ளியும், பாதங்கள் வெண்கலமுமாய் இருக்கும்.
யாத்திராகமம் 27 : 18 (RCTA)
பிராகாரம் நீளத்திலே நூறு முழமும், அகலத்திலே ஐம்பது முழமும், உயரத்திலே ஐந்து முழமுமாய் இருப்பது மன்றி, அதன் தொங்கு திரைகள், திரித்த மெல்லிய சணல் நூலினாலே செய்யப்படும்.
யாத்திராகமம் 27 : 19 (RCTA)
ஆசாரக் கூடாரத்தின் எல்லாப் பணிவிடைகளுக்கும் சடங்குகளுக்கும் உபயோகமான எல்லாப் பணி முட்டுக்களையும், அதிலும் பிராகாரத்திலும் இருக்க வேண்டிய முளைகளையும் வெண்கலத்தால் செய்வாய்.
யாத்திராகமம் 27 : 20 (RCTA)
விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படி, உலக்கையால் இடித்துப் பிழிந்த மிகத் தூய்மையான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வருமாறு இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய்.
யாத்திராகமம் 27 : 21 (RCTA)
சாட்சியத்தின் ஆசாரக் கூடாரத்திலே சாட்சிச் சந்நிதிக்கு முன் இடப்பட்ட திரைக்கு வெளியே ஆரோனும் அவன் புதல்வர்களும் மாலைமுதல் விடியற்காலை வரை ஆண்டவர் திருமுன் அவ்விளக்கை எரிய வைக்கக்கடவார்கள். மேற்சொன்ன முறைமை இஸ்ராயேல் மக்களுக்குள்ளே தலைமுறை தலைமுறையாக நித்திய அருச்சனையாய் அனுசரிக்கப்படும்.
❮
❯