யாத்திராகமம் 25 : 1 (RCTA)
ஆண்டவர் மோயீசனை நோக்கித் திருவாக்கருளினதாவது:
யாத்திராகமம் 25 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் நமக்குப் புதுப்பலனின் காணிக்கையைக் கொடுக்கச் சொல். மன நிறைவோடு எதைக் கொண்டு வந்தாலும் அதை நமக்காக வாங்கிகொள்.
யாத்திராகமம் 25 : 3 (RCTA)
நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டியவையாவன: பொன், வெள்ளி, வெண்கலம்,
யாத்திராகமம் 25 : 4 (RCTA)
இளநீல நூல், கருஞ்சிவப்பு நூல், இருமுறை சாயம் தோய்த்த கட்டிச் சிவப்பு நூல், மெல்லிய பஞ்சு நூல்,
யாத்திராகமம் 25 : 5 (RCTA)
வெள்ளாட்டு மயிர்' சிவப்பு தோய்ந்த ஆட்டுக்கிடாய்த் தோல், ஊதாவாக்கப்பட்ட தோல்,
யாத்திராகமம் 25 : 6 (RCTA)
சேத்தீம் மரம்' விளக்குகள், அவற்றுக்கு ஊற்ற எண்ணெய், அபிசேகத்தைலத்துக்கு ஏற்ற பரிமளங்கள், தூபத்துக்கு நறுமண வாசனைப் பொருட்கள்'
யாத்திராகமம் 25 : 7 (RCTA)
எப்போத் என்னும் மேலாடையிலும் இரசியோனால் என்னும் மார்ப்பதக்கத்திலும் பதித்து வைக்கும் கோமேதகக் கற்கள், இரத்தினங்கள் ஆகியவைகளேயாம்.
யாத்திராகமம் 25 : 8 (RCTA)
அவர்கள் நடுவிலே நாம் தங்கியிருக்க நமக்கு ஓர் ஆசாரக் கூடாரத்தை அமைக்கக்கடவார்கள்.
யாத்திராகமம் 25 : 9 (RCTA)
நாம் உனக்குக் காண்பிக்கும் ஆசாரக் கூடாரத்தின் மாதிரிப்படி அதை அமைக்க வேண்டும். மேலும், நாம் உனக்குக் காட்டும் எல்லாத் தட்டுமுட்டுப் பாத்திரங்களின் மாதிரிப்படி தெய்வ ஆராதனைக்கு வேண்டி பொருட்களைத் தயார் செய்வார்களாக. அதாவது,
யாத்திராகமம் 25 : 10 (RCTA)
சேத்தீம் மரங்களால் ஒரு பெட்டகத்தைச் செய்யுங்கள். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாய் இருக்கட்டும்.
யாத்திராகமம் 25 : 11 (RCTA)
அதை உள்ளும் புறமும் பசும் பொன்னால் மூடி, அதன் மேல் சுற்றிலும் இலங்கும் தங்க முடியைப் போல் செய்து வைப்பாயாக.
யாத்திராகமம் 25 : 12 (RCTA)
நான்கு பொன் வளையங்களைச் செய்து, பெட்டகத்தின் நான்கு மூலைகளிலும் பொருத்துவாய். பக்கத்திற்கு இரண்டாக இரு பக்கங்களிலும் அவற்றை வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 13 (RCTA)
சேத்தீம் மரங்களால் தண்டுகளைச் செய்து தங்கத்தால் மூடி,
யாத்திராகமம் 25 : 14 (RCTA)
அந்தத் தண்டுகளால் பெட்டகத்தைத் தூக்கும்படி அதன் வெளியே இருக்கும் வளையங்களிலே மாட்டக்கடவாய்.
யாத்திராகமம் 25 : 15 (RCTA)
தண்டுகள் எப்போதும் வளையங்களில் இருக்க வேண்டுமே தவிர ஒருக்காலும் அவற்றினின்று கழற்றப்படக் கூடாது.
யாத்திராகமம் 25 : 16 (RCTA)
நாம் உனக்கு அறிவிக்கப் போகிற சாட்சிச் சட்டத்தைப் பெட்டகத்திலே வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 17 (RCTA)
பசும் பொன்னால் இரக்கத்தின் அரியணையையும் செய்வாய். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமுமாய் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 25 : 18 (RCTA)
பொன் தகட்டால் இரண்டு கேருபிம் செய்து மூலத்தானத்தின் இரு புறமும் வைக்கக்கடவாய்.
யாத்திராகமம் 25 : 19 (RCTA)
பக்கத்திற்கு ஒன்றாக அவற்றை இருபக்கமும் வைக்கக்கடவாய்.
யாத்திராகமம் 25 : 20 (RCTA)
அந்தக் கேருபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையையும் கடவுள் பேசும் மூலத்தானத்தையும் மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர் முகமுள்ளவைகளுமாய் இருப்பனவாக.
யாத்திராகமம் 25 : 21 (RCTA)
நாம் உனக்கு அளிக்கவிருக்கிற சாட்சிச் சட்டத்தை அதிலே வைப்பாய். அங்கிருந்தே நாம் கட்டளையிடுவோம்.
யாத்திராகமம் 25 : 22 (RCTA)
இரக்கத்தின் அரியணை மீதும் சாட்சியப் பெட்டகத்தின் மேல் நிற்கிற இரு கேருபிம் நடுவிலும் (இருந்து) நாம் இஸ்ராயேல் மக்களுக்கான நம் கட்டளைகளையெல்லாம் உன்னிடம் சொல்வோம்.
யாத்திராகமம் 25 : 23 (RCTA)
மேலும், சேத்தீம் மரத்தினாலே ஒரு மேசையையும் செய்வாய். அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்க வேண்டும்.
யாத்திராகமம் 25 : 24 (RCTA)
அதைப் பசும்பொன்னால் மூடி, அதைச் சுற்றிலும் பொன்னால் திரணை அமைத்து,
யாத்திராகமம் 25 : 25 (RCTA)
அதற்கு நான்கு விரற்கிடையான ஒரு சட்டத்தை வெட்டுவேலையாகச் செய்து, அதற்குமேல் பொன்னால் மற்றொரு திரணையையும் அமைப்பாய்.
யாத்திராகமம் 25 : 26 (RCTA)
நான்கு பொன் வளையங்களையும் செய்து, அம்மேசையின் நான்கு மூலைகளிலே ஒரு காலுக்கு ஒன்றாக அவற்றைப் பொருத்துவாய்.
யாத்திராகமம் 25 : 27 (RCTA)
மேசையைத் தூக்கும்படியாக மேற்சொன்ன சட்டத்துக்குக் கீழே அந்தப் பொன்வளையங்கள் தண்டுகளுக்கு நுழைவிடங்களாய் இருக்கும்.
யாத்திராகமம் 25 : 28 (RCTA)
மேசையைத் தூக்குவதற்குரிய அந்தத் தண்டுகளையும் சேத்தீம் மரங்களால் செய்து பொன்னால் மூடுவாய்.
யாத்திராகமம் 25 : 29 (RCTA)
பானப்பலிக்குத் தேவையான தட்டுக்களையும் குப்பிக் கரகங்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் பத்தரை மாற்றுப் பசும் பொன்னால் செய்யக்கடவாய்.
யாத்திராகமம் 25 : 30 (RCTA)
எப்பொழுதும் காணிக்கை அப்பங்களை நமது முன்னிலையில் (அம்) மேசையின் மீது வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 31 (RCTA)
மேலும், பசும்பொன் தகட்டினால் ஒரு குத்து விளக்கையும் செய்வாய். அதனின்று, கிளம்பும் தண்டும் கிளைகளும் மொக்குகளும் குமிழ்களும் லீலி மலர்களும் அப்படியே அடிப்பு வேலையாகச் செய்யப்படும்.
யாத்திராகமம் 25 : 32 (RCTA)
பக்கத்திற்கு மூன்றாக ஆறு கிளைகள் (அதன்) பக்கங்களினின்று கிளம்பும்.
யாத்திராகமம் 25 : 33 (RCTA)
ஒரு கிளையிலே வாதுமைக் கொட்டை போன்ற மூன்று மொக்குகளும் ஒரு குமிழும் ஒரு லீலி மலரும் இருக்கும். மற்ற கிளைகளிலும் அவ்விதமே இருக்க வேண்டும். விளக்குத் தண்டிலிருந்து கிளம்பும் ஆறு கிளைகளும் ஒரே மாதிரியாகச் செய்யப்படும்.
யாத்திராகமம் 25 : 34 (RCTA)
குத்துவிளக்கிலோ வாதுமைக் கொட்டை போன்ற நான்கு மொக்குகளும், இவை ஒவ்வொன்றிலும் ஒரு குமிழும் லீலி மலரும் இருக்கும்.
யாத்திராகமம் 25 : 35 (RCTA)
இரண்டு கிளைகளின் கீழே ஒவ்வொன்றிலும் மும்மூன்று குமிழ்களாக ஆறு குமிழ்களும் ஒரே தண்டிலிருந்து கிளம்பும்.
யாத்திராகமம் 25 : 36 (RCTA)
ஆகையால், குமிழ்களும் கிளைகளும் பத்தரை மாற்றுத் தங்கத் தகட்டினாலே செய்யப்பட்டுக் குத்துவிளக்கினினறு வெளியே வரும்.
யாத்திராகமம் 25 : 37 (RCTA)
ஏழு அகல்களையும் செய்து, எதிரெதிராய் எரியும்படி குத்து விளக்கின் மேல் வைப்பாய்.
யாத்திராகமம் 25 : 38 (RCTA)
மேலும், கத்திரிகளும், திரிச் சாம்பலை வைக்கத்தக்க கலசங்களும், மிகப் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
யாத்திராகமம் 25 : 39 (RCTA)
அதையும் அதற்குரிய பணிமுட்டுக்கள் யாவையும் ஒரு தாலந்துப் பசும் பொன்னால் செய்யப்பட வேண்டும்.
யாத்திராகமம் 25 : 40 (RCTA)
மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரிப்படியே (இவையெல்லாம்) செய்யக் கவனமாயிருப்பாயாக.
❮
❯