யாத்திராகமம் 22 : 1 (RCTA)
மாட்டையோ ஆட்டையோ திருடிக்கொன்றுவிட்டவன் அல்லது விற்றுவிட்டவன் அந்த ஒரு மாட்டுக்கு ஐந்து மாடுகளையும் ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
யாத்திராகமம் 22 : 2 (RCTA)
திருடன் ஒரு வீட்டினுள் புகுமாறு கன்னமிடும் போதோ சுரங்கம் வெட்டும்போதோ கண்டுபிடிக்கப்பட்டு அடிபட்டு இறந்தால், அவன் இரத்தப்பழி அடித்தவனைச் சாராது.
யாத்திராகமம் 22 : 3 (RCTA)
சூரியன் உதித்தபின் அதைச் செய்திருந்தாலோ, அது கொலை பாதகமாகையினாலே, அவன் கொலை செய்யப்படுவான். திருட்டுக்கு ஈடு செய்யத் திருடன் கையில் ஒன்றுமில்லையாயின், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
யாத்திராகமம் 22 : 4 (RCTA)
அவன் திருடின மாடோ ஆடோ கழுதையோ உயிரோடு அவனிடம் அகப்பட்டதாயின், அவன் இருமடங்கு கொடுத்து ஈடு செய்யவேண்டும்.
யாத்திராகமம் 22 : 5 (RCTA)
அயலான் வயலையோ திராட்சைத் தோட்டத்தையோ அழித்து, அவற்றிலே தன் மிருகங்களை மேய விடுபவன் இழப்பிற்கு ஈடாகத் தன் சொந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் சிறந்ததைக் கொடுக்கக்கடவான்.
யாத்திராகமம் 22 : 6 (RCTA)
நெருப்பு எழும்பி முட்களின் மேல் விழுந்து, அதிலிருந்து தானியப் போரிலேயாவது விளைந்த பயிரிலேயாவது பற்றி எரித்து விடின், நெருப்பைக் கொளுத்தினவன் அழிவிற்கு ஈடு செய்யக்கடவான்.
யாத்திராகமம் 22 : 7 (RCTA)
ஒருவன் தன் நண்பனிடம் பணத்தையோ உடைமையையோ அடகு வைத்திருக்கும் போது, அது அவன் வீட்டிலிருந்து திருட்டு போனால், திருடன் அகப்பட்டால் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவான்.
யாத்திராகமம் 22 : 8 (RCTA)
திருடன் அகப்படாவிட்டால், வீட்டுத் தலைவன் நீதிபதியிடம் போய், தன் அயலானுடைய பொருளைத் தான் அபகரிக்கவில்லையென்று ஆணையிட்டுச் சொல்லக்கடவான்.
யாத்திராகமம் 22 : 9 (RCTA)
திருடுபோன மாடு, கழுதை, ஆடு, ஆடை முதலியவற்றின் நட்டத்தைப் பொறுத்தமட்டில் இருவர் நீதிபதிகளிடம் வருவார்கள். நீதிபதிகள் திருடனைக் குற்றவாளியென்று தீர்ப்புச் சொன்னால், அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாய் ஈடு கொடுக்கக்கடவான்.
யாத்திராகமம் 22 : 10 (RCTA)
ஒருவன் தன் கழுதை, ஆடு, மாடு, முதலிய மிருகங்களைப் பிறன் பொறுப்பில் ஒப்புவித்து விட்டிருக்கும் போது, அது இறந்தாலும், மெலிந்து போனாலும், பகைவரால் பறிபட்டுப் போனாலும், சாட்சிகள் ஒருவனும் இல்லாது போனால்,
யாத்திராகமம் 22 : 11 (RCTA)
சபையின் முன்பாக (பிரதிவாதி) தான் அயலானுடைய பொருளைக் கையாலே தொடவில்லையென்று ஆணையிட்டுச் சொல்வான். உரிமையாளன் அதை ஏற்கவேண்டும். மற்றவனோ ஒன்றும் அளிக்க வேண்டுவதில்லை.
யாத்திராகமம் 22 : 12 (RCTA)
அது திருடுபோயிற்றென்றால், அவன் அதன் உரிமையாளனுக்கு ஈடு செய்யக்கடவான்.
யாத்திராகமம் 22 : 13 (RCTA)
அது காட்டுவிலங்கால் உண்ணப்பட்டிருந்தால், அவன் எஞ்சியதைத் தலைவனுக்கு ஒப்புவித்துவிடின், அதற்காக ஈடு செய்ய வேண்டியதில்லை.
யாத்திராகமம் 22 : 14 (RCTA)
அப்படிப்பட்ட வகைகளில் எதையேனும் ஒருவன் இரவலாக வாங்கியிருப்பின், அது தலைவனுக்குத் தெரியாமல் இறந்தாவது அழிந்தாவது போயிருப்பின், அவன் அதற்கு ஈடு செய்யவேண்டும்.
யாத்திராகமம் 22 : 15 (RCTA)
ஆனால், உரிமையாளன் முன்னிலையில் அவன் பணம் கொடுத்து வாடகைக்கு அதை வாங்கினானாயின், அதற்கு ஈடு செய்ய வேண்டுவதில்லை.
யாத்திராகமம் 22 : 16 (RCTA)
மண ஒப்பந்தமாக ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கற்பழித்து அவளோடு படுத்தால், அவன் அவளுக்காகப் பரிசம் போட்டு அவளை மணந்து கொள்ளக்கடவான்.
யாத்திராகமம் 22 : 17 (RCTA)
கன்னியின் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க இசையாவிடின், கன்னிகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி கொடுக்கவேண்டும்.
யாத்திராகமம் 22 : 18 (RCTA)
சூனியக்காரரை உயிர்வாழ விடாதே.
யாத்திராகமம் 22 : 19 (RCTA)
விலங்கோடு புணருகிறவன் கண்டிப்பாய்க் கொல்லப்பட்டுச் சாகவேண்டும்.
யாத்திராகமம் 22 : 20 (RCTA)
ஆண்டவர் ஒருவருக்கேயன்றி வேறு தேவர்களுக்கு வழிபாடு செய்கிறவன் கொல்லப்படுவான்.
யாத்திராகமம் 22 : 21 (RCTA)
அந்நியனைத் துன்புறுத்தவும் வதைக்கவும் வேண்டாம். நீங்களும் எகிப்து நாட்டிலே அந்நியராய் இருந்தீர்களல்லவா?
யாத்திராகமம் 22 : 22 (RCTA)
விதவைப் பெண்ணுக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் அநீதி செய்யலாகாது.
யாத்திராகமம் 22 : 23 (RCTA)
அவர்களுக்கு அநீதி செய்தீர்களாயின், அவர்கள் நம்மை நோக்கிக் கூப்பிட, நாம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு,
யாத்திராகமம் 22 : 24 (RCTA)
கோபம் மூண்டவராய் வாளினால் உங்களைக் கொல்வோமாதலால், உங்கள் பெண்களும் விதவை ஆவார்கள்; உங்கள் பிள்ளைகளும் திக்கற்ற பிள்ளைகளாய்த் திரிவார்கள்.
யாத்திராகமம் 22 : 25 (RCTA)
உன்னோடு குடியிருக்கிற நம் மக்களில் ஏழையான ஒருவனுக்கு நீ கடனாகப் பணம் கொடுத்திருப்பாயாகில், அவனை நெருக்கடி செய்யவும் மிதமிஞ்சின வட்டி வாங்கவும் வேண்டாம்.
யாத்திராகமம் 22 : 26 (RCTA)
உன் அயலானுடைய ஆடையை ஈடாக வாங்கியிருப்பாயாகில், சூரியன் மறையுமுன் அதை அவனுக்குத் திரும்பக் கொடுப்பாயாக.
யாத்திராகமம் 22 : 27 (RCTA)
ஏனென்றால், அவன் தன் உடலை மூடி உடுத்துவதற்கு அது ஒன்றேயன்றி, போர்த்திப்படுத்துக் கொள்வதற்கு வேறு இல்லை. அவன் நம்மை நோக்கி முறையிடும் போது, இரக்கமுள்ளவராகிய நாம் அவனுக்குச் செவி கொடுப்போம்.
யாத்திராகமம் 22 : 28 (RCTA)
அதிகாரிகளைப் பழிக்கவும், மக்கட் தலைவர்களைப்பற்றி இழிவாகப் பேசவும் வேண்டாம்.
யாத்திராகமம் 22 : 29 (RCTA)
உன் முதற் பலனில் பத்தில் ஒரு பாகத்தைக் காணிக்கை செலுத்தத் தாமதிக்க வேண்டாம். மேலும், உன் புதல்வரில் தலைச்சன் பிள்ளையை நமக்குக் கொடுப்பாயாக.
யாத்திராகமம் 22 : 30 (RCTA)
உன் ஆடுமாடுகளிலும் அவ்வாறே செய்வாய். குட்டியை ஏழு நாள் தாயோடு இருக்கவிட்டு, எட்டாம் நாளிலே நமக்குச் செலுத்தி விடுவாயாக.
யாத்திராகமம் 22 : 31 (RCTA)
நீங்கள் நமக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட மக்களாய் இருக்கக்கடவீர்கள். கொடிய விலங்குகளால் கடியுண்ட இறைச்சியை உண்ணாமல், அதை நாய்களுக்குப் போடக்கடவீர்களாக.
❮
❯