யாத்திராகமம் 21 : 1 (RCTA)
நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டிய நீதி நெறிகளாவன: எபிரேய அடிமை ஒருவனை நீ விலைக்கு வாங்கினால்,
யாத்திராகமம் 21 : 2 (RCTA)
அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் ஊழியம் செய்து, ஏழாம் ஆண்டிலே ஒன்றும் கொடாமல் விடுதலை பெறுவான்.
யாத்திராகமம் 21 : 3 (RCTA)
அவன் வந்த ஆடையோடு செல்லக்கடவான். அவன் திருமணமானவனாய் இருந்தால் அவன் மனைவியும் அவனோடு போகக்கடவாள்.
யாத்திராகமம் 21 : 4 (RCTA)
ஆனால், அவன் தலைவன் அவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுத்து அவள் அவனுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பெற்றிருப்பாளாயின், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் தலைவனுக்கே சொந்தம்.
யாத்திராகமம் 21 : 5 (RCTA)
அடிமையானவன்: என் தலைவனுக்கும், என் மனைவிமக்களுக்கும் அன்பு செய்கிறேன்; விடுதலை பெற்றுப் போக எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால்,
யாத்திராகமம் 21 : 6 (RCTA)
அவன் தலைவன் அவனை மக்கட் தலைவர்களிடம் அழைத்துச் சென்று, அவனைக் கதவின் அருகேயாவது அல்லது கதவு நிலைகளின் அருகேயாவது இருத்தி, அவன் காதைக் கம்பியினாலே குத்துவான். அதன் பின் அவன் என்றென்றும் அவனுக்குப் பணிவிடை செய்யக் கடவான்.
யாத்திராகமம் 21 : 7 (RCTA)
ஒருவன், தன் மகளை வேலைக்காரியாக விற்றுவிட்டானாயின், வேலைக்காரர்கள் விடுதலை பெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது. அவளை வாங்கின தலைவனுக்கு அவள் பிடிக்கவில்லையென்றால் அவன் அவளைப் போக விடுவான்.
யாத்திராகமம் 21 : 8 (RCTA)
ஆனால், அவளை அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளை அந்நியர் கையில் விற்று விட அவனுக்கு அதிகாரமில்லை.
யாத்திராகமம் 21 : 9 (RCTA)
விரும்பின், தன் மகனுக்கு அவளை மண ஒப்பந்தம் செய்யலாம். அவ்வாறெனில் தன் புதல்வியரைப் போல் அவளையும் நடத்தக்கடவான்.
யாத்திராகமம் 21 : 10 (RCTA)
பிறகு அவன் அவளுக்குப் பதிலாக வேறொரு மனைவியைத் தன் மகனுக்குக் கொடுப்பானாயின், மேற்சொன்ன பெண்ணுக்கு உணவும் உடையும், வேறொரு திருமணத்திற்குச் செலவும், அவள் கன்னிமை நட்டத்துக்குப் பரிகாரப் பணமும் ஆகிய இவற்றில் குறைவு செய்யாமல் கொடுக்கக்கடவான்.
யாத்திராகமம் 21 : 11 (RCTA)
அவன் இம்மூன்றையும் அவளுக்குச் செய்யாவிடின், அவள் பணமொன்றும் கொடாமலே விடுதலையாய்ப் போவாள்.
யாத்திராகமம் 21 : 12 (RCTA)
வேண்டுமென்று ஒரு மனிதனைக் கொல்பவன் கொலை செய்யப்படக் கடவான்.
யாத்திராகமம் 21 : 13 (RCTA)
பகையோ கெட்ட எண்ணமோ இன்றித் தற்செயலாய் ஒருவனைக் கொன்றவன் நாம் பின்னர் நியமிக்கப் போகிற இடத்தில் சரணடைவான்.
யாத்திராகமம் 21 : 14 (RCTA)
ஒருவன் வேண்டுமென்று ஒளிந்திருந்து தன் பிறனைக் கொன்றிருப்பானாயின், அவனை நமது பீடத்தினின்றே அகற்றிக் கொல்லக்கடவாய்.
யாத்திராகமம் 21 : 15 (RCTA)
தன் தந்தையையோ தாயையோ அடிப்பவன் சாகவே சாவான்.
யாத்திராகமம் 21 : 16 (RCTA)
ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்றிருப்பவன், குற்றவாளியென்று தெளிவானவுடன் சாகவே சாவான்.
யாத்திராகமம் 21 : 17 (RCTA)
தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்.
யாத்திராகமம் 21 : 18 (RCTA)
இருவர் சண்டை செய்யும்போது, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலோ கையால் குத்தியதினாலே அவன் சாகாமல், படுக்கையாய்க் கிடந்து,
யாத்திராகமம் 21 : 19 (RCTA)
பிறகு எழுந்திருந்து தன் கோலை ஊன்றி வெளியே நடமாடினால், அடித்தவன் அவனுக்கு உண்டான மானக்கேட்டைப் பற்றியும் நட்டத்திற்குப் பரிகாரம் செய்தால் குற்றமில்லாதவனாய் இருப்பான்.
யாத்திராகமம் 21 : 20 (RCTA)
ஒருவன் தன் அடிமையை--ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி--தடியால் அடித்திருக்க, அவர்கள் அவன் கையாலே இறந்து போனால் அவன் தண்டனை பெறுவான்.
யாத்திராகமம் 21 : 21 (RCTA)
ஆனால், (அடியுண்டோர்) ஒருநாளேனும் இரண்டு நாளேனும் உயிரோடு இருந்தால், அவர்கள் தலைவனின் உடைமையாகையால், அவனுக்குத் தண்டனை கிடையாது.
யாத்திராகமம் 21 : 22 (RCTA)
மனிதர்சண்டையிலே ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின், அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான்.
யாத்திராகமம் 21 : 23 (RCTA)
ஆனால், அவள் இறந்திருந்தால் உயிருக்கு உயிரை ஈடுசெய்யக்கடவான்.
யாத்திராகமம் 21 : 24 (RCTA)
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
யாத்திராகமம் 21 : 25 (RCTA)
சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிவாங்க வேண்டும்.
யாத்திராகமம் 21 : 26 (RCTA)
யாரேனும் ஒருவன் தன் அடிமை ஊழியனையோ ஊழியக்காரியையோ கண்ணில் அடித்ததினாலே அவர்கள் கண் குருடரானால், பழுதுபட்ட கண்ணுக்குப் பதிலாக அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
யாத்திராகமம் 21 : 27 (RCTA)
அப்படியே அவன் தன் ஊழியனுடைய பல்லோ, ஊழியக்காரியினுடைய பல்லோ உதிர அடித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
யாத்திராகமம் 21 : 28 (RCTA)
ஒரு மாடு ஆடவனையோ பெண்ணையோ முட்டினதினால் அவர்கள் இறந்தால், அந்த மாடு கல்லால் எறியப்படவேண்டும். அதன் இறைச்சியை உண்ணலாகாது. ஆனால், மாட்டின் உரிமையாளன் குற்றவாளி ஆகமாட்டான்.
யாத்திராகமம் 21 : 29 (RCTA)
ஆயினும், தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடு என்று மக்கள் அவனுக்குத் தெரிவித்திருந்தும், அவன் அதைக் கட்டி வைக்காததினாலே அது ஓர் ஆடவனையோ பெண்ணையோ கொன்றிருந்தால், மாடும் கல்லால் எறியப்பட வேண்டும்; மாட்டின் உரிமையாளனும் கொலைசெய்யப்பட வேண்டும்.
யாத்திராகமம் 21 : 30 (RCTA)
ஆனால் அபராதம் கொடுக்கும்படி அவனுக்கு விதிக்கப்பட்டதாயின், அவன், தன் உயிரை மீட்டுக் கொள்ளும்படி, கேட்ட தண்டம் கொடுக்கக்கடவான்.
யாத்திராகமம் 21 : 31 (RCTA)
ஒருவனுடைய மகனையோ மகளையோ மாடு முட்டினால், அந்தத் தீர்ப்புப்படியே மாட்டுக்குடையவனுக்குச் செய்யப்படும்.
யாத்திராகமம் 21 : 32 (RCTA)
ஊழியனையோ ஊழியக்காரியையோ மாடு முட்டியிருந்தால், மாட்டுக்குடையவன் (அவர்களுடைய) தலைவனுக்கு முப்பது சீக்கல் வெள்ளி கொடுப்பான். மாடோவென்றால் கல்லால் எறியப்படவேண்டும்.
யாத்திராகமம் 21 : 33 (RCTA)
யாரனும் ஒருவன் ஒரு கிணறு வெட்டி, அதை மூடாமல் திறந்து போட்டிருந்ததினாலே மாடேனும் கழுதையேனும் அதில் விழுந்ததாயின்,
யாத்திராகமம் 21 : 34 (RCTA)
கிணற்றுக்குடையவன் மிருகம் செத்த நட்டத்திற்குப் பரிகாரமாக வேண்டிய பணம் கொடுக்க வேண்டும். செத்த மிருகமோ அவனுடையதாகும்.
யாத்திராகமம் 21 : 35 (RCTA)
ஒருவனுடைய மாடு மற்றொருவனுடைய மாட்டைக் காயப்படுத்தினதனாலே ஒருவேளை அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை விற்று, இருவரும் அதன் விலையைப் பங்கிட்டு, செத்த மாட்டையும் பங்கிட்டுக் கொள்ளக் கடவார்கள்.
யாத்திராகமம் 21 : 36 (RCTA)
ஆனால், அந்த மாடு முட்டுகிற மாடென்று, அம்மாட்டின் உரிமையாளன் முன்பே அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்தால், மாட்டுக்கு மாடு கொடுத்து ஈடு செய்யக்கடவான். செத்த மாடோ அவனுடையது ஆக வேண்டும்.
❮
❯