எபேசியர் 4 : 1 (RCTA)
ஆகவே, ஆண்டவருடைய கைதியாகிய நான், உங்களுக்கு அறிவுறுத்துவதாவது: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்.
எபேசியர் 4 : 2 (RCTA)
நிறைவான தாழ்ச்சியும் சாந்தமும் பொறுமையும் உள்ளவர்களாய், நடந்து, அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 4 : 3 (RCTA)
தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.
எபேசியர் 4 : 4 (RCTA)
ஒரே நம்பிக்கையில் பங்கு பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே நம்பிக்கை இருப்பதுபோல், ஒரே உடலும் ஒரே ஆவியும் உண்டு.
எபேசியர் 4 : 5 (RCTA)
அவ்வாறே ஒரே ஆண்டவர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்தானம் உண்டு.
எபேசியர் 4 : 6 (RCTA)
எல்லாருக்கும் கடவுளும் தந்தையும் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லாரிலும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
எபேசியர் 4 : 7 (RCTA)
ஆனால், கிறிஸ்து கொடுக்க விரும்பிய அளவுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டது.
எபேசியர் 4 : 8 (RCTA)
ஆகையால் தான், 'அவர் உள்ளத்திற்கு ஏறிச் சென்றபோது பகைவரைக் கைதியாக்கிக் கொண்டு சென்றார்; மனிதர்களுக்குக் கொடைகளை அருளினார்' என்று எழுதியுள்ளது.
எபேசியர் 4 : 9 (RCTA)
"ஏறிச் சென்றார்" என்பதனால் முதலில் மண்ணுலகின் கீழ்ப்பகுதிக்கு இறங்கினார் என்று விளங்குகிறதன்றோ.
எபேசியர் 4 : 10 (RCTA)
கீழே இறங்கியவர் தான் ஏழு உலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். இங்ஙனம் சென்றது, அனைத்தும் நிறைவு பெறச் செய்வதற்கே.
எபேசியர் 4 : 11 (RCTA)
பின்னர், அவர் தம் 'கொடைகளை' அருளிச் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியின் தூதர்களாகவும் ஆயர்களாகவும் போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4 : 12 (RCTA)
கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும், திருப்பணிக்குரிய வேலையை முன்னிட்டு இறைமக்களைப் பக்குவப்படுத்தவும் அக்கொடகைளை அளித்தார்.
எபேசியர் 4 : 13 (RCTA)
இவ்வாறு, இறுதியாக நாம் எல்லாரும் கடவுளின் திரு மகனைப் பற்றிய விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை எய்துவோம்; கிறிஸ்துவினுடைய முழுப் பருவத்தின் அளவை அடைந்து முதிர்ச்சிபெற்ற மனிதனாவோம்.
எபேசியர் 4 : 14 (RCTA)
ஆகவே, இனி நாம் குழந்தைகளாய் இருத்தலாகாது. மனிதருடைய சூழ்ச்சியையும், கைதேர்ந்த ஏமாற்று வித்தையையும் நம்பி, அவர்களுடைய போதனையாகிய காற்றால், அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது.
எபேசியர் 4 : 15 (RCTA)
அன்பினாலே உண்மையைப் பற்றிக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும்.
எபேசியர் 4 : 16 (RCTA)
இறுக்கிப் பிணைக்கும் தசை நார்களால் உடல் செயலால் முழுமையும் அவர் ஒன்றாய் இணைந்து, இசைவாய்ப் பொருந்தி இருக்கிறது. அதனால், ஒவ்வொரு உறுப்பும் அதனதன் அலுவலுக்கேற்பச் செயல்படுவதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பினால் கட்டடமாக எழும்புகிறது.
எபேசியர் 4 : 17 (RCTA)
எனவே ஆண்டவருக்குள் நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூறுவதாவது. புற இனத்தார் நடப்பதுபோல் இனி நீங்கள் நடக்கலாகாது. அவர்கள் மனத்தில் தோன்றும் எல்லா வீண் எண்ணங்களையும் பின்பற்றி வாழ்கின்றனர்.
எபேசியர் 4 : 18 (RCTA)
அவர்களுடைய அறிவு இருளடைந்து உள்ளம் மழுங்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அறியாமையால், கடவுள் தரும் உயிரோடு தொடர்பின்றி வாழ்கின்றனர்.
எபேசியர் 4 : 19 (RCTA)
உள்ளம் மரத்துப்போனவர்களாய், தீராத இச்சைக்கு உட்பட்டு, எல்லா வகையான அசத்த செயல்களையும் செய்ய, காமவெறிக்குத் தங்களையே கையளித்துவிட்டனர்.
எபேசியர் 4 : 20 (RCTA)
ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு கற்றறியவில்லை.
எபேசியர் 4 : 21 (RCTA)
உங்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கப்பட்டதும், போதிக்கப்பட்டதும் அவரில் அடங்கியுள்ள உண்மைக்கு ஏற்ப இருந்ததன்றோ?
எபேசியர் 4 : 22 (RCTA)
அதன்படி உங்களுடைய முந்தின நடத்தையை விட்டுவிட்டு, தீய இச்சைகளால் ஏமாந்து பாழ்பட்டுப் போகும் பழைய இயல்பைக் களைந்துவிடுங்கள்;
எபேசியர் 4 : 23 (RCTA)
உள்ளத்தின் ஆழத்தில் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்;
எபேசியர் 4 : 24 (RCTA)
உண்மையால் ஏற்படும் நீதியிலும் புனிதத்திலும் கடவுள் சாயாலாகப் படைக்கப் பட்ட புதிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 4 : 25 (RCTA)
ஆகையால், பொய்யை விலக்கி, ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள். ஏனெனில், நாம் ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.
எபேசியர் 4 : 26 (RCTA)
சினம்கொண்டாலும் பாவத்திற்காளாகாதீர்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.
எபேசியர் 4 : 27 (RCTA)
அலகைக்கு இடம் கொடாதீர்கள். திருடன் இனித் திருடாமலிருக்கட்டும்.
எபேசியர் 4 : 28 (RCTA)
மாறாக, வறியவர்களுக்கு உதவக்கூடிய முறையில், நேர்மையோடு கையால் பாடுபட்டு உழைக்கவேண்டும்.
எபேசியர் 4 : 29 (RCTA)
தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும். கேட்போருக்கு அருட் பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளையே சொல்லுங்கள்.
எபேசியர் 4 : 30 (RCTA)
கடவுளின் பரிசுத்த ஆவிக்கு வருத்தம் விளைவிக்காதீர்கள். ஏனெனில், அவர் மீட்பின் நாளை முன்னிட்டு உங்களுக்குத் தம் முத்திரையிட்டிருக்கிறார்.
எபேசியர் 4 : 31 (RCTA)
மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல், பழிச்சொல் ஆகிய அனைத்தும் உங்களை விட்டொழியட்டும். எல்லா வகையான தீய மனமும் நீங்கட்டும்.
எபேசியர் 4 : 32 (RCTA)
ஒருவருக்கொருவர் பரிவும், இரக்கமும் காட்டுங்கள், கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.
❮
❯