எபேசியர் 3 : 1 (RCTA)
இவற்றை மனத்திற்கொண்டு புற இனத்தாராகிய உங்களை முன்னிட்டு கிறிஸ்து இயேசுவின் கைதியான சின்னப்பன் யான்...
எபேசியர் 3 : 2 (RCTA)
உங்கள் நன்மைக்காகக் கடவுள் எனக்களித்த அருளைப் பற்றிய பொறுப்பைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டுத்தானிருப்பீர்கள்.
எபேசியர் 3 : 3 (RCTA)
இறைவெளிப்பாட்டின் வழியாய்த் தான் இறைவனின் மறைபொருள் எனக்கு அறிவிக்கப்பட்டது. இம் மறைபொருளைப் பற்றி உங்களுக்குச் சுருக்கமாக மேலே எழுதியுள்ளேன்.
எபேசியர் 3 : 4 (RCTA)
அதைப் படித்தீர்களாயின், நான் கிறிஸ்துவின் மறைபொருளை அறிந்து உணர்ந்திருக்கிறேன் என உங்களுக்கு தெரியவரும்.
எபேசியர் 3 : 5 (RCTA)
தேவ ஆவியின் வழியாக இறைவன் தம் பரிசத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினருக்கும் இந்த மறைபொருளை இப்பொழுது வெளியாக்கியது போல முந்தின தலைமுறைகளில் மனுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை.
எபேசியர் 3 : 6 (RCTA)
நற்செய்தியின் வழியாக கிறிஸ்து இயேசுவுக்குள் புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப் பேற்றுக்கு வாரிசுகள், ஒரே உடலின் உறுப்பினர், வாக்குறுதியில் பங்கு உடையோர் ஆயினர் என்பதே அம்மறை பொருள்.
எபேசியர் 3 : 7 (RCTA)
கடவுள் தம்முடைய வல்லமையைச் செயல்படுத்தி எனக்களித்த அவருடைய அருட்கொடைக் கேற்ப, நான் அந்த நற்செய்தியின் பணியாளன் ஆக்கப்பட்டேன்.
எபேசியர் 3 : 8 (RCTA)
கிறிஸ்துவின் அளவிட முடியாத செல்வங்களைப் பற்றிய நற்செய்தியைப் புறவினத்தாருக்கு அறிவிக்கவும்.
எபேசியர் 3 : 9 (RCTA)
மறைபொருளான திட்டம் எதுவென்று வெளிப்படுத்தவும், இறைமக்கள் அனைவரிலும் மிகச் சிறியேனாகிய எனக்கு அருள் அளிக்கப்பட்டது. பல்வகையாய்ச் செயல்படும் இறை ஞானமானது, தலைமை ஏற்போர்,
எபேசியர் 3 : 10 (RCTA)
அதிகாரம் தாங்குவோர் முதலிய விண்ணகத் தூதருக்குத் திருச்சபையின் வழியாய் இப்பொழுது அறிவிக்கப்பட வேண்டுமென்று அனைத்தும் படைத்த கடவுள் இத்திட்டத்தைத் தமக்குள் ஊழூழியாக மறைத்து வைத்திருந்தார்.
எபேசியர் 3 : 11 (RCTA)
இதுவே நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்ற இறைவன் ஊழிக்காலமாகக் கொண்டிருந்த கருத்து.
எபேசியர் 3 : 12 (RCTA)
கிறிஸ்துவின்மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நாம் நம்பிக்கையோடு இறைவனை அணுக அவருக்குள் துணிவுகொள்கிறோம்.
எபேசியர் 3 : 13 (RCTA)
ஆகையால், உங்களுக்காக நான் படும் வேதனைகளைக் கண்டு மனந்தளர்ந்து போகாதவாறு கேட்டுக்கொள்கிறேன், அவ்வேதனைகள் உங்களுக்கு மகிமையே.
எபேசியர் 3 : 14 (RCTA)
இவற்றை மனத்திற்கொண்டு விண்ணிலும்,
எபேசியர் 3 : 15 (RCTA)
மண்ணிலும் உள்ள ஒவ்வொரு குலத்தவரும் எத்தந்தையிடமிருந்து இறைவனின் பிள்ளைகள் என்ற பெயரைப் பெறுகின்றார்களோ அவர் திருமுன் நான் மண்டியிட்டு மன்றாடுவதாவது:
எபேசியர் 3 : 16 (RCTA)
தம்முடடைய மாட்சியின் வளத்திற்கேற்ப, அவருடைய ஆவியினால், உங்கள் உள் மனத்தில் நீங்கள் வலிமையும் ஆற்றலும் பெறும்படி அருள்வாராக.
எபேசியர் 3 : 17 (RCTA)
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிப்படையுமாக அமைவதாக. இவ்வாறு நீங்கள்,
எபேசியர் 3 : 18 (RCTA)
இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக் கெட்டாத இந்த அன்பை அறியும் ஆற்றல் பெறுவீர்களாக;
எபேசியர் 3 : 19 (RCTA)
கடவுளுடைய முழு நிறைவையும் அடையும் அளவுக்கு நிரப்பப்படுவீர்களாக.
எபேசியர் 3 : 20 (RCTA)
நம்மில் செயலாற்றும் வல்லமைக்கேற்றபடி நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிக மேலாகச் செய்ய வல்ல அவருக்கே,
எபேசியர் 3 : 21 (RCTA)
திருச்சபையிலும் கிறிஸ்து இயேசுவிலும், தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
❮
❯