எபேசியர் 2 : 1 (RCTA)
நீங்களோ உங்கள் குற்றங்களாலும் பாவங்களாலும் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
எபேசியர் 2 : 2 (RCTA)
ஒரு காலத்தில் வான்வெளியில் தலைவனுக்கு அடங்கி இவ்வுலகப் போக்கின் படி பாவ வழியில் நடந்தீர்கள். இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்பொழுது செயலாற்றும் அந்த ஆவிக்குப் பணிந்து இருந்தீர்கள்.
எபேசியர் 2 : 3 (RCTA)
இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இருந்தோம். தம்முடைய ஊனியல்பின் இச்சைகளின்படி வாழ்ந்து, அவ்வியல்பும் அதன் நாட்டங்களும் தூண்டியவாறு நடந்து, மற்றவர்களைப் போல நாமும் இயல்பாக இறைவனின் சினத்திற்கு ஆளாகியிருந்தோம்.
எபேசியர் 2 : 4 (RCTA)
ஆனால், கடவுள் இரக்கப் பெருக்கமுள்ளவர், அன்புமிக்கவர், நம் குற்றங்களால் நாம் இறந்தவர்களாய் இருந்தபோதிலும்,
எபேசியர் 2 : 5 (RCTA)
அவர் நம்மீது கொண்ட பேரன்பினால் கிறிஸ்துவோடு நாம் உயிர்பெறச் செய்தார்.
எபேசியர் 2 : 6 (RCTA)
நீங்கள் மீட்புப் பெற்றிருப்பது அருளாலேயே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் அவரோடு உயிர்த்தெழவும், விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.
எபேசியர் 2 : 7 (RCTA)
கிறிஸ்து இயேசுவில் இறைவன் நம்மீது காட்டிய பரிவினாலே தம் அளவற்ற அருள் வளத்தை, வரப்போகும் காலங்களில் காண்பிப்பதற்காகவே இவையெல்லாம் செய்தார்.
எபேசியர் 2 : 8 (RCTA)
அந்த அருளாலேயே விசுவாசத்தின் வழியாக மீட்பு அடைந்திருக்கிறீர்கள். இது உங்களால் ஆனதன்று; கடவுளின் நன்கொடையே.
எபேசியர் 2 : 9 (RCTA)
இது மனித செயல்களால் ஆனதன்று; எனவே, எவனும் பெருமை பாராட்டிக்கொள்ளலாகாது. ஏனென்றால் நாம் இறைவனின் கைவேலையே.
எபேசியர் 2 : 10 (RCTA)
நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் முன்னேற்பாடு செய்த நற்செயல்களில் நாம் ஈடுபடுவதற்கே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் படைக்கப்பட்டோம்.
எபேசியர் 2 : 11 (RCTA)
எனவே, உங்கள் முன்னைய நிலையை எண்ணிப் பாருங்கள்: பிறப்பால் புற இனத்தாராகத் தானே இருந்தீர்கள். கையால் செய்த விருத்தசேதனத்தை உடலில் மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் பெறாதவர்கள் என இகழ்ந்தார்கள்.
எபேசியர் 2 : 12 (RCTA)
ஒரு காலத்தில் மெசியாவின்றி, இஸ்ராயேலரின் சமுதாயத்தோடு உறவின்றி இருந்தீர்கள்; வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைகளுக்கு அந்நியராகவும் இருந்தீர்கள். நம்பிக்கையற்றவராய் கடவுள் இல்லாதவராய் இவ்வுலகில் இருந்தீர்கள்.
எபேசியர் 2 : 13 (RCTA)
ஒரு காலத்தில் தொலைவில் நின்ற நீங்கள். இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடைய இரத்தத்தினால் அருகே கொணரப்பெற்றீர்கள்.
எபேசியர் 2 : 14 (RCTA)
ஏனெனில், கிறிஸ்துவே நம் சமாதானம். அவரே யூத இனத்தையும் புறவினத்தையும் ஒன்றாய் இணைத்தார். தடைச் சுவரென நின்ற பகைமையைத் தம் ஊனுடலில் தகர்த்தெறிந்தார்;
எபேசியர் 2 : 15 (RCTA)
இவ்விரு இனத்தாரிலிருந்தும் தமக்குள் புதியதொரு மனுக்குலத்தைப் படைத்துச் சமாதானம் செய்யும்படி, பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை வெறுமையாக்கினார்;
எபேசியர் 2 : 16 (RCTA)
சிலுவையினால் பகைமையை ஒழித்து, அதன் வழியாக இவ்விருதிறத்தாரையும் ஒரே உடலில் கடவுளோடு ஒப்புரவாக்கும்படியும் இவ்வாறு செய்தார்.
எபேசியர் 2 : 17 (RCTA)
அவர் வந்து, தொலைவில் நின்ற உங்களுக்கும் அருகிலிருந்தவர்களுக்கும் சமாதான நற்செய்தியை அறிவித்தார்.
எபேசியர் 2 : 18 (RCTA)
அவர் வழியாகவே இருதிறத்தாராகிய நாம் ஒரே தேவ ஆவியில் தந்தையை அணுகும் பேறு பெற்றோம்.
எபேசியர் 2 : 19 (RCTA)
எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
எபேசியர் 2 : 20 (RCTA)
அப்போஸ்தலர், இறைவாக்கினர் இவர்களை அடிக்கல்லாகவும். கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமாயிருக்கிறீர்கள்.
எபேசியர் 2 : 21 (RCTA)
கட்டடம் முழுவதும் அவரில் இசைவாய்ப் பொருந்தி, பரிசுத்த ஆலயமாக ஆண்டவருக்குள் வளர்ச்சி, பெறுகிறது.
எபேசியர் 2 : 22 (RCTA)
நீங்களும் அவருக்குள்ளே கடவுளின் ஒரே உறைவிடமாக, தேவ ஆவிக்குள் கட்டுப்பட்டு வருகிறீர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22