பிரசங்கி 6 : 1 (RCTA)
சூரியன் முகத்தே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு. அது மனிதருக்குள் அடிக்கடி காணப்படுகிறது.
பிரசங்கி 6 : 2 (RCTA)
அதாவது: ஒரு மனிதனுக்குக் கடவுள் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் கொடுத்திருக்கிறார். அவன் ஆன்மா விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவைகளை அனுபவிக்கும் உரிமையைக் கடவுள் (அவனுக்குக்) கொடுக்கவில்லை. வேற்று மனிதனே அதை அனுபவித்து வருகிறான். இது மிகவும் வீணும் தொல்லையும் அன்றோ?
பிரசங்கி 6 : 3 (RCTA)
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்றானாம்; பல்லாண்டு வாழ்ந்து கிழவன் ஆனானாம். ஆனால், அவன் ஆன்மா அவனுக்கு உண்டான நன்மைகளைப் பயன்படுத்தியதுமில்லை; அவன் இறந்தபோது அவனுக்கு இறுதிக் கடன் செய்ய அன்னியர் முதலாய் இல்லை. அவனைக்காட்டிலும் கருச்சிதைந்த பிண்டமே பாக்கியசாலியென்று நான் ஐயமின்றிச் சொல்கிறோன்.
பிரசங்கி 6 : 4 (RCTA)
ஏனென்றால், இவன் வீணே வந்தான்; இருட்டிலே போகிறான். அவன் பெயரும் மறக்கப்படும்.
பிரசங்கி 6 : 5 (RCTA)
அவன் சூரியனையும் கண்டதில்லை; நன்மைக்கும் தீமைக்கும் வேறுபாடும் அறிந்ததில்லை.
பிரசங்கி 6 : 6 (RCTA)
அவன் இரண்டாயிரம் ஆண்டு பிழைத்திருந்தாலும், நன்மைகளை நுகராதே போனான் ஆயின், எல்லாம் ஒரே இடத்துக்கு விரைகின்றதல்லவா?
பிரசங்கி 6 : 7 (RCTA)
மனிதன் படும் தொல்லையெல்லாம் அவன் வாய்க்காகத்தானே? அதனால் அவன் ஆன்மாவுக்கு நிறைவு ஒன்றுமில்லை.
பிரசங்கி 6 : 8 (RCTA)
மூடனைக் காட்டிலும் ஞானிக்கு என்ன மேன்மை? இவ்வுலகிலுள்ள மனிதர்களிடையே செவ்வையாய் நடக்கும் ஏழைக்குப் பயன் என்ன?
பிரசங்கி 6 : 9 (RCTA)
அறியாததை நாடுவதைவிட நாடியதைக் காண்பதே நலம். ஆனால், இதுவும் வீணும் மனச் செருக்கும்தானே?
பிரசங்கி 6 : 10 (RCTA)
இனிப் பிறக்கப்போகிறவன் எவனோ அவன் தோன்றுமுன்னமே பெயரிடப்பட்டவன். அவன் மனிதன் என்பதும், தன்னைவிட வலியவரோடே நீதி நியாய காரியத்திலே அவன் விவாதம் செய்ய முடியாதென்பதும் தெரிந்திருக்கின்றன.
பிரசங்கி 6 : 11 (RCTA)
பற்பல வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. (அதுவல்லாமல்), விவாதம் செய்வதில் பயனொன்றும் இல்லை.
பிரசங்கி 6 : 12 (RCTA)
(7:1) நிழலைப்போல் கடந்து போகும் தனது வாழ்நாட்களில் தனக்கு உதவும் காரியங்களை அறியாத மனிதனுக்குத் தன்னிலும் உயர்ந்தவைகளைத் தேடத் தேவை என்ன? அவனுக்குப் பின் சூரியனுக்குக் கீழே நிகழும் காரியம் இன்னதென்று அவனுக்கு அறிவிப்பவர் யார்?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12