பிரசங்கி 10 : 1 (RCTA)
செத்த ஈக்களால் பரிமளத் தைலத்தின் நறுமணம் அழிவதுபோவவே, சிறியதும் தற்காலத்துள்ளதுமான அறிவீனத்தால் விலையுயர்ந்த ஞானமும் புகழும் (அழிக்கப்படும்).
பிரசங்கி 10 : 2 (RCTA)
ஞானியின் இதயம் அவன் வலக்கையிலும், மூடனின் இதயமோ அவன் இடக்கையிலும் இருக்கின்றனவாம்.
பிரசங்கி 10 : 3 (RCTA)
நீதியற்ற நெறியில் செல்லுகிற ஞானமற்ற மனிதன், தான் மதிகெட்டவனாய் இருக்கிறதனால், எல்லாரையும் மதியீனரென்று எண்ணுகிறானாம்.
பிரசங்கி 10 : 4 (RCTA)
அதிகாரியின் கோபம் உன்மேல் எழும்பினால் நீ அமைதியை இழந்துவிடாதே. ஏனென்றால், சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திவிடும்.
பிரசங்கி 10 : 5 (RCTA)
சூரியன் முகத்தே நான் கண்ட ஒரு தீங்கு உண்டு. அது அதிகாரியின் (பொய்யான) எண்ணத்தால் நேரிட்ட தவறு.
பிரசங்கி 10 : 6 (RCTA)
(அதாவது: ) மதியீனன் உயர்ந்த நிலையிலே வைக்கப்பட்டுதலும், செல்வனோ தாழ்ந்த நிலையில் அமர்திருத்தலுமாம்.
பிரசங்கி 10 : 7 (RCTA)
வேலைக்காரர் குதிரைமேல் ஏறிப் போகிறதையும், பிரபுக்கள் சாதாரண மனிதரைப் போல் நடந்து போகிறதையும் கண்டேன்.
பிரசங்கி 10 : 8 (RCTA)
படு குழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான். வேலியைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
பிரசங்கி 10 : 9 (RCTA)
கற்களை எடுக்கிறவன் அவற்றால் காயப்படுவான். விறகு வெட்டுகிறவன் அதனால் அடிபடுவான்.
பிரசங்கி 10 : 10 (RCTA)
இரும்புக் கருவியை முன்போல் இராமல் மழுங்கலாய்க் கிடக்கவிட்டால், பிறகு அதைக் கூராக்குவது மிகவும் கடினம். அதுபோல் வருந்தித்தான் ஞானத்தை அடையக்கூடும்.
பிரசங்கி 10 : 11 (RCTA)
மறைவாய்க் கோள் சொல்லுகிறவன் சத்தம் போடாமல் கடிக்கும் பாம்பை ஒத்தவன்.
பிரசங்கி 10 : 12 (RCTA)
ஞானியின் வாய்மொழிகள் இனிமையாய் இருக்கின்றன. மூடனுடைய உதடுகளோ அவனைத் தாழ விழத்தாட்டும்.
பிரசங்கி 10 : 13 (RCTA)
அவனுடைய வாக்குகளின் தொடக்கம் மதியீனமும், அதன் முடிவோ மிகக் கேடான பைத்தியமுமாம்.
பிரசங்கி 10 : 14 (RCTA)
மதியீனன் பேச்சை வளர்க்கிறான். மனிதன் தனக்குமுன் நடந்ததை அறியான்; தனக்குப்பின் நடக்கப் போவதையும் அறியான். அவனுக்கு அதை அறிவிப்பவன் யார்?
பிரசங்கி 10 : 15 (RCTA)
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியான். ஆதலால், அவன் தொல்லையே அவனை வாதிக்கும்.
பிரசங்கி 10 : 16 (RCTA)
அரசன் சிறு பிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலையில் உண்கிறவர்களுமாய் இருக்கப் பெற்ற நாடே உனக்குக் கேடாம்.
பிரசங்கி 10 : 17 (RCTA)
அரசன் மேன்குல மகனுமாய், பிரபுக்கள் பேருண்டியாய் இன்பத்திற்காக உண்ணாமல், வலிமை கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாய் இருக்கப்பெற்ற நாடே உனக்குப் பேறு.
பிரசங்கி 10 : 18 (RCTA)
சோம்பலினால் வீட்டு மச்சுக்கட்டைகள் விழும். கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
பிரசங்கி 10 : 19 (RCTA)
களித்திருப்பதற்கு அப்பத்தையும் மதுபானத்தையும் உபயோகித்து மனிதர் விருந்தாடுவார்கள்: பணமோ எல்லாவற்றையும் படியச் செய்யும்.
பிரசங்கி 10 : 20 (RCTA)
அரசனை உன் மனத்திலும் இகழாதே. செல்வம் படைத்தவனை உள் அந்தரங்கத்திலும் இகழாதே. ஏனென்றால், வானவெளியில் பறக்கிற பறவைகளுங்கூட உன் வார்த்தைகளைக் கொண்டுபோய், நீ சொன்னதையெல்லாம் அவர்களுக்கு அறிவிக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20