உபாகமம் 34 : 1 (RCTA)
இதன்பிறகு மோயீசன் மோவாபின் வெளிகளிலிருந்து எரிக்கோவுக்கு எதிராயுள்ள நேபோ மலையிலிருக்கும் பஸ்காக் கொடுமுடியில் ஏறினார். அப்போழுது ஆண்டவர் தான் வரையிலுமுள்ள கலாத் நாடு அனைத்தையும், நெப்தலி நாடு முழுவதையும்,
உபாகமம் 34 : 2 (RCTA)
எபிராயீம் மனாஸே என்பவர்களின் நாட்டையும், கடைக்கோடிக் கடல் வரையுள்ள யூதா நாடு அனைத்தையும்,
உபாகமம் 34 : 3 (RCTA)
தென்னாடுகளையும், சேகோர் வரையிலுள்ள பனைமர நகரமாகிய எரிக்கோவின் வெளிகளையும் காண்பித்தார்.
உபாகமம் 34 : 4 (RCTA)
பின்பு ஆண்டவர் மோயீசனை நோக்கி: உங்கள் சந்ததிக்குக் கொடுப்போம் என்று நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுச் சொல்லிய நாடு இதுவே. நீ அதைக் கண்ணாலே கண்டாய். அனால், நீ அதனுள் புகுவதில்லை என்றார்.
உபாகமம் 34 : 5 (RCTA)
ஆண்டவரின் ஊழியனாகிய மோயீசன் மோவாப் நாடான அவ்விடத்தில்தானே ஆண்டவருடைய கட்டளைப்படி இறந்ததார்.
உபாகமம் 34 : 6 (RCTA)
ஆண்டவர்தாமே அவரைப் பொகோருக்கு எதிராக மோவாபின் பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தமையால், இந்நாள் வரையிலும் ஒருவனும் அவருடைய கல்லறையை அறியான்.
உபாகமம் 34 : 7 (RCTA)
மோயீசன் இறந்தபோது அவருக்கு வயது நூற்றிருபது. ஆயினும், அவருடைய கண் மங்கினதுமில்லை; பற்கள் உதிர்ந்ததுமில்லை.
உபாகமம் 34 : 8 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் மோயீசனுக்காக முப்பது நாட்கள் மோவாப் வெளிகளில் அழுத பின்பு, மோயீசனுக்காக இழவு கொண்டாடினவர்களுடைய துக்கம் முடிவுபெற்றது.
உபாகமம் 34 : 9 (RCTA)
மோயீசன் நூனின் புதல்வனான யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்திருந்தமையால், இவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். இஸ்ராயேல் மக்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து வந்தார்கள்.
உபாகமம் 34 : 10 (RCTA)
ஆண்டவரை முகமுகமாய்க் கண்டறிந்த மோயீசனுக்கு நிகரான வேறொரு இறைவாக்கினர் இஸ்ராயேலரிடையே அவருக்குப்பின் உதித்ததேயில்லை.
உபாகமம் 34 : 11 (RCTA)
ஆண்டவர் அவர் வழியாய் எகிப்து நாட்டிலே பரவோனுக்கும் பரவோனின் ஊழியர்களுக்கும் பரவோனின் நாடு அனைத்திற்கும் விரோதமாய்ச் செய்து காண்பித்த எல்லா அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களிலிருந்தும்,
உபாகமம் 34 : 12 (RCTA)
மோயீசனே இஸ்ராயேல் சபையார் எல்லாருக்கும் முன்பாகச் செய்து வந்த வல்லமை பொருந்திய நிகழ்ச்சிகள், ஆச்சரியமான செயல்களிலிருந்தும் மோயீசன் நிகரில்லாதவர் என்பது உறுதி.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12