உபாகமம் 33 : 1 (RCTA)
கடவுளின் ஊழியனாகிய மோயீசன் இறக்குமுன் இஸ்ராயேல் மக்களுக்கு ஆசீரளித்துக் கூறிய ஆசிமொழியாவது:
உபாகமம் 33 : 2 (RCTA)
ஆண்டவர் சீனாயினின்று வந்து செயீரிலிருந்து நமக்குள்ளே எழுந்தருளினார். அவர் பாரான் மலையிலிருந்து ஆயிரமாயிரம் புனிதர்கள் சூழத் தரிசனமானார். அவருடைய வலக்கையில் நெருப்புமயமான சட்டம் இருந்தது. அவர் மக்களை நேசித்தார்.
உபாகமம் 33 : 3 (RCTA)
புனிதர்கள் யாவரும் அவருடைய கையில் இருக்கின்றனர். அவருடைய மலரடியினை அண்டி வருகிறவர்கள் அவருடைய (வார்த்தையினால்) போதனை பெறுவார்கள்.
உபாகமம் 33 : 4 (RCTA)
மோயீசன் நமக்கு ஒரு நீதிச் சட்டத்தைக் கொடுத்தார். அது யாக்கோப் சந்ததியாரின் மரபுரிமையாகும்.
உபாகமம் 33 : 5 (RCTA)
இஸ்ராயேலின் தலைவர்களும் கோத்திரங்களும் கூட்டமாய்க் கூடிய மிகவும் புனித இனத்துக்கு அவர் அரசர். ரூபன் சாகாமல் வாழ்வான்.
உபாகமம் 33 : 6 (RCTA)
ஆனால், அவன் மக்கள் கொஞ்சமாய் இருப்பார்கள்.
உபாகமம் 33 : 7 (RCTA)
யூதாவைக் குறித்த ஆசீராவது: யூதாவின் குரலொலியைக் கேளும், ஆண்டவரே. அவனைத் தன் மக்களோடு சேர்ந்திருக்கச் செய்யும். அவன் புயம் இஸ்ராயேலுக்கு உதவியாகப் போராடும்; பகைவருடைய கையினின்று அவனை விடுதலையாகக் உதவியாய் இருக்கும் என்றார்.
உபாகமம் 33 : 8 (RCTA)
பிறகு லேவியை நோக்கி: (ஆண்டவரே, ) உம்முடைய முழு நிறைவான புண்ணிய மேன்மையும் ஞானமும் நீர் தேர்ந்துகொண்ட உமது புனித ஊழியனுக்கு உண்டு. நீர் அவனை ஒரு சோதனையில் பரிசோதித்து, வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்தில் அவன்மேல் தீர்ப்புச் சொன்னீர்.
உபாகமம் 33 : 9 (RCTA)
அவன் தன் தந்தைக்கும் தாய்க்கும்: நான் உங்களை அறியேன் என்றும், தன் சகோதரருக்கு: நீங்கள் யாரோ என்றும் சொன்னான். (லேவியர்கள்) தங்கள் பிள்ளைகளையும் பாராமல், உம் வார்த்தைகளைக் கைக்கொண்டு உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்கள்.
உபாகமம் 33 : 10 (RCTA)
அவர்கள் யாக்கோபே, உன் நீதிச்சட்டத்ததையும், இஸ்ராயேலே, உன் கட்டளைகளையும் (கைக்கொண்டு அனுசரித்தோம் என்கிறார்கள்.) ஆண்டவரே, நீர் கோபமாயிருக்கும்போது அவர்கள் உமக்குத் தூபம் காட்டி, உம்முடைய பலிபீடத்திலே முழுத்தகனப் பலியை இடுவார்கள்.
உபாகமம் 33 : 11 (RCTA)
ஆண்டவரே, (லேவியுடைய) வல்லமையை ஆசீர்வதியும்; அவன் கைச் செயல்களுடன் (இரும்). அவன் பகைவர்களின் முதுகுகளை நொறுக்கிவிடும்; அவன் எதிரிகள் எழுந்திராதபடி செய்யும் என்றார். அப்பால் பெஞ்சமினை நோக்கி:
உபாகமம் 33 : 12 (RCTA)
இவன் ஆண்டவரால் அதிகமாய் நேசிக்கப்பட்டவனாகையால், அவரோடு நம்பிக்கையாய் வாழ்வான். அவன் அவரோடு படுத்துக்கொண்டு, அவருடைய இரு கைகளின் நடுவே தூங்குவான் என்றார்.
உபாகமம் 33 : 13 (RCTA)
பிறகு சூசையை நோக்கி: இவனுடைய நிலம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படுவதாக: அது வானத்து வரங்களின் கனி மிகுதியினாலும், பனியின் பலன்களினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளின் பலன்களினாலும்,
உபாகமம் 33 : 14 (RCTA)
சூரிய சந்திரன் பக்குவப்படுத்தும் பலன்களினாலும்,
உபாகமம் 33 : 15 (RCTA)
பழமையான மலைகளில் உண்டாகும் செல்வத்தினாலும், நித்திய குன்றுகளில் அகப்படும் அரும் பழங்களினாலும்,
உபாகமம் 33 : 16 (RCTA)
நிலத்தின் பலன்களினாலும் அதன் முழு நிறைவான விளைச்சலினாலும் செல்வத்தை அடையக்கடவது. முட்செடியில் தரிசனமானவருடைய ஆசீர் சூசை தலையின்மேலும் அவன் சகேதரருள் சிறந்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வரக்கடவதாக.
உபாகமம் 33 : 17 (RCTA)
இவனழகு பசுவின் தலையீற்றுக்காளையின் அழகைப் போலாம். இவன் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகளை ஒத்தனவாம். அவைகளாலே மக்களை நாட்டின் கடைக் கோடிவரையிலும் அவன் முட்டித் துரத்துவான் என்றார். எபிராயீமின் படைகளும் மனாஸேயின் படைவீரார்களும் அவ்வாறே இருப்பார்கள் என்றார்.
உபாகமம் 33 : 18 (RCTA)
ஸபுலோனை நோக்கி: ஸபுலோவே, உன் ஏற்றுத் துறைகளிலும், இஸாக்காரே, உன் கூடாரங்களிலும் மகிழக்கடவீர்கள்.
உபாகமம் 33 : 19 (RCTA)
இவர்கள் மக்களை மலைகளிடம் அழைப்பார்கள்; அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள். கடற் செல்கங்களையும் மணலில் மறைத்து கிடக்கும் செல்வங்களையும் பாலைப்போல் உறிஞ்சுவார்கள் என்றார்.
உபாகமம் 33 : 20 (RCTA)
காத்தை நோக்கி: காத் தன் பரந்த நாட்டில் ஆசீர் பெற்றுச் சிங்கம்போல் இளைப்பாறி, ஒரு புயத்தையும் ஒரு தலையையும் பீறினான்.
உபாகமம் 33 : 21 (RCTA)
அவன் தன் உரிமையிலே சட்ட வல்லுநன் ஒருவனைக் கொண்டிருத்தலாகிய சிறந்த மகிமையைக் கண்டு மகிழ்ந்தான். அந்தச் சட்ட வல்லுநன் மக்களின் தலைவர்களுடன் இருந்து, ஆண்டவருக்கடுத்த நீதிச் சட்டங்களையும் விதித்து, இஸ்ராயேலரிடையே நீதித்தலைவனாய் இருந்தான் என்றார்.
உபாகமம் 33 : 22 (RCTA)
தானை நோக்கி: தான் என்கிறவன் சிங்கக்குட்டியாம். அவன் பாசானிலிருந்து (பாய்ந்து) தூரமாய்ப் பரவுவான் என்றார்.
உபாகமம் 33 : 23 (RCTA)
நெப்தலியை நோக்கி: நெப்தலி செல்வம் உடையவனாய் நிறைவு கொண்டிருப்பான். அவன் ஆண்டவருடைய ஆசீரால் நிறைந்திருப்பான். அவன் கடற் திசையையும் தென்திசையையும் உரிமையாக்கிக் கொள்வான் என்றார்.
உபாகமம் 33 : 24 (RCTA)
ஆஸேரை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குள் ஆஸேர் ஆசீர் பெற்றவன். அவன் தன் சகோதரருக்கு விருப்பமாய் இருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
உபாகமம் 33 : 25 (RCTA)
இரும்பும் செம்பும் அவனுக்குக் காலணியாம். நீ உன் இளமையில் இருந்ததுபோல முதுமையிலும் இருப்பாய்.
உபாகமம் 33 : 26 (RCTA)
மாபெரும் நீதிபதியான மக்களின் கடவுளுக்கு நிகரான இறைவன் ஒருவரும் இல்லை. வானத்தின்மேல் ஏறிப்போகிறவரே உனக்கு உதவியாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் மேன்மையைக் கண்டு மேகங்கள் அஞ்சிச் சிதறிப்போகும்.
உபாகமம் 33 : 27 (RCTA)
அவருடைய உறைவிடமோ உன்னதத்தில் உள்ளது. அவருடைய நித்திய கையோ கீழே வீற்றிருக்கின்றது. அவர் உன் முன்பாக நின்று உன் பகைவனைத் தள்ளிவிட்டு: நெருங்கக்கடவாய் என்பார்.
உபாகமம் 33 : 28 (RCTA)
இஸ்ராயேல் ஆபத்திற்கு அஞ்சாமல் தனித்து வாழ்ந்திருக்கும். யாக்கோபு கொடி முந்திரிப் பழச்சாற்றையும் கோதுமையையும் விளைவிக்கிற நிலத்தை நோக்குவான். பனி மிகுதியால் வானம் மங்கிப்போகும்.
உபாகமம் 33 : 29 (RCTA)
இஸ்ராயேலே, நீ பேறுபெற்றவன். ஆண்டவரால் மீட்கப்பட்ட இனமே, உனக்கு நிகர் யார் ? ஆண்டவர் உனக்குக் குதிரையும் கேடயமும் உன் மகிமையைக் காக்கும் வாளுமாய் இருக்கிறார். உன் பகைவர்கள் உன்னை நிந்திப்பார்கள். நீயோ அவர்களுடைய கழுத்தை மிதித்து முறித்து விடுவாய் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29