உபாகமம் 32 : 1 (RCTA)
நான் பேசபோகிறேன்; வானங்களே, செவி கொடுங்கள். பூவுலகே, என் வாய்மொழியை உற்றுக்கேட்பாயாக.
உபாகமம் 32 : 2 (RCTA)
(வானத்து) மழை ஏராளமாய்ப் பொழிவதுபோல் என் அறிவுரை மேன்மேலும் பொழிவதாக. பனித்துளிகள் புல்லின் மேலும், மழைத்துளிகள் சமவெளிகளின் மேலும் இறங்குவதுபோல என் வாக்கியங்கள் இறங்குவனவாக.
உபாகமம் 32 : 3 (RCTA)
நான் ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றிப் புகழ்ந்து வருவதனால் நம்முடைய கடவுளை மேன்மைப்படுத்திப் பாராட்டக்கடவீர்கள்.
உபாகமம் 32 : 4 (RCTA)
அவர் செய்யும் செயல்கள் உத்தமமானவை. அவருடைய வழிகளெல்லாம் நேர்மையானவை. கடவுள் பிரமாணிக்கமுள்ளவர். அவர்பால் யாதொரு பழுதுமில்லை. அவர் நீதி நிதானமுள்ள கடவுள்.
உபாகமம் 32 : 5 (RCTA)
அவர்களோ அவருக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள். அவர்கள் தீட்டுள்ளவர்களாயிருக்கையிலே அவருடைய பிள்ளைகளாயிராமல் கொடிய தீய மக்களாய் இருந்ததார்கள். மதிகெட்ட மூடமக்களே,
உபாகமம் 32 : 6 (RCTA)
ஆண்டவருக்கு இப்படியா நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் ? உன்னை ஆட்கொண்ட தந்தை அவர் அல்லரோ ? உன்னைப் படைத்து, உருவாக்கித் தமதாக்கினவர் அவர் அல்லரோ ?
உபாகமம் 32 : 7 (RCTA)
ஆரம்ப நாட்களை நினைத்துப்பார்; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற ஆண்டுகளைக் கவனித்துப்பார். உன் தந்தையைக் கேள்; அவன் உனக்கு அறிவிப்பான். உன் பெரியோர்களைக் கேள்; அவர்கள் உனக்கு மறுமொழி சொல்வார்கள்.
உபாகமம் 32 : 8 (RCTA)
மிகவும் உன்னதமானவர் வெவ்வேறு இனத்தவருக்கு வெவ்வேறு உரிமைகளைப் பங்கிட்டு ஆதாமின் புதல்வரை வெவ்வேறாகப் பிரித்தபொழுது, இஸ்ராயேலின் புதல்வருடைய கோத்திரத் தொகைக்குத் தக்கதாகவே எல்லா இனத்தாரின் எல்லைகளையும் திட்டம் செய்தார்.
உபாகமம் 32 : 9 (RCTA)
ஆண்டவருடைய மக்களோ அவருடைய உரிமை; யாக்கோபோ அவருடைய உடைமையின் சங்கிலியாம்.
உபாகமம் 32 : 10 (RCTA)
அவர் பாழான நாட்டிலும் பயங்கரத்துக்குரிய ஆளற்ற பரந்த இடத்திலும் அவர்களைக் கண்டுபிடித்தார். அவர் சுற்று வழியாய் அவர்களை நடத்தி, உணர்த்தி, தமது கண்மணியைப்போல் காத்தருளினார்.
உபாகமம் 32 : 11 (RCTA)
கழுகு தன் குஞ்சுகளின்மேல் பறந்து அவைகளைப் பறக்கும்படி தூண்டுவது போலவும், தன் இறக்கைகளை விரித்துக் குஞ்சுகளை அவற்றின்மேல் வைத்துச் சுமப்பது போலவும்,
உபாகமம் 32 : 12 (RCTA)
ஆண்டவர் ஒருவரே அவர்களை நடத்தினார். அந்நிய கடவுள் அவர்களோடு இருந்ததேயில்லை.
உபாகமம் 32 : 13 (RCTA)
அவர் உயர்ந்த இடத்தன்மேல் அவர்களை வைத்து, வயலில் விளையும் பலன்களை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். கல்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவர்கள் உண்ணும்படி செய்தார்.
உபாகமம் 32 : 14 (RCTA)
பசுவின் வெண்ணெயையும் ஆடுகளின் பாலையும், பாசானின் புதல்வர்களுடைய ஆட்டுக்குட்டி, ஆட்டுக்கிடாய்களுடைய கொழுப்பையும், கொழுத்த வெள்ளாடுகளையும், சிறந்த கோதுமையையும் உண்ணவும், இரத்தம் போன்ற தன்னியல்பான கொடிமுந்திரிப் பழச்சாற்றைக் குடிக்கவும் அவர்களுக்குத் தந்தருளினார்.
உபாகமம் 32 : 15 (RCTA)
அன்பு செய்யப்பட்ட ( மகன் ) கொழுத்துப் போய் உதைக்கத் தொடங்கினான். அவன் கொழுத்துப் பருத்தபோது, தன்னைக் காக்கும் கடவுளுக்கு முதுகைக் காட்டி விலகினான்.
உபாகமம் 32 : 16 (RCTA)
அந்நிய தேவர்களை வணங்கியதனாலே அவர்கள் அவருக்கு எரிச்சலை மூட்டி, அருவருப்பானவைகளால் அவரது கோபத்தைத் தூண்டி விட்டார்கள்.
உபாகமம் 32 : 17 (RCTA)
அவர்கள் கடவுளுக்குப் பலியிடுவதை விட்டு, தாங்கள் அறியாத தேவார்களாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். புதிதாய்த் தோன்றிய, தங்கள் மூதாதையர் கும்பிடாத, புதுத் தெய்வங்களுக்கே (வழிபாடு செய்தார்கள்).
உபாகமம் 32 : 18 (RCTA)
உன்னைப் பெற்ற கடவுளை விட்டு, உன்னை உருவாக்கிய ஆண்டவரை மறந்து விட்டாயே!
உபாகமம் 32 : 19 (RCTA)
ஆண்டவர் அதனைக் கண்டார். தம்முடைய புதல்வரும் புதல்வியரும் தமது கோபத்தை மூட்டியதினால் அவர் குரோதமுள்ளவராகிக் கூறினார்:
உபாகமம் 32 : 20 (RCTA)
ஆ! இவர்கள் கெட்டார்கள்; வஞ்சனையுள்ள புதல்வரானார்கள்; ஆதலால், நம் முகத்தை அவர்களுக்கு மறைத்து, அவர்களுடைய முடிவு எப்படிப்பட்டதாய் இருக்குமோவென்று பார்போம்.
உபாகமம் 32 : 21 (RCTA)
அவர்கள் தெய்வமல்லாதவைகளாலும் நமக்கு எரிச்சல் வருவித்து, தங்கள் வீணான தீச் செயல்களாலும் நமக்கு முடிவு உண்டாகச் செய்தார்களே; இதோ நம் மக்களென்று மதிக்கப்படாதவர்கள் மூலமாய் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட இனத்தவர்களாலேயே அவர்களுக்குக் கோபம் உண்டாகச் செய்வோம்.
உபாகமம் 32 : 22 (RCTA)
நம்முடைய கோபத்தின் நெருப்பு மூண்டது. அது நாகத்தின் அடிவரையிலும் எரியும். அது நிலத்தையும் அதன் விளைச்சலையும் எரித்து விடுவதுமன்றி, மலைகளின் அடித்தளங்களையும் வேகச் செய்யும்.
உபாகமம் 32 : 23 (RCTA)
நாம் பற்பல தீங்குகளை அவர்கள்மீது குவியச் செய்து, நம்முடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் எய்து தீர்போம்.
உபாகமம் 32 : 24 (RCTA)
அவர்கள் பசி மிகுதியால் வாடி மடிந்து போவார்கள். பறவைகள் தங்கள் கொடிய அலகினால் அவர்களைக் கொத்தித் தின்னும். அவர்களை வதைக்கக் கூரிய பற்களையுடைய கொடிய உயிரினங்களையும், பாம்புகளையும் அவர்கள்பால் ஏவுவோம்.
உபாகமம் 32 : 25 (RCTA)
வெளியே வாளும் உள்ளே மிக்க அச்சமும், இளைஞளையும் கன்னியையும் பாலுண்ணும் குழந்தையையும் கிழவனையும் அழிக்கும்.
உபாகமம் 32 : 26 (RCTA)
நாம்: அவர்கள் எங்கே என்றோம். மனிதருக்குள் அவர்கள் பெயர் முதலாய் மறைந்து போகும்படி செய்வோம்.
உபாகமம் 32 : 27 (RCTA)
ஆனால், அவர்களுடைய பகைவர்களின் குரோதத்தைப் பற்றி நாம் பொறுத்துக் கொண்டோம். ஒரு வேளை அவர்கள் அகங்காரம் கொண்டு: நாங்கள் இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் வலுவுள்ள சொந்தக் கையினால் செய்தோமேயன்றி ஆண்டவர் அவற்றைச் செய்தாரல்லர் என்று வீம்பு பேசக்கூடும்.
உபாகமம் 32 : 28 (RCTA)
அவர்கள் மதிகெட்ட விவேகமற்ற மக்களல்லரோ ?
உபாகமம் 32 : 29 (RCTA)
ஆ! அவர்கள் ஞானத்தை அடைவது எப்போது ? அவர்களுக்கு எப்போதுதான் அறிவு உண்டாகும் ? தங்களுக்கு என்னகதி வரப் போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிற தென்ன ?
உபாகமம் 32 : 30 (RCTA)
ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவது இயலுமோ ? இரண்டுபேர் பதினாயிரம் வீரரைத் தோற்கடிப்பது கூடுமானதோ ? தங்கள் கடவுள் அவர்களை ஒப்புக்கொடுப்பதினாலும் ஆண்டவர் அவர்களை அடைப்பதினாலும் தானே அது நிகழக்கூடும் ?
உபாகமம் 32 : 31 (RCTA)
அவர்களுடைய கடவுளைப் போலன்று நம்முடைய கடவுள், இது உண்மையென நம் பகைவர்களே சாட்சியாயிருக்கின்றனர்.
உபாகமம் 32 : 32 (RCTA)
அவர்களுடைய கொடிமுந்திரி சோதோமிலும் கொமோரா வயல்வெளிகளிலும் பயிராகிவிட்டது. அவர்களுடைய கொடிமுந்திரிப் பழம் பிஞ்சுப்பழமே; அவர்களுடைய கொடிமுந்திரிக் குலைகள் கைப்பும் கசப்பும் உள்ளவைகளே.
உபாகமம் 32 : 33 (RCTA)
அவர்களுடைய கொடிமுந்திரிப் பழச்சாறு வேதாளங்களின் பித்தமும் நச்சுப் பாம்புகளின் கொடிய நஞ்சும் போன்றது.
உபாகமம் 32 : 34 (RCTA)
இது நம்மிடத்தில் சேமிக்கப்பட்டு நம் கருவூலங்களில் வைத்து முத்திரை போடப்பட்டிருக்கிறதன்றோ ?
உபாகமம் 32 : 35 (RCTA)
பழிக்குப் பழி வாங்குவதும், ஏற்ற காலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடச் செய்து, பதிலுக்குப் பதில் அளிப்பதும் நம்முடைய தொழிலே. அவர்களுடைய அழிவு நாள் இதோ நெருங்கியிருக்கிறது, குறிக்கப்பட்ட காலங்கள் ஓடி வருகின்றன.
உபாகமம் 32 : 36 (RCTA)
ஆண்டவர் தம் மக்களை நியாயந் தீர்த்து, தமக்கு அன்பு செய்து பணி புரிவோர்மேல் மனம் இறங்குவார்; அவர்களுக்குக் கை தளர்ந்ததென்றும், அடைக்கப்பட்டவர்கள் முதலாய்ச் சோர்ந்து போனார்களென்றும், மீதியானவர்கள் சோகமுற்றுச் சிதைந்தார்களென்றும் காண்பார்.
உபாகமம் 32 : 37 (RCTA)
அப்பொழுது அவர்: அவர்கள் நம்பியிருந்த தேவர்கள் எங்கே ?
உபாகமம் 32 : 38 (RCTA)
இவர்களுக்கு தாங்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பை அவர்கள் தின்றார்களே; பானப் பலிகளின் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் குடித்தார்களே. இப்போது (அந்தத் தேவர்கள்) வந்து துன்பத்தில் அகப்பட்ட அவர்களுக்கு உதவி செய்யட்டும் (பார்ப்போம்) சிந்தித்துப் பாருங்கள். நாம் மட்டுமே இருக்கிறவர்.
உபாகமம் 32 : 39 (RCTA)
நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. நாம் மட்டுமே கொல்லுகிறோம். உயிர்ப்பிக்கிறோம். நாம் மட்டுமே காயப்படுத்தி, காயப்பட்டவனைக் குணமாக்குகிறோம். நம் கையில் அகப்பட்டோரைத் தப்புவிப்பார் இல்லை.
உபாகமம் 32 : 40 (RCTA)
நம் கையை மேலே உயர்த்தி: இதோ நாம் நித்திய காலமாய் வாழ்கிறவர் என்போம்.
உபாகமம் 32 : 41 (RCTA)
நாம் மின்னலைப்போல் நமது வாளைக் கூராக்கி நம் கையில் நியாயத்தைப் பிடித்துக்கொண்டு வருவோமாயின், நம் பகைவரிடம் பழிவாங்கி, நம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்போமன்றோ ?
உபாகமம் 32 : 42 (RCTA)
கொலையுண்டவர்களின் இரத்தத்திற்காகவும் சிறைப்பட்ட தலையில் கவசமில்லாப் பகைவரின் இரத்தத்திற்காகவும் நம் அம்புகளை இரத்தவெறி கொள்ளச் செய்து, நம் வாள் இறைச்சியை உண்ணச் செய்வோம் என்பார்.
உபாகமம் 32 : 43 (RCTA)
மக்களே, அவருடைய குடிகளைப் போற்றிப் புகழுங்கள். எனென்றால், அவர் தம் ஊழியர்களின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, அவர்களுடைய பகைவர்களுக்குப் பதிலளித்து, தம் குடிகளுடைய நாட்டின்மேல் இரக்கம் உள்ளவராவார் என்றார்.
உபாகமம் 32 : 44 (RCTA)
மோயீசனும் நூனின் புதல்வன் யோசுவாவும் வந்து, இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொல்லத்தொடங்கினார்கள்.
உபாகமம் 32 : 45 (RCTA)
பேசி முடித்த பின் மோயீசன் இஸ்ராயேல் சபையார் எல்லாரையும் நோக்கி:
உபாகமம் 32 : 46 (RCTA)
இந்தத் திருச்சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் கவனமாய்க் கற்றுக்கொள்ளக்கடவீர்கள். உங்கள் பிள்ளைகளும் அவைகளைக் கைக்கொண்டு அனுசரிக்கும்படி கவனமாயிருக்கச் சொல்லுங்கள். இந்தத் திருச்சட்டத்தின் எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளின்படியும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குக் கற்பிக்கக்கடவீர்கள். அவை உண்மையானவை என்று நானே உறுதியளிக்கிறேன்.
உபாகமம் 32 : 47 (RCTA)
அவை உங்களுக்குக் கற்பிக்கப்பட்டது வீணாய் அன்று; உங்களுக்கு அவை வாழ்வாய் இருக்கும்படியாகவும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகவிருக்கிற நாட்டில் நீடூழி வாழும்படியாகவுமே (அந்தச் சட்டத்தின் கட்டளைகள் விதிக்கப்பட்டன) என்று சொல்லிப் பேச்சை முடித்தார்.
உபாகமம் 32 : 48 (RCTA)
அந்த நாளிலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
உபாகமம் 32 : 49 (RCTA)
நீ எரிக்கோ (நகரத்திற்கு) எதிரான மோவாப் நாட்டிலுள்ள இந்த அபரிம் -- அதாவது: கடத்தல் -- என்னப்பட்ட மலைகளில் நெபோ மலையின்மேல் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்கு உடைமையாகக் கொடுக்கவிருக்கும் கானான் நாட்டைப் பார்த்துவிட்டு, அவ்விடத்தில்தானே உயிரை விடுவாய்.
உபாகமம் 32 : 50 (RCTA)
உள்ளபடி நீயும் ஆரோனும் - நீங்கள் இருவருமே -சீன்பாலைவனத்லுள்ள காதேஸில் வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்திலே நமக்கு விரோதமாய் நடந்து, இஸ்ராயேல் மக்களுக்குள்ளே நம்மைப் பரிசுத்தம் செய்யாமல் நமது கட்டளையை மீறினீர்கள்.
உபாகமம் 32 : 51 (RCTA)
எனவே, உன் சகோதரனாகிய ஆரோன் ஓர்ப் என்னும் மலையிலே இறந்து தன் முன்னோரிடம் சேர்க்கப்பட்டதுபோல, நீ ஏறப்போகிற இந்த மலையில் ஏறிப்போய் இறந்து உன் முன்னோருடன் சேர்க்கப்படுவாய்.
உபாகமம் 32 : 52 (RCTA)
நான் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற நாட்டை நீ பார்ப்பாய்; பார்த்தாலும், அதற்குள் நீ புகுவதில்லை என்று திருவுளம்பற்றினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: