உபாகமம் 26 : 1 (RCTA)
பின் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கவிருக்கும் நாட்டில் நீ போய்ச் சேர்ந்து, அதனைக் கட்டியெழுப்பி அதில் குடியிருக்கும் நாளில்,
உபாகமம் 26 : 2 (RCTA)
பயிரிடும் நிலத்தின் பற்பல விதக் கனிகளின் புதுப்பலனை எடுத்து ஒரு கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்டிருக்கும் திருவிடத்திற்கு போ.
உபாகமம் 26 : 3 (RCTA)
அங்கு இருக்கும் குருவை அணுகி: ஆண்டவர் எந்த நாட்டை எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டருளியிருந்தாரோ அதனுள் நான் புகுந்துள்ளேனென்று உம் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன் என்று சொல்வாய்.
உபாகமம் 26 : 4 (RCTA)
பின் குரு அந்தக் கூடையை உன் கையினின்று வாங்கி உன் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவான்.
உபாகமம் 26 : 5 (RCTA)
நீயோ உன் ஆண்டவருடைய முன்னிலையில் வாய்விட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: சீரிய நாட்டினன் ஒருவன் என் தந்தையைத் துன்புறுத்தியதினால் அவர் கொஞ்ச மக்களோடு எகிப்துக்குப் போய், அங்கே பெரிய பலத்த கணக்கிட முடியாத இனமானார்.
உபாகமம் 26 : 6 (RCTA)
அப்பொழுது எகிப்தியர் நம்மை ஒடுக்கித் துன்புறுத்தி, சுமக்க முடியாச் சுமைகளை நம்மேல் சுமத்தினபோது,
உபாகமம் 26 : 7 (RCTA)
நாம் நம் மூதாததையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட, அவர் நம்முடைய மன்றாட்டைக் கேட்டருளி, நமது சிறுமையையும் துன்பத்தையும் அவதியையும் பார்த்து,
உபாகமம் 26 : 8 (RCTA)
வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் மிகப் பயங்கரத்திற்குரிய அடையாள அற்புத அதிசயங்களைக் காட்டி நம்மை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
உபாகமம் 26 : 9 (RCTA)
இவ்விடத்திற்கு நம்மை அழைத்து வந்து, பாலும் தேனும் பொழியும் இந்த நாட்டை நமக்குக் கொடுத்தார்.
உபாகமம் 26 : 10 (RCTA)
அதனால் ஆண்டவர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய புதுப்பலனை நான் ஒப்புக்கொடுக்க வந்தேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவருடைய முன்னிலையில் வைத்து அவரைப் பணிந்து தொழக்கடவாய்.
உபாகமம் 26 : 11 (RCTA)
பின்னர் நீயும் லேவியனும் உன்னோடிருக்கிற அந்நியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டுக்கும் அருளிய எல்லா நன்மைகளையும் உபயோகித்து விருந்தாடுவாயாக.
உபாகமம் 26 : 12 (RCTA)
புதுப்பலனைக் கொடுத்த மூன்றாம் ஆண்டாகிய பத்திலொரு பாகம் செலுத்தவேண்டிய ஆண்டு முடிந்த பின்னர், லேவியன், அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்கள் உன் வாயில்களில் உண்டு நிறைவு கொள்ளும்படி பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கக்கடவாய்.
உபாகமம் 26 : 13 (RCTA)
அப்பொழுது, நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய முன்னிலையில் போய் அவரை நோக்கி: நீர் எனக்குக் கற்பித்தபடி நான் புனிதமானவையெல்லாம் என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும் அகதிகளுக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்தேன். உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவுமில்லை, மறந்து போகவுமில்லை.
உபாகமம் 26 : 14 (RCTA)
நான் துக்கம் கொண்டாடின போது அதை உண்ணவுமில்லை, உலகியல் காரியத்திற்கு அதில் ஒன்றையும் உபயோகிக்கவுமில்லை, அவைகளை இழவுக்காகச் செலவழித்ததுமில்லை. என் கடவுளுடைய திருவார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்து நீர் கற்பித்தபடி எல்லாவற்றையும் செய்தேன்.
உபாகமம் 26 : 15 (RCTA)
ஆண்டவரே உம்முடைய புனித இடமாகிய விண்ணகமிருந்து கண்ணோக்கிப் பார்த்து, உன் மக்களாகிய இஸ்ராயேலரும், நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் பொழிகிற நாடும், ஆசீர் பெற அருளவேண்டும் என்று மன்றாடுபாய்.
உபாகமம் 26 : 16 (RCTA)
இந்தக் கட்டளைகளையும் இந்த நீதி நியாயங்களையும் நீ கைக்கொண்டு, உன் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் அனுசரித்து நிறைவேற்ற வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
உபாகமம் 26 : 17 (RCTA)
ஆண்டவர் எனக்குக் கடவுளாக இருப்பார் என்றும்; நான் அவர் வழிகளில் நடந்து அவருடைய சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் நியாயங்களையும் கைக்கொண்டு அனுசரிப்பேன் என்றும்; அவர் கற்பித்தபடி நடப்பேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தாய்.
உபாகமம் 26 : 18 (RCTA)
ஆண்டவரும்: நீ நம்முடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு அனுசரிப்பாயாயின், நாம் முன்சொல்லியவண்ணமே உன்னைச் சொந்த மக்களாக வைத்துக் கொள்கிறோம் என்றும்;
உபாகமம் 26 : 19 (RCTA)
நாம் நம்முடைய புகழ்ச்சி கீர்த்தி மகிமைக்காகப் படைத்த எல்லா இனத்தவரைக் காட்டிலும் உன்னை உயர்ந்த இனமாய் இருக்கும்படி செய்வோம் என்றும்; நாம் சொல்லியபடியே நீ ஆண்டவருடைய புனித மக்களாய் இருப்பாய் என்றும், அவர் இன்று உனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19