உபாகமம் 23 : 1 (RCTA)
விதை அடிக்கப்பட்டவனும், கோசம் அறுக்கப்பட்டவனும், சிசினம் சேதிக்கப்பட்டவனும் ஆண்டவருடைய சபையில் புகுதலாகாது.
உபாகமம் 23 : 2 (RCTA)
மம்ஸர் என்னப்பட்ட வேசி மகனும் பத்தாம் தலைமுறை வரை அவன் சந்ததியும் ஆண்டவருடைய சபையிலே புகுதலாகாது.
உபாகமம் 23 : 3 (RCTA)
அம்மோனியனும் மோவாபியனும் பத்தாம் தலைமுறைக்குப் பிறகு முதலாய் என்றுமே ஆண்டவருடைய சபையினுள் வரக்கூடாது.
உபாகமம் 23 : 4 (RCTA)
ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் கொணர்ந்து உங்களுக்கு எதிர்கொண்டுவரவில்லை. மேலும், அவர்கள் உன்னைச் சபிக்கும்படி சீரிய மெசொப்பொத்தாமியாவின் ஊரானும் பேயோரின் புதல்வனுமான பாலாம் என்பவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அவனை வருவித்தார்கள்.
உபாகமம் 23 : 5 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவரோ பாலாமுக்குச் செவிகொடுக்க மனமின்றி உன்மேல் அன்பாய் இருந்து, அந்தச் சாபத்தை உனக்கு ஆசீராக மாற்றிவிட்டார்.
உபாகமம் 23 : 6 (RCTA)
நீ உன் வாழ்நாள் முழுவதும் என்றென்றும் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டாம்; அவர்களுடைய நன்மையைத் தேடவும் வேண்டாம்.
உபாகமம் 23 : 7 (RCTA)
உன் சகோதரனாய் இருப்பதினாலே ஏதோமியனை நீ வெறுக்கலாகாது. நீ எகிப்து நாட்டில் அகதியாய் இருந்ததை நினைத்து, எகிப்தியனை வெறுக்கவேண்டாம்.
உபாகமம் 23 : 8 (RCTA)
அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் மூன்றாந் தலைமுறையில் ஆண்டவருடைய சபைக்கு உட்படலாம்.
உபாகமம் 23 : 9 (RCTA)
நீ உன் பகைவருக்கு விரோதமாய்ப் போர் செய்யப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகி இருப்பாயாக.
உபாகமம் 23 : 10 (RCTA)
இரவில் வரும் கெட்ட கனவினாலே தீட்டுப்பட்ட ஒருவன் உங்களிடையே இருந்தால், அவன் பாளையத்துக்கு வெளியே போய்,
உபாகமம் 23 : 11 (RCTA)
மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறைந்த பின்பு மட்டுமே பாளையத்துக்குள் வரக்கடவான்.
உபாகமம் 23 : 12 (RCTA)
மலம் கழிக்கத்தக்க ஓர் இடம் பாளையத்திற்குப் புறம்பே உனக்கு இருக்கவேண்டும்.
உபாகமம் 23 : 13 (RCTA)
கச்சையில் ஒரு சிறுகோலை வைத்திருக்கக்கடவாய். அதைக் கொண்டு வட்டமாக மண்ணைத் தோண்டி மலசலங்கழித்து, பிறகு உன்னிடமிருந்து கழிந்துபோனதை அந்த மண்ணினாலே மூடிவிடக்கடவாய்.
உபாகமம் 23 : 14 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காப்பாற்றுவதற்கும், உன் பகைவர்களை உன் கைவயப்படுத்துவதற்கும் பாளையத்தினுள் உலாவுகின்றமையால், அவர் உன் பாளையத்தில் யாதொரு அசுத்தமும் காணாதபடிக்குத் தூய்மையாகவே இருக்கவேண்டும். இல்லாவிடில், அவர் உன்னை விட்டுப் போனாலும் போகலாம்.
உபாகமம் 23 : 15 (RCTA)
உன் அடைக்கலத்தைத் தேடிவந்த அடிமையை அவனுடைய தலைவன் கையில் ஒப்புவியாதே.
உபாகமம் 23 : 16 (RCTA)
அவன் உனக்குள்ள இடங்களில் தனக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்து கொண்டு, உன் நகரங்களுள் ஒன்றிலே உன்னோடு இருப்பான். நீ அவனைத் துன்புறுத்தாதே.
உபாகமம் 23 : 17 (RCTA)
இஸ்ராயேலின் புதல்வியரிலே விலைமகளேனும், புதல்வரிலே விலைமகனேனும் இருத்தலாகாது.
உபாகமம் 23 : 18 (RCTA)
வேசிகள் வாங்கின வேசிப் பணத்தையும் நாயை விற்று வாங்கின பணத்தையும், எவ்வித நேர்ச்சியினாலும் உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஆலயத்திலே நீ ஒப்புக்கொடாதே. அவை இரண்டையும் உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
உபாகமம் 23 : 19 (RCTA)
கடனாகக் கொடுத்த பணத்துக்கும் தானியத்துக்கும் வேறு எந்தப் பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்கக் கூடாது.
உபாகமம் 23 : 20 (RCTA)
அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். நீ உரிமையாக்கிக் கௌ;ளவிருக்கும் நாட்டிலே உன் கடவுளாகிய ஆண்டவர் உன் வேலையிலெல்லாம் உனக்கு ஆசீர் அளிக்கும் வண்ணம், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காமல், தேவையானவைகளை அவனுக்குக் கடனாகக் கொடுப்பாயாக.
உபாகமம் 23 : 21 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சி செய்திருப்பாயாயின், அதனைச் செலுத்தத் தாமதியாதே. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் அதை நிச்சயமாய் உன்னிடம் கேட்பார். தாமதம் செய்தால் அது உனக்குப் பாவமாகும்.
உபாகமம் 23 : 22 (RCTA)
நீ நேர்ச்சி செய்யாதிருந்தால், அப்பொழுது உன்மேல் பாவம் இல்லை.
உபாகமம் 23 : 23 (RCTA)
ஆனால், நீ வாயினால் சொன்னதை எப்படியும் நிறைவேற்ற வேண்டும். உன் கடவுளாகிய ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்தபடியே செய்யவேண்டும். ஏனேன்றால் நீ உன் விருப்பப்படியல்லவா நேர்ச்சி செய்து கொண்டாய் ?
உபாகமம் 23 : 24 (RCTA)
நீ பிறனுடைய கொடிமுந்திரித் தோட்டத்திலே புகுந்தபின்பு உன் ஆசை தீரப் பழங்களை உண்ணலாம். ஆனால், அவற்றில் ஒன்றும் எடுத்துக்கொண்டு போகலாகாது.
உபாகமம் 23 : 25 (RCTA)
உன் நண்பனுடைய விளைநிலத்தில் புகுந்தால் நீ கதிர்களைக் கொய்து கையால் கசக்கி உண்ணலாம். ஆனால், கதிர்களை அரிவாள் கொண்டு அறுக்கக்கூடாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25