உபாகமம் 22 : 1 (RCTA)
உன் சகோதரனுடைய ஆடேனும் மாடேனும் வழிதப்பி அலைவதை நீ கண்டால், அப்பால் செல்லாமல் அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
உபாகமம் 22 : 2 (RCTA)
உன் சகோதரன் உன் உறவு முறையானாய் இராமலும், அறிமுகமாய் இராமலும் இருந்தபோதிலும் நீ அவற்றை உன் வீட்டுக்குக் கொண்டுபோய், அவற்றை உன் சகோதரன் தேடி வருமட்டும் உன்னிடத்திலே வைத்திருந்து அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
உபாகமம் 22 : 3 (RCTA)
அப்படியே அவன் கழுதையைக் குறித்தும், ஆடையைக் குறித்தும், அவனிடத்திலிருந்து காணாமற்போன எந்தப் பொருளைக் குறித்தும் செய்யக் கடவாய். நீ அவைகளில் எதையேனும் கண்டுபிடிப்பாயாயின், காணாதவன் போல்: எனக்கென்ன என்று அதை விட்டுப்போகலாகாது.
உபாகமம் 22 : 4 (RCTA)
உன் சகோதரனுடைய கழுதையேனும் மாடேனும் வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டாயாயின், அதைக் காணாதவன் போல் விட்டுப்போகாமல், அவனோடு சேர்ந்து அதைத் தூக்கி எடுக்கக்கடவாய்.
உபாகமம் 22 : 5 (RCTA)
ஆடவரின் உடைகளைப் பெண்களும் பெண்களின் உடைகளை ஆடவரும் அணியலாகாது. அப்படிச் செய்கிறவர்களைக் கடவுள் வெறுக்கிறார்.
உபாகமம் 22 : 6 (RCTA)
நீ வழியில் நடந்துபோக, ஒரு மரத்திலேனும் தரையிலேனும் ஒரு குருவிக்கூடு தென்பட்டது. அப்பபொழுது குஞ்சுகளின் மேல் அல்லது முட்டைகளின் மேல் தாய் அடைகாத்துக் கொண்டு இருக்குமாயின், நீ குஞ்சுகளோடு தாயையும் பிடிக்கலாகாது.
உபாகமம் 22 : 7 (RCTA)
ஆனால், தாயைப் போகவிட்டுக் குஞ்சுகளை முட்டும் எடுத்துக்கொண்டு போகலாம். அப்படிச் செய்தால் நீ நன்றாய் இருப்பாய்; உன் வாழ்நாட்களும் நீடித்திருக்கும்.
உபாகமம் 22 : 8 (RCTA)
நீ புது வீட்டை கட்டினால், சிலவேளை ஒருவன் மேல்மாடியிலிருந்து கால் நழுவிக் கீழே விழுந்தால், இரத்தப்பழி உன் வீட்டையே சாரும். அப்படி நிகழாவண்ணம், உன்மேல் பாவம் வராதபடிக்கு வீட்டு மாடியைச் சுற்றிலும் கைபிடிச்சுவரைக் கட்டவேண்டும்.
உபாகமம் 22 : 9 (RCTA)
உன் கொடிமுந்திரித் தோட்டத்திலே வேறு விதையை விதைக்காதே. விதைத்தால், நீ விதைத்தவைகளின் பயிரும் கொடிமுந்திரித் தோட்டத்தின், பயிரும் கடவுளுக்கே நேர்ச்சி செய்ய வேண்டியதாகும்.
உபாகமம் 22 : 10 (RCTA)
மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது,
உபாகமம் 22 : 11 (RCTA)
ஆட்டுமயிரும் சணல்நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்திக் கொள்ளலாகாது.
உபாகமம் 22 : 12 (RCTA)
நீ அணிந்து கொள்கிற உன் மேற்போர்வையின் நான்கு விளிம்புகளிலும் தொங்கல்களை அமைத்துக் கொள்வாயாக.
உபாகமம் 22 : 13 (RCTA)
ஒரு பெண்ணை மணந்து கொண்ட ஒருவன் பிறகு அவளை வெறுத்து:
உபாகமம் 22 : 14 (RCTA)
நான் அந்தப் பெண்ணை மணம் புரிந்து அவளிடம் மணவுறவு கொண்டபோது அவள் கன்னியல்லள் என்று கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அவள்மீது பொல்லாத அவதூறான காரியங்களைத் தூற்றி அவளைத் தள்ளிவைக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பானாயின்,
உபாகமம் 22 : 15 (RCTA)
அவளுடைய தந்தையும் தாயும் நகரவாயிலிலுள்ள பெரியோர்களிடம் அவளைக் கூட்டிக்கொண்டுபோய், அவளுடைய கன்னிமையின் அடையாளங்களைக் காண்பிக்க ஆயத்தமாய் இருப்பார்கள்.
உபாகமம் 22 : 16 (RCTA)
என் மகளை இவனுக்கு மனைவியாகக் கொடுத்தேன். இவன் அவள்மேல் வெறுப்புக் கொண்டமையால்:
உபாகமம் 22 : 17 (RCTA)
நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் மிகக்கேடான அவதூறு சாற்றியிருக்கிறான். என் மகளுடைய கன்னிமையின் சான்று இங்கே இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லி, (அவளுடைய) ஆடையை நகரப் பெரியார்களின் முன்பாக விரித்துக் காட்டுவான்.
உபாகமம் 22 : 18 (RCTA)
அப்பொழுது அந்நகரப் பெரியார்கள் அந்த மனிதனைப் பிடித்துக் கசையால் அடிப்பார்கள்.
உபாகமம் 22 : 19 (RCTA)
அவன் இஸ்ராயேலில் ஒரு கன்னியை மிகக்கேடான அவதூறு செய்தமையால், பெரியோர்களின் தீர்ப்புப்படி அவன் பெண்ணின் தந்தைக்கு நூறு சீக்கில் வெள்ளியை அபராதம் செலுத்த வேண்டியது மன்றி, அவளைத் தன் மனைவியாகவே வைத்துக்கொண்டு, தன் உயிருள்ளளவும் அவளைத் தள்ளிவிடவும் கூடாது.
உபாகமம் 22 : 20 (RCTA)
ஆனால், அந்தப் பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்னும் காரியம் மெய்யானால்,
உபாகமம் 22 : 21 (RCTA)
(பெரியோர்கள்) அந்தப் பெண்ணைத் தன் தந்தையின் வீட்டு வாயிலினின்று துரத்திவிட, அவள் தன் தந்தையின் வீட்டிலே விபசாரம் செய்ததனால் இஸ்ராயேலில் மதிகெட்ட அக்கிரமஞ்செய்தாளென்று அந்நகர மனிதர் அவளைக் கல்லாலெறிந்து கொல்லக்கடவார்கள். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
உபாகமம் 22 : 22 (RCTA)
ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு மணஉறவு கொண்டால், விபசாரனும் விபசாரியுமாகிய அவ்விருவரும் சாவார்கள். இப்படியே தீமையை இஸ்ராயேலினின்று விலக்கக்கடவாய்.
உபாகமம் 22 : 23 (RCTA)
கன்னிப்பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு அவளோடு உறவு கொண்டால்,
உபாகமம் 22 : 24 (RCTA)
அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிட்டுக் கூப்பிடாததனாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கெடுத்ததனாலும், இருவரும் அந்த நகரத்து வாயிலுக்கு முன் கொண்டுபோகப்பட்ட பின்பு கால்லாலெறியப்பட்டுச் சாகக்கடவார்கள். இப்படியே நீ தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாய்.
உபாகமம் 22 : 25 (RCTA)
ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை மற்றொருவன் வெளியே கண்டு வலுவந்தமாய்ப் பிடித்து அவளோடு உறவு கொண்டால் இவன் மட்டும் சாகக்கடவான்.
உபாகமம் 22 : 26 (RCTA)
அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது. அவள்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை. உள்ளபடி ஒரு பாதகன் தன் சகோதரன்மேல் விழுந்து அவனுடைய உயிரை வாங்கினால் எவ்விதமோ, அவ்விதமே இந்தப் பெண்ணுக்கும் நேர்ந்தது.
உபாகமம் 22 : 27 (RCTA)
அவள் வெளியே துணையில்லாமல் இருந்தாள். அவள் கூக்குரலிட்டும், அவளை விடுவிப்பார் ஒருவருமில்லை.
உபாகமம் 22 : 28 (RCTA)
ஒருவருக்கும் நியமிக்கப்படாத கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு வலுவந்தமாய்ப் பிடித்து அவளோடு உறவுகொண்டான். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, காரியம் வழக்குக்கு வந்தால்,
உபாகமம் 22 : 29 (RCTA)
அவளோடு உறவுகொண்ட மனிதன் ஐம்பது சீக்கல் வெள்ளியைப் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கக்கடவான். அவன் அவளைக் கெடுத்தனால், அவளை மனைவியாகக் கொண்டு, உயிர் உள்ளளவும் அவளைத் தள்ளி விடலாகாது.
உபாகமம் 22 : 30 (RCTA)
ஒருவனும் தன் தந்தையின் மனைவியைச் சேரலாகாது, அவளுடைய மறைவிடத்தை வெளிப்படுத்தலும் ஆகாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30