உபாகமம் 21 : 1 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டில் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனுடைய பிணம் வெளியிலே கிடக்கக் கண்டு, கொலை செய்தவன் இன்னனென்று தெரியாத விடத்து,
உபாகமம் 21 : 2 (RCTA)
பெரியோர்களும் நீதிபதிகளும் வந்து, பிணம் கிடக்கிற இடத்துக்கும், சுற்றிலுமுள்ள அந்தந்த நகரங்களுக்கும் எவ்வளவு தூரமென்று அளப்பார்களாக.
உபாகமம் 21 : 3 (RCTA)
இப்படி அளந்து, எந்த நகரம் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மிக அண்மை என்று நிச்சயித்துக் கொண்டார்களோ அந்த நகரத்துப் பெரியோர்கள், நுகத்தடியில் இன்னும் பிணைக்கப்படாததும் கலப்பையால் நிலத்தை உழாததுமான ஒரு கிடாரியை மந்தையிலிருந்து தேர்ந்து கொண்டு,
உபாகமம் 21 : 4 (RCTA)
உழுது விதையாத கல்லும் கரடுமான ஒரு பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோய் அதன் தலையை அங்கே வெட்டக்கடவார்கள்.
உபாகமம் 21 : 5 (RCTA)
அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் தமக்குப் பணி புரியவும், தமது பெயரால் ஆசிமொழி சொல்லவும், எல்லா வழக்கையும் சுத்தம் அசுத்தம் முதலிய யாவையும் தங்கள் வாக்கினாலே தீர்ப்பிடவும் தாமே தேர்ந்துகொண்ட அந்த லேவி புதல்வராகிய குருக்கள் அவ்விடம் வருவார்கள்.
உபாகமம் 21 : 6 (RCTA)
(அவர்களோடு கூட) அந்நகரத்துப் பெரியார்களும் கொல்லப்பட்டவன் அருகில் வந்து, பள்ளத்தாக்கிலே கழுத்து அறுக்கப்பட்ட கிடாரியின் மீது தங்கள் கைளைக் கழுவி:
உபாகமம் 21 : 7 (RCTA)
எங்கள் கைகள் இவ்விரத்தத்தைச் சிந்தினதுமில்லை; எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
உபாகமம் 21 : 8 (RCTA)
ஆண்டவரே, நீர் மீட்டுக் காப்பாற்றிய இஸ்ராயேலர் ஆகிய உம் மக்கள்மீது இரக்கமாயிரும். இஸ்ராயேலர் ஆகிய உம்மக்கள் நடுவில் குற்றமில்லா இரத்தப் பழியைச் சுமத்தாதேயும் என்று வேண்டக்கடவார்கள். அப்பொழுது இரத்தப் பழி அவர்கள் மீது இராமல் நீங்கிவிடும்.
உபாகமம் 21 : 9 (RCTA)
நீயோ ஆண்டவருடைய கட்டளைப்படி செய்த பின்பு, குற்றமற்றவனுடைய இரத்தப்பழிக்கு உட்படாதவனாய் இருப்பாய்.
உபாகமம் 21 : 10 (RCTA)
நீ உன் பகைவர்களோடு போர் செய்யப் போயிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்தியதனால் அவர்களை நீ சிறைப்பிடித்து வந்து,
உபாகமம் 21 : 11 (RCTA)
சிறைப்பட்டவர்களில் வடிவழகியான ஒரு பெண்ணைக் கண்டு அவள்மீது காதல் கொண்டு அவளை மணந்துகொள்ள விரும்புவாயாயின்,
உபாகமம் 21 : 12 (RCTA)
அவளை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம். அவளோ தன் தலைமயிரைக் கத்தரித்துத் தன் நகரங்களையும் களைந்து,
உபாகமம் 21 : 13 (RCTA)
தான் பிடிபட்டபோது அணிந்திருந்த ஆடையை நீக்கி, உன் வீட்டில் உட்கார்ந்தவளாய் ஒருமாதம் வரையிலும் தன் தாய் தந்தையரை நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். பிறகு நீ அவளோடு படுத்துக்கொண்டபின் அவளை உனக்கு மனைவி ஆக்கிக் கொள்வாய்.
உபாகமம் 21 : 14 (RCTA)
அதன் பின்பு நீ அவள்மேல் வைத்திருந்த அன்பு அற்றுப்போகுமாயின், அவளைத் தன்னுரிமையோடு போகவிடு. நீ அவளைத் தாழ்வுபடுத்தினபடியால், அவளை விலைக்கு விற்கவும் வேண்டாம்; உன் அதிகாரத்தால் அவளைத் துன்புறத்துதலும் ஆகாது.
உபாகமம் 21 : 15 (RCTA)
இரண்டு மனைவிகளையுடையவன் ஒருத்தியின் மேல் விருப்பமாகவும் மற்றொருத்தியின்மேல் வெறுப்பாகவும் இருக்கிறான். இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள். வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் மூத்த மகனாய் இருப்பானாயின்,
உபாகமம் 21 : 16 (RCTA)
அவன் தனக்குண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிட வேண்டிய நாளில், வெறுக்கப்பட்டவளுடைய புதல்வனுக்கு மூத்த மகனுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்ட மனைவியின் புதல்வனுக்கு அதைக் கண்டிப்பாய்க் கொடுக்கலாகாது.
உபாகமம் 21 : 17 (RCTA)
அவன் வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த புதல்வனையே தன் மூத்த மகனாகக்கொண்டு, தன் சொத்துகளிலெல்லாம் இரட்டையான பாகம் அவனுக்குக் கொடுக்கவேண்டு. உள்ளபடி அவன் தந்தைக்கு முதற்புதல்வனாயிருக்கிறதனால் மூத்த மகனுக்குள்ள உரிமை அவனுக்கே உரியதாம்.
உபாகமம் 21 : 18 (RCTA)
தாய் தந்தையர் சொல்லைக் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும் அவர்களுக்கு அடங்காமலும் போகிற முரடனும் அகந்தையுள்ளவனுமான ஒரு பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,
உபாகமம் 21 : 19 (RCTA)
தாயும் தந்தையும் அவனைப் பிடித்து, அந்த நகரத்தின் பெரியோரிடத்தில் நீதி மன்றத்திற்குக் கூட்டிக்கொண்டு போய்:
உபாகமம் 21 : 20 (RCTA)
எங்கள் மகனாகிய இவன் குறும்பும் அகந்தையுமுள்ளவனாய் எங்கள் அறிவுரைகளைக் கேளாமல் தள்ளிக் கெட்ட நடத்தையுள்ளவனாயிருக்கிறான்; பேருண்டிக்காரனும் குடியனுமாய் இருக்கிறான் என்று சொல்வார்கள்.
உபாகமம் 21 : 21 (RCTA)
அப்பொழுது அவன் சாகும்படி அந்நகரத்தில் வாழ்வோர் எல்லாரும் அவன்மேல் கல்லெறிவார்கள். இப்படியே தீமையை உங்கள் நடுவிலே நின்று விலக்கிவிடவே, இஸ்ராயேலர் எல்லாரும் அதைக் கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
உபாகமம் 21 : 22 (RCTA)
ஒரு மனிதன் சாவுக்கு உரிய பாவத்தைக் கட்டிக் கொண்டான்: அவன் கொலை செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பு உண்டாகித் தூக்குமரத்திலே தூக்கப்பட்ட பிற்பாடு,
உபாகமம் 21 : 23 (RCTA)
இரவிலே அவன் பிணம் மரத்திலே தொங்கி நிற்கக் கூடாது. அதே நாளில் அவனை அடக்கம் செய்யவேண்டும். ஏனென்றால், மரத்திலே தொங்குகிறவன் கடவுளாலே சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கும் நாட்டைத் தீட்டுப்படுத்துதல் கண்டிப்பாய் ஆகாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23