உபாகமம் 18 : 1 (RCTA)
குருக்களுக்கும் லேவியர்களுக்கும் இவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்ராயேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லை. ஏனென்றால், ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளையும் காணிக்கைகளையுமே அவர்கள் உண்ண வேண்டும்.
உபாகமம் 18 : 2 (RCTA)
அவர்கள் தங்கள் சகோதரருடைய உரிமைகளில் வேறுயாதொன்றையும் அடையார்கள். உள்ளபடி, ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லிய வண்ணம், ஆண்டவரே அவர்களுடைய உடைமை.
உபாகமம் 18 : 3 (RCTA)
மக்களும் பலியைச் செலுத்த வருபவர்களும் குருக்களுக்குக் கொடுக்க வேண்டிய பகுதி என்னவென்றால்: அவர்கள் பலியிடும் ஆடுமாடுகளின் முன்னந் தொடையையும் இரைப்பையையும் குருவுக்குக் கொடுப்பார்கள்.
உபாகமம் 18 : 4 (RCTA)
தானியத்திலும் கொடிமுந்திரிப் பழச் சாற்றிலும் எண்ணெயிலும் முதற்பலன்களையும், கத்தரித்த ஆட்டுமயிரில் ஒரு பாகத்தையும் அவர்களுக்குச் செலுத்துவார்கள்.
உபாகமம் 18 : 5 (RCTA)
ஏனென்றால், அவனும் அவன் புதல்வர்களும் என்றும் ஆண்டவருடைய பெயராலே அவருடைய முன்னிலையில் நின்று இறைபணி செய்யும்படி, அவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவரால் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளேயும் தேர்ந்து கொள்ளப்பட்டார்கள்.
உபாகமம் 18 : 6 (RCTA)
இஸ்ராயேலின் எவ்விடத்திலுமுள்ள உங்கள் நகரங்களுள் யாதொன்றிலே குடியிருந்த ஒரு லேவியன் அவ்வூரை விட்டு, ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு இசைவோடு வருவானாயின்,
உபாகமம் 18 : 7 (RCTA)
அங்கே அக்காலம் ஆண்டவருடைய முன்னிலையில் இறைபணி செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல அவனும் கடவுளாகிய ஆண்டவருடைய பெயராலே இறைபணி செய்வான்.
உபாகமம் 18 : 8 (RCTA)
தன் ஊரிலே தந்தையின் சொத்தில் வரவேண்டியதை அவன் அனுபவிப்பதுமன்றி, மற்றவரைப்போல் உணவிற்காகத் தன் பாகத்தையும் சரியாகப் பெற்றுக் கொள்வான்.
உபாகமம் 18 : 9 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் நீ புகுந்த பின்பு, அந்த மக்களுடைய வெறுக்கத்தக்க நடத்தைகைளைப் பின்பற்றத் துணியாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
உபாகமம் 18 : 10 (RCTA)
தன் புதல்வனையேனும் புதல்வியையேனும் சுத்திகரிப்புக்கென்று தீயைக்கடக்கச் செய்பவனும், குறி சொல்லுகிறவர்களிடம் அறிவுரை கேட்பவனும், கனவுகளையும் சகுனங்களையும் நம்புகிறவனும், சூனியக்காரனும் உங்களுக்குள்ளே இருத்தலாகாது.
உபாகமம் 18 : 11 (RCTA)
மந்திரவாதியும் சன்னதக்காரனும் மாயவித்தைகாரனும், இறந்தவர்களிடம் குறி கேட்கிறவனும் (உங்களுக்குள்ளே) இருத்தலாகாது.
உபாகமம் 18 : 12 (RCTA)
ஏனென்றால் ஆண்டவர் இவற்றையெல்லாம் வெறுக்கிறார். இப்படிப்பட்ட பாதகங்களின் பொருட்டு அவர் உன் முன்னிலையில் அவர்களை அழித்தொழிப்பார்.
உபாகமம் 18 : 13 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீ குற்றமில்லாத உத்தமனாய் இருக்கக்கடவாய்.
உபாகமம் 18 : 14 (RCTA)
நீ யாருடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இருக்கிறாயோ அவர்கள் சகுனம் பார்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் நம்புகிறவர்கள். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவரால் வேறு விதமான கல்வி கற்றிருக்கிறாய்.
உபாகமம் 18 : 15 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் இனத்தினின்றும் உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப்போல் இறைவாக்கினரை உனக்காக ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவி கொடுப்பாயாக.
உபாகமம் 18 : 16 (RCTA)
ஓரேபிலே சபைக் கூட்டம் கூடிய நாளில் நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்து: நான் சாகாதபடிக்கு என் கடவுளாகிய ஆண்டவருடைய குரலொலியை இனி நான் கேளாமலும் இந்தப் பெரிய நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று வேண்டிக்கொண்டபோது,
உபாகமம் 18 : 17 (RCTA)
ஆண்டவர் என்னை நோக்கி: இவர்கள் சொன்னதெல்லாம் சரியே.
உபாகமம் 18 : 18 (RCTA)
உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரரின் நடுவிலிருந்து தோன்றச் செய்து, நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்போம். நாம் கற்பிப்பதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார்.
உபாகமம் 18 : 19 (RCTA)
நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நாம் தண்டிப்போம்.
உபாகமம் 18 : 20 (RCTA)
ஆனால், நாம் சொல்லும்படி கட்டளையிடாத வார்த்தைகளை நமது பெயராலே எந்தத் தீர்க்கதரியாவது சாதித்துச் சொல்லத்துணிவானாகில் அல்லது வேறு தேவர்களின் பெயராலே பேசுவானாகில் சாகக்கடவான் என்று திருவுளம்பற்றினார்.
உபாகமம் 18 : 21 (RCTA)
நீயோ: ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எதன் மூலம் அறிவேன் என்று உன் மனத்துள்ளே சொல்லலாம்.
உபாகமம் 18 : 22 (RCTA)
இதை அடையாளமாக வைத்துக்கொள். ஒரு தீர்க்கதரிசி ஆண்டவருடைய பெயராலே ஒரு காரியம் சொல்கிறான்; அது நிறைவேறாமல் போனால், அதை ஆண்டவர் சொல்லவில்லை; அந்தத் தீர்க்கதரிசி தன் அகந்தையினாலே அதைத் தானே உண்டாக்கிச் சொன்னான். ஆதலால், அதை நீ (கவனிக்கவும் வேண்டாம்;) அதற்கு அஞ்சவும் வேண்டாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22