உபாகமம் 16 : 1 (RCTA)
இளவேனிற் காலத்து முதல் மாதமாகிய முதற்பலன்களின் மாதத்தைக் கவனக்தோடு கொண்டாடக்கடவாய். அதில் உன் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகப் பாஸ்காவைக் கொண்டாடுவாய். ஏனென்றால் இந்த மாதத்தின் இரவு வேளையில்தான் ஆண்டவர் உன்னை எகிப்தினின்று புறப்படச் செய்தார்.
உபாகமம் 16 : 2 (RCTA)
அப்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் தம்முடைய பெயர் விளங்கும்படி தாம் தேர்ந்துகொண்ட இடத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்காவுக்கடுத்த பலிகளாகிய ஆடுமாடுகளைச் செலுத்துவாயாக.
உபாகமம் 16 : 3 (RCTA)
நீ எகிப்து நாட்டிலிருந்து பயங்கரத்துடன் புறப்பட்டபடியால் நீ எகிப்தை விட்ட நாளை உன் வாழ்நாளெல்லாம் மறவாமல் நினைக்கும்படி, அந்தத் திருவிழாவில் புளித்த அப்பத்தை உண்ணாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரையிலும் உண்ணக்கடவாய்.
உபாகமம் 16 : 4 (RCTA)
ஏழுநாள் வரையிலும் உன் எல்லா எல்லைகளுக்குள்ளேயும் புளிப்பு காணப்படலாகாது. நீ முதல்நாள் மாலையில் ஒப்புக்கொடுத்த பலியின் இறைச்சியில் ஏதேனும் காலைவரையில் வைக்கவும் வேண்டாம்.
உபாகமம் 16 : 5 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்களிலெல்லாம் நீ பாஸ்காவை அடிக்காமல்,
உபாகமம் 16 : 6 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய மாலை நேரத்தில்மட்டும் அதை அடிக்கக் கடவாய்.
உபாகமம் 16 : 7 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திலே அதைச் சமைத்து உண்டு, விடியற்காலத்தில் எழுந்து உன் கூடாரங்களுக்குத் திரும்பிப் போவாய்.
உபாகமம் 16 : 8 (RCTA)
ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பங்களை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகச் சபை கூடும் திருநாளாகையால், அன்று (விலக்கபட்ட) வேலை செய்யலாகாது.
உபாகமம் 16 : 9 (RCTA)
விளைச்சலில் அரிவாளை வைத்த நாள் முதற்கொண்டு நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொண்டு,
உபாகமம் 16 : 10 (RCTA)
அவை முடிந்த பின்பு உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாகக் கிழமைகள் என்னும் திருவழாவைக் கொண்டாடி, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் அளிக்கும்வண்ணம் உன் கைக்கு நேர்ந்த பொருளை அவருக்கு மனமொத்த காணிக்கையாகப் படைக்கக்டவாய்.
உபாகமம் 16 : 11 (RCTA)
உன் கடுவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்டிருக்கும் இடத்திலே நீயும், உன் புதல்வன் புதல்வியும், உன் வேலைக்காரன் வேலைக்காரியும், உன் ஊரினுள் இருக்கிற லேவியரும், உன்னுடன் வாழ்ந்துவரும் அகதியும் திக்கற்றவனும், விதவைகளும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னியில் விருந்துண்டு,
உபாகமம் 16 : 12 (RCTA)
நீ எகிப்திலே அடிமையாய் இருந்ததை நினைவுகூர்ந்து, கற்பிக்கபட்ட கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவாய்.
உபாகமம் 16 : 13 (RCTA)
நீ உன் களத்தின் பலன்களையும் ஆலையின் பலன்களையும் ஆலையின் பலன்கைளையும் சேகரித்தபின் கூடாரத் திருவிழாவை ஏழுநாள் வரையிலும் கொண்டாடி,
உபாகமம் 16 : 14 (RCTA)
திருவிழாவில் நீயும், உன் புதல்வன் புதல்வியும், உன் வேலைக்காரன் வேலைக்காரியும், உன் வாயில்களில் இருக்கிற லேவியனும் அகதியும், தாயில்லாப் பிள்ளையும், விதவைகளும் அகமகிழ்ந்து விருந்தாடுவீர்கள்.
உபாகமம் 16 : 15 (RCTA)
ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக ஏழுநாள் திருவிழாவைக் கொண்டாடுவாய். அப்படிச் செய்வாயாயின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலங்களிலும் உன் கைவேலைகள் அனைத்திலும் உனக்கு ஆசீர் அளிப்பார். ஆதலால் நீ வளமாய் வாழ்வாய்.
உபாகமம் 16 : 16 (RCTA)
ஆண்டில் மூன்று முறை, அதாவது: புளிப்பில்லா அப்பத் திருவிழாவிலும், கிழமைகளின் திருவிழாவிலும், கூடாரத் திருவிழாவிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கெண்டிருக்கும் இடத்திலே அவருடைய முன்னிலையில் வந்து நிற்கக்கடவார்கள். அவர்கள் வெறுங்கையோடு அவருடைய முன்னிலையில் வராமல்,
உபாகமம் 16 : 17 (RCTA)
கடவுளாகிய ஆண்டவர் அருளிய ஆசீருக்கு ஏற்ப, அவனவன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கை கொண்டுவரக்கடவான்.
உபாகமம் 16 : 18 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கோத்திரந்தோறும் உனக்குக் கொடுக்கவிருக்கும் எல்லா நகரவாயில்களிலும், நீதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்தக்கடவாய். அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நீதித்தீர்ப்புச் செய்யக் கடவார்கள்.
உபாகமம் 16 : 19 (RCTA)
அவர்கள் ஒருதலைச் சார்பு கொள்ளாதிருப்பார்களாக. கண்ணோட்டம் கொள்ளாமலும் கையூட்டு வாங்காமலும் இருப்பார்களாக. கையூட்டு ஞானிகளுடைய கண்களைக் குருடாக்கி, நீதிமான்களுடைய வார்த்தைகளையும் புரட்டிவிடும்.
உபாகமம் 16 : 20 (RCTA)
நீ வாழும் படியாகவும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படியாகவும் நீதியை நியாயமாய்ப் பின்பற்றுவாயாக.
உபாகமம் 16 : 21 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவருடைய பீடத்தண்டையில் யாதொரு சோலையையும் அமைக்காதே. யாதொரு மரத்தையும் நடாதே.
உபாகமம் 16 : 22 (RCTA)
(உனக்கு) விக்கிரகத்தைச் செய்யவும் நிறுத்தவும் துணியாதே. அவ்விதமான காரியங்களை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
❮
❯