தானியேல் 11 : 1 (RCTA)
ஆனால் நானோ, மேதியனான தாரியுசின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப் படுத்தவும் அவனுக்கு அருகில் இருந்தேன். இப்போது நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்:
தானியேல் 11 : 2 (RCTA)
அவனை எதிர்த்துப் போர்புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்; அவ்வாறே உடன்படிக்கை செய்துகொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
தானியேல் 11 : 3 (RCTA)
பிறகு, வல்லமை மிக்க அரசன் ஒருவன் எழும்பி, மிகுதியான ஆற்றலோடு அரசு செலுத்தித் தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.
தானியேல் 11 : 4 (RCTA)
அவன் எழும்பும் போதே அவனுடைய அரசு அழிந்து போகும்; வானத்தின் நாற்றிசையிலும் அது பிரிக்கப்படும்; ஆயினும் அது அவனுடைய சந்ததியாருக்குத் தரப்படாது; அவனது ஆட்சிகாலத்திலிருந்த வல்லமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்கள் தவிர மற்றவர்களுக்கு அவனுடைய அரசு பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்படும்.
தானியேல் 11 : 5 (RCTA)
பின்பு, தென்றிசை மன்னன் வலிமை பெறுவான்; ஆயினும் அவனுடைய தலைவர்களுள் ஒருவன் அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்; அவனது அரசும் மிகப் பெரியதாய் விளங்கும்.
தானியேல் 11 : 6 (RCTA)
சில ஆண்டுகள் சென்ற பின் அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்வார்கள்; தென்றிசை அரசனின் மகள் வடதிசை மன்னனுடன் சமாதானம் செய்துகொள்ள வருவாள்; ஆனால் அவளுடைய வலிமை நிலைநிற்காது; அவனுடைய சந்ததியும் நிலைத்திருக்காது; ஆனால் அவளும், அவளை அழைத்து வந்தவர்களும், அவளுடைய பிள்ளையும், அவளுடைய கணவனும் கைவிடப்படுவார்கள்.
தானியேல் 11 : 7 (RCTA)
அந்நாட்களில், அவளுடைய வேர்களிலிருந்து ஒரு தளிர் கிளம்பும்; அவன் பெரும்படையுடன் வந்து, வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து அவர்களை முறியடித்து மேற்கொள்வான்.
தானியேல் 11 : 8 (RCTA)
அவர்களுடைய தெய்வங்களையும் சிலைகளையும், விலையயுர்ந்த வெள்ளி, பொன் பாத்திரங்களையும் எகிப்துக்குக் கொண்டு போவான்; சில காலத்திற்கு வட திசை மன்னன் மேல் படையெடுக்காமல் இருப்பான்.
தானியேல் 11 : 9 (RCTA)
பின்பு வடநாட்டு மன்னன் தென்னாட்டு அரசனது நாட்டின் மேல் படையெடுத்து வந்து, இறுதியாகத் தன் நாட்டுக்குத் திரும்புவான்.
தானியேல் 11 : 10 (RCTA)
பிறகு, அவனுடைய மக்கள் எழும்பித் திரளான சேனையைச் சேர்த்துக்கொண்டு வருவார்கள்; அவர்களுள் ஒருவன் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்து வந்து மீண்டும் தென்னவனின் கோட்டை வரைக்கும் போய்ப் போரிடுவான்.
தானியேல் 11 : 11 (RCTA)
அப்போது தென்றிசை அரசன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப் போய் வட திசை மன்னனோடு சண்டை செய்வான்; வடநாட்டான் பெரிய சேனையைத் திரட்டியிருந்தும், அச்சேனைப் பகைவன் கையில் அகப்படும்.
தானியேல் 11 : 12 (RCTA)
அச்சேனையைச் சிறை பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும்; பல்லாயிரம் பேரை வீழ்த்துவான்; ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான்.
தானியேல் 11 : 13 (RCTA)
ஏனெனனில் வடதிசை மன்னன் முன்னதை விடப் பெரிய சேனையைத் திரும்பவும் திரட்டுவான்; சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய சேனையோடும், மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.
தானியேல் 11 : 14 (RCTA)
அக்காலங்களில் தென்றிசை அரசனுக்கு எதிராகப் பலர் எழும்புவர்; உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி எழும்புவார்கள்; ஆனால் அவர்கள் வீழ்ச்சியுறுவார்கள்.
தானியேல் 11 : 15 (RCTA)
வடதிசை அரசன் வந்து முற்றுகையிட்டு அரணால் சூழ்ந்த நகரங்களைக் கைப்பற்றுவான்; தென்றிசை மன்னனின் படைகள் எதிர்க்க வலிமையற்றுப்போம்; அவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்க்க முடியாது நிற்பார்கள்; ஏனெனில் அவர்களுக்கும் வலிமையிராது.
தானியேல் 11 : 16 (RCTA)
வடதிசை அரசன் அசனுக்கு எதிராய் வந்து தன் மனம் போலச்செய்வான்; அவனுக்கு முன்பாக நிற்பவன் எவனுமில்லை; அழகான நாட்டுக்குள் நுழைந்து அதைப் பாழாக்குவான்.
தானியேல் 11 : 17 (RCTA)
அவனுடைய நாட்டையும் கட்டியாள வேண்டுமென்பது அவன் எண்ணம்; ஆகவே அவனோடு நட்பு கொண்டாடுவதுபோல நடித்து, அவனை வஞ்சகமாய் ஒழித்துக்கட்டும்படி தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்குக் கொடுப்பான்; ஆனால் அவன் நினைத்தது நிறைவேறாது; அந்த நாடும் அவனுக்குச் சொந்தமாகாது.
தானியேல் 11 : 18 (RCTA)
பிறகு, அவன் தன் எண்ணத்தைத் தீவுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்; ஆனால் படைத்தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்குவான்; அடக்கி அவன் திமிர் அவனுக்கே கேடு விளைவிக்கும்படி செய்வான்.
தானியேல் 11 : 19 (RCTA)
ஆகையால் அவன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பி விட முடிவுச் செய்வான்; ஆனால் அங்கே ஆபத்தில் அகப்பட்டு வீழ்ந்தழிவான்.
தானியேல் 11 : 20 (RCTA)
அவனுக்குப் பிறகு மிகக் கொடியவனும், அரசில் தண்டல்காரனை அனுப்புவோனுமான ஒருவன் எழும்புவான்; அவன் கோபத்தினாலோ போர் முனையினாலோ அன்றிச் சில நாட்களுக்குள் மடிவான்.
தானியேல் 11 : 21 (RCTA)
"அவனது இடத்தில் ஈனன் ஒருவன் எழும்புவான்; அவனுக்கு அரச சிறப்பு தரப்படாது; ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்து வஞ்சகமாய் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.
தானியேல் 11 : 22 (RCTA)
அவனை எதிர்த்துப் போர்புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்; அவ்வாறே உடன்படிக்கை செய்துகொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
தானியேல் 11 : 23 (RCTA)
உடன்படிக்கை செய்துகொண்ட பிறகும் அந்தக் கயவன் வஞ்சகமாய் நடந்து கொள்வான்; அவன் குடிகள் சிலராயிருந்தும் அவன் வலிமை பெற்று விளங்குவான்.
தானியேல் 11 : 24 (RCTA)
வனமும் செழுமையும் நிறைந்த பட்டணங்களுள் திடீரென நுழைந்து தன் தந்தையர்களும், தந்தையர்க்குத் தந்தையரும் செய்யாததையும் செய்வான்; அவர்களுடைய கொள்ளைப் பொருட்களையும், கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்; அவர்களுடைய அரண்களைப் பிடிக்க வழிகளைத் தேடுவான்; ஆயினும் நிலை கொஞ்ச காலமே நீடிக்கும்.
தானியேல் 11 : 25 (RCTA)
பிறகு அவன் தன் வல்லமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெருஞ் சேனையோடு போவான்; அப்போது தென்றிசை மன்னனும் வலிமை மிக்க பெரும் படையோடு வந்து போர் முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு விரோதமாகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால் அவனுடைய படைகள் நிலைத்து நிற்கவில்லை.
தானியேல் 11 : 26 (RCTA)
அவனோடு உணவு உண்டவர்களே அவனை அழிப்பார்கள்; அவனுடைய படை முறியடிக்கப்படும்; பலர் கொலையுண்டு விழுவார்கள்.
தானியேல் 11 : 27 (RCTA)
இரண்டு அரசர்களும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய நினைப்பார்கள்; ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்; ஆயினும் அது அவர்களுக்குப் பயன்படாது; ஏனெனில், முடிவு இன்னொரு காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தானியேல் 11 : 28 (RCTA)
வட நாட்டு மன்னன் மிகுதியான பொருட்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான்; அவனுடைய உள்ளம் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் இருக்கும்; தீங்குகள் பல செய்த பின்பு தன் நாட்டுக்குத் திரும்புவான்.
தானியேல் 11 : 29 (RCTA)
குறித்த காலத்தில் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்; ஆனால் இம்முறை முந்தின முறையைப் போல் இராது.
தானியேல் 11 : 30 (RCTA)
அவனுக்கு விரோதமாய் உரோமையர்கள் கப்பல்களில் வருவார்கள்; அவனோ தோல்வியடைந்து திரும்பிப்போய்ப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் ஆத்திரங்கொண்டு, நடவடிக்கை எடுப்பான்; திரும்பி வந்து, பரிசுத்த உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள் மேல் கவனத்தைத் திருப்புவான்.
தானியேல் 11 : 31 (RCTA)
அவனுடைய படைவீரர்கள் வந்து திருக்கோயிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, அன்றாடப் பலியை நிறுத்தி விட்டுப் பாழாக்கும் அருவருப்பை அங்கே நாட்டி வைப்பார்கள்.
தானியேல் 11 : 32 (RCTA)
உடன்படிக்கையை மீறுகிறவர்களைப் பசப்பு மொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான்; ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருக்கும் மக்கள் திடங்கொண்டு அவருடைய கற்பனைகளின்படி நடப்பார்கள்.
தானியேல் 11 : 33 (RCTA)
மக்களுள் அறிஞரானோர் பலருக்கு அறிவூட்டுவார்கள்; அந்நாட்களில் எழும்பும் கலகத்தில் அவர்கள் வாளாலும் நெருப்பாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்;
தானியேல் 11 : 34 (RCTA)
இவ்வாறு அவர்கள் விழும் போது, அவர்களுக்குச் சொற்ப உதவியே கிடைக்கும்; ஆனால் வேறு பலர் அவர்களை வஞ்சிக்கும்படி அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்;
தானியேல் 11 : 35 (RCTA)
அறிஞர்களுள் சிலர் மாபெரும் இக்கட்டுகளுக்கு உட்படுவார்கள்; இவற்றால் அவர்கள் புடம் போடப்படுவது போலக் குறிப்பிட்ட காலம் வரை தூய்மையாக்கப்படுவார்கள்; ஏனெனில் முடிவு வர இன்னும் நாட்கள் உண்டு.
தானியேல் 11 : 36 (RCTA)
அரசன் தன் மனம் போன போக்குப்படியெல்லாம் செய்வான்; அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்; எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம் கடவுளானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைக் கக்குவான்; இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம் பெறும்; ஏனெனில் வகுக்கப்பட்டது நடந்தேற வேண்டும்.
தானியேல் 11 : 37 (RCTA)
அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ, வேறெந்த தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கொல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.
தானியேல் 11 : 38 (RCTA)
அவற்றிற்குப் பதிலாக அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான்; தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை இவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருட்களாலும் மகிமைப்படுத்தி வழிபடுவான்.
தானியேல் 11 : 39 (RCTA)
தன் அரண்களைக் காக்க அந்நிய தெய்வத்தை வழிபடும் இனத்தாரை ஏற்படுத்துவான்; அவனை அரசனாக ஏற்றுக் கொண்டவர்களை மகிமைப்படுத்திப் பல உயர்ந்த பதவிகளையும் மானியங்களையும் அளிப்பான்.
தானியேல் 11 : 40 (RCTA)
"முடிவு காலம் வரும் போது, தென்றிசை மன்னன் அவனோடு போர் புரிவான்; வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் புயல்காற்று போல் அவனை எதிர்த்து வருவான்; அவன் நாடுகளுக்குள் நுழைந்து அழிவு விளைவித்து நடந்து போவான்.
தானியேல் 11 : 41 (RCTA)
பிறகு அவன் மகிமையான நாட்டுக்குள் நுழைவான்; பலர் அழிக்கப்படுவர்; ஆனால் ஏதோம், மேவாப் மக்கள், அம்மோன் மக்களுள் சிறந்தவர்கள் ஆகிய இவர்கள் மட்டுமே தப்பித்துக் கொள்வர்;
தானியேல் 11 : 42 (RCTA)
அவன் மற்ற மாநிலங்கள் மேலும் கை நீட்டுவான்; தவறாமல் எகிப்து நாட்டுக்கும் போய்,
தானியேல் 11 : 43 (RCTA)
ஆங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருட்களையும் கைப்பற்றிக் கொள்வான்; அவன் லீபியா வழியாகவும் எத்தியோப்பியா வழியாகவும் கடந்து போவான்.
தானியேல் 11 : 44 (RCTA)
ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச் செய்யும்: அப்போது அவன் பெரிய சேனையுடன் வந்து பலரைக் கொன்றொழிப்பான்.
தானியேல் 11 : 45 (RCTA)
பிறகு, கடலுக்கும், மகிமை பொருந்திய பரிசுத்த மலைக்கும் இடையில் தன் அரச கூடாரங்களை நாட்டுவான்; ஆயினும் அவன் தன் முடிவைக் காண்பான்; அவனுக்கு உதவி செய்ய ஒருவனும் இரான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45