கொலோசெயர் 1 : 1 (RCTA)
கிறிஸ்துவுக்குள் வாழ்வோரும் விசுவாசமுள்ள சகோதரர்களுமான கொலோசே நகரத்து இறைமக்களுக்கு,
கொலோசெயர் 1 : 2 (RCTA)
கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயசுவின் அப்போஸ்தலனான சின்னப்பனும், சகோதரர் தீமோத்தேயுவும் எழுதுவது: நாம் தந்தையாகிய கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
கொலோசெயர் 1 : 3 (RCTA)
உங்களுக்காகச் செபிக்கும்போது நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுளுக்கு என்றும் நன்றிகூருகிறோம்.
கொலோசெயர் 1 : 4 (RCTA)
ஏனெனில், வானகத்தில் உங்களுக்கென வைத்திருக்கும் நன்மைகளில் நீங்கள் நம்பிக்கை கொண்டதால் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு எத்தகைய விசுவாசம் உண்டென்றும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் எவ்வித அன்பு காட்டுகிறீர்களென்றும் கேள்வியுற்றோம்.
கொலோசெயர் 1 : 5 (RCTA)
நற்செய்தியாகிய உண்மை வார்த்தையை நீங்கள் முன்பு கேட்டபோது இந்நம்பிக்கை உங்களுக்கு உண்டாயிற்று.
கொலோசெயர் 1 : 6 (RCTA)
இந்த நற்செய்தி உலகம் முழுவதும் பரவிப் பயனளித்து வளர்ந்து வருகிறது. அது உங்களையும் வந்தடைந்தது. கடவுளுடைய அருளைப் பற்றிய அச்செய்தியை நீங்கள் கேட்டு, அதன் உண்மையான பொருளை உணர்ந்த நாள்முதல் உங்களிடையிலும் வளர்ந்து வருகிறது.
கொலோசெயர் 1 : 7 (RCTA)
எம் அன்புள்ள உடன் ஊழியரான எப்பாப்பிரா இந்த அருளைப் பற்றி உங்களுக்குக் கற்பித்தார். இவர் எங்கள் சார்பில் பணி செய்பவர், கிறிஸ்துவின் விசுவாசமுள்ள பணியாளர்.
கொலோசெயர் 1 : 8 (RCTA)
தேவ ஆவியினால் உங்களிடம் உண்டான அன்பைப்பற்றி அவர்தான் எங்களுக்கு அறிவித்தார்.
கொலோசெயர் 1 : 9 (RCTA)
அதனால் நாங்கள் இச்செய்தியைக் கேள்விப் பட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாது செபிக்கிறோம், நீங்கள் முழு ஞானத்தையும் தேவ ஆவிக்கேற்ற அறிவுத் திறனையும் அடைந்து இறைவனுடைய திருவுளத்தை உணரும் அறிவை நிறையப் பெறுமாறு மன்றாடுகிறோம்.
கொலோசெயர் 1 : 10 (RCTA)
இவ்வாறு நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் இருக்கும்படி, அவருக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துவீர்கள்; எல்லா வகையான நற்செயல்களால் நற்பயன் விளைத்து கடவுளை அறியும் அறிவில் நீங்கள் மேன்மேலும் வளர்வீர்கள்;
கொலோசெயர் 1 : 11 (RCTA)
அவருடைய மாட்சிமை மிக்க ஆற்றலுக்கேற்ப எந்நிலையிலும் பொறுமையும் மன உறுதியும் கொண்டிருக்கும்படி முழு வல்லமையாலும் வலப்படுத்தப் பெறுவீர்கள்;
கொலோசெயர் 1 : 12 (RCTA)
பரம தந்தை ஒளியினிடையே தம் மக்களுக்குத் தந்த உரிமைப் பேற்றில் பங்கு பெற நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கியதற்காக அவருக்கு மகிழ்வோடு நன்றிக்கூருவீர்கள்.
கொலோசெயர் 1 : 13 (RCTA)
அவரே இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுவித்து, தம் அன்பார்ந்த மகனுடைய அரசில் கொண்டு வந்து சேர்த்தார்.
கொலோசெயர் 1 : 14 (RCTA)
இம் மகனால் தான் நமக்கு மீட்பு உண்டு, பாவமன்னிப்பு உண்டு.
கொலோசெயர் 1 : 15 (RCTA)
அவர் கட்புலனாகாக் கடவுளின் சாயல், படைப்புக் கெல்லாம் தலைப்பேறானவர்;
கொலோசெயர் 1 : 16 (RCTA)
ஏனெனில், அவரில் அனைத்தும் உண்டாயிற்று. விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை கட்புலனாவன, கட்புலனாகாதன, அரியணை சூழ்வோர், ஆட்சி புரிவோர், தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் ஆகிய வானதூதர் அனைவரும் உண்டானது அவரிலேதான். அவராலேயே அவருக்காகவே அனைத்தும் ஆயின.
கொலோசெயர் 1 : 17 (RCTA)
அனைத்துக்கும் முன்பே உள்ளவர் அவர்; அனைத்தும் அவரில் இணைந்து நிலைக்கும்.
கொலோசெயர் 1 : 18 (RCTA)
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் அவரே. ஆதியானவரும் அவரே. அனைத்திலும் முதன்மை பெறும்படி இறந்தோரினின்று பிறந்த தலைப்பேறு அவரே.
கொலோசெயர் 1 : 19 (RCTA)
முழுநிறைவும் அவரில் குடிகொள்ள வேண்டுமென்று இறைவன் திருவுளம் கொண்டார்.
கொலோசெயர் 1 : 20 (RCTA)
சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தால் சமாதானம் உண்டாக்கி விண்ணிலும் மண்ணிலும் உள்ள யாவற்றையும் அவர் வழியாகத் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்.
கொலோசெயர் 1 : 21 (RCTA)
முன்னர் நீங்கள் இறைவனோடு உறவிழந்து நின்றீர்கள்; அவர்மீது பகையுள்ளம் கொண்டவர்களாய்த் தீய செயல்களில் மூழ்கி இருந்தீர்கள்.
கொலோசெயர் 1 : 22 (RCTA)
இப்பொழுதோ உங்களை மாசு மறுவும் குறைப்பாடுமின்றிப் பரிசுத்தர்களாய்த் தம் திருமுன் நிறுத்த இறைவன் விரும்பி, கிறிஸ்துவுடைய ஊனுடலில் அவருடைய சாவின் வழியாக உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
கொலோசெயர் 1 : 23 (RCTA)
ஆனால் நீங்கள் கேட்ட நற்செய்தியில் அடங்கியுள்ள நம்பிக்கையை நழுவவிடாது, விசுவாசத்தில் உறுதியாக ஊன்றி நிலைத்து நிற்கவேண்டும். வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புக்கும் அறிவிக்கப்பட்ட இந்த நற்செய்திக்குத் தான் சின்னப்பனாகிய நான் பணியாளன் ஆனேன்.
கொலோசெயர் 1 : 24 (RCTA)
உங்களுக்காக நான் படும் துன்பங்களில் இப்பொழுது மகிழ்ச்சிகொள்கிறேன். திருச்சபையாகிய தம் உடலின் பொருட்டு கிறிஸ்துபடவேண்டிய வேதனைகளில் இன்னும் குறைவாய் இருப்பதை என் உடலில் நிறைவாக்குகிறேன்.
கொலோசெயர் 1 : 25 (RCTA)
கடவுளின் வார்த்தையை அறிவிக்கும் அலுவலை. நிறைவேற்ற, கடவுள் உங்களை முன்னிட்டு எனக்களித்த பொறுப்பை ஏற்றுள்ளதால் நான் திருச்சபையின் பணியாளன் ஆனேன்.
கொலோசெயர் 1 : 26 (RCTA)
நான் அறிவிப்பதோ மறைவான இறைத்திட்டம். ஊழூழியாக, தலைமுறை தலைமுறையாக ஒளிவிலிருந்த இத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளியாக்கப் பட்டுள்ளது.
கொலோசெயர் 1 : 27 (RCTA)
ஏனெனில், இத்திட்டத்தின் மாட்சிமை புறவினத்தாரிடையே எவ்வளவு வளமிக்கதாய் உள்ளது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க இறைவன் திருவுளங் கொண்டார். கிறிஸ்து உங்களுக்குள் இருத்தலே அத்திட்டம் நாம் மாட்சிமை அடைவோம் என்பதற்கு அவரே, நம் நம்பிக்கை.
கொலோசெயர் 1 : 28 (RCTA)
அவரையே நாங்கள் அறிவிக்கிறோம். கிறிஸ்துவுக்குள் ஒவ்வொருவருக்கும் முழு ஞானத்தோடு போதிக்கிறோம்.
கொலோசெயர் 1 : 29 (RCTA)
என்னுள் வல்லமையோடு செயல்படும் ஆற்றலுக்கேற்ப இந்நோக்கத்திற்காகவே நான் பாடுபட்டு உழைக்கிறேன்,.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29