அப்போஸ்தலர்கள் 9 : 1 (RCTA)
அப்பொழுது சவுல் ஆண்டவருடைய சீடர்கள் மேல் சீறி எழுந்து, அவர்களைத் தொலைத்து விடுவதாக மிரட்டி வந்தார்.
அப்போஸ்தலர்கள் 9 : 2 (RCTA)
தலைமைக் குருவை அணுகி, இப்புதிய நெறியைச் சார்ந்த ஆண் பெண் யாராயிருந்தாலும், அவர்களைக் கைதுசெய்து, யெருசலேமுக்குக் கொண்டுவரத் தமஸ்கு நகரிலுள்ள செபக் கூடங்களுக்குக் கட்டளைக் கடிதம் தரும்படி கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 9 : 3 (RCTA)
பயணமாகி, தமஸ்கை நெருங்குகையில், திடீரென வானினின்று தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்துகொள்ள, தரையில் விழுந்தார்.
அப்போஸ்தலர்கள் 9 : 4 (RCTA)
விழுந்ததும், "சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?" என்ற குரலைக் கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 9 : 5 (RCTA)
"ஆண்டவரே, நீர் யார்?" என்றார்.
அப்போஸ்தலர்கள் 9 : 6 (RCTA)
அதற்கு ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசுதான் நான். எழுந்து நகருக்குப் போ. நீ என்ன செய்ய வேண்டுமென்பது உனக்குத் தெரிவிக்கப்படும் ' என்று சொன்னார்.
அப்போஸ்தலர்கள் 9 : 7 (RCTA)
அவருடன் பயணம் செய்தவர்கள், அங்கே ஒருவரையும் காணாமல், குரலைமட்டும் கேட்டு, வாயடைத்து நின்றனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 8 (RCTA)
சவுல் எழுந்து நின்றார். கண் திறந்திருந்தும் ஒன்றையும் காணமுடியவில்லை. ஆகையால், உடனிருந்தோர் அவரைத் தமஸ்கு நகருக்குக் கையைப்பிடித்து அழைத்துச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 9 (RCTA)
அங்கே அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்த மூன்று நாளும் அவர் உண்ணவுமில்லை குடிக்கவுமில்லை.
அப்போஸ்தலர்கள் 9 : 10 (RCTA)
தமஸ்கு நகரில் அனனியா என்ற சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ' அனனியாவே ' எனக் கூப்பிட, "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 9 : 11 (RCTA)
அப்போது ஆண்டவர், "நேர்த் தெரு என்ற தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டில் தார்சு நகரத்துச் சவுல் என்பவரைப் பார். இதோ! அவர் செபித்துக்கொண்டிருக்கிறார்.
அப்போஸ்தலர்கள் 9 : 12 (RCTA)
அனனியா என்னும் ஒருவர் வந்து தாம் பார்வை அடையும்படி தம்மீது கைகளை வைப்பதைக் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார்.
அப்போஸ்தலர்கள் 9 : 13 (RCTA)
அதற்கு அனனியா, "ஆண்டவரே, அந்த ஆள் யெருசலேமில் உம் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்தான் என்பதைப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அப்போஸ்தலர்கள் 9 : 14 (RCTA)
உமது பெயரைச் சொல்லி மன்றாடுபவர் அனைவரையும் சிறைப்படுத்த, அவன் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றுக்கொண்டு, இங்கேயும் வந்திருக்கிறான்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 9 : 15 (RCTA)
ஆண்டவர் அதற்கு, "நீ போ; ஏனெனில், புறவினத்தாருக்கும் அரசர்க்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் எனது பெயரை அறிவிக்க என்னால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவி அவர்.
அப்போஸ்தலர்கள் 9 : 16 (RCTA)
என் பெயரின் பொருட்டு அவர் எவ்வளவு பாடுபடவேண்டும் என்பதை நான் அவருக்குக் காண்பிப்பேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 9 : 17 (RCTA)
இதைக் கேட்டபின் அனனியா அவ்வீட்டிற்குச் சென்று, அவர் மீது கைகளை விரித்து, "சகோதரர் சவுலே, ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் வரும்பொழுது, வழியில் உமக்குத் தோன்றிய இயேசுவே அவர். நீர் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெறவும், அவர் என்னை அனுப்பினார்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 9 : 18 (RCTA)
என்றதும், அவர் கண்களிலிருந்து செதில் போன்றவை விழ, அவர் பார்வை அடைந்தார். உடனே ஞானஸ்நானம் பெற்றார்.
அப்போஸ்தலர்கள் 9 : 19 (RCTA)
உணவு கொண்ட பின் தெம்படைந்தார். தமஸ்கு நகரில் சீடர்களுடன் சில நாள் இருந்தார்.
அப்போஸ்தலர்கள் 9 : 20 (RCTA)
உடனடியாகச் செபக்கூடங்களில், இயேசு கடவுளின் மகன்தான் என்று அறிவிக்கத் தொடங்கினார்.
அப்போஸ்தலர்கள் 9 : 21 (RCTA)
கேட்டவர்கள் அனைவரும் திகைப்புற்று, "யெருசலேமில் இயேசுவின் பெயரைச் சொல்லி மன்றாடுபவர்களை ஒழிக்கத் தலைப்பட்டவன் இவன் அன்றோ? அவர்களைச் சிறைப்படுத்தி, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்ல இங்கேயும் வரவில்லையா?" என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 9 : 22 (RCTA)
சவுல் மேலும் திடம் கொண்டவராய் ' இயேசுவே மெசியா ' என்பதை எண்பித்து, தமஸ்கு நகரில் வாழ்ந்த யூதர்களைக் கலங்கடித்தார்.
அப்போஸ்தலர்கள் 9 : 23 (RCTA)
இப்படிப் பல நாள் கழிந்த பிறகு யூதர்கள் அவரைத் தொலைக்கத் திட்டமிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 24 (RCTA)
அவர்களுடைய சதித்திட்டம் சவுலுக்குத் தெரியவந்தது. அவரைத் தொலைத்துவிட வேண்டும் என்று இரவும் பகலும் நகர வாயில்களைக் காக்கவும் செய்தனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 25 (RCTA)
ஆகவே இரவில் அவருடைய சீடர்கள் அவரைக் கூடையில் வைத்து மதில் மேலிருந்து வெளியே இறக்கிவிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 9 : 26 (RCTA)
அவர் யெருசலேமுக்குச் சென்றபின் சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர்.
அப்போஸ்தலர்கள் 9 : 27 (RCTA)
அப்பொழுது பர்னபா அவரை அப்போஸ்தலர்களிடம் அழைத்துக் கொண்டுபோய், ஆண்டவர் அவருக்கு வழியில் தோன்றி அவரோடு பேசினதையும், தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் போதித்ததையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அப்போஸ்தலர்கள் 9 : 28 (RCTA)
அதுமுதல் சவுல் யெருசலேமில் அவர்களுடன் நெருங்கிப் பழகி, ஆண்டவர் பெயரால் துணிவோடு பேசலானார்.
அப்போஸ்தலர்கள் 9 : 29 (RCTA)
கிரேக்க மொழி பேசுவோரிடம் போய் விவாதித்து வந்தார். அவர்களோ அவரைத் தொலைக்கப் பார்த்தனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 30 (RCTA)
அதை அறிந்த சகோதரர்கள் அவரைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டு போய், தர்சு நகருக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 31 (RCTA)
இதற்கிடையில் யூதேயா, கலிலேயா, சமாரியா நாடுகளிலெல்லாம் திருச்சபை அமைதியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, பரிசத்த ஆவியின் ஆறுதல் நிரம்பப் பெற்று வளர்ச்சியடைந்து வந்தது.
அப்போஸ்தலர்கள் 9 : 32 (RCTA)
இராயப்பர் எல்லாச் சபைகளையும் விசாரித்து வருகையில் ஒருநாள், லித்தா நகரில் வாழ்ந்து வந்த இறை மக்களிடம் வந்து சேர்ந்தார்.
அப்போஸ்தலர்கள் 9 : 33 (RCTA)
அங்கே, எட்டு ஆண்டளவாகப் படுக்கையாய்க் கிடந்த திமிர்வாதக்காரன் ஒருவனைக் கண்டார். அவன் பெயர் ஐனேயா.
அப்போஸ்தலர்கள் 9 : 34 (RCTA)
இராயப்பர் அவனைப்பார்த்து, "ஐனேயா, இயேசுகிறிஸ்து உனக்குக் குணம் அளிக்கிறார், எழுந்து, நீயே உன் படுக்கையைச் சரிப்படுத்து" என்றார். உடனே அவன் எழுந்து நின்றான்.
அப்போஸ்தலர்கள் 9 : 35 (RCTA)
அவனைக் கண்டு லித்தாவிலும் சாரோன் சமவெளியிலும் வாழ்ந்தவர் அனைவரும் ஆண்டவர் பக்கம் மனந்திரும்பினர்.
அப்போஸ்தலர்கள் 9 : 36 (RCTA)
யோப்பாவிலுள்ள சீடர்களில் தபீத்தா என்றொருத்தி இருந்தாள். ( தபீத்தா என்பதற்கு மான் என்பது பொருள் ) பிறருக்கு நன்மை புரிவதும் அறங்கள் செய்வதுமே அவளது வாழ்க்கையாயிருந்தது.
அப்போஸ்தலர்கள் 9 : 37 (RCTA)
அவள் நோய்வாய்ப்பட்டு ஒருநாள் இறந்துவிட்டாள். சவத்தைக் குளிப்பாட்டி, மாடி அறையில் கிடத்தினர்.
அப்போஸ்தலர்கள் 9 : 38 (RCTA)
யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தா நகருக்கு இராயப்பர் வந்திருப்பதைக் கேள்வியுற்ற சீடர்கள் அவரிடம் இருவரை அனுப்பி, "உடனே எங்கள் ஊர்வரைக்கும் வரவும்" என்று மன்றாடினர்.
அப்போஸ்தலர்கள் 9 : 39 (RCTA)
இராயப்பர் புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவரை மாடி அறைக்கு அழைத்துச் சென்றனர். கைம்பெண்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்துகொண்டு, தபீத்தா உயிரோடிருக்கையில் தங்களுக்குச் செய்து கொடுத்திருந்த உள்ளாடைகளையும் மேலாடைகளையும் அவரிடம் காட்டி அழுதனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 40 (RCTA)
எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு இராயப்பர் முழுங்கால்படியிட்டுச் செபித்தார். பின்பு, பிணத்தை நோக்கி "தபீத்தா, எழுந்திரு" என்றார். என்றதும், அவள், கண்ணைத் திறந்தாள். இராயப்பரைக் கண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
அப்போஸ்தலர்கள் 9 : 41 (RCTA)
கைகொடுத்து இராயப்பர் அவளை எழுந்து நிற்கச்செய்தார். விசுவாசிகளையும் கைம்பெண்களையும் உள்ளே அழைத்து அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்புவித்தார்.
அப்போஸ்தலர்கள் 9 : 42 (RCTA)
இச்செய்தி யோப்பா நகரெங்கும் பரவியது. ஆண்டவர்மேல் பலர் விசுவாசம் கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 9 : 43 (RCTA)
தோல் பதனிடும் சீமோனுடன் இராயப்பர் யோப்பாவில் பல நாள் தங்கியிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43

BG:

Opacity:

Color:


Size:


Font: