அப்போஸ்தலர்கள் 3 : 1 (RCTA)
ஒருநாள், செபநேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்கு இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 3 : 2 (RCTA)
அப்போது, பிறவியிலேயே முடவனாயிருந்த ஒருவன் தூக்கிக்கொண்டு வரப்பட்டான்; கோயிலுக்குள் போகிறவர்களிடம் பிச்சைவாங்குவதற்காக நாள்தோறும் அவனைக் கோயிலின் 'அழகு வாயில் ' என்னும் வாசலருகில் வைப்பதுண்டு.
அப்போஸ்தலர்கள் 3 : 3 (RCTA)
இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குள் நுழைகையில், அவர்களைப் பார்த்துப் பிச்சை கேட்டான்.
அப்போஸ்தலர்கள் 3 : 4 (RCTA)
இராயப்பரும் அருளப்பரும் அவனை உற்றுநோக்கினர். இராயப்பர் "இங்கே பார்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 3 : 5 (RCTA)
அவனோ ஏதேனும் கிடைக்கும் என்று அவர்களை ஆவலோடு நோக்கினான்.
அப்போஸ்தலர்கள் 3 : 6 (RCTA)
இராயப்பர் அவனிடம், "வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்; நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " என்று சொல்லி,
அப்போஸ்தலர்கள் 3 : 7 (RCTA)
அவனது வலக்கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் வலுவடைந்தன.
அப்போஸ்தலர்கள் 3 : 8 (RCTA)
அவன் துள்ளி எழுந்து நடக்கத்தொடங்கினான்; துள்ளி நடந்து கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களுடன் கோயிலுக்குள் சென்றான்.
அப்போஸ்தலர்கள் 3 : 9 (RCTA)
அவன் நடப்பதையும், கடவுளைப் புகழ்வதையும் மக்கள் எல்லாரும் கண்டனர்.
அப்போஸ்தலர்கள் 3 : 10 (RCTA)
கோயிலின் 'அழகு வாயிலில் பிச்சைகேட்டு உட்கார்ந்திருந்தவன் அவனே என்று அறிந்துகொண்டனர். அவனுக்கு நிகழ்ந்ததைப் பார்த்து, திகைப்புற்று மலைத்துப்போயினர்.
அப்போஸ்தலர்கள் 3 : 11 (RCTA)
அவன் இராயப்பரையும் அருளப்பரையும் விடாமல், அவர்களுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கவே மக்களெல்லாரும் திகைப்புற்று, ' சாலொமோன் மண்டபம் ' என்னும் இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தனர்.
அப்போஸ்தலர்கள் 3 : 12 (RCTA)
இராயப்பர் அதைக் கண்டு, கூட்டத்திற்குக் கூறியது: "இஸ்ராயேல் மக்களே, இதைக் கண்டு நீங்கள் வியப்பதேன்? எங்கள் சொந்த வல்லமையாலோ பக்தியின் பலத்தினாலோ இவனை நடக்கவைத்ததாக எண்ணி நீங்கள் எங்களை இப்படி விழித்துப் பார்ப்பதேன்?
அப்போஸ்தலர்கள் 3 : 13 (RCTA)
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள், நம் முன்னோர்களின் கடவுள் தம் ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்தினார்; நீங்களோ அவரைப் பகைவர்களிடம் கையளித்துவிட்டீர்கள்; பிலாத்து விடுதலைத்தீர்ப்பு அளித்தபோதும் பிலாத்துவின்முன் அவரை மறுதலித்தீர்கள்.
அப்போஸ்தலர்கள் 3 : 14 (RCTA)
புனிதமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்கு விடுதலைசெய்யக் கேட்டுக்கொண்டீர்கள்.
அப்போஸ்தலர்கள் 3 : 15 (RCTA)
வாழ்வுக்கு வழிகாட்டும் தலைவரைக் கொன்றீர்கள்; ஆனால் கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
அப்போஸ்தலர்கள் 3 : 16 (RCTA)
இதோ, உங்கள் கண்முன் நிற்கிறவன் உங்களுக்குத் தெரிந்தவன்; இயேசுவின் பெயர்மீதுள்ள விசுவாசத்தால், அவருடைய பெயரே இவனுக்கு வலுவூட்டியது; அவரால் உண்டாகிய விசுவாசமே, உங்கள் எல்லாருக்கும் முன்பாக, இவனுக்கு முழுக் குணம் அளித்துள்ளது.
அப்போஸ்தலர்கள் 3 : 17 (RCTA)
"இனி, சகோதரர்களே, தெரியாமல் இப்படிச் செய்துவிட்டீர்கள் என்று அறிவேன்; அப்படியே உங்கள் தலைவர்களும் தெரியாமல் செய்துவிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 3 : 18 (RCTA)
கடவுளோ, தம் மெசியா பாடுபட வேண்டுமென, இறைவாக்கினர் அனைவருடைய வாய்மொழியாலும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.
அப்போஸ்தலர்கள் 3 : 19 (RCTA)
ஆகையால், உங்கள் பாவங்கள் ஒழியும்பொருட்டு மனம் மாறிக் கடவுளிடம் திரும்புங்கள்.
அப்போஸ்தலர்கள் 3 : 20 (RCTA)
ஆண்டவர் அப்பொழுது இளைப்பாறும் காலத்தை அருளி, உங்களுக்கென மெசியாவாக ஏற்படுத்திய இயேசுவை அனுப்புவார்.
அப்போஸ்தலர்கள் 3 : 21 (RCTA)
இந்த இயேசு, அனைத்தும் புதிதாக்கப்படும் காலம் வரும்வரை, வானகத்தில் இருத்தல்வேண்டும். தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயிலாகக் கடவுள் அக்காலத்தைப்பற்றி அறிவித்திருந்தார்.
அப்போஸ்தலர்கள் 3 : 22 (RCTA)
இவ்வாறு மோயீசன், ' கடவுளாகிய ஆண்டவர் என்னைப்போன்ற ஓர் இறைவாக்கினரை உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழச்செய்வார்; அவர் உங்களுக்கு என்ன சொன்னாலும் அதற்குச் செவிகொடுங்கள்.
அப்போஸ்தலர்கள் 3 : 23 (RCTA)
அந்த இறைவாக்கினரின் சொல்லைக் கேளாத எவனும் மக்களினின்று களைந்தெறியப்படுவான் ' என உரைத்தார்.
அப்போஸ்தலர்கள் 3 : 24 (RCTA)
அவ்வாறே, சாமுவேல் தொடங்கி இறைவாக்கு உரைத்த எல்லாரும் ஒருவருக்குப்பின் ஒருவராக இந்நாட்களைக்குறித்து முன்னறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 3 : 25 (RCTA)
"நீங்களோ இறைவாக்கினர்களின் புதல்வர்கள்; ' உன் வித்தின்வழியாக மண்ணுலகின் குலமெல்லாம் ஆசிபெறும் ' என்று கடவுள் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம் முன்னோருடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உரியவர்கள் நீங்கள்.
அப்போஸ்தலர்கள் 3 : 26 (RCTA)
உங்களுக்கு அருள் வழங்கி, உங்களுள் ஒவ்வொருவனையும் அவன் தன் தீச்செயல்களினின்று விலக்குவதற்காக, கடவுள் தம் ஊழியரை உயிர்ப்பித்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

BG:

Opacity:

Color:


Size:


Font: