அப்போஸ்தலர்கள் 23 : 1 (RCTA)
சின்னப்பர் தலைமைச் சங்கத்தாரை நோக்கி, "சகோதரரே, நான் இந்நாள்வரை கடவுள் முன்னிலையில், யாவற்றிலும் என் மனச்சான்றின்படி நேர்மையாக வாழ்ந்து வந்தேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 23 : 2 (RCTA)
அப்பொழுது, தலைமைக்குரு அனனியா அவரை வாயில் அறையும்படி அருகில் நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார்.
அப்போஸ்தலர்கள் 23 : 3 (RCTA)
சின்னப்பர் அவரிடம், "வெள்ளையடித்த சுவரே, கடவுளே உன்னை அடிப்பார்; சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பிட அமர்ந்திருக்கும் நீ, சட்டத்திற்கு முரணாக, என்னை அடிக்கச் சொல்லுகின்றாயே" என்றார்.
அப்போஸ்தலர்கள் 23 : 4 (RCTA)
அருகில் நின்றவர்கள், "கடவுளுடைய தலைமைக் குருவையே பழித்துரைக்கின்றாயே" என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 23 : 5 (RCTA)
அதற்குச் சின்னப்பர், "சகோதரர்களே, இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாதே! ' மக்களின் தலைவரை இழித்துரைக்காதே ' என எழுதியுள்ளது அன்றோ? என்றார்.
அப்போஸ்தலர்கள் 23 : 6 (RCTA)
அச்சங்கத்தில் ஒருசாரார் சதுசேயர், மற்றொரு சாரார் பரிசேயர் என்பதை அறிந்திருந்த சின்னப்பர் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன், பரிசேயரின் வழித்தோற்றலே. இறந்தோர் உயிர்த்தெழுவர் என்ற என் நம்பிக்கையைக் குறித்துத் தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்" என்று உரக்கக் கத்தினார்.
அப்போஸ்தலர்கள் 23 : 7 (RCTA)
அவர் இப்படிச் சொன்னதும், பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று.
அப்போஸ்தலர்கள் 23 : 8 (RCTA)
சபையும் இரண்டுபட்டது. ஏனெனில், சதுசேயர் உயிர்த்தெழுதலோ வானதூதரோ ஆவியோ உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பரிசேயரோ, இவையெல்லாம் உண்டென்று ஒப்புக்கொள்வர். எனவே, பேரிரைச்சல் எழுந்தது.
அப்போஸ்தலர்கள் 23 : 9 (RCTA)
அப்பொழுது பரிசேயர் கட்சியைக் சார்ந்த மறைநூல் அறிஞர் சிலர் எழுந்து இவனிடத்தில் ஒரு தவற்றையும் காணோம்; ஓர் ஆவியோ, ஒரு வான தூதரோ இவனோடு பேசியிருந்தாலென்ன?" என்று வாதாடினர்.
அப்போஸ்தலர்கள் 23 : 10 (RCTA)
இப்படி வாக்குவாதம் முற்றவே, சின்னப்பரைக் கண்டதுண்டமாக்கிவிடுவார்களோ எனப் படைத்தலைவன் அஞ்சி, படை வீரர்களை அனுப்பி அவரைக் கூட்டத்தின் நடுவிலிருந்து கோட்டைக்குக் கொண்டுபோகக் கட்டளையிட்டான்.
அப்போஸ்தலர்கள் 23 : 11 (RCTA)
அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "தைரியமாயிரு, என்னைக் குறித்து நீ யெருசலேமில் சாட்சியம் தந்ததுபோல், உரோமையிலும் சாட்சியம் தரவேண்டும்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 23 : 12 (RCTA)
பொழுது புலர்ந்தபின், யூதர்கள் ஒன்றுகூடி, சின்னப்பரைக் கொன்றுபோடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை என்று சூளுரைத்துச் சதி செய்தனர்.
அப்போஸ்தலர்கள் 23 : 13 (RCTA)
இச் சதியில் சேர்ந்தவர்கள் நாற்பது பேருக்கு மேலிருக்கும்.
அப்போஸ்தலர்கள் 23 : 14 (RCTA)
அவர்கள், தலைமைக் குருக்கள், மூப்பர்களிடம் சென்று, "நாங்கள் சின்னப்பரைக் கொன்றுபோடாமல் உணவுகொள்வதில்லை எனச் சபதமிட்டுச் சூளுரைத்துள்ளோம்.
அப்போஸ்தலர்கள் 23 : 15 (RCTA)
எனவே, நீங்கள் தலைமைச் சங்கத்தாரோடு சேர்ந்து அவனைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள்போல் நடித்து, அவனை உங்களிடம் கூட்டி வரும்படி படைத் தலைவனுக்குச் சொல்லுங்கள். அவன் வந்து சேருமுன், அவனைக் கொன்றுபோட நாங்கள் தயாராயிருக்கிறோம்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 23 : 16 (RCTA)
இப்படி, சின்னப்பருக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிபற்றிய செய்தி, அவருடைய சகோதரியின் மகனுக்கு எட்டியது. அவன் கோட்டைக்குப் போய், உள்ளே நுழைந்து சின்னப்பரிடம் இதைத் தெரிவித்தான்.
அப்போஸ்தலர்கள் 23 : 17 (RCTA)
சின்னப்பர், நூற்றுவர் தலைவன் ஒருவனை அழைத்து, "இவ்விளைஞனைப் படைத்தலைவரிடம் கூட்டிச் செல்லும். இவன் அவரிடம் ஒரு செய்தி சொல்லவேண்டுமாம்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 23 : 18 (RCTA)
அவ்வாறே அவன் அவனைப் படைத்தலைவனிடம் அழைத்துச்சென்று, "சின்னப்பன் என்னும் கைதி என்னைக் கூப்பிட்டு இவ்விளைஞனை உம்மிடம் கொண்டுபோகும்படி கேட்டுக்கொண்டான். இவன் உம்மிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டியதிருக்கிறதாம்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 23 : 19 (RCTA)
படைத்தலைவன் இளைஞனின் கையைப் பிடித்துத் தனியே அழைத்துக் கொண்டுபோய், "நீ என்னிடம் என்ன தெரிவிக்கவேண்டும்?" என்று கேட்டான்.
அப்போஸ்தலர்கள் 23 : 20 (RCTA)
அதற்கு அவன், "யூதர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அதன்படி, சின்னப்பரைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள் போல் நடித்து அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளைய தினம் கூட்டிக்கொண்டு வரும்படி உம்மைக் கேட்பார்கள்.
அப்போஸ்தலர்கள் 23 : 21 (RCTA)
ஆனால், நீர் அவர்களை நம்பவேண்டாம். ஏனெனில், அவர்களில் நாற்பது பேருக்குமேல் அவரைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அவரைக் கொன்று போடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை எனச் சூளுரைத்துள்ளனர். யூதர்களின் வேண்டுகோளுக்கு நீர் இணங்குவீர் என எதிர்பார்த்து இவர்கள் தயாராயிருக்கிறார்கள்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 23 : 22 (RCTA)
தனக்கு இதை அறிவித்ததாக யாருக்கும் சொல்ல வேண்டாமெனப் படைத்தலைவன் இளைஞனுக்குக் கட்டளையிட்டு அனுப்பிவிட்டான்.
அப்போஸ்தலர்கள் 23 : 23 (RCTA)
பின்பு அவன் நூற்றுவர் தலைவர் இருவரை அழைத்து, "இருநூறு காலாட்படைவீரரும், எழுபது குதிரை வீரரும், இருநூறு வேல் வீரரும் இரவு ஒன்பது மணிக்குச் செசரியா நகருக்குப் புறப்படத் தயார் செய்யுங்கள். குதிரைகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.
அப்போஸ்தலர்கள் 23 : 24 (RCTA)
சின்னப்பரைக் குதிரைமேல் ஏற்றி ஆளுநர் பெலிக்சிடம் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கவேண்டும்" என்றான்.
அப்போஸ்தலர்கள் 23 : 25 (RCTA)
பின்வருமாறு ஒரு கடிதமும் எழுதிக் கொடுத்தான்:
அப்போஸ்தலர்கள் 23 : 26 (RCTA)
' மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்சுக்கு, கில்வுதியுலீசியா வாழ்த்துக் கூறிவரைவது:
அப்போஸ்தலர்கள் 23 : 27 (RCTA)
நான் அனுப்பும் இந்த ஆளை யூதர்கள் பிடித்துக் கொல்ல இருந்தனர். இவன் உரோமைக் குடிமகன் என அறிந்ததும், நான் படைவீரர்களுடன் சென்று இவனை விடுவித்தேன்.
அப்போஸ்தலர்கள் 23 : 28 (RCTA)
இவன் மேல் அவர்கள் சாட்டிய குற்றம் என்னவென்று திட்டமாய் அறியவிரும்பி அவர்களுடைய தலைமைச் சங்கத்திற்கு இவனை அழைத்துச் சென்றேன்.
அப்போஸ்தலர்கள் 23 : 29 (RCTA)
சாவுக்கோ, சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. அவர்களுடைய சட்டத்துக்கடுத்த சிக்கல்கள் பற்றி ஏதோ குற்றம் சாட்டப்பட்டான்.
அப்போஸ்தலர்கள் 23 : 30 (RCTA)
மேலும், இவனுக்கெதிராகச் செய்யப்பட்ட சதியைக் குறித்து எனக்குச் செய்தி கிடைத்தது. எனவே, இவனை உம்மிடம் உடனே அனுப்பியுள்ளேன். இவனைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இவன்மேல் தங்களுக்குள்ள முறைப்பாடுகளை எல்லாம் உம்முன் எடுத்துரைக்கலாம் என அவர்களுக்கு அறிவித்திருக்கிறேன்."
அப்போஸ்தலர்கள் 23 : 31 (RCTA)
ஆகவே, தங்களுக்கிட்ட கட்டளையின்படி படைவீரர் இரவிலே அந்திப்பத்திரி ஊர் வரைக்கும் சின்னப்பரை அழைத்துக்கொண்டு சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 23 : 32 (RCTA)
மறுநாள் குதிரை வீரரை அவரோடு அனுப்பிவிட்டு, மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
அப்போஸ்தலர்கள் 23 : 33 (RCTA)
குதிரை வீரர்கள் செசரியா நகர் அடைந்ததும் ஆளுநனிடம் கடிதத்தைக் கொடுத்துச் சின்னப்பரை அவனிடம் ஒப்படைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 23 : 34 (RCTA)
அவன் அதைப்படித்த பின்பு "இவன் எந்த மாகாணத்தைச் சார்ந்தவன்?" எனக்கேட்டான். சிலிசியாவைச் சார்ந்தவன் என அறிந்து,
அப்போஸ்தலர்கள் 23 : 35 (RCTA)
' உன்மேல் குற்றம் சாட்டுகிறவர்கள் வந்தபின் உன்னை விசாரிக்கிறேன்" என்று சொல்லி, ஏரோதனின் அரண்மனையில் அவரைக் காவலில் வைக்கும்படி கட்டளையிட்டான்.
❮
❯