அப்போஸ்தலர்கள் 22 : 1 (RCTA)
"சகோதரரே, தந்தையரே, நான் இப்பொழுது சொல்லப்போகும் நியாயத்திற்குச் செவி கொடுங்கள்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 2 (RCTA)
அவர் எபிரேய மொழியில் பேசுவதைக் கேட்டதும், இன்னும் மிகுந்த அமைதி நிலவியது.
அப்போஸ்தலர்கள் 22 : 3 (RCTA)
அப்பொழுது சின்னப்பர் தொடர்ந்து கூறியது: "நான் ஒரு யூதன். சிலிசியா நாட்டிலுள்ள தர்சு நகரத்திலே பிறந்தவன். ஆனால் இந்த யெருசலேமில்தான் வளர்ந்தேன். கமாலியேலின் பாதத்தண்டை அமர்ந்து, நம் முன்னோரின் சட்டத்தை மிக நுணுக்கமாகக் கற்றேன். இன்று நீங்கள் எல்லோரும் கடவுள்மேல் ஆர்வம் கொண்டுள்ளதுபோல நானும் கொண்டிருந்தேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 4 (RCTA)
இப்புதிய நெறியைப் பூண்டோடு ஒழித்து விடுவதென்று, அதைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்தினேன். ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையிலடைத்தேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 5 (RCTA)
இதற்குத் தலைமைக் குருவும் மூப்பர் சபையும்கூட சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகர்ச் சகோதரர்களுக்குக் கடிதம் பெற்றுக்கொண்டு அந்நகருக்குப் புறப்பட்டேன். அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கைதுசெய்து தண்டிக்கும்படி யெருசலேமுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 6 (RCTA)
"அப்படிப் பயணமாகி நான் தமஸ்கை நெருங்குகையில், நண்பகல் நேரத்தில், திடீரென வானினின்று தோன்றிய பேரொளி என்னைச் சூழ்ந்துகொண்டது,
அப்போஸ்தலர்கள் 22 : 7 (RCTA)
நானோ, தரையில் விழுந்தேன். ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?" என்ற குரலைக் கேட்டேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 8 (RCTA)
அதற்கு நான், ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசுதான் நான் ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 9 (RCTA)
என்னோடு இருந்தவர்கள் ஒளியை மட்டும் கண்டார்கள். ஆனால் என்னோடு பேசியவரின் குரலைக் கேட்கவில்லை.
அப்போஸ்தலர்கள் 22 : 10 (RCTA)
பின்னும் நான், ' ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்? ' என்று கேட்டேன். அதற்கு ஆண்டவர், ' எழுந்து தமஸ்கு நகருக்குச் செல். நீ செய்யவேண்டியவை அனைத்தும் உனக்கு அங்கே தெரிவிக்கப்படும் ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 11 (RCTA)
ஒளியின் மிகுதியால் நான் பார்க்கமுடியாமல் போயிற்று. ஆதலின், என்னோடு இருந்தவர்கள் என் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, தமஸ்கு வந்து சேர்ந்தேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 12 (RCTA)
"அந்நகரில் அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தின்படி பக்தியாய் ஒழுகியவர். அவ்வூரில் வாழ்ந்த யூதர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர்.
அப்போஸ்தலர்கள் 22 : 13 (RCTA)
அவர் என்னிடம் வந்து, "சகோதரர் சவுலே, பார்வை பெறுக" என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 14 (RCTA)
அப்பொழுது அவர், "தம் திருவுளத்தை அறியவும், நீதிமானைக் காணவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் நம் முன்னோரின் கடவுள் உம்மை ஏற்படுத்தியுள்ளார்.
அப்போஸ்தலர்கள் 22 : 15 (RCTA)
ஏனெனில், நீர் கண்டவை கேட்டவை அனைத்தையும் குறித்து எல்லா மக்கள் முன்னிலையிலும் அவருக்குச் சாட்சியாக இருக்கவேண்டும்.
அப்போஸ்தலர்கள் 22 : 16 (RCTA)
இனித் தாமதமேன்? எழுந்து அவருடைய பெயரைச் சொல்லி, மன்றாடி, ஞானஸ்நானம் பெற்று உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்ளும்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 17 (RCTA)
"யெருசலேமுக்குத் திரும்பி வந்தபின், ஒருநாள் கோயிலில் செபிக்கையில் நான் பரவசமானேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 18 (RCTA)
ஆண்டவர் தோன்றி, ' தாமதியாமல் யெருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு. ஏனெனில் என்னைப்பற்றி நீ அளிக்கும் சாட்சியத்தை இந்நகரத்தார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 19 (RCTA)
அதற்கு நான், ஆண்டவரே, உம்மீது விசுவாசம் கொள்பவர்களைச் சிறைப்படுத்தினேன். செபக்கூடந்தோறும் சென்று அவர்களைச் சாட்டையால் அடித்தேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 20 (RCTA)
உம் சாட்சியான முடியப்பரின் இரத்தம் சிந்தப்பட்டபோது, நானும் அதற்கு உடன்பட்டு அங்கேயிருந்தேன். அவரைக் கொலை செய்தவர்களின் மேலாடைகளுக்குக் காவலாயிருந்தேன். இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமே ' என்றேன்.
அப்போஸ்தலர்கள் 22 : 21 (RCTA)
அவரோ என்னிடம், ' புறப்படு, ஏனெனில் தொலைவிலுள்ள புறவினத்தாரிடம் உன்னை அனுப்பப்போகிறேன் ' என்றார்."
அப்போஸ்தலர்கள் 22 : 22 (RCTA)
இதுவரைக்கும் அவர்கள் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு "ஒழியட்டும் இந்தப் பயல். இவன் உயிரோடு இருக்கவே தகுதியற்றவன்" என்று உரக்கக் கூவினர்.
அப்போஸ்தலர்கள் 22 : 23 (RCTA)
இவ்வாறு கத்திக்கொண்டே தங்கள் மேலாடைகளைக் தூக்கி வீசி, புழுதியை வாரி இறைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 22 : 24 (RCTA)
மக்கள் இவ்வாறு அவருக்கு எதிராகக் கத்துவதன் காரணத்தைப் படைத்தலைவன் அறிய விரும்பி, அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோய்ச் சாட்டைகளால் அடித்து விசாரிக்க கட்டளையிட்டான்.
அப்போஸ்தலர்கள் 22 : 25 (RCTA)
அவர்கள் அவரை வார்களால் அடிப்பதற்குக் கட்டியபொழுது சின்னப்பர் தமது அருகில் நின்ற நூற்றுவர் தலைவனிடம், "உரோமைக் குடிமகன் ஒருவனைச் சாட்டையால் அடிக்க உங்களுக்கு உரிமையுண்டோ? அதுவும் தண்டனைத் தீர்ப்பிடாமலே" என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 26 (RCTA)
அதைக் கேட்ட நூற்றுவர் தலைவன் படைத்தலைவனிடம் சென்று சின்னப்பர் கூறியதைத் தெரிவித்து, "என்ன செய்கிறீர்கள்? இவன் உரோமைக் குடிமகனாயிற்றே?" என்றான்.
அப்போஸ்தலர்கள் 22 : 27 (RCTA)
படைத் தலைவன் சின்னப்பரிடம் வந்து, "நீ உரோமைக் குடிமகனா? சொல்" என்றான். அதற்கு அவர், "ஆம், நான் உரோமைக் குடிமகன்தான்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 28 (RCTA)
அதற்குப் படைத்தலைவன், "நான் பெருந்தொகை கொடுத்தன்றோ இக்குடி உரிமையைப் பெற்றேன்" என, சின்னப்பர், "எனக்கோ இது பிறப்புரிமை" என்றார்.
அப்போஸ்தலர்கள் 22 : 29 (RCTA)
உடனே, அவரை விசாரிக்க இருந்தவர்கள் அவரை விட்டு அகன்றனர். படைத் தலைவனோ, தான் விலங்கிட்டவன் உரோமைக் குடிமகன் என அறிந்ததும் அச்சமுற்றான்.
அப்போஸ்தலர்கள் 22 : 30 (RCTA)
யூதர்கள் அவர்மேல் சாட்டிய குற்றம் யாது என்பதைப் படைத்தலைவன் சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பி, மறுநாள் அவரை விடுதலை செய்து, தலைமைக் குருக்களையும் தலைமைச் சங்கத்தார் அனைவரையும் கூடும்படி கட்டளையிட்டான். பின்னர், சின்னப்பரைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் நிறுத்தினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

BG:

Opacity:

Color:


Size:


Font: